Thursday, 27 September 2007
❒ பிச்சைக்காரர்களின் பியூட்டி பார்லர்
மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் எல்லாம் பிச்சைக்காரர்களின் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும். அதைவிட கோயில் வாசல்களில் நிரந்தரப் பிரச்சைக் காரர்களின் கூட்டமே இருக்கும். கோயிலுக்கு வருகிறவர்களை தர்மம் தலைகாக்கும் என்ற புண்ணிய சிந்தனைக்குள் இட்டுச் சென்று தானம் வாங்கும் தந்திரம் அறிந்தவர்கள் இவர்கள்.
இப்போதெல்லாம் பிச்சைக் காரர்கள் ரொம்பவும் அட்வான்ஸ்டு ஆகி வங்கிக்கணக்கு, செல்போன் என்று மாடர்னாகத் திரிவது ஒரு புறம் என்றால் பிச்சைத் தொழிலை மிகவும் தொழில் நுட்பத்துடன் மேற்கொள்ளவும் வழிகண்டு பிடித்துள்ளனர்.
ஒவ்வொரு மத வழிபாட்டிடங்களிலும் அந்தந்த மதப் பிச்சைக் காரர்களுக்குத் தான் வருமான வாய்ப்பு அதிகம். எனவே திருவிழாக் காலங்களில் அந்தந்த மத வேடமிட்டு சென்றால் வருமானம் அள்ளலாம் என்ற மார்க்கெட்டிங் நுணுக்கங்கள் இப்போது அவர்களுக்கு அத்துப்படியாகி விட்டது.
எனவே பிச்சைக்காரர்களின் இந்த மார்க்கெட்டிங் நுட்பத்துக்கு உதவி செய்து வருமானம் பார்க்க ஒரு அழகு நிலையம் திட்டமிட்டது. கேரள மாநிலம் குற்றிப்புறம் என்ற ஊரில் ரயிவே கேட்டுக்கு அருகில் உள்ள ஒரு பியூட்டி பார்லர் பிச்சைக்காரர்களை தயார் செய்வதற்காகவே இயங்கி வருகிறது. தமிழ்நாட்டின் சேலம், பொள்ளாச்சி, திருச்சி, ஈரோடு பகுதிகளில் இருந்து நேரடியாக ரயிலில் வந்திறங்கும் நூற்றுக்கணக்கான பிச்சைக் காரர்கள் இந்த அழகு நிலையத்தின் நிரந்தர வாடிக்கையாளர்கள்.
முஸ்லிம் ஆக வேடமிட்டு தலைப்பாகை வழங்க ரூ. 12 முதல் 20 வரை. பெண்களுக்கு பர்தா போன்ற உடைகளுடன் பிச்சைக்கார கோலம். இது போல சன்னியாசிக் கோலம் உள்ளிட்ட பலமத பிச்சைக்கார வேடங்களை இங்கே இட்டுக் கொண்டு அந்தந்த திருவிழாத் தலங்களுக்கு சென்று விடுகின்றனர். இப்படி வேடமிட்டுச் செல்வதால் 200% வருமானம் அதிகரித்துள்ளதாக பிச்சைக்காரர்கள் தெரிவித்துள்ளனர். திருவிழாத் தலங்களில் இவர்களின் ஒரு நாள் வருமானம் சராசரியாக ரூ.1000 வரை.
09:55 Posted in வாழ்வியல் | Permalink | Comments (5) | Email this
| Tags: beggar, பிச்சைக்காரர்கள் |
del.icio.us
|
|
Digg

