Tuesday, 13 March 2007

❒ ஐஸ்கிரீம் சாப்பிட்டா குழந்தை பிறக்கும்!

ஐஸ்கிரீம் சாப்பிடுங்க * "குவா குவா' நிச்சயம்

பாரீஸ்: நீங்கள் டீன் ஏஜ் பெண்ணா? ஐஸ்கிரீம் சாப்பிடும் பழக்கம் உள்ளவரா? அப்படியானால், உங்களுக்கு குழந்தை பிறப்பதில் எந்த கஷ்டமும் இருக்காது. மேலும், கொழு கொழு என்று பிறக்கும்.

"கொழுப்பு நீக்கப்பட்ட பால் சாப்பிடும் பெண்களை விட, கொழுப்பு நீக்கப்படாத பால், ஐஸ்கிரீம் சாப்பிட்ட பெண்களுக்கு குழந்தை பிறப்பதில் எந்த பிரச்னையும் ஏற்பட்டதில்லை' என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஹார்வர்டு பல்கலைக் கழக பொது சுகாதார ஆராய்ச்சிப் பிரிவின் தலைவர் ஜோர்ஜ் சவார்னோ இது தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்டார். அந்த ஆய்வில் பெண்கள் பால் சாப்பிடுவது பற்றி குறிப்பாக ஆராயப்பட்டது. அதில் சில முக்கிய தகவல்கள் தெரியவந்தன.

அவர் ஆய்வு அறிக்கை, பிரான்ஸ் நாட்டில் சுகாதார இதழ் ஒன்றில் வெளியாகி உள்ளது. அதில், கூறப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு:

கடந்த 1991ம் ஆண்டில் இருந்து 1999ம் ஆண்டு வரை, 24 முதல் 42 வயது வரை உள்ள பெண்கள் 18 ஆயிரத்து 555 பேரிடம் ஆன்லைன் மூலம் சர்வே எடுத்தோம். அதில், இளம் வயதில் இருந்து கொழுப்பு நீக்கிய பால் சாப்பிட்டு வந்தவர்களுக்கு குழந்தை பிறப்பதில் சற்று பாதிப்பு இருந்தது தெரியவந்தது. ஆனால், கொழுப்புடன் பால், ஐஸ்கிரீம் சாப்பிட்டு வந்தவர்களுக்கு குழந்தை பிறப்பதில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. அவர்களுக்கு குழந்தையும் நல்ல கொழு கொழு என்று பிறந்திருந்தது தெரியவந்தது.

நாங்கள் இந்த சர்வே மூலம் தெரிந்து கொண்டது, கர்ப்பிணி பெண்கள், கர்ப்பக்காலத்தில் முழு அளவிலான கொழுப்பு உணவு சாப்பிடுவதால், குழந்தை பிறப்புக்கு உதவும். கர்ப்பம் தரிக்க இருக்கும் பெண்களும் இப்படி கொழுப்பு உணவு சாப்பிடுவது நல்லது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


செய்தி: தினமலர்

-oOo-

யப்பா மெய்யாலுமா?