Wednesday, 18 June 2008
❒ உள்ளே வெளியே - ஒரு உறவும் பிரிவும்
அரிதாரம் பூசாத அவதாரங்கள்
மதில்மேல் பூனை ஒண்ணு
இரண்டு பக்கம் பாத்துது
கருவாடு மணக்குதுண்ணு
நிதியுள்ள பக்கத்தில் சாய்ந்தது.
வயிறார உண்ட பின்னே
அரிப்பெடுத்த நகத்தாலே
பிறாண்டலைத்தான் தொடர்ந்து விட்டால்
ஊட்டிய கரமே உதைக்காமல் விடுமோ?
08:45 Posted in அரசியல் | Permalink | Comments (1) | Email this
| Tags: pmk, dmk |
del.icio.us
|
|
Digg
Tuesday, 10 April 2007
❒ மருத்துவர் ஐயா நிழல் முதல்வரா?
சமீபத்தில் திண்டிவனம் அருகே ஒரு கார் வெடித்து பலர் உயிரிழந்து இன்னும் பலர்படுகாயமும் பலவீடுகள் கட்டிங்களும் சேதமடைந்தன.
திண்டிவனம் என்றாலே உங்களுக்குத் தெரியும் அது தமிழக அரசியல் வித்தகர் மருத்துவர் அவர்களின் ஊர் என்று. அதனால் நிகழ்ச்சி அறிந்த உடனே அவர் விரைந்து வந்து பாதிக்கப் பட்டமக்களுக்கு ஆறுதல் கூறிச் சென்றிருக்கிறார். இது வரைக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் பாதிக்கப் பட்ட மக்களிடம் ஒவ்வொருவருக்கும் தலா 5லட்சம் தமிழக அரசு வழங்கும் என்று ஒரு விஷயம் சொன்னார் பாருங்கள்...அதைத்தான் சகிக்க முடியவில்லை.
ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விடலாமா? முதல்வரோ, அமைச்சரவையோ எடுக்க வேண்டிய முடிவை இவர் எடுத்து அறிவிப்பது எப்படி?
கொஞ்ச நாட்களாகவே தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமான பேச்சுக்களை மருத்துவரும் அவரது சகாக்களும் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இது குறித்து ஒரு பத்திரிகையாளர் கூறிய தகவல் இவருக்கும் போயஸ் தோட்டத்துக்கும் உடன்பாடு ஏற்பட்டு இருக்கிறது என்பது. அம்மாவின் உடன் பிறவா சகோதரர் ஆகிவிட்ட வைகோ அவர்களின் முயற்சியில் இந்த உடன்பாடு உருவாகி இருப்பதாக தகவல்.
இதனால் மதில் தாண்ட தருணம் பார்த்து இருக்கும் ஐயா அரசுக்கு நெருக்கடி கொடுத்து ஏதாவது மக்கள் பிரச்சினைக்காக அரசைக் குறைகூறி வெளியே போய்விட நினைக்கிறார் என்பது பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் சூடான செய்தி.
11:40 Posted in அரசியல் | Permalink | Comments (23) | Email this
| Tags: pmk, பாமக, ராமதாஸ் |
del.icio.us
|
|
Digg

