Thursday, 01 November 2007
❒ உடனடி இணையத்தொடர்பு
இணைய இணைப்பு இல்லாத இடத்தில் பிஎஸ்என்எல் தொலைபேசி மூலம் உடனடி இணையத்தொடர்பு பெறலாம்.
இணையத் தொடர்பு பெறாத இடங்களில் உள்ள கணினி அல்லது உங்கள் மடிக்கணினி மூலம் இணையத் தொடர்பு பெற வழி இருக்கிறது. இந்தியாவில் எங்கிருந்தும் பிஎஸ்என்எல் தரைவழித் தொலைபேசி அல்லது செல்ஒன் போஸ்ட்பெயிட் இணைப்பு இருந்தால் அதன்மூலம் டயல்அப் இணையத்தொடர்பை உடனடியாக பெற இயலும். விண்ணப்பமோ, இணையத்தொடர்புக் கணக்கு அட்டையோ வாங்கத் தேவை இல்லை.
வழிமுறை:
தொலைபேசி இணைப்பில் கணினி மோடத்தை இணைத்துக் கொள்ளவும்.
கணினியில் டயல் அப் அக்சஸ் கோடு 172222 என்ற எண்ணுக்கு செட் செய்து கொள்ளவும்.
பயனர்பெயர் (யூசர்நேம்) : எஸ்டிடிகோடு + தொலைபேசி எண்
காப்புப் பெயர் (பாஸ்வேர்ட்) : உங்கள் விருப்ப ஆல்பா-நியூமெரிக் பெயர்.
அவ்வளவு தான் இணைப்பு தயார். பயனர் பெயராக தொலைபேசி எண் இருப்பதால் அந்த தொலைபேசி எண்ணுக்கு மட்டுமே அந்த காப்புப் பெயருடன் இணையத்தொடர்பு கிட்டும். அதே எண்ணில் இருந்து தொடர்ந்து அதே பாஸ்வேர்ட் மூலம் இணையத்தொடர்பை பயன்படுத்தலாம். வேறொரு எண்ணுக்கு எனில் மீண்டும் புதிதாக செட் செய்து கொள்ள வேண்டும்.
கட்டணவிவரம் -
இணைய இணைப்பு நேரத்தில் தொலைபேசிக் கட்டணம் நிமிடத்துக்கு 10 காசுகள் மற்றும்
இணையக் கட்டணம் காலை 7.30 மணி முதல் இரவு 10.30 வரை ஒரு புள்ளி 450 வினாடிகள். அதாவது ஏழரை நிமிடங்கள். இரவு 10.30 முதல் காலை 7.30 வரை ஒரு புள்ளி 900 வினாடிகள். அதாவது பதினைந்து நிமிடங்கள், ஒரு கால் ஆக கணக்கிடப்படும்.
இந்தக் கட்டணங்கள் தொலைபேசி பில்லில் இணைக்கப்பட்டு வந்துவிடும். முன்கூட்டியே செலுத்த தேவை இல்லை.
விவரங்களுக்கு:
http://netonechn.bsnl.co.in
or
TOLL FREE Call Centre Number 1500
18:30 Posted in இணையம் | Permalink | Comments (5) | Email this
| Tags: internet, dialup |
del.icio.us
|
|
Digg
Tuesday, 11 September 2007
❒ ஜிமெயில் ஒரு ஆரம்பம்
வலைப்பதிவர்கள் அதிகம் பயன்படுத்திக் கொண்டிருப்பது blogger.com தரும் வலைப்பதிவு சேவையைத்தான். இதற்குக் காரணம் இதைவிட அதிக வசதிகள் பிற சேவைகளில் இருந்தாலும் இணையப்பக்கம் குறித்து அதிகம் அறியாதவர்களுக்கும், நிறைய அறிந்தவர்களுக்கும் தேவையான வசதிகள் இதில் தான் இருக்கின்றன.
உதாரணமாக இணையப்பக்க வடிவமைப்பு, HTML நிரல் குறித்து அறிந்திராதவர்கள் கூட பிளாக்கர் தரும் ரெடிமேட் அடைப்பலகை (template) களைப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் படைப்புக்களை வலைப்பதிவில் காட்சிப்படுத்தலாம். ஒரு வேர்ட்பாட் (word pad) போன்ற வசதி கொண்ட எழுதும் பக்கத்தில் சென்று எழுதி பதிந்து விட்டால் அது தானாக பதிவில் தேதி நேரத்துடன் பதிவாகி வந்து விடும்.
அதே சமயம் நிரல்களில் பரிச்சயம் உள்ளவர்கள் முழுநிரலையும் தலைகீழாக மாற்றிப் போட்டு சொந்தமாக அடைப்பலகைகளை எளிதாக வடிவமைக்கவும் தேவையான ஜாவாஸ்க்ரிப்ட் அலங்காரங்களையும் அதிலேயே செய்து கொள்ளவும் சுதந்திரம் கொடுத்தது பிளாக்கர்.
இதில் பதிவு தொடங்க நேரடியாக பிளாகர் வலைப்பக்கம் சென்று எளிதாக தொடங்கி விட முடியும்.
கூகுள் நிறுவனம் பிளாக்கரை வாங்கி நிறைய மேம்படுத்தல்கள் செய்து பீட்டா பிளாக்கரை அறிமுகம் செய்தது. இதன்பிறகு ஜிமெயில் கணக்கு இருந்தால் தான் பிளாக்கரில் பதிவு தொடங்க முடியும்.
ஜிமெயில் கணக்கில் இருந்து நேரடியாக பிளாக்கரில் நுழைய முடியும். பிளாக்கர் தளத்தில் ஜிமெயில் பயனர் பெயரில் தான் உள் நுழைய முடியும்.
ஆகவே முதலில் ஜிமெயில் கணக்கு தொடங்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?
அடிப்படையில் இருந்தே ஆரம்பிப்போம்.
கூகுள் தான் இன்று தேடுபொறிகளில் முன்னிலை வகிக்கிறது. அதன் ஜிமெயிலும் பிளாக்கரும் அது போலவே நமக்கு முதன்மையான சேவைகளாக இருக்கின்றன.
எனவே கூகுளில் இருந்து தொடங்குவோம்.
முதலில் google.com தளத்துக்கு செல்வோம்.

எல்லா இணையதளங்களின் முகவரியையும் நினைவில் வைத்திருப்பது எளிதல்ல. அதிலும் அவற்றின் விரிவான முழு முகவரி நினைவில் வைப்பது மற்றும் அவற்றை தட்டச்சு செய்வது சிரமம். எனவே ஒரு தளப்பெயரின் முக்கிய பாகம் ஒரு சொல் சரியாக நினைவிருந்தால் அந்தச் சொல்லை கூகுள் தேடுபொறியில் கொடுத்து விட்டால் தேடுதல் முடிவுகளில் அந்தச் சரியான தளத்துக்கான சுட்டி பெரும்பாலும் கிடைத்து விடும்.

இப்போது நமக்கு gmail தேவை எனவே gmail என்று கூகுள் தேடுபொறியில் தட்டச்சு செய்து தேடுதல் கட்டளை கொடுத்தால் gmail பக்கத்துக்கான சரியான சுட்டி நமக்குக் கிடைத்து விடும்.
இது தான் gmail கணக்கு தொடங்க, செல்ல வேண்டிய தளம்.
mail.google.com/
இந்தப் பக்கத்தில் கீழ்வலது பக்கம் Sign up for Gmail என்று இருக்கும் சுட்டி வழியாக
http://mail.google.com/mail/signup
என்னும் பக்கத்துக்கு செல்ல வேண்டும்.
இங்கே இருக்கும் படிவத்தில் விவரங்களை நிரப்பி ஒரு Gmail கண்க்கை உருவாக்கிக் கொள்ளவும்.
(ஜிமெயில் உருவாக்க சமீப காலம் வரை இன்னொரு ஜிமெயில் பயனர் அழைப்பு அனுப்ப வேண்டி இருந்தது. இப்போது நேரடியாகவே ஜிமெயில் கணக்கு தொடங்க முடியும்.)

யாகூ போன்ற பல தளங்களில் மின்னஞ்சல் தொடங்க பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட பல சொந்த விவரங்கள் தர வேண்டி இருக்கும். ஆனால் ஜிமெயில் கணக்கு தொடங்க சொந்த விவரங்களாக பெயர் மற்றும் நாடு மட்டுமே பதிய வேண்டும். வேறு எந்த விவரமும் அதிக படிவ விவரங்களும் தேவை இல்லை.
கடவுச்சொல் (பாஸ்வேர்ட்) மறந்துவிடாமல் இருக்க...மறந்து விட்டால் மீண்டெடுக்க ஒரு ரகசிய கேள்வி பதில் அதில் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
நாம் விரும்பும் மின்னஞ்சல் பெயர் கிடைக்குமா? இருக்கிறதா? என்பதை check availability என்ற சுட்டியைப் பயன்படுத்தி பரிசோதித்துக் கொண்டு ஒரு முகவரியை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
அவ்வளவு தான் இப்போது நீங்கள் ஜிமெயில் கணக்கு உருவாக்கி விட்டீர்கள்.
ஜிமெயிலில் நுழைந்து சோதித்துக் கொள்ளுங்கள்.
(ஜிமெயிலைப் பயன்படுத்தி பிளாக்கர் கணக்கு, தமிழ் வலைப்பதிவு தொடங்குவது எப்படி - தொடரும்)
-oOo-
குறிப்பு: இந்த இடுகையை படித்து வரும் பலருக்கு சிறுபிள்ளைத் தனமாகக்கூட தோன்றலாம். கணினியில் புழங்குகிறவர்களுக்கோ, ஏற்கனவே வலைப்பதிவர்களாக இருப்பவர்களுக்கோ இவை பெரிதாக பயன்படப் போவதில்லை. மேலும் ஓரளவு இணையப் பரிச்சயம் உள்ளவர்களுக்கு இந்த நீட்டி முழக்கல் எரிச்சலாகக் கூட இருக்கலாம். ஆனால் ஒரளவு கணினிப் பயிற்சி இருந்தாலும் இணையப் பரிச்சயம் குறைவாக உள்ளவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.
உதாரணமாக எனக்குத் தெரிந்த இருவரைச் சொல்லலாம். ஒருவர் கணினியில் DTP பயிற்சி முடித்து ஆப்செட் அச்சகம் ஒன்றில் பணி செய்பவர். இன்னொருவர் MS ஆபீஸ் பயின்று ஒரு நிறுவனத்தில் கணக்காளராக இருப்பவர். இவர்கள் இருவருமே இணைய இணைப்பு இல்லாத சூழலில் கணினிப் பயிற்சி பெற்றவர்கள்.
இவர்களைப் போன்றவர்களுக்கும் மாணவர்களுக்கும் இத்தனை விரிவான விளக்கம் அவசியம் என்று கருதுகிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?
06:55 Posted in internet | Permalink | Comments (8) | Email this
| Tags: internet, gmail, blogger, வலைப்பதிவு, ஜிமெயில் |
del.icio.us
|
|
Digg
Sunday, 19 August 2007
❒ வலைப்பதிவு அறிமுகம் பெறுவது எப்படி?
இப்போதெலாம் கூகுள் தேடுதலில் தமிழில் தேடினால் இணையப் பக்கங்கள் மட்டுமல்ல வலைப்பதிவுகளும் வந்து விடுகின்றன. எனவே வலைப்பதிவு அறிமுகம் கிடைப்பது இன்று இணையப் பரிச்சயம் உள்ளவர்களுக்கு மிக எளிதாகவே இருக்கிறது.
இன்னும் கணினியில் தமிழில் எழுதும் பரிச்சயம் வராதவர்கள் கூட திரட்டிகள் வாயிலாக முதலில் வலைப்பதிவுகளை படிக்கலாம்.
தமிழின் பிரதான வலைப்பதிவுத் திரட்டிகள்.
தமிழ்மணம் (http://www.thamizmanam.com)
தேன்கூடு (http://www.thenkoodu.com)
தமிழ்ப்பதிவுகள் (http://www.tamilblogs.com)
தமிழ்வெளி (http://www.tamilveli.com)
இவற்றில் தாங்களாக இணைந்து கொள்ளும் பதிவர்களின் பதிவுகள் திரட்டப் படுகின்றன.
சில நண்பர்களால் நல்ல வலைப்பதிவுகள் அடையாளம் காட்டப்பட்டு தொகுக்கப்படும் தமிழ் வலைப்பதிவுத் திரட்டி மாற்று (http://www.maatru.net).
இதே போன்று கில்லி (http://gilli.in) என்ற தளமும் தமிழ், ஆங்கிலப் பதிவுகளை தேர்ந்தெடுத்துத் தொகுக்கிறது.
வாரம் ஒரு ஆசிரியர் தன்னைக் கவர்ந்த வலைப்பதிவுப் பக்கங்களை அறிமுகம் செய்து தொகுப்பது வலைச்சரம் (http://blogintamil.blogspot.com)
தனியொருவராக தினந்தோறும் தான் படிக்கும் பதிவுகளில் தேவையற்றதை விலக்கி மற்றதைத் தொகுத்துத் தருகிறார் ஸ்னாப்ஜட்ஜ் (http://snapjudge.blogspot.com)
இவை போன்ற திரட்டிகள், திரட்டுகள் வாயிலாக சில நாட்கள் தமிழ் வலைப்பதிவுகளை வாசித்து வந்தாலே வலைப்பதிவுகள் என்பது என்ன? அதன் வீச்சு என்ன? அதன் சாதக பாதகங்கள் போன்றவை ஓரளவு புரிந்து விடும்.
இப்போது நீங்கள் வலைப்பதிவு வாசகராகி விட்டீர்கள். சில கருத்துக்களைப் படிக்கும் போது நீங்களும் பதில் சொல்ல விரும்பு கிறீர்கள். ஆனால் தமிழில் எழுதுவது எப்படி என்று உங்களுக்குத் தெரியவில்லை... என்ன செய்யலாம்?
நமது கணினிகளின் இயல்பான தட்டச்சு முறையாக ஆங்கிலம் தான் இருக்கிறது. எனவே கணினியைத் தமிழ் தட்டச்சுக்கு தயார் படுத்த தட்டச்சு இயக்கி தேவை. அவற்றை இணையத்திலிருந்து பதிவிறக்கி நிறுவிக் கொள்ள வேண்டும். அல்லது தமிழ்ச் செயலிகளில் உள்ள தமிழ் தட்டச்சு இயக்கிகளைப் பயன்படுத்த வேண்டும். முரசு, அழகி, குறள் போன்ற பல தமிழ்ச் செயலிகளில் தமிழ் தட்டச்சு செய்ய ரோமன், தமிழ்99, பாமினி போன்ற தமிழ் தட்டச்சு முறைகள் இருக்கின்றன. அவற்றில் நமக்குத் தேவையான முறையை தேர்ந்தெடுத்து தட்டச்சு செய்யலாம்
ஏற்கனவே தமிழ்தட்டச்சுப் பயிற்சி மேற்கொண்டவர்கள் கணினியிலும் பாமினி போன்ற யளனகப தட்டச்சு முறையில் தட்டச்சு செய்யலாம். இதுவரை தமிழ் தட்டச்சோ, கணினி எழுதுமுறையோ அறியாதவர்கள் அந்த முறையில் தட்டச்சு செய்வது மிகவும் சிரமம்
தமிழின் ஆரம்பகாலப் பதிவர்கள் செய்தது போல ரோமன் முறையில் தமிழில் எழுதும் முறை சட்டென்று புரிந்து விடும். உதாரணமாக ஆங்கிலத்தில் ammaa என்று எழுதினால் தமிழில் அம்மா என்று வரும். ஆங்கிலத்தில் எழுதினால் தமிழில் வரும் transliteration முறையில் ரோமன் தட்டச்சு முறை இருக்கிறது. இதை தமிங்கிலீஷ் தட்டச்சு என்று (கேலியாக) சொல்கிறோம். அஞ்சல் முறை என்பது பொதுப் பெயர்.
ஆரம்பப் புரிதல் எளிதாக இருந்தாலும் வழக்கப் படுத்திக் கொள்ளும் போது இதில் சில சிக்கல்கள் உள்ளன. முதலாவதாக இம்முறையில் தட்டச்சு செய்து பழகும்போது நம் மனம் தமிழை ஆங்கில எழுத்து வழியாகவே நினைக்கப் பழகுகிறது. கூ என்ற எழுத்தை தமிங்கில அஞ்சல் முறையில் எழுத kuu என்று (k-u-u மனதில் எழுத்துக் கூட்டி) எழுத வேண்டும்.
கூ என்பது க'கர மெய்யுடன் ஊ'காரம் இணைந்து வருவது. எனவே க+ஊ என்று தட்டச்சு செய்தாலே கூ என்று தட்டெழுதக் கூடிய எளிய தட்டச்சு முறையான தமிழ்99 முறையை ஆரம்பத்திலேயே பழகிக் கொள்வதால் குறைந்த விசையழுத்தங்களில் விஞ்ஞானப் பூர்வமாக தட்டெழுதப் பயிலலாம். இது 1999 ம் ஆண்டு நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டு தமிழக அரசால் தரப்படுத்தப் பட்ட விசைப்பலகை முறையாக அங்கீகரிக்கப் பட்டது. இலங்கை, மலேசிய அரசாங்கங்களும் இந்த முறையை அங்கீகரித்துள்ளன.
எனவே தமிழுக்கான இந்த தட்டச்சு முறையில் தமிழ் எழுதக் கற்பது எளியதும் பயனுள்ளதுமாக இருக்கும். ஏற்கனவே தமிங்கில தட்டச்சு முறையில் வலைப்பதிவுப் பயிற்சி பழகிய மூத்த வலைப்பதிவர்கள் பலரும் கூட இன்று தமிழ்99 முறையின் சிறப்பையும் அவசியத்தையும் உணர்ந்து இப்போது இந்த முறையில் தட்டச்சு செய்கிறார்கள். இன்னும் சிலருக்கு இதில் ஆர்வம் இருந்தாலும் ஏற்கனவே பழகிய முறையை பழக்கம் காரணமாக கைவிட இயலாமல் இருக்கிறார்கள். எனவே ஆரம்பத்திலேயே தமிழ்99 முறையில் தமிழ் தட்டச்சு செய்ய பழகிக் கொள்வது நல்லது.
தமிழ் வலைப்பதிவுகளின் ஆரம்பக் காலத்தில் தமிழ் எழுது கருவிகளை தயாரித்து வழங்கிய சுரதா யாழ்வாணனும் தற்போது தனது புதுவை யூனிகோட் எழுதியில் (http://www.suratha.com/unicode.htm) தமிழ்99 தட்டச்சு (tam) முறையையும் இணைத்துள்ளார். இது இண்டர்நெட் எக்ஸ்புளோரரில் இயங்கும்.
பயர்பாக்ஸ் இணைய உலாவியைப் பயன்படுத்துபவர்கள் எழுதுவதற்கு தமிழா தமிழ்கீ ஆன்லைன் (http://developer.thamizha.com/tamilkey.html) பயன்படுத்தலாம். (தமிழ்க்கீ பயர்பாக்ஸ் எக்ஸ்டென்சனாகவும் வருகிறது. அதை நிறுவிக் கொண்டால் பயர்பாக்ஸ் மூலமாக இணையப் பயன்பாடுகளுக்கு பயன்படுத்தலாம்.)
தமிழ்99 முறையில் திரைவிசைப்பலகையுடன் கூடிய ஆன்லைன் எழுதுகருவி w3 தமிழ் இணைய விசைப்பலகை (http://wk.w3tamil.com)
இது போன்ற இணைய எழுதுகருவிகளே ஆரம்ப மறுமொழி இடுதலுக்கு போதுமானவை. இந்த கருவிகளின் திரையில் தமிழில் எழுத வேண்டியதை தட்டச்சு செய்து பின் அவற்றை தேர்வு செய்து வெட்டி தேவையான மறுமொழிப் பெட்டியில் ஒட்ட வேண்டும். (cut & paste). இவை இணையத்தில் இருப்பதால் எந்தக் கணினியில் இருந்தும் எங்கிருந்தும் இவற்றைப் பயன்படுத்தி எழுத முடியும்...
உங்களிடம் சொந்தமாக கணினி இருந்தால் அல்லது உங்கள் கட்டுப் பாட்டில் அலுவலகக் கணினி இருந்தால் தமிழா.காம் (http://thamizha.com) தளத்தில் இருந்து எகலப்பை - தமிழ்99 (http://thamizha.com/modules/mydownloads/singlefile.php?cid=3&lid=5) என்ற விசைப்பலகை இயக்கியை பதிவிறக்கி நிறுவிக் கொள்வது நல்லது.
இதன்மூலம் இணையத்தில் தமிழ் எழுத மட்டுமல்லாமல் நேரடியாகவே நோட்பேடு, வேர்ட்பேடு போன்ற விண்டோஸ் செயலிகளிலும் விண்டோசில் இயங்கும் எம் எஸ் ஆபீஸ் போட்டோஷாப் உள்ளிட்ட பிற செயலிகளிலும் கூட எப்போதும் நேரடியாக தமிழில் எழுத முடியும். மேலும் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தந்துள்ள தமிழ்99 சிறப்பு வசதிகள், விதிகள் (http://www.tamilvu.org/Tamilnet99/keystand.htm) போன்றவற்றை இதில் தான் முழுமையாக பயன்படுத்த முடியும்.
-oOo-
இப்போது நீங்கள் வலைப்பதிவுகள் படிக்கவும் மறுமொழி விமர்சனங்கள் எழுதவும் ஆரம்பித்து விட்டீர்கள். அடுத்தது என்ன?
நீங்களும் ஒரு வலைப்பதிவை ஆரம்பித்து விட வேண்டியது தானே?
வலைப்பதிவு தொடங்குவது எப்படி?
அதற்கு முன்னால் ஒரு விஷயம்...
தமிழில் எழுதலாம் வாருங்கள், வலையில் பரப்பலாம் வாருங்கள் (http://kasilingam.com/wiki/doku.php?id=e-sangamam_1) என்று தமிழ்மணம் நிறுவனர் காசி மிகச்சிறந்த ஒரு தொடரை ஏற்கனவே எழுதியிருக்கிறார். அதில் அவர் பழைய பிளாக்கரில் வலைப்பதிய ஆரம்பிப்பது வரை சிறப்பான விளக்கமும் தந்திருக்கிறார்.
அதை நீங்கள் அவசியம் வாசிக்க வேண்டும்.
அடுத்து புதிய பிளாக்கர், வேர்ட்பிரஸ் உள்ளிட்ட சேவைகளில் பதிவு தொடங்குவது பற்றிய விளக்கங்களுடன் நான் தொடர்கிறேன்.
09:10 Posted in internet, இணையம், வலைப்பதிவு | Permalink | Comments (5) | Email this
| Tags: internet, blogs, வலைப்பதிவு, இணையம் |
del.icio.us
|
|
Digg

