Thursday, 24 January 2008

❒ தமிழ் புத்தகச் சந்தை

தமிழ்ப் புத்தக விற்பனையில் புத்தகக் கண்காட்சிகள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக அறிய முடிகிறது. குறைந்த பட்சம் இத்தனை தமிழ் புத்தகங்கள் இருக்கின்றன என்பதை வழக்கமாக புத்தகக் கடைகளுக்குச் செல்லாத மக்கள் கூட திருவிழாக் கூட்டம் போல கண்காட்சிக்குச் சென்று காண்கிறார்கள்.

இன்னொரு புறம் இணையம் என்ற நவீன ஊடகம் வழியாகவும் மக்கள் இன்று புத்தகங்களை நேரடியாக வாங்க முடிகிறது... கிழக்கு போன்ற பதிப்பகங்கள் இணையத்தின் மூலமாக தமிழ் நூல்களை விற்பனை செய்கிறார்கள். எனி இந்தியன், காந்தளகம் போன்ற இணையப் புத்தகக் கடைகள் உள்ளன. விருபா தமிழ் புத்தக வெளியீடுகளை பட்டியலிட்டு இணையத்தில் தகவல் தருகிறது.

தமிழ்ப்புத்தகச் சந்தை என்னும் இணையதளம் இன்னொரு விதமாக புத்தக ஆர்வலர்களுக்காக செயல்பட ஆரம்பித்திருக்கிறது. குறிப்பிட்ட புத்தகத்தை வாங்க விரும்பும் வாசகர் அது எங்கே கிடைக்கும் என்று அறியாத நிலையில் இங்கே, தான் வாங்க விரும்பும் புத்தகத்தைப் பற்றி அறிவிக்கலாம். முன்பு வாங்கிய பழைய புத்தகங்களை விற்க விரும்பும் வாசகரும் கூட இங்கே அறிவிக்கலாம். பதிப்பாளர்கள், நேரடியாக புத்தகம் வெளியிடும் படைப்பாளிகள் போன்றவர்கள், தாங்கள் வெளியிட்டுள்ள குறிப்பிட்ட புத்தகம் பற்றிய தகவல்களை இங்கே விளம்பரப் படுத்தலாம்...இவை இலவச சேவைதான். வாசகர்- படைப்பாளிகள் - பதிப்பகத்தார் இடையே தொடர்புப் பாலமாக இந்த தளம் அமைந்துள்ளது.


நீங்களும் வாங்க விரும்பும் அல்லது விற்க விரும்பும் புத்தகம் பற்றி அறிவிக்கலாமே?

Friday, 12 January 2007

நக்கல் வந்தா நக்கலாமா?

Image and video hosting by TinyPicஜனவரி 11,

சென்னை புத்தகச் சந்தை ஆரம்பமே நல்ல வரவேற்புதான். ஆனால் விடுமுறை தினங்களில் நெரிசல் மிகஅதிகமாக இருக்கக் கூடும். இம்முறை இடவசதி ஓரளவு விசாலமாக இருக்கிறது.

தேசிகன் தொகுத்த "சுஜாதா கணையாழி கடைசிப் பக்கங்கள்" புத்தகம் இன்னும் உயிர்மை ஸ்டாலுக்கு வரவில்லை. நிலாவின் கருவறைக்கடன் கிடைத்தது. ஜெயமோகனின் விசும்பு, மாலன் சிறுகதைகள் வாங்க முடிந்தன.

-oOo-

டப்பிங் செய்வோமா?

THE MUMMY RETURNS-ஆத்தா திரும்பி வாறாங்கோ

THE SPIDER MAN-எட்டுக்கால் ஏழுமலை

THE MISSION IMPOSSIBLE-இது ஆவறதில்லை

MEN IN BLACK-கருவா பசங்க

HALLOW MAN-வீணா போனவன்

நன்றி: ஏழைதாசன்

-oOo-

கடித்துவங்கள்

* என்னதான் படிப்புல 100 வாங்கினாலும் ஆம்லெட் போடணும்னா முட்டை வாங்கித்தான் ஆகணும்.

* விக்கல் வந்தா விக்கலாம். நக்கல் வந்தா நக்கலாமா?

* சன்டிவியில சொர்க்கம் பார்க்கலாம். சொர்க்கத்துல சன்டிவி பார்க்க முடியுமா?

*என்னதான் பெரிய ரவுடியா இருந்தாலும் வெயில் அடிச்சா திருப்பி அடிக்க முடியாது.

* காசு இருந்தா கால்டாக்சி, காசு இல்லேன்னா கால்தான் டாக்சி

* ஓடுற எலி வாலைப் பிடிச்சா கிங்கு, புலி வாலைப் பிடிச்சா சங்கு

நன்றி: ஏழைதாசன்

-oOo-

விடுமுறைக்காலம் ஆரம்பமாவதால் ஒரு வாக்குமீறல்... இளமைத்தொடர் (மட்டும்) விடுமுறைக்குப் பின்...

அனைவருக்கும் இனிய தமிழ்ப்பொங்கல் தின வாழ்த்துக்கள்.