Tuesday, 15 January 2008

❒ சிவாஜி விழாவும் தமிழ்ப்பண்பாடும்

இப்போதைய சூடான செய்திகளில் ஒன்று சிவாஜி படவிழாவில் நடிகை ஸ்ரேயா அரைகுறை உடையணிந்து வந்தது பற்றி வழக்குப் போடப் பட்டிருப்பது குறித்தது.

சமீபத்தில் ஒரு இணைய தளத்தைக் காண நேரிட்டது. அதில் பல நடிகைகள் மேடை நிகழ்ச்சிகளில் குட்டைப் பாவாடையுடன் அமர்ந்திருக்கும்போது சில வக்கிரங்களால் மோசமான கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காட்சியளித்தன. இதில் படம் எடுத்தவர்களைக் குறை சொல்வதா? அல்லது பொது இடங்களில் அப்படிப் பட்ட உடைகளில் வரும் நடிகைகளைக் குறை சொல்வதா?

முதலில் நடிகைகள் ஏன் அப்படி வருகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

திரைப்படங்களில் நடிகைகள் எந்த அளவுக்கு அங்கங்கள் காட்ட வைக்க முடியுமோ அந்த அளவுக்கு ஆடைக்குறைப்பு செய்யப் படுகிறது. முதலில் கதைக்கு இது அவசியம் என்று வற்புறுத்தப் படுகிறார்கள். பின்னர் படத்தின் வெற்றிக்கு இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று நடிகைகள் அறிவுறுத்தப் படுகிறார்கள். படம் எடுப்பவர்கள், கதாசிரியர்கள், இயக்குநர்கள் அனைவரும் ஆண்களே!

படப்பிடிப்புகள் ஏராளமானவர்கள் முன்னிலையில் எடுக்கப் படுகின்றன. எனவே சம்பந்தப் பட்ட நடிகையின் உடல் தரிசனம் அங்கிருக்கும் அனைவருக்கும் கிட்டுகிறது. இப்படிக் கவர்ச்சியாக நடிக்கும் காட்சிகளின் புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியிடப் படுகின்றன. போஸ்டர்களாகவும் பேனர்களாகவும் காட்சிப் படுத்தப் படுகின்றன. அடுத்து இந்தக் காட்சிகள் திரைவழியே மக்களைச் சென்றடைகின்றன. அன்றாடம் தொலைக்காட்சி வழியாக இதே காட்சிகள் வீடுகளுக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடுகின்றன.

இப்படி எல்லா விததிலும் திறந்த புத்தகமாக இருக்க வேண்டிய நிலையில் நடிகையாகிய பெண் தனது கூச்சங்கள் அனைத்தையும் உதறிப் போடுகிறாள். ஒரு நடிகையாக, தனது உடலழகைக் காட்ட வேண்டியது அவசியம் என்ற மனநிலை அவளுக்கு ஏற்படுகிறது. முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு என்று பொது இடங்களிலும் ரசிகர்களை மகிழ்விக்க அவள் உடலழகைக் காட்டும் உடைகளில் தோன்றுகிறாள்.

இதில் நடிகைகளைக் குற்றம் சொல்ல என்ன இருக்கிறது? கலாச்சாரக் காவலர்கள் செய்ய வேண்டியது, திரைப்படங்களில் பெண்ணைச் சித்தரிக்க வேண்டிய முறை பற்றிய பொறுப்புணர்வை முதலில் இயக்குநர்களுக்குக் கற்பியுங்கள். அதை விடுத்து சுயவிளம்பரத்துக்காக நடிகைகள் மீது பாய்வதில் அர்த்தமில்லை.

இந்த விழாவுக்கு காரணமான சிவாஜி என்ற திரைப்படத்தில் இதே ஸ்ரேயா நடித்துள்ள கைக்குட்டை துணியணிந்த காட்சிகளை விட அதிக கவர்ச்சியை மேடையில் காட்டி விடவில்லை. எல்லா நடிகைகளின் நிலையும் இதுதான்.

பொதுவாக இம்மாதிரி வழக்குப் போடுவது யாரென்று கவனித்தால் மதவாத உணர்வுள்ள ஆண்கள் தான் இதைச் செய்கிறார்கள். பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்தும் ஆணாதிக்க மனோபாவத்தின் நேரடி வெளிப்பாடு இது. உண்மையான அக்கறை இருந்தால் நடிகைகளை அப்படி நடிக்க வைக்கும் இயக்குநர்கள் மீது வழக்குப் போட்டு அவர்களைத் திருத்துங்கள்.

*
நடிகை குஷ்பு படப்பிடிப்புக்காக வைக்கப்பட்டிருந்த சிலைகள் முன் கால்மேல் கால்போட்டது, சானியா மிர்சா தேசியக் கொடிக்கு முன் காலை நீட்டியது என்பவையும் இதே போன்று வழக்குகளுக்கு ஆளாகி இருக்கின்றன. இந்த வழக்குகளைத் தொடர்ந்திருப்பவர்கள் யார் என்பதிலிருந்து நோக்கம் தேசபக்தியோ கடவுள் பக்தியோ அல்லாமல் மதவெறி சார்ந்த ஆணாதிக்கம் என்பதையும் வெளிப்படையாக புரிந்து கொள்ள முடிகிறது.

ஒரு அறிவுறுத்தல் என்பதற்கு மேல் எந்த அவசியமும் அற்ற நிகழ்வுகளை சுயஅரிப்புகளுக்கு இவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

*

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

பொங்கல் வெளியீடு இங்கே...

Monday, 11 June 2007

❒ சும்மா அதிருதில்லே?!

டிக்கெட் வாங்கினவங்கெல்லாம் கையத் தூக்குங்கப்பா!

Image and video hosting by TinyPic

Image and video hosting by TinyPic


அடுத்த ஒரு மணிநேரம் உங்களுக்காக...

ரஜினி யின் சிவாஜி தமிழ் சினிமா புகைப்படத் தொகுப்பு...

(எச்சரிக்கை:
ஆணி பிடுங்கிற நேரத்தில் இதைப் பார்த்துக் கொண்டிருந்தால் அதன் பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல...)



இதெல்லாம் கொஞ்சம் ஓவராத் தெரியலை?

Monday, 02 April 2007

❒ ஒண்ணும் ஒண்ணும் நாலு

சிவாஜி படத்தோட சிடி வெளியாவதற்கு முன்னமே இணையத்தில் வெளியாகி இயக்குநருக்கு தலையிடியும் ரசிகர்களுக்கு கொண்டாட்டமும் தீவிர ரஜினி ரசிகர்களுக்கு வருத்தத்தையும் தந்திருக்கு. என்றாலும் பாடலை அவர்களும் பதிவிறக்கி ரசித்திருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

நமக்குத்தான் பதிவிறக்குவதில் பயங்கர பிரச்சினை. இணையத்தில் கேட்கமுடிகிற பாட்டை எப்படியோ ஓட்டி ஓட்டி கேட்டாச்சு. முதல்ல வெளியான பாட்டுங்க மட்டும் தான் ஓரளவு தேறும். முதல் பார்வையில் எனக்கு பெரிய அளவு சிறப்பானதாக தோன்றவில்லை. ஆனாலும் ரஹ்மான் பாட்டுகள் கேட்க கேட்கத்தான் ருசிக்கும் என்ற அளவில் 'கொஞ்சநாள் பொறு தலைவா...'

-oOo-

கிரிக்கெட்டு மேல பயித்தியமா இருந்தவங்க பல பேர். கிரிக்கெட் என்றாலே ஆவலாக இருந்தவங்க இப்போ அதை சீண்டறதில்ல போல... இருக்கட்டும் விடைதேடும் வினாவுல ஒரு கிரிக்கெட் வசன போட்டி இருக்குங்க... நீங்க திட்டறதுக்கான போட்டி தான். அதனால் தவறாமல் கலந்து கொள்ளுங்க...

அதிரடிப்போட்டி: கிரிக்கெட் சந்திப்பு.

-oOo-

அப்புறம் வலைமொழி இணையச்சிற்றேடு வாசித்து விட்டீர்களா?

தல பாலபாரதி கலக்கல் பேட்டி,
தமிழ்நதி, சுப்பையா சிறுகதைகள்
நவீன்பிரகாஷ், விஷி, செந்தில் கவிதைகள்
பொன்ஸ், வெற்றிவளவன் கட்டுரைகள்.

http://valaimozhi.in

-oOo-

இரவல் சிந்தனை ஒன்று

உன்னிடம் ஒரு ஆப்பிள் என்னிடம் ஒரு ஆப்பிள் இருக்கிறது. என்னிடமுள்ள ஆப்பிளை நான் உனக்கும் உன்னிடமுள்ள ஆப்பிளை நீ எனக்கும் தந்தால் மறுபடியும் உன்னிடம் ஒன்று என்னிடம் ஒன்று தான் இருக்கும்.

உன்னிடம் ஒரு கருத்து, என்னிடம் ஒரு கருத்து இருக்கிறது. என்னிடமுள்ள கருத்தை நான் உனக்கும் உன்னிடமுள்ள கருத்தை நீ எனக்கும் தந்தால் உன்னிடம் இரண்டு கருத்தும் என்னிடம் இரண்டு கருத்தும் இருக்கும்.

ஒரு புதிர்:

கிட்டத்தட்ட இதே கருத்துள்ள திருக்குறள் ஒன்றும் உண்டு. அது எது சொல்லுங்க பார்க்கலாம்.

Sunday, 01 April 2007

❒ சிவாஜியின் 7 பாடல்களும் ரிலீஸ்

`சிவாஜி'யின் 7 பாடல்களும் இண்டர்நெட்டில் `ரிலீஸ்'

சேலம், ஏப். 1-

நடிகர் ரஜினிகாந்தின் மெகா பட்ஜெட் படமான "சிவாஜி'' மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

`சிவாஜி' பட பாடல்கள் அதிகாரப்பூர்வமாக நாளை (2-ந் தேதி) உலகமெங்கும் வெளியிடப்படுகிறது. இந்த மாத இறுதி அல்லது மே மாத தொடக்கத்தில் படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவாஜி படத்தின் 3 பாடல்களை மர்ம நபர்கள் திருட்டுத்தனமாக இண்டர்நெட்டில் வெளியிட்டு விட்டனர்.

இது ரஜினிகாந்துக்கும், இயக்குனர் சங்கருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இண்டர்நெட்டில் வெளியிட்ட நபர் யார்? என்று விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில் சிவாஜி படத்தின் அனைத்து பாடல்களும் சி.டி.கவர் படத்துடன் இண்டர்நெட்டில் வெளியாகி உள்ளது.

இந்த பாடல்கள் அனைத்தும் www hood.music net works.com என்ற வெப்சைட்டில் நேற்று மாலை வெளியாகி உள்ளது.

* சூரியனோ, சந்திரனோ யார் இவனோ,
* காவிரி ஆறும் கைகுத்து அரிசியும் மறந்து போகுமோ,
* பூபோ வாய் ஆம்பல் ஆம்பல்,
* சகானா சாரல் தூவுதோ,
* தீதீ ஜெகஜோதி,
* ஸ்டைல் ஸ்டைல்,
* சகாராவில் பூக்கள் பூத்ததோ

ஆகிய 7 பாடல்கள் வெளியாகி உள்ளன.

இதில் `வாஜி, வாஜி, சிவாஜி' என்ற பாடல் டைட்டில் பாடலாக ஒலிக்கிறது. `ஆம்பல், ஆம்பல்' என்ற பாடல் கருத்து செறிவுடன் இளைஞர்களை உற்சாகப்படுத்துகிறது. `சகாராவின் பூக்கள் பூத்ததோ' என்ற பாடலும், `ஸ்டைல், ஸ்டைல்' என்ற பாடலும் ரசிகர்களை ஜனரஞ்சகப் படுத்துகிறது.

பாடல் கேசட் வெளியீட்டு விழா நடப்பதற்கு முன் பாகவே சிவாஜியின் அனைத்து பாடல்களும் இண்டர் நெட்டில் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

=மாலைமலர்

Thursday, 29 March 2007

❒ 50 ரூபாய்க்கு சிவாஜி டிவிடி

50 கோடி முதலீட்டில் அரும்பாடு பட்டு தயாரிக்கப்பட்ட சிவாஜி படத்தின் திருட்டு டிவிடி 50 ரூபாய்க்கு சென்னை நகர பிளாட்பாரங்களில் கூவிக் கூவி விற்கப்படுகிறது.

[தொடர்ச்சி...]

Thursday, 22 February 2007

❒ சிவாஜி ரிலீஸ் மே 8?

மே 8 அன்று சிவாஜி ரிலீஸ்

Image and video hosting by TinyPic
தல என்ட்ரி கொடுக்கிறார்

சிகர்களால் பெரிதும் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் சிவாஜி படம், மே 8 அன்று வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கான பாடல் ஒலிப் பேழை, மார்ச் மாதம் 2ஆவது வாரத்தில் வெளியாகிறது.

ஏவிஎம் தயாரிப்பில் ரஜினி - ஸ்ரேயா நடிப்பில், ஷங்கரின் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் பிரமாண்டமாகத் தயாராகி வரும் 'சிவாஜி' படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. டப்பிங் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

சிவாஜி படம் தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14இல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உலகக் கோப்பை கிரிக்கெட் மற்றும் பரீட்சை காரணமாக வெளியீடு தள்ளிப் போகிறது. உலகக் கோப்பை கிரிக்கெட் மார்ச் 13இல் தொடங்கி ஏப்ரல் 28இல் முடிகிறது. பள்ளித் தேர்வுகளும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கிறது. அவை முடிந்த பிறகு 'சிவாஜி'யை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். 'சிவாஜி' பாடல் கேசட் மார்ச் மாதம் 2ஆவது வாரத்தில் வெளியிடப்படுகிறது.

'சிவாஜி' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய 3 மொழிகளில் ஒரே நாளில் வெளியாகிறது. இதற்காக 500 பிரிண்ட்கள் போடப்படுகின்றன.

மலையாள முன்னணி நடிகர்களின் படங்கள் 'சிவாஜி'யால் பாதிக்கும் என்பதால் தமிழ்நாட்டில் வெளியாகும் அதே தேதியில் கேரளாவில் வெளியிடக் கூடாது என்று அங்குள்ள விநியோகஸ்தர் சங்கங்கள் வற்புறுத்தியுள்ளன. கேரளாவில் 'சிவாஜி' படம் ரூ. 3.10 கோடிக்கு விற்பனையாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கேரள மாநில சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் படங்களைவிட அதிக விலைக்கு சிவாஜி விலை போனது.

அண்மையில் திருப்பதி கோயிலுக்குச் சென்ற ரஜினி, சிவாஜி வணிக ரீதியில் மிகப் பெரிய வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

செய்தி: தமிழ்சிஃபி

-oOo-

Image and video hosting by TinyPic
இப்படி தனியா தவிக்க விட்டுட்டாங்களே...எல்லோரும் நாட்டாமைகளுக்கு குடை பிடிக்க கிளம்பிப் போயிட்டாங்களா?
மேலும் சில சிவாஜி துளிகள்

*சிவாஜி படத்தில் ஷ்ரேயாவுக்கு குரல் கொடுப்பவர் காதல் சந்தியா

*விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்ற மிமிக்ஸ் கலைஞர்கள் சிவாஜி படத்தில் பங்கேற்கிறார்கள்.

* தந்தை மகன் என இரு வேடத்தில் நடிக்கும் ரஜினி, மகன் வேடத்தில் பல மாறுவேடங்களும் போடுகிறார். விரிவான கதை இங்கே

* சிவாஜி பஞ்ச் வசனங்கள் மற்றும் பிற ரஜினி, சிவாஜி பட செய்திகளுக்கு இங்கே.

-oOo-

சமர்ப்பணம் : ரஜினி மாதிரி கழிசடைகளுக்கு விளம்பரம் கொடுப்பதற்கென்றே சிலர் அலையறாங்கப்பா என்று பதிவு போடப்போகும் நல்ல சிந்தனையாளர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம். :-)))

Sunday, 21 January 2007

சிவாஜி - ஒரு வெட்டிவேலை

Image and video hosting by TinyPic
கூகுள் படத் தேடலில் sivaji என்று தேடினால் வரும் படங்களில் முதல் பக்கம் மொத்தமுள்ள 20 படங்களில் 13 படங்கள் ரஜினியின் சிவாஜிதான் வருகிறது. சிவாஜி கணேசன் வெறும் ஏழில் தான் வருகிறார். மராட்டிய சிவாஜி? காணவே காணோம்.

இரண்டாம் பக்கத்தில் சத்ரபதிக்கு இரண்டு, கணேசனுக்கு இரண்டு, மீதமெல்லாம் சூப்பர்.

மூன்றாம் பக்கம் சிவாஜி கணேசன் 5 படங்கள், பரமசிவா(ஜி) ஒன்று. மராட்டிய சிவாஜி இங்கும் இல்லை. மற்றதெல்லாம் சிவாஜிராவ் தான்.

Image and video hosting by TinyPicஆக ரஜினியின் சிவாஜி, வரலாற்றையே மாற்றி எழுதப் போகிறதோ என்று எனக்கொரு சந்தேகம். எதிர்காலத்தில் பிள்ளைகள் சிவாஜி என்றால் எதை அறியப் போகிறார்கள் மராட்டிய மன்னனையா? நடிப்புச் சக்கரவர்த்தியையா அல்லது சிவாஜி என்ற ஒரு மசாலா திரைப்படத்தையா? (அது மசாலா அல்ல காவியம் என்று ஒரு குரல் கேட்கிறது)

அட இதென்ன ஒரு h மட்டும் சேர்த்து shivaji என்றதும் எல்லாப் படங்களும் மராட்டிய சிவாஜிக்கு மாறிவிட்டதே? இரண்டாம் பக்கத்தில் மூன்றே படங்கள் சூப்பர்ஸ்டாருக்கு விழுகிறது. மற்றதெல்லாம் சத்ரபதி. மூன்றாம் பக்கம் கூட சூப்பர் இல்லை. h சேர்த்தால் நடிகர் திலகத்துக்கு ஆகாது போல. அவர் வரவே இல்லை.

படக்குறிப்பு:

முதல் படம்: கூகுள் தேடுதலில் வரும் முதல் படம்.
இரண்டாவது: கடைசியாக வெளிவந்த (ரகசியம்?) படம்?

-oOo-

அதான் தலைப்பிலேயே சொல்லியாச்சே... எதுக்கு அடிக்க வரீங்க?