Sunday, 19 November 2006
ஜேம்ஸ்பாண்டின் கதை!

சூப்பர்மேன், ஸ்பைடர் மேன் மாதிரி அதிசய சக்தி எதுவும் இல்லாமல் விஞ்ஞானக் கருவிகளின் துணையோடு ஜேம்ஸ்பாண்ட் புரியும் சாகசங்களை சிறுவர் முதல் பெரியவர் வரை ரசிக்ககின்றனர். கதாநாயகிகளோடும் வில்லிகளோடும் ஜேம்ஸ்பாண்ட்டின் அப்பட்டமான படுக்கையறைக் காட்சிகள் இருந்த போதிலும் இப்படங்கள் இந்தியாவிலும் எல்லா வயதினரிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
ஜேம்ஸ்பாண்ட் படங்களின் முதல் நாயகன் சீன் கானரி ஆறு படங்களில் நடித்துள்ளார். இரண்டாவதாக வந்த ஜார்ஜ் லேசன் ஒரு படத்தில் மட்டும் நடித்தார். மூன்றாவது ஜேம்ஸ்பாண்ட் ரோஜர் மூர் ஏழுபடங்களில் நடித்து அதிக படங்களில் ஜேம்ஸ்பாண்ட் ஆக நடித்த பெருமையைப் பெறுகிறார். திமோத்தி டால்டன் நான்காவதாக வந்து இரண்டு படங்களில் மட்டும் நடித்தார். ஐந்தாவது ஜேம்ஸ்பாண்ட் பியர்ஸ் பிரஸ்னன் நான்கு படங்களில் நடித்துள்ளார். புதிய ஜேம்ஸ்பாண்ட் டானியல் கிரெக் நடித்து ஒரு படம் திரைக்கு வந்துள்ளது. ஒன்று தயாரிப்பில் உள்ளது.
இயான் பிளம்மிங் என்ற பிரிட்டிஷ் நாவலாசிரியர் 1952 முதல் ஜேம்ஸ்பாண்ட் 007 என்னும் ரகசிய ஏஜென்ட் பாத்திரத்தை உருவாக்கி நாவல்களும் சிறுகதைகளும் படைத்தார். அவரது மறைவுக்குப் பிறகு வேறு பல எழுத்தாளர்களும் இந்த கதாபாத்திரத்தைக் கொண்டு கதைகளை உருவாக்கினர். ஜேம்ஸ்பாண்ட் கதை முதலில் தொலைக்காட்சிப் படமாகவும் வானொலி தொடராகவும் நடிக்கப் பட்டது. அதன்பிறகு இது பெரிய திரைக்கு வந்து உலகப் புகழ் பெற்றது.
கணினி விளையாட்டுகள், வீடியோ விளையாட்டுகள், அனிமேஷன் படங்கள், காமிக் படக்கதைகள் என ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரம் பல அவதாரங்களைப் பெற்றுள்ளது.
செல்போன்களில் ரிங்டோனாக ஜேம்ஸ்பாண்ட் படத்தின் தீம் மியூசிக் பரவலாக பலராலும் பயன்படுத்தப் படுகிறது. ஜேம்ஸ்பாண்ட் படத்தில் இடம்பெறும் கருவிகளின் மாதிரிகள் விளையாட்டுப் பொருள் சந்தையில் குறிப்பிடத் தக்க இடம் பிடித்துள்ளன. குறிப்பாக ஜேம்ஸ்பாண்ட் கார் பொம்மைகளும், துப்பாக்கிகளும், 007 சின்னம் பொறிக்கப் பட்ட உடைகளும் மிகவும் பிரபலம்.
ஒரு கொசுறு செய்தி:
பியர்ஸ் பிரஸ்னன் அடுத்த ஜேம்ஸ்பாண்ட் ஆக சபாரிசு செய்தது கீழே படத்தில் உள்ள அழகான இளைஞனைத்தான். ஆனால் அவருக்கு ஜேம்ஸ்பாண்ட் ஆக யோகம் இல்லை போல. இந்த நடிகரின் பெயர் என்ன சொல்லுங்க???

ஜேம்ஸ்பாண்ட் படப் பட்டியல்
Sean Connery
1. Dr. No (1962)
2. From Russia with Love (1963)
3. Goldfinger (1964)
4. Thunderball (1965)
5. You Only Live Twice (1967)
6. Diamonds Are Forever (1971)
George Lazenby
1. On Her Majesty's Secret Service (1969)
Roger Moore
1. Live and Let Die (1973)
2. The Man with the Golden Gun (1974)
3. The Spy Who Loved Me (1977)
4. Moonraker (1979)
5. For Your Eyes Only (1981)
6. Octopussy (1983)
7. A View to a Kill (1985)
Timothy Dalton
1. The Living Daylights (1987)
2. Licence to Kill (1989)
Pierce Brosnan
1. GoldenEye (1995)
2. Tomorrow Never Dies (1997)
3. The World Is Not Enough (1999)
4. Die Another Day (2002)
Daniel Craig
1. Casino Royale (2006) - lattest
2. Bond 22 (2008) - future
கேசினோ ராயல் - திரைப்பட விமர்சனம்
1. கேசினோ ராயல் - ஜேம்ஸ்பாண்டு 007 - சாத்வீகன்
2. சும்மா டைம் பாஸ் மச்சி.....: கேசினோ ராயல் - திரை விமர்சனம்
20:20 Posted in சினிமா | Permalink | Comments (6) | Email this
| Tags: தமிழ்ப்பதிவுகள், Casino Royale, Bond |
del.icio.us
|
|
Digg

