Tuesday, 16 January 2007
இன்று பிறந்தநாள்
தமிழின் முதல் வலைப்பதிவு பிறந்த நாள் இன்று.
இன்றைக்கு சரியாக நான்கு ஆண்டுகளுக்கு முன் ஜனவரி 16, 2003 அன்று , திருநெல்வேலியைப் பிறப்பிடமாக்க் கொண்டு அமெரிக்காவில் பணிபுரிந்து வரும் இளம் பொறியாளர் நவநீதகிருஷணன் என்ற நவன் வலைப்பதிவில் முதல் தமிழ் பதிவைப் பொறித்தார். அவரது முதல் தமிழ்ப் பதிவில் இருந்தது ஒரே ஒரு சொல்தான் - தமிழ்.
அவரது வலைப்பதிவு டிசம்பர் 29, 2002 அன்று ஆரம்பிக்கப் பட்டுள்ளது. ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் மட்டும் பதிவுகள் எழுதியிருக்கிறார்.
-oOo-
முதல் தமிழ்பதிவு (தலைப்பில்லாத பதிவு)
Thursday, January 16th, 2003
தமிழ்
இரண்டாவது தமிழ்பதிவு (தலைப்பில்லாத பதிவு)
Thursday, January 16th, 2003
கஙசஞடணதநபமயரலவழளறன
அறம் செய விரும்பு
மூன்றாவது தமிழ்பதிவு (தலைப்புடன்)
தமிழ் blog
Sunday, January 26th, 2003
தமிழில் blog எழுத வேண்டும் என்று வெகு நாளாக எண்ணிக் கொண்டிருந்தேன். ஒரு வழியாக இப்பொழுது எழுத முடிந்திருக்கிறது. ஆனால் சுலபமான வழி அல்ல. இன்னும் அந்த வழியை எளிதாக்கிக் கொண்டு எப்படி என்று எழுதுகிறேன்.
இப்படி எழுதியிருக்கிறார்.
மொத்தம் 72 தமிழ்ப்பதிவுகள் எழுதப் பட்டுள்ளன. ஆங்கிலத்தில் தொடர்ந்து எழுதி வந்தாலும் நவன் டிசம்பர் 27, 2005 உடன் தமிழில் எழுதுவதை நிறுத்தியிருக்கிறார்.
படம்
நவனின் உண்மையான படம் இங்கே இருக்கிறது. அவரது நிழற்படம் இந்தப் பதிவில் இருக்கிறது.
-oOo-
நவனைத் தொடர்ந்து பத்ரி சேஷாத்திரி, மதி கந்தசாமி, பெயரிலி இரமணீதரன், அருணா ஸ்ரீனிவாசன், நா. கண்ணன் உள்ளிட்ட பலரும் தமிழில் எழுத ஆரம்பித்தனர். பத்திரிகையாளர் மாலன் தமிழில் வலைப்பதிய பலரை ஊக்குவித்தார். அதிகமானோர் தமிழில் வலைப்பதிய ஆரம்பித்ததும் கனடாவாழ் ஈழத்தமிழரான வலைப்பதிவாளர் மதி கந்தசாமி தமிழ் வலைப்பதிவர் பட்டியலை தொகுக்க ஆரம்பித்தார்.
அமெரிக்காவில் பணி புரிந்து வந்த மற்றொரு பொறியாளரான கோவையைச் சேர்ந்த காசி ஆறுமுகத்தின் வருகை தமிழ் வலைப்பதிவுகளை மற்றொரு புதிய மைல் கல்லுக்கு இட்டுச் சென்றது. அதுதான் தமிழ்மணத்தின் பிறப்பும் இன்றைய தமிழ் வலைப்பதிவுகளின் பரவலும் பலப்பல திரட்டிகளின் உருவாக்கமும் என புதிய வரலாற்றின் துவக்கம்.
தமிழ் வலைப்பதிவுக் கோலத்தின் முதல் புள்ளியை இட்ட நவனுக்கு நன்றி கூறி தமிழ் வலைப்பதிவுகள் துவங்கி நான்காண்டுகள் நிறைவடைந்து ஐந்தாவது பிறந்த தினத்தைக் கொண்டாடுவோம்.
தமிழ்வலைப்பதிவுகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
03:40 Posted in வலைப்பதிவு | Permalink | Comments (25) | Email this
| Tags: birthday |
del.icio.us
|
|
Digg

