Sunday, 10 August 2008
❒ கூகுள் யாகூ லோகோ
கூகுள் ஒலிம்பிக் லோகோ (08-08-08)

யாகூ ஒலிம்பிக் லோகோ (08-08-08)

09-08-08

இன்று 10-08-08 கூகுள் லோகோ

Updates
11-08-08

12-08-08

13-08-08

14-08-08

15-08-08

16-08-08

17-08-08

18-08-08

19-08-08

20-08-08

21-08-08

18-08-08

22-08-08

19:40 Posted in இணையம் | Permalink | Comments (4) | Email this
| Tags: google, yahoo, olympic, logo |
del.icio.us
|
|
Digg
Friday, 20 July 2007
❒ இணையத்தில் கலக்குது கொரியா!

இதைப்பாருங்க...
கொரியா கூகுள் தளம்
gmail முதல் Piccasa வரையிலான சுட்டிகள் மேல மவுசைக் கொண்டு போங்க.
அவ்ளோதான்...!
அப்புறம் இந்த படத்தில் இருக்கும் பெண்ணை லுக்கு விடறதுக்கு முன்னால கையிலயோ இடுப்பிலயோ தாயத்து கட்டி இருக்கீங்களான்னு பார்த்துடுங்க. ராத்திரி வந்து அடிச்சிடப் போகுது!
"Mom, I am sorry and I love you," அப்படின்னு ரத்தத்தால கடிதம் எழுதி வச்சிட்டு கழுத்துப் பட்டையால (tie) தூக்குப் போட்டு செத்துப் போயிடுச்சாம் தென்கொரியாவின் புகழ்பெற்ற இளம் நடிகையாக இருந்த லீ-யூன்-சூ...
பின்குறிப்பு: செந்தழல் ரவியின் கொரியப் பயணத்துக்கும் இதுக்கும் எந்த தொடர்பும் இல்லை
15:40 Posted in இணையம் | Permalink | Comments (2) | Email this
| Tags: google, korea |
del.icio.us
|
|
Digg
Tuesday, 27 February 2007
❒ கூகுள் யாகூ பரிசுப்போட்டி
அதிரடி பரிசுப் போட்டி
புத்தகப் பரிசுடன்...
)(
கூகுள் யாகூ
எது சிறந்தது?
)(
பதிலை இங்கே
போய் சொல்லுங்க...
பரிசை வெல்லுங்க...
07:45 Posted in இணையம் | Permalink | Comments (13) | Email this
| Tags: google, yahoo, தமிழ்ப்பதிவுகள் |
del.icio.us
|
|
Digg
Sunday, 28 January 2007
☆ அன்பான மிரட்டல்
எதிர்பாராத சில நிகழ்வுகளால் என் நட்சத்திர வார இறுதிப் பதிவை நேரத்துக்கு இட முடியவில்லை. ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
-oOo-
கூகுள் பேஜ் ரேங்க் பற்றி நம்முடைய பாஸ்டன் பாலா அவர்களின் பதிவைப் பார்த்திருப்பீர்கள். கூகுள் பேஜ் ரேங்க் பற்றி நானும் முன்பு ஒருமுறை சிந்தித்தேன். ரேங்க் அதிகரிப்பதற்கான வழிமுறைகளில் ஒன்றாக தலைப்புகள் ஆங்கிலத்தில் இருப்பது ஒரு சாதகம் எனபதை அறிந்த பின் அப்படி ஒரு ரேங்க் நமக்கு சாத்தியமில்லை என்று நான் முடிவு செய்தேன். காரணம் தலைப்புகளை கண்டிப்பாக தமிழில் தான் வைப்பது என்று கொள்கை? முடிவு ஆரம்பத்திலேயே எடுத்திருந்ததால் அதை மீற மனமில்லை. எனவே இப்போது இருக்கும் 3 என்ற ரேங்க்கில் இருந்து 4 ஆக அதிகரிக்கக்கூட சாத்தியமில்லை என்ற போதும் ஆங்கிலத்தில் தலைப்பு வைப்பதையும் ஆங்கிலத்திலேயே மறுமொழி இடுவதையும் நான் ஆதரிக்கவில்லை.
ஆனாலும் பேஜ் ரேங்குக்காக என்றில்லாவிட்டாலும் தேடுபொறிகளில் நம்முடைய பதிவுகளில் உள்ள விஷயங்கள் முன்னணியில் இடம்பெற இணைய வலைப்பின்னல் நிச்சயமாக உதவும். இணையமே ஒரு வலைதானே.அதில் ஒருவருக்கொருவர் இணைப்புகளால் பின்னல் பின்னிக் கொள்வது எப்படி?
முன்பெல்லாம் சீனியர் வலைப்பதிவர்கள் பதிவுகளில் நான் படிப்பவை, நணபர்களின் பதிவுகள் என்று ஒரு பெரிய பட்டியலை வைத்திருப்பார்கள். அந்த நண்பர்கள் இந்த நண்பர்களின் பதிவை அவர்களின் பட்டியலிலும் இணைத்திருப்பார்கள். அவர்களின் பதிவுக்கு போய் படித்துவிட்டு அங்கிருந்தே இன்னொரு பதிவுக்கு போவது சாத்தியமாக இருந்தது. பின்னர் தமிழ்மணம் முதலான திரட்டிகள் பிரபலமான பிறகு பதிவுகளை அங்கிருந்தே படிப்பது வழக்கமாக இருந்ததால் இப்படி நண்பர்களின் பதிவுகள் என்று ஒருசிலரை மட்டும் குறிப்பிடுவது சரியா என்ற கேள்வியாலும் நான் உட்பட பலரும் இந்தப் பட்டியலை உருவாக்குவதை விட்டு விட்டோம். ஆனால் அப்படிப்பட்ட தொடுப்புகள் உண்மையில் நம்முடைய பதிவுகள் தேடுபொறிகளில் இடம் பெற உதவி புரிகின்றன என்ற உண்மை இப்போதுதான் புரிகிறது.
சீக்கிரமே நான் ஒரு நண்பர்கள் பட்டியலை உருவாக்குவேன். முதலில் ஒரு 15 பேர் பட்டியல் தயாராகி வருகிறது. அந்த ஏழு பேரும் நிச்சயம் உண்டு. பட்டியலில் இடம்பெறப்போகும் நண்பர்களுக்கு ஒரு அன்பான மிரட்டல் (உபயம் பாஸ்டன்பாலா)... என் பதிவை உடனே உங்கள் பதிவிலும் இணைத்து விடுங்கள்.
தவிர புதிதாக யார் என் பதிவுக்கு தங்கள் பதிவில் தொடுப்பு தந்தாலும் எனக்கு ஒரு அன்பான மிரட்டல் விடுத்தால் உடனே அவர்களின் பதிவுக்கு நானும் இணைப்புத் தருவேன். ஆகவே இணைந்து முன்னேறுவோம். இணையப் பின்னலில் பிணைந்திருப்போம்.
-oOo-
இன்றைய சூடாறிய செய்தி.
அனுதாப அலையடித்த சில்பாஷெட்டி போட்டியில் வெற்றி பெற்றுவிட்டாராம்.
17:55 Posted in இணையம் | Permalink | Comments (15) | Email this
| Tags: page rank, google |
del.icio.us
|
|
Digg
Tuesday, 09 January 2007
கூகுள் பேக் மென்பொருட்கள்
கூகுள் நிறுவனம் google pack என்னும் மென்பொருள் தொகுப்பை வெளியிடுகிறது. ஒரே பதிவிறக்கத்தில் பல பயனுள்ள மென்பொருட்களை இதில் பெறலாம்.
இதிலுள்ள மென்பொருட்கள்.
Google Earth
உலகம் உங்கள் உள்ளங்கையில்.
உலக வரைபடம், தெருக்கள், இடங்களை தெளிவாக கண்டறிய உதவுகிறது.
Picasa
கணினியில் படங்களை தேட, தொகுக்க, எடிட் செய்ய உதவுகிறது
Screensaver
புகைப்படங்களை திரைக்காப்புப் படங்களாக பார்க்க உதவுகிறது.
Google Desktop
கணினிக் கோப்புகளை ஒருங்கிணைக்க மற்றும் தொகுக்க உதவுகிறது.
Google Toolbar
கூகுளின் கருவிப் பட்டை
Mozilla Firefox
எல்லோருக்கும் தெரிந்த நெருப்பு நரி
Norton AntiVirus 2005
புகழ்பெற்ற வைரஸ் காப்பு மென்பொருள். இதன் சிறப்புப் பதிப்பு 6 மாத உரிமத்துடன் கிடைக்கிறது.
Ad-Aware SE
உளவு மென்பொருட்களை கண்டு பிடித்து நீக்க உதவுகிறது
Adobe Reader 7
PDF மின்னூல்களைப் படிக்க உதவுவது
இவை இத்தொகுப்பில் இணைக்கப் பட்டுள்ளவை. இவற்றில் தேவை இல்லாதவற்றை நீக்கியும் பதிவிறக்கிக் கொள்ளலாம்.
இவை தவிர,
கீழ்க்கண்டவற்றில் உங்களுக்குத் தேவையானவற்றை பதிவிறக்கு முன் தொகுப்பில் இணைத்துக் கொள்ளலாம்.
Google Talk
இணையத்தில் குரல் வழித் தொடர்பாடல்
RealPlayer
பலதரப்பட்ட இசை மற்றும் வீடியோ இயக்கவும் பிற கருவிகளுக்கு மாற்றவும் உதவும்.
Skype
வீடியோ மற்றும் ஆடியோ சாட்டிங் மென்பொருள்
Google Video Player
வீடியோக்களை இயக்கவும் பதிவிறக்கவும் உதவும்
GalleryPlayer HD Images
ஓவியங்கள், புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு.
கூகுள் பேக் பதிவிறக்க
இடப்புறமுள்ள side-bar ல் Software என்னும் தலைப்பில் உள்ள Get essential PC software with the free Google Pack என்ற சுட்டியில் இந்த கூகுள் பேக்கை பதிவிறக்கலாம்.
06:20 Posted in இணையம் | Permalink | Comments (3) | Email this
| Tags: google, software |
del.icio.us
|
|
Digg

