Thursday, 19 June 2008
❒ ரஜினியின் 20 அவதாரங்கள்
கமல் தசாவாதாரம் எடுத்தால் சும்மா விடுவார்களா ரஜினி பட இயக்குநர்கள்? குசேலன் படத்தில் நடிகராகவே நடிக்கும் ரஜினியை 20 விதமான வேடங்களில் ஒரே பாடல் காட்சியில் நடிக்க வைத்துள்ளாராம் பி.வாசு.
இந்தப் படத்தில் அஜித், விஜய், விக்ரம் கூட சில காட்சிகளில் நடிக்கப் போகிறார்களாம்.
மலையாளத்தில் மம்முட்டி-சீனிவாசன் இணைந்து நடித்த கதபறயும்போள் என்ற திரைப்படத்தின் ரீமேக்காக உருவாகும் இந்த திரைப்படம் தமிழில் ரஜினி-பசுபதி நடிக்க 'குசேலன்' ஆகவும், தெலுங்கில் ரஜினி-ஜெகபதிபாபு நடிக்க 'கதாநாயகடு'வாகவும் வெளிவருகிறது.
மலையாளத்தில் சீனிவாசன் ஜோடியாக நடித்த மீனா தமிழில் பசுபதிக்கு ஜோடி சேருகிறார். நயன்தாரா, சினேகா உடபட பல நாயகிகள் ரஜினியுடன் நடித்திருக்கிறார்கள்
ஜூலை இறுதியில் குசேலன் வெளிவர இருக்கிறது.

12:05 Posted in சினிமா | Permalink | Comments (4) | Email this | Tags: ரஜினி, குசேலன், தசாவதாரம், rajini
Thursday, 12 July 2007
❒ அரசியலில் ரஜினி!
சிவாஜி திரைப்பட வெளியீட்டுக்குப் பிறகு மீண்டும் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய கிசுகிசுக்களை பத்திரிகைகள் எழுப்பத் தொடங்கியுள்ளன. மூன்றாம் அணி அமைப்பாளர்களில் ஒருவரான சந்திரபாபு நாயுடு ரஜினியை அரசியலுக்கு கொண்டுவர தீவிரமாக முயற்சி மேற்கொண்டிருப்பதாக தெரிகிறது. சமீபத்தில் அரசியலுக்கு வந்து குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் வளர்ச்சியையும் சந்தித்துக் கொண்டிருக்கும் விஜயகாந்தைப் பார்த்து அரசியல் சபலம் ரஜனிக்கு மீண்டும் வரலாம்.
விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் தந்த நம்பிக்கையால் நடிக்ர் சங்கத்தலைவர் சரத்குமாரும் அரசியல் பிரவேசத்துக்கு நாள் குறித்துக் கொண்டிருக்கிறார். அவர் சாதிப் பின்னணி பலத்துடன் தனது அரசியல் கனவுக்கு வளம் சேர்க்கத் துடிக்கிறார்.
இவர்களின் அரசியல் பிரவேசங்கள் எந்த அளவுக்கு வெற்றி பெறும்? காமராசர் ஆட்சி என்ற கோசங்களுடன் கனவு காணும் சரத்குமாரும், தேசியம், நதிநீர் இணைப்பு என மேம்போக்கான அரசியல் கனவைக் கொண்டுள்ள ரஜனியும் எந்த அளவுக்கு அரசியலில் வெற்றி பெறுவார்கள்?
விஜயகாந்தின் அரசியல் வெற்றிக்குப் பின்னால் இருப்பது என்ன என்று சிந்தித்தால் அவர் சாதாரண மனிதனின் உணர்ச்சியை தட்டி எழுப்பி தனக்கு சாதகமாக சிந்திக்க வைத்தார். "இன்றைய அரசியல்வாதிகள் எல்லோரும் ஊழல்பேர்வழிகள், அவர்கள் ஓட்டுப் போடத் தரும் காசு உங்கள் காசு. அதை வாங்கத் தயங்காதீர்கள். உங்கள் காசை நீங்கள் வாங்கிக் கொண்டு எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்" என்றார். இதன் பின்னுள்ள நியாய அநியாயங்களைவிட இதிலுள்ள தர்க்கம் பாமரனைச் செருக்கு கொள்ளச் செய்தது. பொதுநிலை வாக்காளன் இந்த தர்க்கநிலையில் மயங்கியதில் ஆச்சரியமே இல்லை.
இதுவே தமிழகம் முழுவதும் ஓட்டு வங்கிகளையும் கட்சித் தொண்டர்களையும் கொண்டுள்ள கட்சிகளை பல மீறிக்கொண்டு விஜயகாந்தால் பெருமளவு வாக்குகளைப்பெற முடிந்த ரகசியம். ஆட்சியைப் பிடிக்குமளவு இல்லாவிட்டாலும் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாக விஜயகாந்த் வளர்ந்து வருவதை மற்ற கட்சிகள் அசூயையோடு பார்த்து வரும் நிலையில் செல்வாக்குள்ள சக நடிகர்களுக்கும் ஆசை கிளர்வதில் ஆச்சரியமில்லை.
எனவே இதுவரை வருவேன்-வரமாட்டேன் என்ற சொற்களால் சிலம்பாட்டம் நடத்திக் கொண்டிருந்த ரஜினியை அரசியலுக்கு கொண்டு வர அவரது ஆரசியல்வாதி நண்பர்களும் மீண்டும் தீவிரமாக முயற்சி மேற்கொண்டுள்ளனர். பூனைக்குட்டி வெளியில் வருமா?
அப்படி வந்தாலும் விஜயகாந்தின் தந்திரமோ அரசியல் நெளிவு சுழிவுகளோ ரஜனிக்கு இருக்கிறதா என்பது சந்தேகமே. தேசியம், நதிநீர் போன்ற எதிர்காலக் கனவுகள் காண்பதற்கு நமது அன்றாடங்காய்ச்சி வாக்காளனுக்கு நேரம் இருக்கிறதா?
திரைப்படங்கள் ஓடுவது பற்றி கூறும்போது A சென்டரில் ஓடியது B சென்டரில் ஓடியது C சென்டரில் ஓடியது என்பார்கள். B,C யில் நன்றாகப் போனால் தான் படம் வெற்றி பெற முடியும். A யில் நன்றாக ஓடினால் நல்ல படம் என்ற பெயர் தான் கிடைக்கும்.
சினிமாவில் C சென்டர் ரசிகனால் சூப்பர் ஸ்டாராக்கப் பட்டவர் ரஜினி. அரசியலில் ரஜினி, சரத் தரும் முன்னோட்டங்கள் A சென்டருக்கு ருசிக்கலாம். விஜயகாந்த் போல C யைக் கவரும் அம்சங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை.
விஜயகாந்தைப் பொறுத்தவரை தீர்மானமான இலட்சியங்கள் எதுவும் அவரிடமும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் சினிமா போலவே அரசியலிலும் நடிப்பும், திட்டமிட்ட இமேஜ் கட்டமைப்பும் மேற்கொண்டு தன்னை நிலைநிறுத்த முடிந்திருக்கிறது.
ரஜினிக்கு அது சாத்தியமா?
06:40 Posted in அரசியல் | Permalink | Comments (0) | Email this | Tags: ரஜினி, rajini
Monday, 11 June 2007
❒ சும்மா அதிருதில்லே?!
06:25 Posted in சினிமா | Permalink | Comments (9) | Email this | Tags: rajini, shivaji, ரஜினி, சிவாஜி
Monday, 02 April 2007
❒ ஒண்ணும் ஒண்ணும் நாலு
சிவாஜி படத்தோட சிடி வெளியாவதற்கு முன்னமே இணையத்தில் வெளியாகி இயக்குநருக்கு தலையிடியும் ரசிகர்களுக்கு கொண்டாட்டமும் தீவிர ரஜினி ரசிகர்களுக்கு வருத்தத்தையும் தந்திருக்கு. என்றாலும் பாடலை அவர்களும் பதிவிறக்கி ரசித்திருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நமக்குத்தான் பதிவிறக்குவதில் பயங்கர பிரச்சினை. இணையத்தில் கேட்கமுடிகிற பாட்டை எப்படியோ ஓட்டி ஓட்டி கேட்டாச்சு. முதல்ல வெளியான பாட்டுங்க மட்டும் தான் ஓரளவு தேறும். முதல் பார்வையில் எனக்கு பெரிய அளவு சிறப்பானதாக தோன்றவில்லை. ஆனாலும் ரஹ்மான் பாட்டுகள் கேட்க கேட்கத்தான் ருசிக்கும் என்ற அளவில் 'கொஞ்சநாள் பொறு தலைவா...'
-oOo-
கிரிக்கெட்டு மேல பயித்தியமா இருந்தவங்க பல பேர். கிரிக்கெட் என்றாலே ஆவலாக இருந்தவங்க இப்போ அதை சீண்டறதில்ல போல... இருக்கட்டும் விடைதேடும் வினாவுல ஒரு கிரிக்கெட் வசன போட்டி இருக்குங்க... நீங்க திட்டறதுக்கான போட்டி தான். அதனால் தவறாமல் கலந்து கொள்ளுங்க...
அதிரடிப்போட்டி: கிரிக்கெட் சந்திப்பு.
-oOo-
அப்புறம் வலைமொழி இணையச்சிற்றேடு வாசித்து விட்டீர்களா?
தல பாலபாரதி கலக்கல் பேட்டி,
தமிழ்நதி, சுப்பையா சிறுகதைகள்
நவீன்பிரகாஷ், விஷி, செந்தில் கவிதைகள்
பொன்ஸ், வெற்றிவளவன் கட்டுரைகள்.
http://valaimozhi.in
-oOo-
இரவல் சிந்தனை ஒன்று
உன்னிடம் ஒரு ஆப்பிள் என்னிடம் ஒரு ஆப்பிள் இருக்கிறது. என்னிடமுள்ள ஆப்பிளை நான் உனக்கும் உன்னிடமுள்ள ஆப்பிளை நீ எனக்கும் தந்தால் மறுபடியும் உன்னிடம் ஒன்று என்னிடம் ஒன்று தான் இருக்கும்.
உன்னிடம் ஒரு கருத்து, என்னிடம் ஒரு கருத்து இருக்கிறது. என்னிடமுள்ள கருத்தை நான் உனக்கும் உன்னிடமுள்ள கருத்தை நீ எனக்கும் தந்தால் உன்னிடம் இரண்டு கருத்தும் என்னிடம் இரண்டு கருத்தும் இருக்கும்.
ஒரு புதிர்:
கிட்டத்தட்ட இதே கருத்துள்ள திருக்குறள் ஒன்றும் உண்டு. அது எது சொல்லுங்க பார்க்கலாம்.
04:45 Posted in சிதறல்கள் | Permalink | Comments (9) | Email this | Tags: rajini, sivaji, shivaji, சிவாஜி, ரஜினி
Sunday, 01 April 2007
❒ சிவாஜியின் 7 பாடல்களும் ரிலீஸ்
`சிவாஜி'யின் 7 பாடல்களும் இண்டர்நெட்டில் `ரிலீஸ்'
சேலம், ஏப். 1-
நடிகர் ரஜினிகாந்தின் மெகா பட்ஜெட் படமான "சிவாஜி'' மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
`சிவாஜி' பட பாடல்கள் அதிகாரப்பூர்வமாக நாளை (2-ந் தேதி) உலகமெங்கும் வெளியிடப்படுகிறது. இந்த மாத இறுதி அல்லது மே மாத தொடக்கத்தில் படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவாஜி படத்தின் 3 பாடல்களை மர்ம நபர்கள் திருட்டுத்தனமாக இண்டர்நெட்டில் வெளியிட்டு விட்டனர்.
இது ரஜினிகாந்துக்கும், இயக்குனர் சங்கருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இண்டர்நெட்டில் வெளியிட்ட நபர் யார்? என்று விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் சிவாஜி படத்தின் அனைத்து பாடல்களும் சி.டி.கவர் படத்துடன் இண்டர்நெட்டில் வெளியாகி உள்ளது.
இந்த பாடல்கள் அனைத்தும் www hood.music net works.com என்ற வெப்சைட்டில் நேற்று மாலை வெளியாகி உள்ளது.
* சூரியனோ, சந்திரனோ யார் இவனோ,
* காவிரி ஆறும் கைகுத்து அரிசியும் மறந்து போகுமோ,
* பூபோ வாய் ஆம்பல் ஆம்பல்,
* சகானா சாரல் தூவுதோ,
* தீதீ ஜெகஜோதி,
* ஸ்டைல் ஸ்டைல்,
* சகாராவில் பூக்கள் பூத்ததோ
ஆகிய 7 பாடல்கள் வெளியாகி உள்ளன.
இதில் `வாஜி, வாஜி, சிவாஜி' என்ற பாடல் டைட்டில் பாடலாக ஒலிக்கிறது. `ஆம்பல், ஆம்பல்' என்ற பாடல் கருத்து செறிவுடன் இளைஞர்களை உற்சாகப்படுத்துகிறது. `சகாராவின் பூக்கள் பூத்ததோ' என்ற பாடலும், `ஸ்டைல், ஸ்டைல்' என்ற பாடலும் ரசிகர்களை ஜனரஞ்சகப் படுத்துகிறது.
பாடல் கேசட் வெளியீட்டு விழா நடப்பதற்கு முன் பாகவே சிவாஜியின் அனைத்து பாடல்களும் இண்டர் நெட்டில் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
=மாலைமலர்
08:20 Posted in சினிமா | Permalink | Comments (4) | Email this | Tags: rajini, shivaji, ரஜினி, சிவாஜி
Thursday, 29 March 2007
❒ 50 ரூபாய்க்கு சிவாஜி டிவிடி
50 கோடி முதலீட்டில் அரும்பாடு பட்டு தயாரிக்கப்பட்ட சிவாஜி படத்தின் திருட்டு டிவிடி 50 ரூபாய்க்கு சென்னை நகர பிளாட்பாரங்களில் கூவிக் கூவி விற்கப்படுகிறது.
[தொடர்ச்சி...]
13:20 Posted in சினிமா | Permalink | Comments (3) | Email this | Tags: rajini, shivaji, ரஜினி, சிவாஜி
Friday, 16 March 2007
❒ சாதனையை நோக்கி சந்திரமுகி

'ஹரிதாஸ்' சாதனையை 'சந்திரமுகி' முறியடிக்குமா?
700 நாட்களை தாண்டி ஓடுகிறது
ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' படம், 700 நாட்களைத்தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. 'ஹரிதாஸ்' படத்தின் சாதனையை, 'சந்திரமுகி' நெருங்கிக்கொண்டிருக்கிறது.
'ஹரிதாஸ்'
தமிழ் பட வரலாற்றிலேயே மிக அதிக நாட்கள் ஓடி சாதனை புரிந்த படம், 'ஹரிதாஸ்.' இந்த படம், ஒரே தியேட்டரில் 784 நாட்கள் ஓடி வரலாற்று சாதனை படைத்தது.
இது, தியாகராஜ பாகவதர் கதாநாயகனாக நடித்த படம். அவருக்கு ஜோடியாக பிரபல பாடகி என்.சி.வசந்த கோகிலம் நடித்து இருந்தார். டி.ஆர்.ராஜகுமாரி, 'ரம்பா' என்ற தாசியாக வில்லியாக நடித்து இருந்தார். இவருடைய அழகில் மயங்கி, பாகவதர் தனது சொத்துக்களை எல்லாம் இழப்பது போல் கதை அமைக்கப்பட்டு இருந்தது.
1944-ம் வருடம் தீபாவளி பண்டிகை அன்று 'ஹரிதாஸ்' திரைக்கு வந்தது. சென்னை பிராட்வே தியேட்டரில், தினசரி 2 காட்சிகளாகவும், சனி, ஞாயிறில் 3 காட்சிகளாகவும் 112 வாரங்கள் ஓடி சாதனை படைத்தது.
'சந்திரமுகி'
பாகவதர் நடித்த 'ஹரிதாஸ்' படத்தின் சாதனையை, ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' படம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 2005-ம் வருடம் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி, இந்த படம் திரைக்கு வந்தது. சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்து, பி.வாசு டைரக்டு செய்திருந்தார்.
ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாராவும், பிரபு ஜோடியாக ஜோதிகாவும் நடித்து இருந்தார்கள். தமிழ் பட வரலாற்றில், மிக அதிக நாட்கள் ஓடி சாதனை புரிந்த பட வரிசையில், 'சந்திரமுகி' யும் இடம்பெற்று இருக்கிறது.
700 நாட்கள்
சென்னை சாந்தி தியேட்டரில் திரையிடப்பட்ட 'சந்திரமுகி,' தொடர்ந்து 700 நாட்களை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து 800 நாட்கள் வரை 'சந்திரமுகி' படம் ஓடி, 'ஹரிதாஸ்' படத்தின் சாதனையை முறியடிக்கும் என்று சிவாஜி புரொடக்ஷன்ஸ் ராம்குமார் தெரிவித்தார்.
செய்தி: தினத்தந்தி
12:35 Permalink | Comments (3) | Email this | Tags: chandramukhi, rajini, ரஜினி, தமிழ்ப்பதிவுகள்
Sunday, 04 February 2007
❒ சிவாஜி ரிலீசாகுமா?

எனக்கு ஒரே பேச்சு...ஒரே வீச்சு...
முடிவு..."பெஸ்ட் கண்ணா பெஸ்ட்"
மார்ச் 5 முதல் ஏப்ரல் 28 வரை 49 நாட்கள் நடைபெறவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் காரணமாக அந்தக் காலகட்டத்தில் வெளியாக இருந்த பல திரைப்படங்கள் அவசர அவசரமாக இம்மாதமே வெளியாக இருப்பதாக தெரிகிறது. இதனால் எப்போதும் இல்லாத அளவுக்கு பிப்ரவரி மாதம் நிறைய படங்கள் வெளியாகப் போகின்றன. தமிழ்ப்புத்தாண்டுக்கு வெளியாக இருந்த பல படங்களும் அவசர அவசரமாக இம்மாதமே படப்பிடிப்பை முடித்து வெளியிட முயற்சி மேற்கொண்டுள்ளன. மேலும் பல படங்கள் உலக்க்கோப்பை போட்டிகள் முடிந்த பிறகே வெளியிடப் படும் எனத் தெரிகிறது. இதனால் தமிழ்ப்புத்தாண்டுக்கு ரிலீஸ் என அறிவிக்கப் பட்டிருந்த ரஜினியின் சிவாஜி ரிலீஸ் தள்ளிப் போகலாம் என்று தெரிகிறது.

பார்ப்பதற்கு பாமரன் போல் இருப்பான்
வேளை வந்தால் விஸ்வரூபம் எடுப்பான்.
15:00 Posted in சினிமா | Permalink | Comments (9) | Email this | Tags: sivaji, rajini, worldcup
Sunday, 21 January 2007
சிவாஜி - ஒரு வெட்டிவேலை

இரண்டாம் பக்கத்தில் சத்ரபதிக்கு இரண்டு, கணேசனுக்கு இரண்டு, மீதமெல்லாம் சூப்பர்.
மூன்றாம் பக்கம் சிவாஜி கணேசன் 5 படங்கள், பரமசிவா(ஜி) ஒன்று. மராட்டிய சிவாஜி இங்கும் இல்லை. மற்றதெல்லாம் சிவாஜிராவ் தான்.
ஆக ரஜினியின் சிவாஜி, வரலாற்றையே மாற்றி எழுதப் போகிறதோ என்று எனக்கொரு சந்தேகம். எதிர்காலத்தில் பிள்ளைகள் சிவாஜி என்றால் எதை அறியப் போகிறார்கள் மராட்டிய மன்னனையா? நடிப்புச் சக்கரவர்த்தியையா அல்லது சிவாஜி என்ற ஒரு மசாலா திரைப்படத்தையா? (அது மசாலா அல்ல காவியம் என்று ஒரு குரல் கேட்கிறது)அட இதென்ன ஒரு h மட்டும் சேர்த்து shivaji என்றதும் எல்லாப் படங்களும் மராட்டிய சிவாஜிக்கு மாறிவிட்டதே? இரண்டாம் பக்கத்தில் மூன்றே படங்கள் சூப்பர்ஸ்டாருக்கு விழுகிறது. மற்றதெல்லாம் சத்ரபதி. மூன்றாம் பக்கம் கூட சூப்பர் இல்லை. h சேர்த்தால் நடிகர் திலகத்துக்கு ஆகாது போல. அவர் வரவே இல்லை.
படக்குறிப்பு:
முதல் படம்: கூகுள் தேடுதலில் வரும் முதல் படம்.
இரண்டாவது: கடைசியாக வெளிவந்த (ரகசியம்?) படம்?
-oOo-
அதான் தலைப்பிலேயே சொல்லியாச்சே... எதுக்கு அடிக்க வரீங்க?
03:25 Posted in சினிமா | Permalink | Comments (32) | Email this | Tags: sivaji, shivaji, rajini
Tuesday, 12 December 2006
'சிவாஜி'யின் கதை!
அப்பப்போ பத்திரிகைகளில் சிவாஜியின் கதை இதுதான் அப்படின்னு ஏதாவதொரு கதையைப் போடுகிறார்கள். அடுத்து இன்னொரு கதையைப் போட்டு இதுதான் சிவாஜியின் கதைன்னு போட்டுடறாங்க. அப்படியே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதையா வெளியாகிட்டு வருது. அதனால் எனக்குத் தெரிஞ்ச சிவாஜியின் கதைகளை எல்லாம் இங்க பதிவு செய்திருக்கிறேன். இந்த மூணு கதைகளில் சிவாஜியின் கதை எதுன்னு நீங்கதான் சொல்லணும்!
கதை-1 | கதை-2 | கதை-3
07:50 Posted in பொழுதுபோக்கு | Permalink | Comments (16) | Email this | Tags: sivaji, rajini, சிவாஜி, ரஜினி



