Tuesday, 09 January 2007
இணைய அகராதி
புதுக்கோட்டை மென்பொருளாளர் நண்பர் இப்ராஹிம் ஆன்லைன் ஆங்கில தமிழ் அகராதி உருவாக்கப் பட்டுள்ள விவரம் அறிவித்துள்ளார். மேலும் எழுத்துரு மாற்றி மற்றும் இணையப் பக்கங்களில் இணைக்கக் கூடிய எழுத்துரு மாற்றி போன்றவையும் தந்திருக்கிறார். இத்தகவல் பகிர்ந்தவர் நண்பர் அழகி விஸ்வநாதன்.
இதோ இப்ராஹிமின் அறிவிப்பு மடல்...
Online English-Tamil Dictionary
வணக்கம்
எங்களின் ஆங்கில-தமிழ் அகராதி (English - Tamil) இணையேற்றம் செய்யபட்டுள்ளது. தமிழ் எழுத்துருக்கள் எதையும் நீங்கள் நிறுவ வேண்டியதில்லை. மேலும் இணைய வசதி உள்ள கைப்பேசி(அ) செல்லிடப்பேசி(அ) செல்பேசி மூலமும் ஆங்கில தமிழ் அகராதியை பயன்படுத்தலாம்.(எழுத்துரு தேவையில்லை)
Web Address :
Http://sarma.co.in/TamilDic/
Mobile:
Http://sarma.co.in/TamilDic/Mobile.aspx
இணைய எழுத்துரு மாற்றி தற்போது 103 வகையான எழுத்துருக்களை மாற்றம் செய்யும். (Including TANE) -
Http://Sarma.co.in/FConversion/Default2.Aspx
உங்களின் வலைபக்கத்திற்குள்ளேயே 103 வகை எழுத்துருக்களை மாற்றிக்கொள்ள உங்கள் இணையத்தில் கீழ்கண்ட கோடிங்கை இணைக்கவும்.!
நன்றி
A.Ibrahim Shareef
-oOo-
குறிப்பு:
நண்பர் இப்ராஹிம் வலைப்பக்கத்தில் இணைப்பதற்கு தந்துள்ள கோடிங் பீட்டா பிளாக்கர் பதிவுகளில் கீழ்ப்பகுதியில் page element ஆக இணைக்க முடியும்...
12:15 Posted in இணையம் | Permalink | Comments (11) | Email this
| Tags: dictionary |
del.icio.us
|
|
Digg

