Tuesday, 11 September 2007
❒ ஜிமெயில் ஒரு ஆரம்பம்
வலைப்பதிவர்கள் அதிகம் பயன்படுத்திக் கொண்டிருப்பது blogger.com தரும் வலைப்பதிவு சேவையைத்தான். இதற்குக் காரணம் இதைவிட அதிக வசதிகள் பிற சேவைகளில் இருந்தாலும் இணையப்பக்கம் குறித்து அதிகம் அறியாதவர்களுக்கும், நிறைய அறிந்தவர்களுக்கும் தேவையான வசதிகள் இதில் தான் இருக்கின்றன.
உதாரணமாக இணையப்பக்க வடிவமைப்பு, HTML நிரல் குறித்து அறிந்திராதவர்கள் கூட பிளாக்கர் தரும் ரெடிமேட் அடைப்பலகை (template) களைப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் படைப்புக்களை வலைப்பதிவில் காட்சிப்படுத்தலாம். ஒரு வேர்ட்பாட் (word pad) போன்ற வசதி கொண்ட எழுதும் பக்கத்தில் சென்று எழுதி பதிந்து விட்டால் அது தானாக பதிவில் தேதி நேரத்துடன் பதிவாகி வந்து விடும்.
அதே சமயம் நிரல்களில் பரிச்சயம் உள்ளவர்கள் முழுநிரலையும் தலைகீழாக மாற்றிப் போட்டு சொந்தமாக அடைப்பலகைகளை எளிதாக வடிவமைக்கவும் தேவையான ஜாவாஸ்க்ரிப்ட் அலங்காரங்களையும் அதிலேயே செய்து கொள்ளவும் சுதந்திரம் கொடுத்தது பிளாக்கர்.
இதில் பதிவு தொடங்க நேரடியாக பிளாகர் வலைப்பக்கம் சென்று எளிதாக தொடங்கி விட முடியும்.
கூகுள் நிறுவனம் பிளாக்கரை வாங்கி நிறைய மேம்படுத்தல்கள் செய்து பீட்டா பிளாக்கரை அறிமுகம் செய்தது. இதன்பிறகு ஜிமெயில் கணக்கு இருந்தால் தான் பிளாக்கரில் பதிவு தொடங்க முடியும்.
ஜிமெயில் கணக்கில் இருந்து நேரடியாக பிளாக்கரில் நுழைய முடியும். பிளாக்கர் தளத்தில் ஜிமெயில் பயனர் பெயரில் தான் உள் நுழைய முடியும்.
ஆகவே முதலில் ஜிமெயில் கணக்கு தொடங்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?
அடிப்படையில் இருந்தே ஆரம்பிப்போம்.
கூகுள் தான் இன்று தேடுபொறிகளில் முன்னிலை வகிக்கிறது. அதன் ஜிமெயிலும் பிளாக்கரும் அது போலவே நமக்கு முதன்மையான சேவைகளாக இருக்கின்றன.
எனவே கூகுளில் இருந்து தொடங்குவோம்.
முதலில் google.com தளத்துக்கு செல்வோம்.

எல்லா இணையதளங்களின் முகவரியையும் நினைவில் வைத்திருப்பது எளிதல்ல. அதிலும் அவற்றின் விரிவான முழு முகவரி நினைவில் வைப்பது மற்றும் அவற்றை தட்டச்சு செய்வது சிரமம். எனவே ஒரு தளப்பெயரின் முக்கிய பாகம் ஒரு சொல் சரியாக நினைவிருந்தால் அந்தச் சொல்லை கூகுள் தேடுபொறியில் கொடுத்து விட்டால் தேடுதல் முடிவுகளில் அந்தச் சரியான தளத்துக்கான சுட்டி பெரும்பாலும் கிடைத்து விடும்.

இப்போது நமக்கு gmail தேவை எனவே gmail என்று கூகுள் தேடுபொறியில் தட்டச்சு செய்து தேடுதல் கட்டளை கொடுத்தால் gmail பக்கத்துக்கான சரியான சுட்டி நமக்குக் கிடைத்து விடும்.
இது தான் gmail கணக்கு தொடங்க, செல்ல வேண்டிய தளம்.
mail.google.com/
இந்தப் பக்கத்தில் கீழ்வலது பக்கம் Sign up for Gmail என்று இருக்கும் சுட்டி வழியாக
http://mail.google.com/mail/signup
என்னும் பக்கத்துக்கு செல்ல வேண்டும்.
இங்கே இருக்கும் படிவத்தில் விவரங்களை நிரப்பி ஒரு Gmail கண்க்கை உருவாக்கிக் கொள்ளவும்.
(ஜிமெயில் உருவாக்க சமீப காலம் வரை இன்னொரு ஜிமெயில் பயனர் அழைப்பு அனுப்ப வேண்டி இருந்தது. இப்போது நேரடியாகவே ஜிமெயில் கணக்கு தொடங்க முடியும்.)

யாகூ போன்ற பல தளங்களில் மின்னஞ்சல் தொடங்க பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட பல சொந்த விவரங்கள் தர வேண்டி இருக்கும். ஆனால் ஜிமெயில் கணக்கு தொடங்க சொந்த விவரங்களாக பெயர் மற்றும் நாடு மட்டுமே பதிய வேண்டும். வேறு எந்த விவரமும் அதிக படிவ விவரங்களும் தேவை இல்லை.
கடவுச்சொல் (பாஸ்வேர்ட்) மறந்துவிடாமல் இருக்க...மறந்து விட்டால் மீண்டெடுக்க ஒரு ரகசிய கேள்வி பதில் அதில் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
நாம் விரும்பும் மின்னஞ்சல் பெயர் கிடைக்குமா? இருக்கிறதா? என்பதை check availability என்ற சுட்டியைப் பயன்படுத்தி பரிசோதித்துக் கொண்டு ஒரு முகவரியை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
அவ்வளவு தான் இப்போது நீங்கள் ஜிமெயில் கணக்கு உருவாக்கி விட்டீர்கள்.
ஜிமெயிலில் நுழைந்து சோதித்துக் கொள்ளுங்கள்.
(ஜிமெயிலைப் பயன்படுத்தி பிளாக்கர் கணக்கு, தமிழ் வலைப்பதிவு தொடங்குவது எப்படி - தொடரும்)
-oOo-
குறிப்பு: இந்த இடுகையை படித்து வரும் பலருக்கு சிறுபிள்ளைத் தனமாகக்கூட தோன்றலாம். கணினியில் புழங்குகிறவர்களுக்கோ, ஏற்கனவே வலைப்பதிவர்களாக இருப்பவர்களுக்கோ இவை பெரிதாக பயன்படப் போவதில்லை. மேலும் ஓரளவு இணையப் பரிச்சயம் உள்ளவர்களுக்கு இந்த நீட்டி முழக்கல் எரிச்சலாகக் கூட இருக்கலாம். ஆனால் ஒரளவு கணினிப் பயிற்சி இருந்தாலும் இணையப் பரிச்சயம் குறைவாக உள்ளவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.
உதாரணமாக எனக்குத் தெரிந்த இருவரைச் சொல்லலாம். ஒருவர் கணினியில் DTP பயிற்சி முடித்து ஆப்செட் அச்சகம் ஒன்றில் பணி செய்பவர். இன்னொருவர் MS ஆபீஸ் பயின்று ஒரு நிறுவனத்தில் கணக்காளராக இருப்பவர். இவர்கள் இருவருமே இணைய இணைப்பு இல்லாத சூழலில் கணினிப் பயிற்சி பெற்றவர்கள்.
இவர்களைப் போன்றவர்களுக்கும் மாணவர்களுக்கும் இத்தனை விரிவான விளக்கம் அவசியம் என்று கருதுகிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?
06:55 Posted in internet | Permalink | Comments (8) | Email this
| Tags: internet, gmail, blogger, வலைப்பதிவு, ஜிமெயில் |
del.icio.us
|
|
Digg
Friday, 22 December 2006
பிளாக்கர் டிப்ஸ்
பிளாக்கரில் பதிவிட்டு அதன் தனிச்சுட்டியை பல்வேறு இடங்களில் நாம் பயன்படுத்துவதுண்டு. உதாரணமாக ஒரு பதிவை மேற்கோள் காட்ட, தேன்கூடு போட்டி போன்ற போட்டிகளுக்கு அனுப்ப என தனிச்சுட்டி பலவிதங்களில் தேவைப்படுகிறது.
சாதாரணமாக நாம் பதிவிடும்போது வரும் சுட்டி இந்த மாதிரி இருக்கும்.
உதா-1
http://tvpravi.blogspot.com/2006/12/blog-post_20.html
சில வேளைகளில் கீழேயுள்ள மாதிரி 18 எண்களோடு பெரியதாக இருக்கலாம். இது குறிப்பாக தலைப்பிட மறந்து பதிவை ப்ப்ளிஷ் செய்து விட்டு பிறகு தலைப்பிடுபவர்களுக்கு வருவது. வேறு காரணங்களாலும் வரலாம்.
உதா-2
http://vettipaiyal.blogspot.com/2006/12/blog-post_116663264117929636.html
தனிச்சுட்டி உரலை சிக்கென்று சிறியதாக வைத்துக் கொள்வது எப்படி?
இப்படித்தான்
உதா-3
193. உதவிக்கு ஒரு முகவரி
http://dharumi.blogspot.com/2006/12/193.html
இவர் பதிவுகளுக்கு வரிசை எண் தருகிறார். அந்த எண் மட்டும் வருகிறது. அதற்காக எல்லோருமே வரிசை எண் தரவேண்டியதில்லை. தலைப்பில் எங்காவது ஒரு எண் வந்தாலே போதும்.
உதா-4-அ
கவுண்டர்'ஸ் டெவில் ஷோ (3) - தனுஷ்
http://vettipaiyal.blogspot.com/2006/12/3.html
உதா-4-ஆ
3 பேருக்கு தூக்கு
http://newsintamil.blogspot.com/2006/11/3.html
தலைப்பில்தான் வேண்டுமென்பதில்லை. பதிவின் முதல் வரியில் ஒரு எண் வந்தால் கூட போதுமானது.
உதா-5
தலைப்பு: இலங்கை தமிழர்களுக்கு உதவி
பதிவின் முதல் வரி: இலங்கை தமிழர்களுக்கு 7000 டன் அரிசி- சர்க்கரை; பால் பவுடர்: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு
http://newsintamil.blogspot.com/2006/11/7000.html
எண்தான் வேண்டுமென்பதில்லை ஒரேயொரு ஆங்கில எழுத்து வந்தால் கூட போதும்
உதா-6
ஆதரவு x எதிர்ப்பு
http://newsintamil.blogspot.com/2006/11/x.html
ஆங்கிலத்தில் ஒரு முழு சொல்லாகவோ பல சொற்களாகவோ இருந்தால் கீழேயுள்ள மாதிரி ஆகிவிடும். ஜாக்கிரதை. இதில் ஆங்கில சொல்லையும் தலைப்பிலுள்ள எண்ணையும் உரலில் சேர்த்துவிட்டது.
உதா-7-அ
ARTICENT (ப்ளக்ஸ்ட்ரானிக்ஸ்) - 2006 இளம்பொறியாளர்கள் :
http://tedujobs.blogspot.com/2006/12/articent-2006.html
உதா-7-ஆ
Tamiloviam - G.Ragavan
http://etamil.blogspot.com/2006/12/tamiloviam-gragavan.html
இதில் தலைப்பு ஆங்கிலத்தில் இருந்ததால் முழுவதையும் உரலாக மாற்றிவிட்டது.
[இவை புதிய பழைய எல்லா பிளாக்கருக்கும் பொருந்தும்]
சரி...ஏற்கனவே பெரிய உரலாக மாறிவிட்டது. இனி அதை சிறிதாக்க என்ன வழி?
இங்க போய் உங்க உரலைக் கொடுங்க. அது உரலை சிக்கென்று மாற்றித் தரும். என்ன ஒன்று... அதை பார்த்து எந்த பதிவு என்று ஒன்றும் புரிந்து கொள்ள முடியாது!
09:05 Posted in இணையம் | Permalink | Comments (6) | Email this
| Tags: blogger |
del.icio.us
|
|
Digg
Monday, 18 December 2006
பிளாக்கர் பின்னூட்ட எடிட்...
பிளாக்கர் பதிவுகளில் பின்னூட்டங்களை எடிட் செய்வது பற்றி வா. மணிகண்டன், பொன்ஸ் ஆகியோரும் அதே முறையில் பின்னூட்டத்தில் படங்களைச் சேர்ப்பது பற்றி கோவிகண்ணனும் பதிவுகள் எழுதியிருக்கிறார்கள். இந்நிலையில் நான் புதிதாக சொல்வதற்கு எதுவும் இல்லைதான். ஆனால் தங்கள் பதிவுகளின் மறுமொழிகளில் எல்லாம் எடிட் செய்வதற்கு ஒரு பட்டன் இருந்தால் நேரடியாகவே பதிவுகளை எடிட் செய்யலாமே என்று ஆசைப்படுகிறவர்களுக்காக இந்தப்பதிவு.
இது நான்... நானே... சொந்தமா எழுதினது இல்லீங்க... மண்டபத்துல யாரோ எழுதித் தந்ததை இங்கே உளறி வைக்கிறேன். புரிஞ்சா சரி. உங்களுக்கு வெளக்கம் கெடச்சாச் சரி. பிரியலைன்னா புரிஞ்சதுக்கு தக்கபடி பொன்னூட்டம் தந்தாப்போதுங்க...
இதுதான் சாக்குன்னு அடுத்தவங்க பின்னூட்டத்தை எல்லாம் கொதறி வைக்கப்போறீங்க... எல்லாம் என்னை வையப்போறாய்ங்க... பாத்து...ரொம்ப அவசியம்னா மட்டும் பட்டனைச் சொடுக்கினா போதுங்க....
இது அவரவர் பதிவுகளில் உள்ள பின்னூட்டங்களை (அடுத்தவங்க பின்னூட்டத்தையும்) எடிட் செய்ய மட்டும் உதவும். படமும் போடலாம். கலர் கொடுக்கலாம். பதிவு போடும்போ செய்யிற எல்லாம் பின்னூட்டத்துக்கும் செய்யலாம். ஆனா ஏற்கனவே போட்ட பின்னூட்டத்தில் மட்டும் தான் இதைச் செய்ய முடியும். புதிய பின்னூட்டத்தை இப்படி போட முடியாது.
சரிசரி ரொம்ப அறுக்காதே. முன்னுரை எல்லாம் போதும். விசயத்துக்கு வா...ன்றீங்களா! அதுவுஞ் சரிதேன்.
ஆங் மறந்துட்டேனே இது பழைய பிளாக்கருக்கு மட்டும்தான். பீட்டாவுல எல்லாம் வேல செய்யாது. ஆமா சொல்லிப்புட்டேன்.
எப்படி எப்படி?
இந்த கோடிங்ல admin-, pid-, blogID- இந்த எண்களை நிரப்பி
உங்க template ல <$BlogCommentDeleteIcon$> அடுத்து இதை இணைத்து save செய்து republish செய்தால் மறுமொழிகளுக்கு அடுத்து comment delete ஐகானுக்கு பக்கத்தில் ஒரு பென்சில் ஐகான் இருக்கும். அதுதான் எடிட் பட்டன். இனி உங்கள் எல்லா பதிவுகளிலும் மறுமொழிகளில் இந்த பட்டன் இருக்கும். (நீங்கள் லாகின் செய்த பின் உங்களுக்கு மட்டும்தான் இது தெரியும்)
[admin-, pid-, blogID- கண்டு பிடிக்க
உங்க பதிவில் நீங்க இட்ட பின்னூட்டத்தோட source பாத்தீங்கன்னா அதில் span class="item-control admin-xxxxxxxxx pid-yyyyyyyy" அப்படின்னு ஆரம்பிக்கிற கோடிங் இருக்கும். இதில்
admin-xxxxxxxxx, pid-yyyyyyyy, blogID=AAAAAAAA இந்த எண்கள் இருக்கும்.
கவனிக்கவும். உங்கள் பதிவில் உங்கள் மறுமொழிக்கு கீழே உள்ள எண்கள் மட்டுமே தேவை. மற்றவர்கள் மறுமொழியில் இருந்து எடுக்க வேண்டாம்.]
இப்போது நீங்கள் உங்கள் பதிவில் உள்ள எந்த மறுமொழியையும் திருத்தலாம். வண்ணம் சேர்க்கலாம். படம் இணைக்கலாம். பதிவை இடும்போது செய்யக்கூடிய எந்தச் செயலையும் மறுமொழிக்கும் செய்யலாம்.
11:30 Posted in இணையம் | Permalink | Comments (17) | Email this
| Tags: blogger, edit |
del.icio.us
|
|
Digg

