Sunday, 14 January 2007
நெஞ்சிருக்கும் வரை
படித்தவர்கள் நிறைந்த மாநிலம். மனித உரிமைக்கே மரண அடி கொடுக்கும் மனிதர்களாக ஆசிரியர்கள் என்ற மிருகங்கள். இவர்கள் கற்ற கல்வி இவர்களுக்கு என்ன அறிவைத் தந்தது? நெஞ்சில் ஈரம் இன்றி....
என்னதான் நடந்தது என்கிறீர்களா?
-oOo-
3 மாதம் நின்று கொண்டே படித்த 7-ம் வகுப்பு மாணவன்: தலைமை ஆசிரியை உள்பட 7 பேர் மீது வழக்கு
திருவனந்தபுரம், ஜன. 13-
திருவனந்தபுரம் அருகே உள்ள அமராவதி அரசு உயர்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் மாணவன் ஜான்சன் (வயது 11). இவனது நண்பன் ஒருவனது கை ஒடிந்து விட்டதாம். இதற்கு ஜான்சன்தான் காரணம் எனக் கூறி ஜான்சன் வகுப்பில் உட்கார்ந்து படிக்க கூடாது என ஆசிரியர்கள் வாய்மொழி உத்தரவு போட்டு உள்ளனர்.
காலை பள்ளி தொடங் கியது முதல் மாலை பள்ளி முடியும் வரை ஜான்சன் பள்ளியில் நின்று கொண்டேதான் எழுத, படிக்க சொல்லி உள்ளனர். இந்த சம்பவங்களை ஜான்சன் பெற்றோரிடம் சொல்லவும் பயந்து உள்ளான்.
சுமார் 3 மாத கால மாக இந்த தண்டனை அனுபவித்த ஜான்சன் வலி தாங்க முடியாமல் தன் பெற்றோரிடம் கூறி அழுது உள்ளான். அவனது பெற்றோர் பீருமேடு முதல் வகுப்பு கோர்ட்டில் புகார் தெரிவித்தனர்.
நீதிபதி உத்தரவின் பேரில் போலீசார் மாணவருக்கு தண்டனை வழங்கிய தலைமை ஆசிரியை உள்பட 7 ஆசியர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து உள்ளனர். ஆனால் இந்த சம்பவங்களை பள்ளி நிர்வாகம் முற்றிலும் மறுத்து உள்ளது.
மாலைமலர்
-oOo-
உலகத்தின் முதல் சோதனைக்குழாய் குழந்தை இப்போ அம்மாவாகி விட்டதாம். சோதனைக்குழாய் இல்லாம ஒழுங்காவே குழந்தை பெத்துட்டாங்க...
அம்மணி பேரு லூயிஸ். 1978 ஜூலை 28 அன்னிக்கி சோதனைக்குழாய் மூலமா பிறந்தவங்க. அவங்களுக்கு வெஸ்லிங்கறவரோட கல்யாணமாகி நேத்து அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்தது..
-oOo-
பாலபாரதிக்கு
சுஜாதாவின் அயோத்தியா மண்டபம் படித்தேன். அவர் பார்ப்பனீயத்தைத் தான் கிண்டல் செய்திருப்பதாகப் படுகிறது... வேற ஒண்ணும் தெரியலையே தலைவா...
முன்னால சுந்தர்ராமசாமியோட பிள்ளை கெடுத்தான் விளையும் அதுக்கு வந்த எதிர்ப்பும் பார்த்து அதைப் பிரிண்ட் எடுத்து வைத்துக கொண்டு பல தடவை படித்துப் பார்த்தேன். அவர் திட்டமிட்டு அப்படி எழுதியதாக அதில் எனக்கு தோன்றவேயில்லை. ஆனால் அந்தப் பார்வையோடு பார்த்தால் ஓரளவுக்கு அந்த உணர்வு இருப்பதாகவும் தோன்றலாம் தான். ஆனால் அந்தப் பார்வையோடு பார்த்தும் இந்த அயோத்தியா மண்டபத்தில் அப்படி ஒன்றும் தேறலியே? பார்வைக் கோளாறா? (எனக்குத் தானுங்க...)
----------
[சிதறல்கள்]
07:55 Posted in சிதறல்கள் | Permalink | Comments (0) | Email this
| Tags: test tube, baby |
del.icio.us
|
|
Digg

