Wednesday, 18 June 2008
❒ உள்ளே வெளியே - ஒரு உறவும் பிரிவும்
அரிதாரம் பூசாத அவதாரங்கள்
மதில்மேல் பூனை ஒண்ணு
இரண்டு பக்கம் பாத்துது
கருவாடு மணக்குதுண்ணு
நிதியுள்ள பக்கத்தில் சாய்ந்தது.
வயிறார உண்ட பின்னே
அரிப்பெடுத்த நகத்தாலே
பிறாண்டலைத்தான் தொடர்ந்து விட்டால்
ஊட்டிய கரமே உதைக்காமல் விடுமோ?
08:45 Posted in அரசியல் | Permalink | Comments (1) | Email this
| Tags: pmk, dmk |
del.icio.us
|
|
Digg
Tuesday, 17 June 2008
❒ அடுத்த முதல்வர் அழகிரியா? ஸ்டாலினா?
தமிழக அரசியலில் திராவிடக் கட்சிகளின் ஆட்சி ஆரம்பித்த பிறகு அது வரை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருந்த காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி போல ஏதேனும் ஒரு திராவிடக் கட்சியின் முதுகில் ஏறி சவாரி செய்ய வேண்டிய அவல நிலைக்கு ஆளாகி விட்டது. காங்கிரசின் புகழ் பெற்ற கோஷ்டிப் பூசலும் கட்சிக்கு தொண்டர்களை விட தலைவர்களை அதிகமாக்கி நிரந்தரமாக டெல்லிக்கு காவடி தூக்கி சீட்டுப் பெறும் அரசியலை உருவாக்கிக் கொண்டு விட்டது.
இன்று தமிழகத்தில் ஆட்சி என்றாலே திமுக அல்லது அதிமுக என்ற நிச்சயமான நிலை தான் நிலவுகிறது. புதிதாக ரேசில் அடுத்த முதல்வர் கனவுடன் விஜயகாந்த் தனக்கான அடித்தளத்தை உருவாக்க முயன்று கொண்டிருந்தாலும் சரத்குமார், கார்த்திக் என இன்னொரு நடிக வரிசை அதே கனவுடன் நுழைந்து கொண்டிருந்தாலும் கூட இப்போதைக்கு நிலைமையில் மாற்றமில்லை.
அதிமுகவைப் பொறுத்த வரை ஜெயலலிதாவைத் தவிர முதல்வர் ரேசில் யாரும் இல்லை.
திமுக தலைமையைப் பொறுத்தவரை அடுத்த முதல்வர் வேட்பாளரைக் களத்தில் இறக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. ஆனால் உட்கட்சி ஜனநாயகம் உள்ள கட்சி என்று போற்றப் படும் திமுகவில் முதல்வர் பதவிக்கு மட்டும் கருணாநிதி குடும்பத்தை விட்டு வேறு பெயர்கள் எதுவும் சிந்திக்கப் படுவதேயில்லை. கருணாநிதியின் மனசாட்சியாக இருந்த முரசொலி மாறன் மறைவுக்குப் பின் களமிறக்கப் பட்ட அவர் மகன் தயாநிதி மாறன் இந்தப் போட்டியில் இருப்பதான நிலவரம், அவர் சார்ந்த தினகரன் பத்திரிகை நடத்திய கருத்துக் கணிப்பு மூலம் உறுதியாகி அவர் களத்திலிருந்து அப்புறப் படுத்தப் பட்டார். ஆரம்பத்திலிருந்தே முதல்வர் வேட்பாளராக, கருணாநிதியின் அரசியல் வாரிசாகப் பேசப் பட்டு வந்த ஸ்டாலினுக்குப் போட்டியாக அழகிரி இப்போது களத்தில் இருப்பதே அரசியலின் மிக வினோதமான கூறு. அறிவுஜீவி அரசியல்வாதியாக களமிறங்கிய கனிமொழியும் அழகிரியை ஆதரிப்பதாக வந்துள்ள செய்திகளால் தமிழக மக்களுக்கு அடுத்த முதல்வர் வேட்பாளராக திமுக களமிறக்கப் போவது யாரை என்ற சந்தேகம் சர்வநிச்சயமாக ஏற்படக்கூடும்.
மாறன் சகோதரர்கள் ஸ்டாலினுக்கு ஆதரவாக இருக்கக்கூடூம். ஸ்டாலின் தமிழக முதல்வராக தகுதியானவரா என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும் அவர் அரசியலில் அடித்தளம் முதல் வளர்ந்து வந்த முறையும் பயிற்சியும் ஓரளவுக்கு அந்த தகுதியை உருவாக்கி இருக்க கூடும்.
ஆனால் அழகிரி? முதல்வரின் மகன் என்ற முறையில் அவர் மதுரையில் தனி ராசாங்கமே நடத்தி தாதா அரசியலைத்தான் செய்து வந்திருக்கிறார். இப்படிப் பட்ட கட்டைப் பஞ்சாயத்து அரசியல்வாதி முதல்வராவதை விட விஜயகாந்தே வந்து விட்டுப் போகலாம்.
நட்பு என்ற காரணத்துக்காக ஆற்காடு வீராச்சாமி போன்ற ---களை அமைச்சராக்கி தமிழக மக்களை சோதனைக்குள்ளாக்கும் கருணாநிதி ஒருவேளை வாரிசுரிமைப் படி மூத்த மகனுக்கே பட்டம் சூட்டக் கூடும். அப்போது நாமும் கருணாநிதிச் சோழனின் வாரிசாக தமிழக முதல்வர் அழகிரிச்சோழ பாண்டியனை வாழ்த்தி பதிவுகள் போட்டு மகிழலாம்.
வாழ்க தமிழகம்.
07:35 Posted in அரசியல் | Permalink | Comments (1) | Email this
| Tags: tamilnadu, dmk, திமுக |
del.icio.us
|
|
Digg
Friday, 09 February 2007
❒ மாநகராட்சியில் திமுக!
சென்னை:சென்னை மாநகராட்சியில் நூறு வார்டுகளுக்கு 18ம் தேதி தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே மாநகராட்சியை தி.மு.க., மீண்டும் கைப்பற்றியுள்ளது.
மாற்றுக் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களிடம் நடத்தப்பட்ட "பேரம்' காரணமாக நேற்று மாலை நிலவரப்படி ஆளும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் 34 பேர் போட்டியின்றி அமோக வெற்றி பெற்றுள்ளனர்.சென்னை மாநகராட்சியில் தி.மு.க., கூட்டணிக்கு ஏற்கனவே, 55 கவுன்சிலர்கள் உள்ள நிலையில், நேற்று மாலை நிலவரப்படி 34 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதால், மாநகராட்சியில் தி.மு.க., கூட்டணி பெரும்பான்மையாக 89 இடங்களை கைப்பற்றியுள்ளது. தேர்தல் களத்தில் உள்ள மாற்றுக் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகளிடம் தொடர்ந்து "பேரம்' பேசப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியின் 100 வார்டுகளில் 18ம் தேதி மறு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு கடந்த மாதம் 29ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளான பிப்ரவரி 5ம் தேதி வரை 699 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். மறுநாள் 6ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. இதில், தே.மு.தி.க.,வினரின் 14 வேட்பு மனுக்கள் உட்பட 31 வேட்பு மனுக்கள் பல்வேறு காரணங்களுக்காக தள்ளுபடி செய்யப்பட்டன.
தேர்தலில் போட்டியிட தகுதி வாய்ந்த வேட்பு மனுக்களாக 668 வேட்பு மனுக்கள் தேர்வு செய்யப்பட்டன. தேர்தலில் போட்டியிட விரும்பாமல் வேட்பு மனுக்களை வாபஸ் பெற விரும்புபவர்கள் 8ம் தேதி மாலை 3 மணிக்குள் மனுக்களை திரும்ப பெற்றுக் கொள்ள கெடு விதிக்கப்பட்டு இருந்தது.மேயர் மா.சுப்ரமணியம் போட்டியிடும் 140வது வார்டில் அவர் உட்பட நான்கு பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். சுப்ரமணியத்துக்கு மாற்று வேட்பாளரான தாமோதரன் வேட்பு மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார். தே.மு.தி.க., சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த சுப்ரமணியத்தின் மனு நிராகரிக்கப்பட்டது. பின்பு பட்டியலில் இருந்த சுயேச்சை வேட்பாளர் தியாகராஜனும், சுப்ரமணியத்துக்கு ஆதரவு தெரிவித்து விட்டு மனுவை திரும்ப பெற்றுக் கொண்டார். அதனால், 140வது வார்டில் சுப்ரமணியத்தின் வேட்பு மனு மட்டுமே இருப்பதால், போட்டியின்றி அவர் வெற்றி பெற்றதாக சைதாப் பேட்டை மண்டலத்தின் உதவி தேர்தல் அதிகாரி அறிவித்தார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும் நேற்று மாலை அவரிடம் வழங்கினார். மாநகராட்சியின் 100 வார்டுகளில் குறிப்பிட்ட 34 வார்டுகளில் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் பா.ம.க.,வினருக்கு எதிராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த தே.மு. தி.க., பா.ஜ., மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டதால், தி.மு.க.,வினர் 25 பேரும், காங்கிரசார் ஆறு பேரும் மற்றும் பா.ம.க.,வினர் மூன்று பேரும் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் அதிகாரிகள், வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினர். மீதமுள்ள 67 வார்டுகளுக்கு 18ம் தேதி தேர்தல் நடைபெறும்.
போட்டியின்றி வென்றவர்கள்.
தி.மு.க.
வார்டு எண்-8-டன்லப் பி.ரவி
வார்டு எண்-56-லதா என்கிற லதாவாசு
வார்டு எண்-66-ஜெ.புஷ்பலதா
வார்டு எண்-68-வசந்திபரமசிவம்
வார்டு எண்-74-டி. ரமேஷ்
வார்டு எண்-76-சி.சுமதி
வார்டு எண்-79-ஜெ.அஞ்சலிதேவி
வார்டு எண்-81-எஸ்.மதன்மோகன்
வார்டு எண்-84-வெ.மதிவாணன்
வார்டு எண்-86-எஸ்.சுரேஷ்குமார்
வார்டு எண்-91-பா.தீபா
வார்டு எண்-92-மா.லலிதா
வார்டு எண்-104-எம்.டி.எழிலரசன்
வார்டு எண்-110-லில்லி சமாதானம்
வார்டு எண்-111-எஸ்.செல்வி
வார்டு எண்-113-மா.பா.அன்புதுரை
வார்டு எண்-119-ராஜம்
வார்டு எண்-120- கே.எஸ்.மணி
வார்டு எண்-127-ஜெ.கருணாநிதி
வார்டு எண்-129-சுப.முத்துவேல்
வார்டு எண்-135-எம்.காஞ்சனா
வார்டு எண்-138-மேரி லூர்துசாமி
வார்டு எண்-139-எம்.மகேஷ்குமார்
வார்டு எண்-140-மா.சுப்பிரமணியன் (முன்னாள் மேயர்)
வார்டு எண்-141-ஐ.கென்னடி
காங்கிரஸ்
வார்டு எண்-11-ஜி.கிருபாகரன்
வார்டு எண்-20-பி.ரூப்சந்தர்
வார்டு எண்-70-எஸ்.சுரேஷ்பாபு
வார்டு எண்-109-ஜானகி
வார்டு எண்-117-சு.பா.விஸ்வநாதன்
வார்டு எண்-123-ஜெயகலாபிரபாகர்
பாட்டாளி மக்கள் கட்சி
வார்டு எண்-80-டி.ஏழுமலை
வார்டு எண்-134-டி.சத்தியமூர்த்தி
வார்டு எண்-137-பிரேமாசக்கரபாணி
-oOo-
செய்தி நன்றி: தினமலர் & தினத்தந்தி
13:00 Posted in அரசியல் | Permalink | Comments (0) | Email this
| Tags: chennai, dmk, election |
del.icio.us
|
|
Digg

