Monday, 11 August 2008

❒ இந்தியாவின் முதல் தங்கம்

ஒலிம்பிக் வரலாற்றில் தனிநபர் பிரிவு ஒன்றில் முதலாவது தங்கப் பதக்கத்தை இன்று இந்தியாவுக்காக அபினவ் பிந்த்ரா துப்பாக்கி சுடும் போட்டியில் வென்றுள்ளார். 1980ல் மாஸ்கோ ஒலிம்பிக்கில் ஹாக்கியில் தங்கம் வென்ற இந்தியா இன்று தகுதிச்சுற்றிலேயே வெளியேறி விட்ட நிலையில் இந்த தங்கம் எதிர்பாராத சாதனை.

*

ef250ba826eb4ac0ec7f89d73bd3a78d.jpgபெய்ஜிங்: ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்குக் கிடைத்துள்ள ஒலிம்பிக் தங்கம் இது. மேலும் தனி நபர் ஒருவர் இந்தியாவுக்காக தங்கம் வென்றதும் இதுவே முதல் முறையாகும்.

ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிய நாள் முதலே இந்தியாவுக்கு ஏற்றமும், இறக்கமும் மாறி மாறி வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் இன்றைய காலை இந்தியாவுக்கு தங்கமான காலையாக புலர்ந்துள்ளது. ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கத்தை தட்டி புதிய வரலாறு படைத்தார்.

தகுதிச் சுற்றில் 500 புள்ளிகள் வென்று இறுதிச் சுற்றுக்குள் நுழைந்த பிந்த்ரா, அதில் 700.5 புள்ளிகள் வென்று முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்.

சீனாவின் கியூனான் சூ வெள்ளி பதக்கமும், பின்லாந்தின் ஹென்றி ஹாக்கினன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

28 ஆண்டுகளுக்குப் பிறகு ...

இந்தியாவுக்கு ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் கிடைத்திருப்பது கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக இந்தியா, 1980ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கியில் தங்கம் வென்றிருந்தது. அதன் பின்னர் இந்தியாவுக்கும், தங்கப் பதக்கத்திற்கும் வெகு தூரமாகி விட்டது.

லியாண்டர் பயஸ் - மகேஷ் பூபதி தங்கப் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை கடந்த ஒலிம்பிக் போட்டிகளில் நழுவ விட்டிருந்தது.

கடந்த ஒலிம்பிக்கில் மயிரிழையில் ராஜ்யவர்த்தன் ரத்தோர் தவற விட்டு வெள்ளிப் பதக்கம் வென்றார். இவரும் துப்பாக்கி சுடுதல் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில், 28 ஆண்டு கால தங்கப் பதக்க வறட்சிக்கு இந்தியா தற்போது முற்றுப்புள்ளி வைத்து விட்டது.

முதல் வீரர்:

மேலும், ஒலிம்பிக் போட்டியில் தனி நபர் வீரர் யாரும் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்றதில்லை. அந்த வகையில் பிந்த்ரா புதிய வரலாற்றையும் படைத்துள்ளார்.

ஜனாதிபதி பிரதமர், சோனியா வாழ்த்து:

தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ராவுக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தங்கப் பதக்கம் வென்றது குறித்து பிந்த்ரா கூறுகையில், இது எனக்குக் கிடைத்த வெற்றியல்ல, இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றி என்று அடக்கத்துடன் குறிப்பிட்டார்.

இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் சுரேஷ் கல்மாடி கூறுகையில், இந்திய வரலாற்றில் இது மிகவும் முக்கியமான நாள். பிந்த்ராவின் வெற்றியால் இந்தியாவுக்கே பெருமை கிடைத்து விட்டது என்றார்.

பிந்த்ரா சாதனை படைத்த அதே நேரத்தில் இந்தியாவின் இன்னொரு வீரரான ககன் நரங் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை.

பிந்த்ரா பங்கேற்ற அதே பிரிவில்தான் நரங்கும் கலந்து கொண்டார். 600க்கு 595 என்ற புள்ளிகளையே அவர் பெற்றதால், இறுதிச் சுற்றுக்கு நரங் தகுதி பெற முடியாமல் போனது.

=தட்ஸ்தமிழ்


*9510a37e36d76e8d8a56ed7c8a319dd4.jpg
பீஜிங்: பீஜிங் ஒலிம்பிக்கில் இன்று நடந்த ஆண்களுக்கான 10மீ., துப்பாக்கி சுடுதல்(ஏர் ரைபிள்) பைனலில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார். தனி நபர் போட்டியில் இந்தியா தங்கம் பெறுவது இது‌வே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அபினவ் பிந்த்ரா மூலம் இந்தியா வரலாறு படைத்துள்ளது. இதன்மூலம் பீஜிங் ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வென்ற இந்தியர் என்ற பெருமை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா பதக்கப்பட்டியலில் இடம் பிடித்தது. சீனாவின் கியூனான் சூ வெள்ளி பதக்கமும், பின்லாந்தின் ஹென்றி ஹாக்கினன் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.

அபினவ் பிந்த்ரா ஒரு முன் உதாரணம் : கோச் தாமஸ் பேட்டி

அபினவ் பிந்த்ரா, 10 மீட்டர்ஸ்., ஏர் ரைபில்ஸ் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவரது வெற்றி குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவரது கோச், சன்னி தாமஸ் , பிந்த்ராவின் வெற்றி குறித்து பெருமை கொள்வதாக தெரிவித்தார். மேலும் பிந்த்ராவின் வெற்றியால், அவர் மற்ற வளர்ந்து வரும் வீரர்களுக்ககு ஒரு சிறப்பான முன் உதாரணம் ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஒலிம்பிக் கழக தலைவர் சுரேஷ் கல்மாடி பெருமிதம் தெரிவித்தார். பிந்த்ரா 700.5 புள்ளிகளை எடுத்து சாதனை நிகழ்த்தியுள்ளார். கேல்ரத்னா விருது பெற்ற பிந்த்ரா 2002ம் ஆண்டு காமென்டெவல்த் போட்டியில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனிநபர் பதக்க விபரம் :

1952, ஹெல்சின்கியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தம், ஆண்கள்பாரிசில் ஜாதவ் வெண்கலம் வென்றார்.அதன் பிறகு 1990ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் நார்மன் பிரிட்சர்ட், 200 மீ., ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கம் வென்றார். தொடர்ந்து 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் வெள்ளி வென்றார். 1996ல், அட்லாண்டா ஒலிம்பிக்சில், பயஸ் வெண்கலம் வென்றார். சிட்னியில் 2000ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்சில் 69 கி.கி., பளுதூக்குதல் போட்டியில் மல்லீஸ்வரி வெண்கலம் வென்றார்.(2004)ஏதென்ஸ் ஆண்கள் துப்பாக்கி சுடுதல்(டபுள் டிராப்) போட்டியில் ரத்தோர் வெள்ளி வென்றார். அத்தனைக்கும் முத்தாய்ப்பாய், இந்த ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்சில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்று, தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற சாதனையாளர் ஆகியுள்ளார்.

பிந்த்ராவுக்கு ஜனாதிபதி வாழ்த்து:

துப்பாக்கி சுடுதல் போட்டியில் அபினவ்பிந்த்ரா தங்கம் வென்றதற்கு, ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் அவர் இந்தியாவுக்கு பெருமை அடைய செய்திருப்பதாகவும், அத்தனை இந்தியர்களையும் பெருமிதம் கொள்ள செய்துள்ளதாகவும் தெரிவித்தார். 28 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம் வென்று பிந்த்ரா வரலாறு படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

=தினமலர்


*

இது பற்றிய தமிழ்நெஞ்சம் வீடியோ பதிவு

Friday, 26 January 2007

☆ அய்யா என்ன செய்வார்?

Image and video hosting by TinyPicன்று இந்தியாவில் குடியரசு தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலில் அவர் நிறுத்தப்பட வாய்ப்பு குறைவாகவே உள்ளதால் ஜனாதிபதியாக அப்துல்கலாம் கொடியேற்றும் கடைசி குடியரசு தினமாக இது இருக்கலாம்.

இந்திய ராக்கெட்டில் நான்கு செயற்கைக்கோள்களை ஒரே சமயத்தில் வானில் ஏவி இந்திய விஞ்சானிகள் பெற்ற வெற்றி மற்றும், திரும்பி வரும் ராக்கெட் தொழில் நுட்பம் ஓரளவுக்கு சாத்தியமான நிலை ஆகியவற்றின் அடையாளமாக இன்றைய குடியரசு தினவிழாவில் முக்கிய காட்சியாக திரும்பி வந்த விண்ணூர்தி இருக்கும்.

-oOo-

ஜெயல்லிதாவால் புறக்கணிக்கப் பட்ட சாய்பாபாவுக்கு கருணாநிதி வரவேற்பு அளித்தது போல சுனாமியில் வீடிழந்தோருக்கு ஏராளமாக வீடுகள் கட்டிக் கொடுத்த அமிர்தானந்த மயிக்கு ஜெயலலிதா அளிக்க மறந்த பாராட்டை கலைஞர் வழங்க வேண்டும் என்று கோவி. கண்ணன் பதிவு போட்டிருக்கிறார்.

இது குறித்த ஒரு பத்திரிகைச் செய்தி

மாதா அமிர்தானந்தமயி நாளை சென்னை வருகை

சென்னை, ஜன. 26: மாதா அமிர்தானந்தமயி சனிக்கிழமை (ஜன.27) சென்னை வருகிறார்.

அமிர்தானந்தமயி மடம் சார்பில், அன்று மாலை நடைபெறும் நலத்திட்ட நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் அன்புமணி, வேலு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பஜனை நிகழ்ச்சியில் மாதா கலந்து கொண்டு அருளாசி வழங்குகிறார்.

இதுதொடர்பாக, சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பு புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாதா அமிர்தானந்தமயி மடம் சார்பில் நடைபெற்று வரும் சுனாமி நிவாரணப் பணிகளின் திட்ட இயக்குநர் அபயமிருத சைதன்யா கூறியது:

மாதா அமிர்தானந்தமயி தமிழகத்தில் 20 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, வரும் 27-ம் தேதி அவர் சென்னை வருகிறார். கீழ்பாக்கத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் அன்று மாலை நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதில், ஊனமுற்றவர்கள் மற்றும் பெண்களுக்கு ஓய்வூதியம், தையல் இயந்திரங்கள் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன. மாதா அமிர்தானந்தமயி மடம் சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.

இதன்பின், மாதா அமிர்தானந்தமயி அருளாசி வழங்குகிறார். மேலும், மக்களுடன் தியானம், பஜனை உள்ளிட்ட நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிக்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, வரும் 29-ம் தேதியும் மாதாவின் பஜனை, தரிசன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

முதல்வர் பங்கேற்பு:நாகப்பட்டினத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மாதா அமிர்தானந்தமயி மடம் சார்பில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

இறுதிகட்டமாக, 450 வீடுகளை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நாகப்பட்டினத்தில் இம்மாதம் 31-ம் தேதி நடைபெற உள்ளது. முதல்வர் கருணாநிதி இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அப்போது, வீடுகளுக்கான சாவிகளை பயனாளிகளுக்கு முதல்வர் வழங்குவார்.

இதன்பின், மதுரை, திருப்பரங்குன்றம், ராமநாதபுரம் உள்ளிட்ட ஊர்களில் மாதா அமிர்தானந்தமயி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

தினமணி

-oOo-

பழைய பிளாக்கரில் இருந்து புதிய பிளாக்கருக்கு மாறுபவர்களுக்கான டிப்ஸ் தருகிறார்கள் இவர்கள்.

வெட்டிப்பயல் புதிய ப்ளாகருக்கு மாறலாம் வாங்க!!!

நாமக்கல் சிபி பீட்டாவுக்கு மாறியது எப்படி?

-------------------
செய்திச் சிதறல்கள்.

08:00 Posted in அரசியல் | Permalink | Comments (5) | Email this | Tags: india, republic |  del.icio.us | | Digg! Digg