Thursday, 11 January 2007

போலீசும் இரண்டு இரவுகளும்

Image and video hosting by TinyPicடிசம்பர் 8, 2006 அன்று இரவு.

திருநெல்வேலியில் மாவட்ட நீதிபதியும் மற்றொரு நீதிபதியுமாக காரில் சென்று கொண்டிருந்தனர். வழியில் ஆங்காங்கே போக்குவரத்து விதிமீறல்கள் பலவற்றைக் கண்டனர். அங்கங்கு போக்குவரத்து காவலர்கள் நின்று ஜரூராக வசூல் செய்து கொண்டிருப்பதையும் கண்டார்கள். உடனே அளவுக்கு அதிகமான எடை ஏற்றிய வாகனம் ஒன்றை வழிமறித்து நிறுத்தி போக்குவரத்து அதிகாரியை அழைத்து ஒப்படைத்தனர். ஏற்கனவே தனக்கு வசூல் கிடைத்து விட்ட நிலையில் எரிச்சலுடன் அதை எதிர்கொண்டார் அதிகாரி.

அடுத்து தொடர்ந்து மேலும் சில விதிமீறல்களை பிடித்து வழக்குப் பதிவு செய்யுமாறு கூறிவிட்டு புறப்பட்டனர். எதற்கும் போலீஸ் நிலையத்தில் தகவலைச் சொல்லிவிட்டுப் போகலாம் என்று வழில் கண்ட காவல் நிலையத்தில் நுழைந்தார்கள். அந்த நிலையத்தின் நிலை அதைவிட கேடாக இருந்தது. அங்கே குற்றவாளி யார் காவலர் யார் என்று தெரியாத நிலையில் இருந்தது. அட்டென்டன்சில் இருந்த பலர் அங்கே இல்லை. ஆவணங்களைக் கேட்டு வாங்கிப் பார்த்து நிலையத்தின் நிலையைக் குறிப்பெடுத்து விட்டுப் புறப்பட்டார்கள்.

இந்தக் காவல் நிலையத்தின் நிலையைப் பார்த்த உடன் இன்னும் சில காவல் நிலையங்களைப் பரிசோதிக்கும் எண்ணம் அவர்களுக்கு வந்தது. எல்லா காவல்நிலையங்களிலும் அதே நிலை. கடுமையாக எச்சரித்து ரிப்போர்ட் எடுத்து விட்டுப் புறப்பட்டார்கள்.

இதற்குள் தகவலறிந்து மாவட்ட காவல்துறை அலுவலகம் பரபரப்படைந்தது. நீதிபதிகள் தங்கள் ரிப்போர்ட்டை அனுப்பிவிட்டால் என்ன நிகழும் என்று பரபரப்பான விவாதங்கள் நடந்தன.

மறுநாள் காலையில் நீதிபதிகள் இருவரும் சஸ்பெண்ட் செய்யப் பட்டதாக உயர்நீதிமன்றத்திலிருந்து தகவல் வந்தது.

வழக்கறிஞர்களும் பொதுமக்களும் தகவலறிந்து போராட்டத்தில் குதித்தனர். உடனடியாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழு திருநெல்வேலிக்கு வந்து விசாரணை நடத்தியது. காவல்துறையின் திருவிளையாடல் அம்பலத்துக்கு வந்தது.

இடையில் என்னதான் நடந்தது. இரண்டு நீதிபதிகள் குடித்துவிட்டு இரவில் பொதுமக்களிடமும் (சட்டமீறல் செய்த வாகன ஓட்டிகள்) காவலர்களிடமும் கலாட்டா செய்த்தாக அவசர அறிக்கை இரவோடிரவாக உயர்போலீஸ் அதிகாரிகள் மூலம் உயர்நீதிமன்றத்துக்கு அனுப்பப் பட்டிருந்தது.

உயர்நீதிமன்றமும் எந்த விசாரணையும் செய்யாமல் நடவடிக்கை எடுத்து விட்டது. அவ்வளவு பக்காவான அறிக்கை.

கடைசியில் நீதிபதிகள் அவமானப் பட்டதுதான் மிச்சம். சஸ்பெண்ட் நீக்கப்பட்டாலும் மாவட்டநீதிபதி மாற்றல் வாங்கிக்கொண்டு போய்விட்டாராம்.

-oOo-

ஜனவரி 1, 2007 நள்ளிரவு.

கல்கத்தா அருகேயுள்ள ஒரு ஹோட்டலில் புத்தாண்டுக் கொண்டாட்டம். இரண்டு ராணுவ அதிகாரிகளுக்கும் ஓட்டல் ஊழியர்களுக்கு தகராறு. ஒரு பெண்ணிடம் சில்மிஷம் செய்ததாக ஓட்டல் நிர்வாகம் போலீசில் புகார் செய்தது. போலீஸ் விரைந்து வந்து ராணுவ அதிகாரிகளை அள்ளிப் போட்டுக் கொண்டு காவல்நிலையத்துக்கு விரைந்தது. இருவரும் லாக்கப்பில் அடைக்கப் பட்டார்கள்.

சற்று நேரத்தில் ஒரு சில ராணுவ வாகனங்கள் காவல்நிலையம் வந்து நின்றன. ராணுவவீரர்கள் அதிரடியாக உள்ளே புகுந்து காவல் நிலையத்தைச் சூறையாடி தங்கள் மேலதிகாரிகளை மீட்டுக் கொண்டு சில நிமிடங்களில் வெற்றிகரமாக வெளியேறினார்கள்.

போலீஸ் ஒன்றும் செய்ய முடியவில்லை. ராணுவ வீர்ர்கள் செய்த்து பொது சட்டப்படி தவறுதான் என்றாலும் ராணுவ சட்டப்படி தங்கள் மேலதிகாரிகளுக்கு ஆபத்து வந்தால் அவர்களைக் காப்பதுதானே அவர்களின் கடமை.

பொதுவாக பார்ட்டிகளில் அத்துமீறல்கள் ராணுவ முகாம் களில் சகஜம் என்று சொல்வார்கள். இது பொது இடம் என்பதால் பொது வழக்காகி விட்டது.

காவல்துறையைப் பொறுத்தவரை ராணுவ அதிகாரிகள்மீது குற்றம் சாட்டப் பட்டால் குற்றச்சாட்டைப் பதிவு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். கைது செய்தாலும் உடனடியாக நீதிமன்ற உத்தரவு ராணுவத்துக்கு வழங்கப்பட வேண்டும். அப்படியில்லாமல் பலப்பரீட்டை செய்தால் இப்படித்தான் ஆகும்.

அதே சமயம் பெண்ணிடம் தவறாக நடந்தது நிரூபிக்கப் பட்டால் ராணுவ நீதிமன்றமும் கடுமையான தண்டனை வழங்கும்.

-oOo-

புத்தக்க் கண்காட்சி பற்றி இரண்டு வலைப்பதிவுகளைப் பார்க்க முடிந்தது. ஒன்றில் புகைப்படங்கள் மட்டும்...துவக்கவிழா பற்றியும் கருணாநிதியின் அறிவிப்பு பற்றியும் குறிப்போ புகைப்படமோ வரவில்லை. !

இன்னொரு பதிவில் கருணாநிதி புத்தகச் சந்தைக்கு அரசு இடம் தரும் என்று சொன்னதும், ஐந்து எழுத்தாளர்களுக்கு ஆண்டு தோறும் ஒரு லட்சம் பரிசு தரவிருப்பதாக அறிவித்ததும் வெளியாகி இருக்கிறது.

-oOo-

சிதறல்கள்-4

சிதறல்கள்-3 இங்கே