Tuesday, 20 February 2007

❒ ஏழைரதத்தில் ஏசி

Image and video hosting by TinyPicசென்னையில் இருந்து டில்லிக்கு முதல் வகுப்பு ஏசி ரயில்பெட்டியில் பயணிக்க ராஜதானி எக்ஸ்பிரஸ் கட்டணம் ரூ.2005, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், ஜிடி எக்ஸ்பிரஸ் கட்டணம் ரூ.1455.

நாளை முதல் சென்னையில் இருந்து புறப்படும் ஏழைகள் ரதத்தில் இதே ஏசி முதல் வகுப்பு கட்டணம் எவ்வளவு தெரியுமா?

படுக்கை வசதியுடன் ரூ.892 மட்டும். இருக்கை வசதி பெட்டி என்றால் ரூ.748 மட்டும்.

Image and video hosting by TinyPicமுற்றிலும் குளிரூட்டப் பட்ட 18 பெட்டிகள்

அமிர்தசரஸ்-சஹர்சா முதல் ஏழைகள் ரதம்.
பாட்னா-டெல்லி இரண்டாவது.
சென்னை-டெல்லி மூன்றாவதாக (நாளை) வருகிறது.
மும்பை-டெல்லிக்கு நான்காவதாக வரவிருக்கிறது.

சென்னையிலிருந்து சனிக்கிழமை தோறும் காலை 6.10க்கு புறப்பட்டு ஞாயிறு காலை 10.15 டில்லி சென்றடையும்.

டில்லியிலிருந்து ஒவ்வொரு திங்கள் காலை புறப்படும்.

லல்லு என்ற முன்னாள் கோமாளி முதல்வர், இன்னாள் ரயில்வே மேதை.

இந்திய ரயில்வேயின் மிகச்சிறந்த அமைச்சர்களில் ஒருவர்.