Tuesday, 02 January 2007

எல்லாமே நாங்கதான்

Image and video hosting by TinyPicமிழின் முதல் அனிமேஷன் கார்ட்டூன் முழுநீளக் கதைப்படம் 3D யில் எடுக்கப் பட்டுள்ளது. இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். பாடல்கள் வாலி. எடிட்டிங் லெனின். கதை திரைக்கதை அமைத்து இயக்குகிறார் வெங்கிபாபு. மாயாபிம்பம் மீடியா சார்பில் ஸ்ரீதேவி தயாரித்துள்ள இப்படத்தில் வழக்கமான முழுநீள தமிழ்சினிமாவின் எல்லா தொழில் நுட்பக் கலைஞர்களும் இடம் பெற்றுள்ளனர். ஆனால் இப்படத்தில் நடிகர் நடிகைகள் மட்டும் இல்லை என்பது தான் விசேஷ அம்சம்.

Image and video hosting by TinyPic3D கார்ட்டூன் கதாபாத்திரங்கள் வடிவமைக்கப் பட்டு சாதாரண படம் போலவே உருவாக்கப் பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க இந்தியத் தொழில் நுட்பத்தில் இந்தியாவிலேயே அதுவும் சென்னையிலேயே 100% படமாக்கப் பட்டுள்ளது. நட்சத்திரங்களுக்கான சம்பளமோ கால்ஷீட் பிரச்சினையோ இல்லாத இந்தப் படத்திற்கு பொருத்தமாக "இனிமே நாங்கதான்" என்று பெயரிடப் பட்டிருக்கிறது.

இதற்கு முன்னால் சில கார்ட்டூன் திரைப்படங்கள் உருவாக்கப்பட்ட போதிலும் அவை புராணக் கதைகளாகவோ அலாவுதீன் போன்ற பழங்கதைகளாகவோ தான் இருந்தன. Image and video hosting by TinyPicஇது முதன் முறையாக சமகால கதாபாத்திரங்களைக் கொண்டு உருவாக்கப் பட்டுள்ளது. விச்சு, வரது, வைத்தி, கோவிந்த் என்னும் நான்கு கதாபாத்திரங்களின் லூட்டியை மையமாக்கி நகைச்சுவையோடு படமாகப் பட்டுள்ளது.

நேரடியாக தமிழில் உருவாக்கப் பட்டு பிற மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்படுகிறது. 2K ரிசல்யூஷனுடன் டிஜிட்டல் துல்லியத்தில் உலக தரத்தில் தயாரிக்கப் பட்டு Analogue, Digital, IMAX மற்றும் 3D வடிவங்களில் உருவாக்கப் பட்டுள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் இங்கே.

14:10 Posted in சினிமா | Permalink | Comments (18) | Email this | Tags: 3d, animation |  del.icio.us | | Digg! Digg