Tuesday, 06 February 2007
❒ கர்நாடகத்தில் பதட்டம்
ஓசூர்- மேட்டூருக்கு குடும்பம் குடும்பமாக தமிழர்கள் வருகை;
2-வது நாளாக பஸ்கள் நிறுத்தம்
சேலம், பிப். 6-
காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக நடுவர் மன்றம் நேற்று பரபரப்பான தீர்ப்பு வழங்கியது. அதன்படி தமிழ் நாட்டுக்கு 419 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பெங்களூரில் நேற்று பந்த் நடத்தப்பட்டது. கடைகள் அடைக்கப்பட்டன.
மாண்டியா, சந்தாபுரா, ஆனேகல் ஆகிய பகுதியில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அங்குள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. வருகிற 8-ந் தேதி கர்நாடக மாநிலம் முழுவதும் அனைத்துக்கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் பதட்டம் நீடிக்கிறது.
தமிழக-கர்நாடக எல்லை பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ஏற் பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. ஓசூர், ஜ×ஜ×வாடி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி ஆகிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
அசம்பா வித சம்பவங்கள் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக 2-வது நாளாக கர்நாடகத்துக்கு பஸ், லாரி போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. கர்நாடக பஸ்கள் அந்த மாநில எல்லையான அத்திப்பள்ளிவரை வந்து திரும்பின. அதுபோல தமிழக பஸ்கள் மாநில எல்லையான ஜ×ஜ×வாடி வரை சென்று திரும்பின.
கிருஷ்ணகிரி, ராயக் கோட்டை, காவேரிப்பட்டணம், பர்கூர், ஓசூர் ஆகிய பகுதிகளில் ஆங்காங்கு ஆயிரக்கணக்கான லாரிகள் மற்றும் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேன்மொழி தலைமையில் 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடகாவில் எந்த நேரத்திலும் வன்முறை வெடிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் அங் குள்ள தமிழர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
பெரும்பாலான தமிழர்கள் வீடுகளில் முடங்கி கிடக்கிறார்கள். பலர் அங்கு இருந்து குடும்பத்துடன் வெளியேறி வருகிறார்கள்.
மைசூர், மாண்டியா, மாதேஸ்வரன் பகுதியில் வசித்த தமிழர்கள் அங்கு இருந்து மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறி விட்டனர். அவர்கள் சேலம் மாவட்டம் மேட்டூர் குளத்தூரை அடுத்த கோவிந்தப்பாடி வந்து சேர்ந்தனர்.
பெங்களூரில் வசிக்கும் தமிழர்கள் இன்று காலை ஓசூர் வந்தனர். அதைப்போல கர்நாடகத்தின் இதர பகுதியில் வசித்த தமிழர்கள் அங்கு இருந்து தமிழக எல்லைப் பகுதிக்கு வந்தனர். அவர்களை போலீசார் பாதுகாப்புடன் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.
ஓசூரில் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் வசித்து வரு கிறார்கள். அவர்கள் நேற்று கர்நாடக எல்லைக்கு சென்றனர். அவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் அவரவர் ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சேலத்தில் இருந்து இன்று 2-வது நாளாக கர்நாடக மாநிலத்துக்கு பஸ், லாரி போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. செவ்வாய்ப் பேட்டை லாரி மார்க்கெட்டில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு ஏற்பாடு தொடர்பாக சேலம் சரக டி.ஐ.ஜி. அலெக் சாண்டர் மோகன் கூறியதா வது:-
கர்நாடக மாநிலத்தில் ஆங் காங்கே பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. இதுவரை அங்குள்ள அதிகாரிகள் தமிழக வாகனங்களை அங்கு அனுப்பிவைக்கும் வகையில் உத்திரவாதம் தரவில்லை. எனவே ஓசூரில் இருந்து கர்நாடகம் மற்றும் வெளிமாநில பதிவு எண் கொண்ட பஸ், லாரி மற் றும் இதர வாகனங்கள் மட் டுமே பெங்களூர் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
தமிழக வாகனங்கள் தமிழக- கர்நாடக எல்லை வரை மட்டுமே இயக்கப்படுகிறது. வருகிற 8-ந் தேதி கர்நாடகாவில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் மீண்டும் அமைதி திரும்பிய பிறகுதான் இங்கிருந்து போக்குவரத்து தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-oOo-
பெங்களூரில் கார் எரிப்பு: மைசூர்- மாண்டியாவில் பதட்டம்
பெங்களூர், பிப்.6-
காவிரி நீர் பங்கீட்டுப் பிரச்சினையில் நடுவர் மன்ற தீர்ப்பு நேற்று வெளியானது. இதில் கர்நாடகம் ஆண்டுதோறும் தமிழகத்துக்கு 192 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியது. இதற்கு காங்கிரஸ் உள்பட கர்நாடக எதிர்க்கட்சிகள் அதிர்ச்சியும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன.
கடந்த 1991-ல் காவிரி நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பு வழங்கிய போது பெங்களூரில் கலவரம் ஏற்பட்டு பலர் கொல்லப்பட்டனர். பஸ்- லாரிகள் தீ வைத்து எரிக்கப் பட்டன.
இந்நிலையில் நேற்று இறுதி தீர்ப்பு வெளி யானதைத்யொட்டி பெங்க ளூரிலும் மைசூர், மாண்டியா மாவட்டங்களிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த பாதுகாப்பு போடப் பட்டு இருந்தது. பெங்களூரில் முக்கிய வீதிகளில் அதிரடிப் படை போலீசார் குவிக்கப்பட்டனர்.
தீர்ப்பு வெளியானதுமே தீர்ப்பை கண்டித்து பெங் களூர் மற்றும் மைசூர், மாண்டியா மாவட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. இதனால் பதட்டம் ஏற்பட்டு கடைகள் அடைக்கப்பட்டன. பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பெங்களூரில் ஆர்ப் பாட்ட காரர்கள் சாலை களில் டயர்களை கொளுத்திப் போட்டும் கற்களைப் போட்டும் தடை ஏற்படுத்தி இருந்தனர். இதனால் போக்கு வரத்து அடியோடு நிறுத்தப்பட்டது. பெங்களூருக்கு செல்லும் தமிழக பஸ்களும், வெளி மாநில பஸ்களும் நிறுத்தப்பட்டன. லாரிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து வாகனங்களும் ஓடவில்லை. பெங்களூரில் இரவு முழுவதும் போலீசார் ரோந்து சுற்றி நிலைமையை கண்காணித்த படி இருந்தனர்.
பெங்களூரில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டதால் கர்நாடக எல்லையில் வெளி மாநில வாகனங்கள் பல மைல் தூரத்துக்கு நிறுத்தப் பட்டு இருந்தனர்.
நள்ளிரவில் பெங்களூர் மகாலட்சுமி லே அவுட் பகுதியில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காருக்கு ஒரு கும்பல் தீ வைத்தது அதில் கார் தீப்பிடித்து எரிந்து நாசமானது. உடனே போலீசாரும் தீயணைப்பு படையினரும் அந்த பகுதிக்கு விரைந்து சென்று தீயை அனைத்தனர். இதையடுத்து பெங்களூர் நகர் முழுவதும் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். தமிழர்கள் அதிகம் வசிக்கும் சிவாஜி நகர், அல்சூர், ஸ்ரீராம புரம் உள்ளிட்ட இடங்களில் அதிரடிப் படை குவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் இன்று ஓரள வுக்கு நிலைமை சுமூகமாக இருந்தது. பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. சிறிய கடைகள் திறந்து இருந்தன. பஸ்களும் குறைந்த எண்ணிக்கையில் ஓடத் தொடங்கின.
முன் எச்சரிக்கை நட வடிக்கை யாக பள்ளி- கல்லூரி களுக்கு விடுமுறை விடப் பட்டன. பெரிய அளவில் வன்முறைச் சம்பவங்கள் இல்லை என்றாலும் ஆங் காங்கே ஆர்ப்பாட்டம், மறியல், கண்டன பேரணி நடைபெற்றன.
காவிரி பாயும் மாவட்டங் களான மைசூர், மாண்டியாவில் பதட்டம் நிலவுகிறது இன்று 2- வது நாளாக அங்கு வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இன்று 2-வது நாளாக மைசூரிலும், மாண்டியாவிலும் விவசாயிகள் பெரும் திரளாக கூடி ஆர்ப்பாட்டம் செய்தனர். கடைகள் அடைக்கப்பட்டு தெருக்கள் வெறிச்சோடிக் கிடந்தன.
இதற்கிடையே நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் கன்னட காங் கிரஸ் சார்பில் `பந்த்' நடத்த அழைப்பு விடுத்துள்ளது. பெங்களூரில் நேற்று கன்னட காங்கிரஸ்களின் அவசர கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கன்னட சங்க தலைவர் வாட்டாள் நாகராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார் கூட்டம் முடிந்ததும் கூறிய தாவது:-
நடுவர் மன்றம் தமிழகத்துக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கி விட்டது. இதை கண்டித்து 8-ந் தேதி (வியாழக்கிழமை) கர்நாடகத்தில் `பந்த்' நடத்தப் படும்.
நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து நடைபெறும் போராட் டத்தில் வன்முறைக்கு இடம் கொடுத்து விடக் கூடாது. அது கர்நாடகத்துக்கும் கன்னடர் களுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தி கொடுத்து விடும்.
முழு அடைப்பின் போது மக்களின்அன்றாட வாழ்க்கை பாதிக்கப் பட்டாலும் அத்தியா வசிய சேவைகளான பால், மின்சாரம், குடிநீர் ஆகியவை வழக்கம் போல் இயங்கும். முழு அடைப்புக்கு கர்நாடகத்திலும் வசிக்கும் தமிழர்களும் ஆதரவு அளிக்க வேண்டும். தீர்ப்பை மத்திய அரசு கெசட்டில் வெளியிடாமல் இருக்க அனைத்து கட்சி தலைவர் களும் நிர்ப்பந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கர்நாடக மந்திரி சபை கூட்டம் இன்று பெங்களூரில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் கூடுகிறது. இதில் நடுவர் மன்ற தீர்ப்பு தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
தொடர்ந்து கர்நாடக அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தையும் முதல்-மந்திரி குமாரசாமி கூட்டியுள்ளனர். நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்வது தொடர்பாக அனைத்து கட்சி தலைவர் களுடன் அரசு ஆலோசனை நடத்துகிறது.
-oOo-
மாலைமலர்
11:00 Posted in அரசியல் | Permalink | Comments (6) | Email this
| Tags: karnataka, cauvery |
del.icio.us
|
|
Digg

