Monday, 25 February 2008
❒ நான் ஏன் பிறந்தேன் -எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆருடைய சுயசரிதை இது.
இதைப் படித்திருக்கிறீர்களா? படித்து முடித்த புத்தகம் வைத்திருக்கிறார்களா? இந்த புத்தகம் மட்டுமில்லை...உங்களிடம் இருக்கும் எந்த புத்தகத்தையும் நீங்கள் விற்கலாம்.
பழைய புத்தகங்களை விற்க விரும்புகிறீர்களா? இந்த தளம் உங்களுக்கு உதவும்.
இந்த தளத்தில் பழைய புத்தகங்களை வாங்க விரும்புகிறவர்களும் பதிவு செய்திருக்கிறார்கள். அவர்கள் விரும்பும் புத்தகம் உங்களிடம் இருக்கிறதா? நீங்கள் விற்க விரும்பாவிட்டால் கூட அந்தப் புத்தகம் எங்கே கிடைக்கும் என்ற விவரம் உங்களுக்குத் தெரிந்தால் அவர்களுக்கு சொல்லுங்கள்.
வாங்க...பழகலாம்...விற்கவும் செய்யலாம் :)
உள்ளே வாங்க! ;-)
***
ஒரு கணினிப் புதிர்
நமது கணினி விசைப் பலகைகளில் F மற்றும் J ஆகிய எழுத்துகள் இருக்கும் விசைகளில் சிறிய மேடான தடம் காணப் படுவதைப் பார்த்திருக்கலாம். அது எதற்குப் பயன்படுகிறது?
10:05 Posted in அறிவியல் | Permalink | Comments (6) | Email this | Tags: books
Thursday, 24 January 2008
❒ தமிழ் புத்தகச் சந்தை
தமிழ்ப் புத்தக விற்பனையில் புத்தகக் கண்காட்சிகள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக அறிய முடிகிறது. குறைந்த பட்சம் இத்தனை தமிழ் புத்தகங்கள் இருக்கின்றன என்பதை வழக்கமாக புத்தகக் கடைகளுக்குச் செல்லாத மக்கள் கூட திருவிழாக் கூட்டம் போல கண்காட்சிக்குச் சென்று காண்கிறார்கள்.
இன்னொரு புறம் இணையம் என்ற நவீன ஊடகம் வழியாகவும் மக்கள் இன்று புத்தகங்களை நேரடியாக வாங்க முடிகிறது... கிழக்கு போன்ற பதிப்பகங்கள் இணையத்தின் மூலமாக தமிழ் நூல்களை விற்பனை செய்கிறார்கள். எனி இந்தியன், காந்தளகம் போன்ற இணையப் புத்தகக் கடைகள் உள்ளன. விருபா தமிழ் புத்தக வெளியீடுகளை பட்டியலிட்டு இணையத்தில் தகவல் தருகிறது.
தமிழ்ப்புத்தகச் சந்தை என்னும் இணையதளம் இன்னொரு விதமாக புத்தக ஆர்வலர்களுக்காக செயல்பட ஆரம்பித்திருக்கிறது. குறிப்பிட்ட புத்தகத்தை வாங்க விரும்பும் வாசகர் அது எங்கே கிடைக்கும் என்று அறியாத நிலையில் இங்கே, தான் வாங்க விரும்பும் புத்தகத்தைப் பற்றி அறிவிக்கலாம். முன்பு வாங்கிய பழைய புத்தகங்களை விற்க விரும்பும் வாசகரும் கூட இங்கே அறிவிக்கலாம். பதிப்பாளர்கள், நேரடியாக புத்தகம் வெளியிடும் படைப்பாளிகள் போன்றவர்கள், தாங்கள் வெளியிட்டுள்ள குறிப்பிட்ட புத்தகம் பற்றிய தகவல்களை இங்கே விளம்பரப் படுத்தலாம்...இவை இலவச சேவைதான். வாசகர்- படைப்பாளிகள் - பதிப்பகத்தார் இடையே தொடர்புப் பாலமாக இந்த தளம் அமைந்துள்ளது.
நீங்களும் வாங்க விரும்பும் அல்லது விற்க விரும்பும் புத்தகம் பற்றி அறிவிக்கலாமே?
05:20 Posted in இணையம் , இலக்கியம் | Permalink | Comments (6) | Email this | Tags: book, books, tamil, புத்தகம், புத்தகங்கள், நூல், நூல்கள்
Sunday, 11 February 2007
❒ நூல்கள் நாட்டுடமை
சென்னை, பிப். 11-
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழுக்கு பெருந்தொண்டாற்றிச் சிறப்புமிக்க நூல்களைப் படைத்துள்ள தமிழ்ச் சான்றோர்களின் நினைவைப் போற்றும் வகையிலும் அவர்களின் படைப்புகள் பெருமளவில் மக்களைச் சென்றடையும் நோக்கிலும் அவர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்தம் மரபுரிமையினருக்குப் பரிவுத் தொகைகள் அரசால் அளிக்கப்பட்டு வருகின்றன.
அவ்வகையில்
1. மயூரம் வேதநாயகம் பிள்ளை.
2. சக்தி வை.கோவிந்தன்.
3. தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்.
4. த.நா.குமாரசாமி.
5. கா.சு.பிள்ளை.
6. புலவர் குலாம் காதிறு நாவலர்.
7. வை.சதாசிவப் பண்டாரத்தார்.
8. டாக்டர் சி.இலக்குவனார்.
9. மகாவித்வான் தண்டபாணி தேசிகர்.
10. தி.ஜ.ரங்கநாதன் (தி.ஜ.ர.)
11. நாரண துரைக்கண்ணன்
12. டாக்டர் மா.இராசமாணிக் கனார்.
13. டாக்டர் வ.சுப.மாணிக்கம்.
14. புலவர் கா.கோவிந்தன்
ஆகிய பதினான்கு தமிழ்ச் சான்றோர்களின் நூல்களை அரசுடைமையாக்கி அவர்கள் ஒவ்வொருவர் குடும்பத்தாருக்கும் தலா ரூ. 6 லட்சம் வீதம் பரிவுத் தொகை வழங்கிட அனுமதித்து முதல்- அமைச்சர் கருணாநிதி இன்று அறிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-oOo-
செய்தி : மாலைமலர்
17:45 Posted in இலக்கியம் | Permalink | Comments (3) | Email this | Tags: books, தமிழ்ப்பதிவுகள்

