Monday, 15 January 2007

போக்கிரி x ஆழ்வார்

Image and video hosting by TinyPic
திரை ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ள படங்கள் போக்கிரியும், ஆழ்வாரும்தான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தலயும், இளைய தளபதியும் நேருக்கு நேர் மோதும் படம் என்பதாலும், ஆதி படம் விஜய்யை வாரி விட்டது, வரலாறு மூலம் அஜீத் மீண்டும் வீறு கொண்டு எழுந்திருப்பதும் இந்த எதிர்பார்ப்புக்கு முக்கியக் காரணம்.

-oOo-

போக்கிரி:
போக்கிரி படத்தை இயக்கியிருப்பவர் பிரபு தேவா. விஜய்யுடன் அதகளம் பண்ணியிருப்பவர் ஆசின். படம் முழுக்க இளமைத் துள்ளளும், அதிரடி ஆக்ஷனும், மின்னல் ஆட்டமும் நிறைந்து விஜய் ரசிகர்களுக்கு மாபெரும் விருந்து படைக்க காத்திருக்கின்றன.

ஏற்கனவே பாடல்கள் முழுவதும் ஹிட் ஆகி ரசிகர்களை சூடேற்றி சுதியேற்றி வைத்துள்ளன. படத்தைப் பார்க்க விஜய் ரசிகர்கள் படு வேகமாக காத்திருக்கிறார்கள்.

இப்படத்தில் ஒரு பாதியில் ரவுடியாக வருகிறார் விஜய், இன்னொரு பாதியில் போலீஸ் அதிகாரியாக அவதாரம் பூணுகிறார். போலீஸ் அதிகாரி வேடத்தில் விஜய் நடித்துள்ள முதல் படம் இதுதான். படத்துக்கு யுஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.

தெலுங்கில் இதே பெயரில் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்ற படம்தான் போக்கிரி. தமிழிலும் கலக்குமா என்பது ரசிகர்கள் கையில் உள்ளது.

-oOo-

ஆழ்வார்:
வரலாறு மூலம் அத்தனை பேருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்த தல அஜீத், ஆழ்வார் மூலம் தனது எழுச்சியை கன்பார்ம் பண்ண வருகிறார். இதில் அவருக்கு ஜோடி ஆசின்.

தொடர்ந்து தோல்விகளையத் தந்து வந்த நிலையில் வரலாறு, அஜீத்துக்கு பெரும் பிரேக் கொடுத்தது. அந்த சூட்டோடு, ஆழ்வார் படமும் வெளியாவதால் தல ரசிகர்கள் தலை கால் புரியாத சந்தோஷத்தில் உள்ளனர்

படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்துள்ளனர். விநியோகஸ்தர்கள் மத்தியில் பயங்கர வரவேற்பாம். அத்தனை ஏரியாக்களிலும் சூப்பர் ரேட்டுக்கு படம் விற்றுள்ளதாம். 200க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் தமிழகத்தைக் கலக்கப் போகிறார் ஆழ்வார்.

-oOo-
செய்தி-தட்ஸ்தமிழ்

15:05 Posted in சினிமா | Permalink | Comments (11) | Email this | Tags: cinema, ajith, vijay |  del.icio.us | | Digg! Digg