Thursday, 04 January 2007

முதலமைச்சரா முழுமூடனா?

Image and video hosting by TinyPicமுல்லைப் பெரியாறு விவகாரம் தொடங்கியதில் இருந்து இதுவரை அரசியல் ரீதியாக பலவித விமர்சனங்களும் விவாதங்களும் எழுந்துள்ளன. இரு மாநில முதலமைச்சர்களிடையே கருத்து மோதல்கள் இருந்துள்ளன. ஆனால் இன்று மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக் கட்சிகளான திமுகவும் கம்யூனிஸ்டு கட்சியும் இந்த மாநிலங்களில் ஆட்சியில் உள்ளன.

எதிர்க்கட்சித் தலைவராக பல ஆண்டு அனுபவம் மிக்க அச்சுதானந்தன் இப்போது கேரள முதல்வராக இருக்கிறார். அவர் ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை செய்துள்ள காரியங்கள் ஒரு பொறுப்புள்ள முதலமைச்சரின் செயலாகத் தெரியவில்லை. ஒரு சாதாரண கற்றுக்குட்டி அரசியல் வாதியின் கோமாளித்தனங்கள் அத்தனையும் கொண்டவராக முழு முட்டாள்தனங்களை செய்து வருகிறார். கேரள அரசியலின் நிரந்தர கோமாளி அரசியல்வாதியான கருணாகரனையும் தூக்கிச் சாப்பிடுவதாக உள்ளது இவரது இன்றைய கோமுட்டித்தனங்கள்.

முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரித்தால் அணை உடைந்து விடும் என்றார்கள். நிபுணர்கள் அணையின் வலிமையை உறுதிப் படுத்திய பிறகும், நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் அதே பல்லவியைப் பாடிவருகிறது. அதற்கெல்லாம் மேலாக முல்லைப் பெரியாறு அணை உடைவதாக கிராபிக்ஸ் படமெடுத்து சிடிக்களாக உலவ விட்டிருப்பது மட்டுமல்லாமல் கேரள அரசு இணையதளத்திலும் இந்த கற்பனைக் காட்சியை ஓடவிட்டிருக்கிறது.

இப்போது கேரள போலீசாரால் காவல் காக்கப் படும் அணையின் மேற்புறச்சுவரை கடப்பாரையால் இடித்து, அணை பலமற்றது என்று காட்டும் சிறுபிள்ளைத் தனமான செயலைச் செய்திருக்கிறது. இதனால் மத்திய காவல்படையை தமிழ்க அரசு கேட்டதும் அதற்கு தீவிரமாக மறுப்புத் தெரிவிக்கிறது. பிரச்சினைக்குரிய ஒரு இடத்தில் பிரச்சினைக்குரியவர்களே காவலுக்கு இருப்பது நல்ல நியாயம்தான்!

இதைப்பற்றி கேரள அரசியல் மட்டத்தில் பேசப்படும் விஷயமே வேறு. உண்மையில் அணை உடையும் என்பதோ மக்களுக்கு பாதிப்பு என்பதோ கேரள அரசுக்கு ஒரு பொருட்டே அல்ல. முல்லைப் பெரியாறு அணையைப் பயன்படுத்தி தமிழக அரசு தயாரிக்கும் மின்சாரத்தை கேரள அரசுக்கு இலவசமாக வழங்க ஒப்புக் கொள்ள வேண்டும். அதற்கான பிளாக்மெயில் அரசியல் தந்திரம்தான் மேற்கண்ட எல்லா நாடகங்களும்.

இது ஒருபுறமிருக்க கேரளாவின் மருத்துவமனைக் கழிவுகளை தமிழக எல்லைக்குள் கொண்டு வந்து கொட்ட தனியாருக்கு டெண்டர் விட்டு உரிமம் வழங்கியிருக்கிறது கேரள அரசு. இதற்கு முந்தைய அரசுகள் அந்தக் கழிவுகளைச் சுத்திகரிப்பு செய்ய பணம் ஒதுக்கி செயல்பட்டன. அச்சுதானந்தன் அரசோ அந்தப் பணம் எதுக்கு சும்மா போகுதென்று அதைக் கட் செய்து விட்டு அந்த கிருமிக் கழிவுகளை கேரளத்துக்கு வெளியே தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் கொண்டு வந்து கொட்ட ஏற்பாடு செய்தது. சமீபத்தில் இம்மாதிரி வந்தவைகளை சில பத்திரிகைகள் அம்பலப்படுத்த, பொதுமக்களே அதைத் தடுத்து கேரளாவுக்கு திருப்பி அனுப்பி விட்டார்கள். தமிழக காவல்துறையும் உஷாராகி திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்தது.

அடுத்த மூடத்தனம் என்னவென்றால் அப்படிப்போன லாரிகளை கேரளாவுக்குள் அனுமதிக்க மறுத்திருக்கிறது கேரள அரசின் வனத்துறை. மற்றவர்கள் எல்லாம் இளிச்சவாயர்கள் என்று தொடர்ந்து இம்மாதிரி மூடத்தனங்களில் ஈடுபட்டு வரும் கேரள அரசையும் அதன் மாண்புமிகு முதல்வரையும் என்னவென்று அழைக்க வேண்டும்?

10:55 Posted in அரசியல் | Permalink | Comments (12) | Email this | Tags: kerala |  del.icio.us | | Digg! Digg