Friday, 05 January 2007
நடிகர்களுக்குப் புது வரி
Read & Relax
பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்...படம்: ஆனந்தம்.
பாடல்: உண்ணிகிருஷ்ணன், ஹரிணி.
ஆடல்: அப்பாஸ், சினேகா.
வரும் நிதியாண்டு முதல் டாக்டர், வழக்கறிஞர் நடிகர்களுக்கும் சேவை வரி: மத்திய அரசு
புதுதில்லி, ஜன. 5: சட்டம், கல்வி, சுகாதாரம், விளையாட்டு மற்றும் நடிகர், நடிகைகளின் சிறப்பு நிகழ்ச்சிகள் உள்பட 44 புதிய சேவைகளுக்கு வரும் நிதியாண்டு முதல் வரி விதிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து, இச்சேவைகளுக்கான கட்டணம் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய விற்பனை வரியைக் குறைக்கும் நடவடிக்கையால், மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் வகையில் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
புதிய சேவைகள் மீது விதிக்கப்படும் வரிகள் மூலம் கிடைக்கும் வருவாய் முழுவதும் மாநிலங்களுக்கு அளிக்கப்படும். மத்திய நிதியமைச்சகத்துக்கும் மாநில நிதியமைச்சர்களுக்கும் புதன்கிழமை ஏற்பட்ட உடன்படிக்கையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதிய திட்டத்துக்கும், இழப்பீட்டுத் தொகைக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்க வேண்டும்.
புதிய சேவைகள் தவிர, தனியார் பாதுகாப்பு, ரியல் எஸ்டேட், உணவக சேவை, சுற்றுலா உள்பட ஏற்கெனவே உள்ள 33 சேவைகள் மீது விதிக்கப்படும் விதியும் முழுமையாக மாநிலங்களுக்கு வழங்கப்பட உள்ளது. தற்போது, இந்த வரிகளில் 30.5 சதம் மட்டுமே மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
புதிய சேவைகள் உள்பட 33 பிரிவுகளில் கிடைக்கும் வரி முழுவதையும் மாநிலங்களுக்கு அளிக்க மத்திய அரசு ஒப்புக்கொண்டிருப்பதாக தில்லி மாநில நிதியமைச்சர் ஏ.கே. வாலியா நிருபர்களிடம் தெரிவித்தார்.
மத்திய விற்பனை வரியை, ஏப்ரல் 1ம் தேதி முதல் நான்கில் இருந்து மூன்று சதவீதமாகக் குறைப்பதால் மாநிலங்களுக்கு ஏற்படும் ரூ. 6250 கோடி வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில் இந்தப் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
~~~~~~
தினமணி
08:45 Posted in அரசியல் | Permalink | Comments (4) | Email this
| Tags: tax, cinema |
del.icio.us
|
|
Digg

