Wednesday, 27 February 2008

❒ சுஜாதா - சில குறிப்புகள்

கடந்த மாதம் முதல் உடல்நலக்குறைவு காரணமாக அப்பலோ மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வந்த எழுத்தாளர் சுஜாதா இன்று இரவு 9.30 மணியளவில் காலமானார்.

Image and video hosting by TinyPicசுஜாதா சில குறிப்புகள்

பிறப்பு: மே 3, 1935

இயற்பெயர்: ரங்கராஜன்
இவரது மனைவியின் பெயரான சுஜாதா என்ற பெயரில் படைப்புகளை எழுதி வந்தார்.

சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. அவர் கடைசியாக வசனம் எழுதிய திரைப்படம் சிவாஜி.

தொடர்கதையாக வெளிவந்த இவரது நாவல்கள் காயத்ரி, கரையெல்லாம் செண்பகப்பூ, ப்ரியா, விக்ரம், வானம் வசப்படும் போன்ற பின்னர் திரைப்படமாக்கப் பட்டன.

ரோஜா, இந்தியன், முதல்வன், பாய்ஸ், விசில், கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்தஎழுத்து, அந்நியன், சிவாஜி போன்ற படங்களில் இவரே கதை வசனம் எழுதி பணியாற்றி இருக்கிறார்.

கணையாழியின் கடைசிப் பக்கங்கள், விகடனில் கற்றதும் பெற்றதும் என தமிழில் பத்தி எழுத்துக்களில் ஒரு முன்மாதிரியை உருவாக்கியவர்.

சிறுகதை, நாவல், நாடகம், அறிவியல் கதைகள், அறிவியல் கட்டுரைகள். கவிதைகள், பொதுக் கட்டுரைகள், திரைப்பட கதை வசனம், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் முத்திரை பதித்தவர். சுஜாதாவின் படைப்புகளைப் படித்து அந்த ஆர்வத்தாலேயே எழுத்துலகிற்கு வந்தவர்கள் பலர். இந்த வகையில் மிகப்பெரிய எழுத்துலக சீடர்களைப் பெற்ற முன்னோடி எழுத்தாளர்.

தமிழ் எழுத்து நடையில் பல பரிசோதனை முயற்சிகளையும் செய்தவர். அந்தச் சோதனைகளில் உருவான வசீகரமான எழுத்துநடைதான் வாசகர்களை கட்டிப் போட்டிருந்தது. தீவிரமான இலக்கியப் படைப்பாளியாக இல்லாமலே ஜனரஞ்சகமான எழுத்துக்களாலேயே தமிழ் இலக்கியச் சூழலில் அசைக்க முடியாத ஆளுமையாக நிலைபெற்றிருந்தார்.

பெங்களூர் பாரத மின்னணு நிறுவனத்தில் பணியாற்றிய போது தற்போதைய மின்னணு வாக்குப் பதிவு இயந்திர உற்பத்தியில் இவரது ஆலோசனைகளும் இருந்ததாக கூறப்படுவதுண்டு. அறிவியல் தமிழை சாதாரண மக்களிடையே எடுத்துச் சென்றதில் இவரது பங்களிப்பு முக்கியமானது. 80 களுக்குப் பின் உருவான தமிழ் படைப்பாளிகள் இவரது பாதிப்பு இல்லாமல் இருக்க முடியாது என்ற அளவுக்கு தமிழ்ச்சூழலில் இவரது ஆதிக்கம் நிலைபெற்றிருந்தது.

பிப்ரவரி 27 இரவு 9.30 மணியளவில் ஒரு எழுத்துலக சகாப்தம் முடிவடைந்தது.

*
குறிப்பு: சுஜாதா அஞ்சலியாக வரும் பதிவுகள் தமிழ்.கணிமை திரட்டியில் பதிவுகள் முகப்பில் தனியாக திரட்டப் படுகின்றன.

Wednesday, 17 January 2007

சுஜாதாவும் செக்குலர் ஜனநாயகமும்

Image and video hosting by TinyPicரண்டு நாட்களாக வலைப்பதிவுலகில் எங்கே திரும்பினாலும் ஒரே சுஜாதா மயம். அவருக்கிருக்ற செல்வாக்கையே இப்போ தான் தெரிஞ்சுக்க முடிகிறது. நாமளும் ஜோதியில கலந்துக்கலைன்னா நமக்கு தனியா இட ஒதுக்கீடு கொடுத்து ஒதுக்கி வெச்சுருவீங்களோன்னு ஒரு பயம் வந்துடிச்சி.

பாலபாரதியும் ஒளிந்து ஒலிக்கும் சாதியக்குரல்! என்று தன் செ(சொ)ல்வாக்கை நிருபித்து விட்டார். நிறைய சிஷ்யகோடிகளை வளர்த்து வைத்திருப்பதற்காக அவருக்கும் பெசல் டாங்ஸ்.

சுஜாதா ஒரு கதையெழுதினாரு. அதைப் படிச்சப்போ நம்ம மக்கு மண்டைக்கு புரியாத வெளக்கமெல்லாம் பலரும் எழுதிப் புரிய வெச்சாங்க...

இப்போ புரிஞ்சது இன்னா பிரியாதது இன்னா ஒண்ணும் பிரியலை.

ஒண்ணு புரியுதுங்க செக்குலர் சனநாயகத்தை உருவாக்க இவரமாதிரி எளுத்தாருங்களால தான் முடியும். இப்ப பாருங்க சாதி, மத, இன பேதமில்லாம எல்லோரும் அவரோட கதைக்கு பாலோ-அப் கொடுத்துகிட்டே இருக்க்காங்க...

ஆமா இப்போ நான் எதுக்கு வந்தேன்?

அ(வ)ரை அமெரிக்கா கூட்டிட்டு போறாங்களா இல்லையா?

அடிபட்டதும் சாதிவித்தியாசம் எல்லாம் போயிட்டது அவருக்கு. அத்தனை கோழையா அ(வ)ரு???

07:10 Posted in விவாதம் | Permalink | Comments (9) | Email this | Tags: sujatha |  del.icio.us | | Digg! Digg