Thursday, 20 September 2007
❒ வேர்ட்பிரஸ்.காம் பதிவு டிப்ஸ்
பதிவு இடும்போது வேர்ட்பிரஸ் காம்மில் வரும் ஒரு பிரச்சினையை கவனித்திருப்பீர்கள். தமிழில் தலைப்பு இடும்போது பதிவு இடுகைகளின் தனிச்சுட்டிகள் ஓரே குழப்பமாக மிக நீண்ண்ண்ட சுட்டியாக மாறிவிடும்.
சொந்த தளத்தில் வேர்ட்பிரஸ் பதிவு வைத்திருப்பவர்களுக்கு இதற்கு மாற்றாக தனிச்சுட்டியில் தமிழ் சுட்டியை எண் வரிசை சுட்டியாக மாற்றிக் கொள்ள ஆப்ஷன் இருக்கிறது. (default ஆகவே எண் வரிசைச்சுட்டி தான் வரும்) ஆனால் வேர்ட்பிரஸ்.காம் வழியாக பதிவு இடுகிறவர்கள் இந்த நீண்ட சுட்டியை சகித்துக் கொள்ள வேண்டும். மேலும் இது பல இடங்களில் முறிந்து சிக்கலாகவும் ஆகிவிடும்.
உதாரணமாக
http://kanimai.wordpress.com/2007/05/17/%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/
இந்த இடுகையின் தலைப்பு வணக்கம்.
இந்த ஒரே சொல் எத்தனை நீளமாக ஆகி விட்டது பாருங்கள். தலைப்பில் நாலைந்து சொற்கள் இருந்தால் சுட்டி பத்துப் பதினைந்து வரிகளுக்கு வரும்...
இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்?
எளிய வழி இருக்கிறது.
இடுகையின் தமிழ் தலைப்பை தனியாக நோட்பேடில் இட்டு வைத்துக் கொள்ளுங்கள். இடுகையை இட்டு publish செய்யும்போது தலைப்பை ஆங்கிலத்தில் இடுங்கள்.
அடுத்து manage post - edit post - வழியாக அந்த இடுகையைத் தேர்வு செய்து ஆங்கிலத் தலைப்பை தமிழ் தலைப்பாக மாற்றுங்கள்.
[ஆகவே எளிய குறுக்கு வழியாக நண்பர்கள் கூறியுள்ளபடி ..]
தமிழில் தலைப்பிட்டு பதிவை எழுதி விட்டு வலப்புறம் கீழே post slug என்ற பகுதியில் வரும் சிறு பெட்டியில், உங்கள் இடுகைக்கான தனிச்சுட்டியில் வர வேண்டிய ஆங்கிலச் சொல்லையோ, தலைப்பையோ அல்லது எண்ணையோ இட்டு publish செய்து விடலாம்.
இப்போது தலைப்பு தமிழிலும் சுட்டி ஆங்கிலத்திலும் இருக்கும். நீளமான குழம்பிய சுட்டி வராது. Its gone... போயே போச்...
உதாரணம்
http://kanimai.wordpress.com/2007/09/20/how-to-start-a-blog/
தலைப்பு :
வலைப்பதிவு அறிமுகம் பெறுவது எப்படி?
11:50 Posted in இணையம் | Permalink | Comments (8) | Email this
| Tags: wordpress. இணையம், link |
del.icio.us
|
|
Digg

