Monday, 03 December 2007
★ தமிழ்ப் பதிவுகள் எப்படி இருக்கின்றன?
தமிழ்மணத்தில் பட்டியலிடப் பட்டுள்ள பதிவுகள் விவரப் படி 2404 பதிவுகள் தமிழ்மணத்தில் இணைக்கப் பட்டுள்ளன. தமிழ்மணத்தில் இணைக்கப் படாத பதிவுகளும் உண்டு...ஆகவே கிட்டத் தட்ட 3000 தமிழ்ப்பதிவுகள் எனக் கொள்ளலாம்... அவற்றில் தொடர்ந்து இயங்கும் பதிவுகள் மூலம் சராசரியாக தினமும் எழுதப் படும் இடுகைகள் சுமார் 200 இருக்கலாம்.( தமிழ்மணத்தில் 146)
தமிழ் வெகுசனப் பத்திரிகை உலகமும் தமிழ் வலைப்பதிவுகளை கவனிக்கவும் அங்கீகரிக்கவும் ஆரம்பித்துள்ளன. விகடன், குமுதம், குங்குமம், கல்கி, தினமலர், தினமணி போன்ற இதழ்களில் எல்லாம் தமிழ்ப்பதிவுகளின் உள்ளடக்கங்கள் வெளியிடப் பட்டு வருகின்றன.
வலைப்பதிவுலகின் "எல்லையில்லா இணையம்" என்ற கருத்தாக்கத்தின் விளைவாக பலரும் தொடத் தயங்கும் பல கருத்துக்களை வலைப்பதிவுகளில் காண முடிகிறது. இவற்றில் நச்சுக் கருத்துக்களும் இருக்கலாம்...அது சமூக ரீதியான காரணங்களால் நிகழ்வது...ஆனால் இணையத்தின் வீச்சு இன்று அவசியமானது.
தமிழ்வலைப்பதிவுகளை எடுத்துக் கொண்டால் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் தங்கள் தமிழார்வத்துக்கு வடிகாலாகவே தமிழ்ப்பதிவுகளை எழுதத் தொடங்கி இருந்தாலும் இன்று பரவலாக தமிழ்நாட்டிலும் தமிழ் வலைப்பதிவர்கள் கணிசமாக வலைப்பதிகிறார்கள்.
இது தவிர இங்கே காண முடிந்த ஒரு சுவாரசியமான விஷயம்... செல்பேசிகளில் எஸ்எம்எஸ் பழக்கம் இன்றைய இளைய தலைமுறையிடம் மிக அதிகமாக இருக்கிறது. செல்பேசி சிரிப்புகள், கடிகள், பொன்மொழிகள் என்று தனி அகராதியே போடுமளவுக்கு மக்கள் பரப்புரை செய்கிறார்கள்...இவர்கள் தமிங்கில மொழியை அனாயாசமாக பயன்படுத்துகிறார்கள்...இது தமிழ்வலைப்பதிவில் பெரும்பான்மையோரால் பயன்படுத்தப்படும் ரோமன் தட்டச்சு முறைக்கு ஒத்ததாக இருப்பதால் அதே தமிங்கில தட்டச்சில் தமிழையே வெளியீடாக கிடைப்பதில் தமிழ் வலைப்பதிவுலகிற்கும் இவர்களில் பலர் இன்று எளிதாக காலடி எடுத்து வைக்க காரணமாக இருக்கிறது...
ஆரம்பத்தில் இவர்கள் பெரிதாக படைப்பாக்கம் என்று செய்யாவிட்டாலும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்...நேரடி உரையாடல் முறையில் இவர்களின் வலைப்பதிவுகள் ரசிக்கவும் வைக்கின்றன. ஆனால் இவர்களில் பலர் நல்ல படைப்பாக்க முயற்சிகளையும் வலைப்பதிவுகளில் செய்ய முனைகிறார்கள்....சுவையான இளமைக் கவிஞர்கள் பலர் இவர்களில் இருந்து உருவாகி வருகிறார்கள்...
குரல் பதிவுகளான ஆடியோ பதிவுகளை சில ஈழத் தமிழ்ப்பதிவர்கள் முன்னெடுத்த போதிலும் இப்போது சற்று தொய்வு தென்படுகிறது....திரைப்படப் பாடல்கள் அடங்கிய ஆடியோ பதிவுகள் மட்டுமே இப்போது அதிகமாக வருகின்றன.
தாங்கள் ரசித்த வீடியோ, புகைப்படங்களையும் பலர் பதிவாக இடுகின்றனர். எனினும் பதிவுக்காகவே உருவான வீடியோ பதிவுகள் இதுவரை காணக்கிடைக்கவில்லை... வெப் கேமரா மூலம் பதிவு செய்யப் பட்ட வீடியோ பதிவு ஒன்றை (ஆங்கில வலைப்பதிவு) ஒன்றை காணமுடிந்தது..அது போன்ற முயற்சிகள் தமிழிலும் செய்யப் படலாம்...
நேற்று ஒரு புதிய முயற்சியாக இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு ஒன்று ஒளிபரப்ப ஆரம்பமாகி இருப்பதை காணமுடிந்தது...அதுவும் தமிழில் புதிய சாத்தியங்களுக்கான ஒரு ஆரம்பம் எனக் கொள்ளலாம்...வலைப்பதிவுகளிலும் இதுபோன்ற நிகழ்வுகள் வருவதன்மூலம் இணையத்தின் பல்லூடகத் தன்மையை வலைப்பதிவுகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள இயலும்.
02:35 Posted in star , வலைப்பதிவு , விமர்சனம் | Permalink | Comments (3) | Email this | Tags: blogs, tamil blogs, தமிழ்ப்பதிவுகள்
Thursday, 22 March 2007
❒ சிவாஜி பட பாடல்கள்
வலையில் உலவும் சிவாஜி படத்தின் மூன்று பாடல்கள் என்று பதிவு போட்டு ரொம்ப வருத்தப் பட்டிருக்கார் கார்த்திகேயன். இதில வருத்தம் என்ன வேண்டிக் கிடக்குன்னு எனக்கு புரியலை.
பாட்டு ஒரிஜினல் இல்லேங்கிறீங்க. அப்புறம் எதுக்கு வருத்தம். இந்த பாட்டை கேட்டு வச்சிருந்தா ஒரிஜினல் வந்ததுக்கப்புறம் ஒப்பிட்டு பார்க்கலாமில்ல. எது நல்லா இருக்குன்னு...ஒரிஜினல் இதை விட கேவலமா இருந்துடப் போகுது ;(
உண்மையிலேயே ஒரிஜினல்னு வைங்க... அப்பவும் இதைக் கேட்கிறதுல எந்த பாவமும் இல்லை. எப்ரல் 4 ரிலீஸ்னு சொல்லிட்டு 3 பாட்டை மட்டும் ரிலீஸ் செஞ்சிருந்தாக்க அவங்க ரசிகர்களை ஏமாத்தறாங்கன்னு தான் சொல்லணும். அப்ப அவங்களை ஏமாத்தறதில எந்த தப்பும் இல்லை.;)
04:15 Posted in சினிமா | Permalink | Comments (8) | Email this | Tags: ரஜினி, தமிழ்ப்பதிவுகள்
Monday, 19 March 2007
❒ வருமானவரியிலிருந்து தப்பிக்க வழி
வருமான வரி கட்டாம இருக்க ஏதாவது செய்யணுமே!
மண்டை காய்கிறதா உங்களுக்கு; ரெடி...ஒன்...டூ...த்ரீ!
முன்பெல்லாம் வருமான வரி வரம்புக்குள் வருவோரை விட, இப்போது பல மடங்கு பெருகி விட்டதால், பிப்ரவரி மாதம் பிறந்துவிட்டால் போதும், பலருக்கும் ஆடிட்டர் நினைவு வந்துவிடும். எப்படியாவது வரியை குறைக்க ஏதாவது, செய்தாக வேண்டுமே, அவரிடம் ஐடியா கேட்க வேண்டுமே என்ற பரபரப்பு கூடிவிடுமே.
வருமான வரி கட்டுவது, அதற்குரிய "பான்' கார்டு எண் வைத்திருப்பது என்பதெல்லாம், நாம் இந்த நாட்டு குடிமகன், நாமும் நம் மக்கள் நல திட்டங்களில் பங்கேற்கிறோம் என்பதற்கான அடையாளம் தான். நாமும் வளர்ந்து, நம் நாடும் வளரத்தான் இதெல்லாம் என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
வருமான வரி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது தெரியுமா? ஒவ்வொரு நிதி ஆண்டிலும், ஏப்ரல் முதல் மார்ச் முடிய உங்கள் வருமானத்தை கணக்கிடப்படுகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதியில் வரும் 31ம் தேதி வரை கணக்கில் எடுத்து வரி கணக்கிடப்படும்.
நீங்கள் சம்பளதாரராக இருந்தால், ஆண்டு சம்பளம், வீடு, முதலீடு போன்றவை மீதான வருவாய் எல்லாம் சேர்க்கப்பட்டு மொத்தம் கணக்கிடப் படும். அப்படி கணக்கிடப்படும் தொகை, வருமான வரி விதிப்பு விலக்கு தொகையை மிஞ்சி இருந்தால், அதற்கு குறிப்பிட்ட சதவீதம் வரி போடப்படும்.
சம்பளதாரர் என்றால் அவர்களுக்கு மாத வருமானத்திலேயே, குறிப்பிட்ட தொகை "டாக்ஸ் டிடக்ஷன் அட் சோர்ஸ் என்ற "டி.டி.எஸ்.,' தொகை பிடிக்கப்படும். அதாவது, ஆண்டு இறுதியில் வருமானம் மீது வருமானவரி கட்டும் போது சிரமப்படக் கூடாது என்று தான் மாத வருவாயிலேயே பிடித்தம் செய்யப்படுகிறது.
சுயதொழில், வியாபாரம் செய்வோர் எல்லாம் ஆண்டு வருவாயை ஆடிட்டர் கொண்டு கணக்கிட்டு, அதற்கு வரி கட்ட வேண்டும்.
தப்ப முடியுமா?: ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய் வரை உள்ள வருமானத்துக்கு வரி கட்டாமல் தப்பலாம். அதுவரை விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால், அதற்கு மேல், ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை பத்து சதவீதம், ஒன்றரை லட்சத்தில் இருந்து இரண்டரை லட்சம் வரை உள்ள வருமானத்துக்கு 20 சதவீதம் என்று வருமானவரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் பெண்களுக்கு ஒரு லட்சத்து 35 ஆயிரம் வரை, வருமான வரி கிடையாது. அதுபோல, 65 வயதுக்கு மேற்பட்ட, மூத்த குடிமகன்களுக்கு ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்தாண்டு போடப்பட்ட பட்ஜெட்டில் ஒரு லட்சம் வரை வரி விலக்கு என்பது ஒரு பத்தாயிரம் ரூபாய் ஏற்றி, ஒரு லட்சத்து 10 ஆயிரம் வரை வரி கிடையாது என்று சலுகை அளித்துள்ளார் நிதி அமைச்சர்.
நீங்க எவ்ளோ கட்டணும்?: உங்கள் ஆண்டு வருமானம் இரண்டு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் என்று வருகிறது என்று வைத்துக் கொள்வோம்.
* இதில் முதல் லட்சம் ரூபாய்க்கு வருமான வரி கிடையாது.
* ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை 10 சதவீதம் வரி என்பதால், உங்களின் அடுத்த 50 ஆயிரத்துக்கு 10 சதவீதம் வரி பிடித்தம் கணக்கிடப்படும்.
* மீதியுள்ள வருமானம் 70 ஆயிரம் ரூபாய். அதற்கு 20 சதவீதம் அளவில் வரி கணக்கிடப்படும்.
இப்படி கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
வீடு வாங்கி விட்டால்: ஒரு லட்சம் ரூபாய் வருமானத்துக்கு வரி சலுகை கிடைத்தபின்னர், மீதி உள்ள வருமானத்துக்கு எப்படியாவது, வழி கண்டுபிடித்து, வரி கட்டாமல், செய்ய முடியுமா? ஏன் முடியாது, அதற்கு தான் அரசே, வழி சொல்கிறதே. அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் தரும் பல சேமிப்பு திட்டங்கள், காப்பீட்டு திட்டங்கள், சுகாதார திட்டங் களுக்கு வருமானவரிச்சலுகை தருகிறது.
மற்ற எந்த சேமிப்பையும் காட்டிலும், வீடு வாங்க, வீட்டுலோன் வாங்கி இருந்தால் போதும், உங்களுக்கு போதுமான அளவில் வரிச்சுமை குறையும். மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் வரை, வருமானவரி சட்டத்தின் 80 சி பிரிவின் படி, வரிச்சலுகை பெறலாம்.
என்னென்ன?: கீழ்கண்ட வகையில் நீங்கள் சேமிப்போ, பாலிசியோ, வீட்டுக்கடனோ வாங்கியிருந்தால் மொத்தமாக சேர்த்து ஒரு லட்சம் ரூபாய் வரை கழித்துவிடலாம். அப்போது உங்கள் வருமானவரிக்குரிய வருவாய் மொத்த தொகை குறைந்துவிடுமே.
இதோ அந்த ஒரு லட்சம் ரூபாய் வரை கழிப்பதற்கு அனுமதிக்கப்பட்ட திட்டங்கள்:
* ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுப்பது.
* ஊழியர் சேம நல நிதியில் பணம் போடுவது.
* பொது சேம நல நிதியில் அதிகபட்சம் 70 ஆயிரம் ரூபாய் வரை சேமிக்கலாம்.
* தேசிய சேமிப்பு பத்திரம்.
* யுனிட் அடிப்படையிலான இன்சூரன்ஸ் திட்ட பாலிசி.
* வீட்டுலோன் மீதான மாத தவணை கட்டிய தொகை.
* மியூச்சுவல் பண்டில் இ.எல்.எஸ்.எஸ்., திட்ட சேமிப்பு.
* குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளின் கல்வி கட்டணம்
* ஐ.டி.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ., போன்ற கடன் பத்திரங்கள்.
* பென்ஷன் திட்ட பாலிசி.
இவை தவிர நன்கொடையையும் கழிக்கலாம். என்ன ஒரு ஐடியா கிடைத்ததா? இனி ஆடிட்டரை பாருங்கள்.
கட்டலேன்னா பிடிப்பாங்க: ஒரு லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் வாங்குபவர் என்றால், வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டாம். அதற்கு மேல் வருமானம் உள்ளவர் என்றால், மார்ச் 31 ம் தேதிக்குள் எல்லா சேமிப்புகளையும் கணக்கில் காட்டி, அறிக்கையை ஜூலை 31 ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
சம்பளதாரர் அல்லாத தொழில், வர்த்தக பிரிவினர் என்றால், அவர்களுக்கு அக்டோபர் 31 ம் தேதி வரை அவகாசம் உண்டு.
வருமான வரி அறிக்கையை சமர்ப்பிக்காமல் நழுவினால், கண்டுபிடித்து, அபராதம் 5 ஆயிரம் விதிக்கப்படும்.
சுகாதாரத்துக்கு சலுகை: வருமானத்தில் முதல் ஒரு லட்சம் வரை வரி இல்லை. மீதி ஒன்றரை லட்சம் பணத்துக்கு வரி கட்ட வேண்டும். அதில் ஒரு லட்சம் வரை வருமானவரி 80 சி யின் கீழ் சேமிப்புகளை காட்டி தப்பிவிட்டீர்கள்.
ஆனாலும், ஒரு 50 ஆயிரம் "இடிக்கிறதே' என்று புலம்புவீர்களானால், அதற்கும் வழி இல்லாமல் இல்லை. மெடிக்ளெய்ம் உட்பட சுகாதார இன்சூரன்ஸ் திட்டங்களில் அதுவும், வருமான வரி சட்டம் 80 டி க்கு உட்பட்ட திட்டங்களில் அதிகபட்சம் 10 ஆயிரம் வரை சேமிக்கலாம். அந்த 10 ஆயிரத்தை கழிக்கலாம். மீதம் 40 ஆயிரம் தான் நீங்கள் வரி கட்ட வேண்டிய வருமானம். அதிலும், குறைக்க வேண்டுமானால், அதற்கு நன்கொடை தந்தால், அதை கணக்கில் காட்டி கழிக்கலாம்.
செய்தி கட்டுரை நன்றி: தினமலர்
05:30 Posted in வாழ்வியல் | Permalink | Comments (5) | Email this | Tags: incometax, வருமானவரி, தமிழ்ப்பதிவுகள்
Sunday, 18 March 2007
❒ வலைப்பதிவர்களுக்கான வாக்குப்பதிவு
அன்பான வாக்காளப் வலைப்பதிவுப் பெருமக்களே!
உங்களுக்கு ஒரு வாக்கெடுப்பு.
நம்ம திரட்டிகளின் பயன்பாடு பற்றிய ஒரு சின்ன கணக்கெடுப்பு.
நீங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திரட்டிகளை பயன் படுத்தினாலும் முதன்மையானதாக ஒன்றை பயன்படுத்துவீர்கள் தானே? அதாவது ரெகுலராக பயன்படுத்துவது...விரும்பிப் பயன்படுத்துவது எதுவோ...அதில் வாக்களியுங்கள்.
வாக்களித்தவர் தன் பெயரை இடலாம். இடாமலும் இருக்கலாம்...கட்டாயமில்லை.
ஆனா கண்டிப்பாக வாக்களியுங்கள்.
நன்றி.
வாக்குச்சீட்டு இங்கே...
17:10 Posted in இணையம் | Permalink | Comments (14) | Email this | Tags: தமிழ்ப்பதிவுகள்
❒ இந்திய மாணவர்களுக்கு அமெரிக்க தடை!
எச்சரிக்கை! ஜி.ஆர்.இ.,க்கு...! அமெரிக்க நிறுவனம் வேட்டு; இந்திய மாணவர்கள் பரிதவிப்பு
கடந்த வாரம் திடீர் என்று ஒரு அறிவிப்பு, இந்தியாவில் இருந்து ஜி.ஆர்.இ., டெஸ்ட்டுக்கு விண்ணப்பங்கள் குவிந்துவிட்டன. அதனால், இனி ஏற்க முடியாது' என்று இதை வெளியிட்டது, ஜி.ஆர்.இ., டெஸ்ட்டை நடத்த அதிகாரப்பூர்வமான கல்வி அமைப்பான "எஜுகேஷன் டெஸ்ட்டிங் சர்வீசஸ். (இ.டி.எஸ்.,)'
இதை அறிந்த மாணவர்கள் பலரும் ஆடிப்போய்விட்டனர். அமெரிக்கா உட்பட பல நாடுகளில் மேலாண்மை தொடர்பான மேற் படிப்புக்கு போகும் மாணவர்கள், இந்த ஆன்லைன் தேர்வில் தேறினால் தான் விண்ணப்பமே அனுப்ப முடியும். அப்படியிருக்க, இனி, ஜூலையில் தான் விண்ணப்பிக்க முடியும், அதுவும், புதிய பாடதிட்ட முறைப்படி தான் தேர்வில் பங்கேற்க முடியும் என்று திடுதிப்பென்று அறிவித்தால், எப்படியிருக்கும்?
அதென்ன ஜி.ஆர்.இ.,?: "கிராஜுவேட் ரெக்கார்டு எக்சாமினேஷன்' என்பதன் சுருக்கம். அதை எழுத ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் ஆஜராகி, மூன்று கட்ட தேர்வில் ஆங்கில மொழி புலமையை காட்டி தேறினால் தான், வெளிநாட்டுக்கு சென்று மேற்படிப்பு படிக்க முடியும். வரும் செப்டம்பர் மாதம் முதல், புதிய ஜி.ஆர்.இ., பாட திட்டம் வகுக்கப்படுகிறது. அதற்கு முன் வரை, இப்போதுள்ள பழைய முறையில் தேர்வில் பங்கேற்கலாம் என்று தான் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், இந்த தேர்வில் ஆஜராவது வழக்கம். அதற்காக, உள்ளூரில் கோச்சிங்கும் போவர். அதற்காக சில ஆயிரம் ரூபாய் கட்டணம் கட்டி படிக்க வேண்டும். அதன் பின் ஜி.ஆர்.இ., எழுதி, வெளிநாட்டில் படிக்க போகலாம்.
ஜூலை 31ம் தேதி வரை, பழைய பாடதிட்டம் செல்லும் என்பதால், பல மாணவர்களும் கோச்சிங் போய்க் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தான், அவர்கள் கனவு நனவாக விடாமல், "இடி' விழுந்தது.
இதனால், பலரும் பாதிக்கப்படுவது உறுதி. இந்தியாவில் இருந்து மாணவர்கள், அடுத்த ஆண்டு அமெரிக்கா உட்பட வெளிநாடுகளில் மேற் படிப்பு படிக்க, ஜி.ஆர்.இ.,யை இப்போது முடித்திருக்க வேண்டும்.
"இந்தியாவில் இருந்து ஏற்கனவே ஏகப்பட்ட விண்ணப்பங்கள் வந்துவிட்டதால், இனி பதிவு செய்ய முடியாது. ஜூலை வரையிலான டெஸ்ட் களுக்கு உரிய எண்ணிக்கையை விட, பல மடங்கு அதிகமாக வந்துவிட்டது. அதனால், பதிவு நிறுத்தப்படுகிறது' என்று அமெரிக்க நிறுவனம் இ.டி.எஸ்., தடாலென கூறிவிட்டது.
இந்த மாணவர்கள் இப்போதுள்ள பாடதிட்டம் படி தான் கோச்சிங் போய் வருகின்றனர். அவர்கள் இனி, மீண்டும் புதிய பாடதிட்டத்தின் படி, ஜூலையில் விண்ணப்பிக்க வேண் டும். மேலும், அடுத்த ஆண்டும் வெளி நாட்டு படிப்பில் சேர முடியாது. காரணம், செப்டம்பர், அக்டோபர் என்று தேர்வு நாள் வந்தால், அவர்களால், நிச்சயம் அடுத்தாண்டு விண்ணப் பிக்க முடியாது. அமெரிக்காவில் எம்.எஸ்., மேற்படிப்பு படிப்பது என் பது தான் பல இந்திய மாணவர்களின் கனவு. அது இப்போது தற்காலிகமாக தகர்க்கப்பட்டுள்ளது. இந்தாண்டு ஜி.ஆர்.இ., எழுத முடியாமல், பாதிக்கப்பட்ட மாணவர்கள், ஓராண்டு காத்திருக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்படுகிறது.
ஆனால், ஜி.ஆர்.இ., எழுதாமல், டோபல், ஐ.இ.எல்.டி.எஸ்., என்று வேறு தேர்வுகளில் ஆஜராகி, அமெரிக்கா தவிர, சுவீடன் உட்பட பல நாடுகளில் மேற்படிப்புகளில் சேரலாம். அந்த வழிகளை தான் இந்திய மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.
மொத்தத்தில்...
* ஓராண்டு வீண் ஆகிவிடும் ஆபத்து உள்ளது.
* கோச்சிங் கட்டணம் வீணாகி விடும்.
* புதிய முறை அமலாவதால், புது தலைவலி
இ.டி.எஸ்., பின்னணி: இ.டி.எஸ்., என்பது அமெரிக்காவில் உள்ள தனியார் கல்வி பயிற்சி நிறுவனம்.
ஆங்கிலம் பேசும் திறமை உட்பட ஆங்கில திறமையை அளிக்கும் கல்வி பயிற்சி நிறுவனம்.
அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் மற்ற பல நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் இதன் ஜி.ஆர்.இ., முறையை அங்கீகரித்தன.
அறுபதாண்டாக இயங் கும் இந்த நிறுவன தலைமை அலுவலகம், அமெரிக்காவில் நியூஜெர்சி மாநிலத்தில் லாரன்ஸ் வில்லேயில் உள்ளது.
இதன் வெப்சைட் முகவரி: www.ets.org/gre
180 நாடுளில்... 3,500 பல்கலை.,யில்: ஜி.ஆர்.இ., என்பது ஆங்கிலத்திறனை திறனாயும் தேர்வு. இதை 180 நாடுகளில் 3,500 பல்கலைக்கழகங்கள் ஏற்கின்றன. இதில் தேறிய விவரத்துடன் தான் விண்ணப்பிக்க முடியும்.
ஜி.ஆர்.இ.,யில் இரண்டு வகை உள்ளன. ஒன்று: ஜி.ஆர்.இ., பொது, இதில் பொதுவான மேற்படிப்பில் சேருவோர் பங் கேற்கலாம். ஜி.ஆர்.இ., சப் ஜெக்ட் என்பது இன்னொன்று. எட்டுவகை துறைகளில், மேற் படிப்பு படிக்க வேண்டுமானால், அதற்கு தனித்தனியாக ஜி.ஆர்.இ., உள்ளது. அதில் பங்கேற்க வேண்டும்.
இந்தியாவில் இருந்து தான் அதிகமான மாணவர்கள் இதில் பங்கேற்கின்றனர். சாதிப்பதும் இந்தியர்கள் தான்.
நன்றி: தினமலர்
03:25 Posted in கல்வி | Permalink | Comments (1) | Email this | Tags: அமெரிக்கா, தமிழ்ப்பதிவுகள்
Friday, 16 March 2007
❒ சாதனையை நோக்கி சந்திரமுகி

'ஹரிதாஸ்' சாதனையை 'சந்திரமுகி' முறியடிக்குமா?
700 நாட்களை தாண்டி ஓடுகிறது
ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' படம், 700 நாட்களைத்தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. 'ஹரிதாஸ்' படத்தின் சாதனையை, 'சந்திரமுகி' நெருங்கிக்கொண்டிருக்கிறது.
'ஹரிதாஸ்'
தமிழ் பட வரலாற்றிலேயே மிக அதிக நாட்கள் ஓடி சாதனை புரிந்த படம், 'ஹரிதாஸ்.' இந்த படம், ஒரே தியேட்டரில் 784 நாட்கள் ஓடி வரலாற்று சாதனை படைத்தது.
இது, தியாகராஜ பாகவதர் கதாநாயகனாக நடித்த படம். அவருக்கு ஜோடியாக பிரபல பாடகி என்.சி.வசந்த கோகிலம் நடித்து இருந்தார். டி.ஆர்.ராஜகுமாரி, 'ரம்பா' என்ற தாசியாக வில்லியாக நடித்து இருந்தார். இவருடைய அழகில் மயங்கி, பாகவதர் தனது சொத்துக்களை எல்லாம் இழப்பது போல் கதை அமைக்கப்பட்டு இருந்தது.
1944-ம் வருடம் தீபாவளி பண்டிகை அன்று 'ஹரிதாஸ்' திரைக்கு வந்தது. சென்னை பிராட்வே தியேட்டரில், தினசரி 2 காட்சிகளாகவும், சனி, ஞாயிறில் 3 காட்சிகளாகவும் 112 வாரங்கள் ஓடி சாதனை படைத்தது.
'சந்திரமுகி'
பாகவதர் நடித்த 'ஹரிதாஸ்' படத்தின் சாதனையை, ரஜினிகாந்த் நடித்த 'சந்திரமுகி' படம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 2005-ம் வருடம் ஏப்ரல் மாதம் 14-ந் தேதி, இந்த படம் திரைக்கு வந்தது. சிவாஜி புரொடக்ஷன்ஸ் தயாரித்து, பி.வாசு டைரக்டு செய்திருந்தார்.
ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாராவும், பிரபு ஜோடியாக ஜோதிகாவும் நடித்து இருந்தார்கள். தமிழ் பட வரலாற்றில், மிக அதிக நாட்கள் ஓடி சாதனை புரிந்த பட வரிசையில், 'சந்திரமுகி' யும் இடம்பெற்று இருக்கிறது.
700 நாட்கள்
சென்னை சாந்தி தியேட்டரில் திரையிடப்பட்ட 'சந்திரமுகி,' தொடர்ந்து 700 நாட்களை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து 800 நாட்கள் வரை 'சந்திரமுகி' படம் ஓடி, 'ஹரிதாஸ்' படத்தின் சாதனையை முறியடிக்கும் என்று சிவாஜி புரொடக்ஷன்ஸ் ராம்குமார் தெரிவித்தார்.
செய்தி: தினத்தந்தி
12:35 Permalink | Comments (3) | Email this | Tags: chandramukhi, rajini, ரஜினி, தமிழ்ப்பதிவுகள்
❒ சேதுக்கரசியின் வேண்டுகோள்
இனிய இணைய நெஞ்சங்களுக்கு வணக்கம்!
"இதயம் மீறும் எண்ணங்களால் நாம்
எழுந்து பறப்போமே
இதய நிழலில் இதயம் கிடத்தி
இன்னல் துறப்போமே"
எனப் பாடி, சிறகடித்துப் பறக்கத் தொடங்கியது ஒரு சின்னஞ்சிறு இணையப்பறவை... சிறகை அகலமாய் உயரமாய் விரித்து அன்பால் உலகத்தை அளந்திட்டேன்... இதோ, வானம் விரைவில் என உற்சாகமாய்த் தன்னைச் செலுத்தியபடி இருக்கிறது...
உலகெலாம் அலைந்து தமிழ்ப் பருக்கை கொத்தி, கூடு அடையும் இதயங்களுக்கு ஊட்டியபடி இருக்கும் நம் அன்புடனின் ஈராண்டு நிறைவையும் மூன்றாம் ஆண்டின் தொடக்கத்தையும் ஆனந்தமாய் ஆடலுடன் பாடலுடன் மன நிறைவாய்க் கொண்டாடிட 'அன்புடன்' கவிதைப் போட்டி நிகழ்த்த முடிவு செய்துள்ளது.
போட்டி விபரம்:
கவிதைப் போட்டி ஐவகைச் சுவையின் கீழ் நடத்தப்பட உள்ளது.
1. இயல்கவிதை - வாசிக்கச்சுவை
வழமையான வடிவம் தான். படைப்பாளி தன் கவிதையை யுனித்தமிழில்(Unicode) தட்டச்சு செய்து அனுப்பவேண்டும்.(யுனித்தமிழில் தட்டச்ச இயலாதவர்கள் 'அன்புடன்' உதவியை அணுகலாம் மின்னஞ்சல் : anbudansupport@gmail.com)
2. இசைக்கவிதை* - பாடச்சுவை
சில பாடல்கள் இசையோடு கேட்க இன்பம் கூட்டும். அவ்வகைக் கவிதைகளுகான (பாடல்களுக்கான) பிரிவு இது. படைக்கப்பட்ட கவிதை பாடலாக இசையோடு பதியப்பட்டு அனுப்பப்படவேண்டும்.
3. ஒலிக்கவிதை - கேட்கச்சுவை
சில கவிதைகள் படைப்பாளியின் உணர்வோடு கேட்க நம்மை உலுக்கியெடுக்கும்.அவ்வகைக் கவிதைகளுக்கான பகுதி இது. படைக்கப்பட்ட கவிதை படைப்பாளியின் குரலில் பதியப்பட்டு அனுப்பப்படவேண்டும்.
4. படக்கவிதை** - பார்க்கச்சுவை
புகைப்படங்களுடக்கான கவிதை. பார்வைக்கு வைக்கப்படும் சில புகைப்படங்களுக்குப் படைப்பாளியின் கற்பனை வடிக்கும் கவிதையைத் தரவேண்டும்.
5. காட்சிக்கவிதை* - இயக்கச்சுவை
இது ஒலி - ஒளி கவிதை. கவிதையைக் காட்சியாக்கித் தரவேண்டும்.
* இசைக்கவிதை, காட்சிக்கவிதை பிரிவுகள் புது முயற்சி என்பதால் பங்கேற்பு குறைவாய் இருக்கும் என்றெண்ணுகிறோம். எனவே அவற்றில் பங்கேற்கும்
படைப்புகளுக்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம்.
** படக்கவிதைக்கான படங்கள் இப்பதிவுடன் இணைக்கப்பட்டுள்ளது.
விதிமுறைகள்:
1. எந்தப் பிரிவுக்கும் தலைப்பு கிடையாது. எந்தத் தலைப்பின் கீழ் எழுதுவது என்பது படைப்பாளியின் விருப்பத்திற்கு விடப்படுகிறது.
2. ஒவ்வொரு பிரிவின் கீழும் ஒரு படைப்பாளி அதிகபட்சமாக நான்கு படைப்புகளை மட்டுமே அனுப்பலாம்.
3.படக்கவிதைக்கான படைப்பை அனுப்புவோர்,எந்த படத்திற்கான கவிதை எனக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டுகிறோம்.அப்படிக் குறிப்பிடி படாத படைப்புகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டா.
4. படைப்பு முழுக்க முழுக்கப் புதியதாய் இருக்க வேண்டும். முன்னரே எந்த ஒரு ஊடகத்திலும் வெளிவந்த படைப்பாய் இருத்தல் கூடாது.முடிவுகள் அறிவிக்கப்படும்வரை எங்கும் படைப்பை பிரசுரித்தல் கூடாது.முடிவுகள் வெளியானதும் தாங்கள் தங்கள் கவிதைகளை பிரசுரம் செய்துக் கொள்ளலாம்.
5. படைப்பாளியின் பெயர் , தொடர்பு எண் & முகவரி ஆகியவை ஒவ்வொரு படைப்பு அனுப்பப்படும் போதும் குறிப்பிடப் பட வேண்டும்.அவை எக்காரணம் கொண்டும் எங்கும் பொதுவில் வைக்கப்பட மாட்டாது என்று உறுதி அளிக்கின்றோம்.
6. படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 14-04-2007 (சனிக்கிழமை ஏப்ரல் 14, 2007 - சித்திரை மாத முதல்நாள்) இந்திய நேரம் இரவு 12.00 மணி க்குள்.
7. போட்டிக்கு வரும் படைப்புகளைப் போட்டி முடிந்ததும் அன்புடன் குழுமத்தில் பிரசுரிக்கும் அனுமதியை இப்போதே பெற்றுக் கொள்கிறோம்.
8. படைப்பை anbudan.pootti@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மட்டுமே அனுப்ப வேண்டுகிறோம். அன்புடன் குழுமத்துக்கு நேரடியாய் அனுப்பப்படும்
படைப்புகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.
9. ஒலிக்கவிதை, இசைக்கவிதை, காட்சிக்கவிதை போன்றவற்றில் கோப்பின் பருமளவு (file size) அதிகமாகும் பட்சத்தில் ஏதாவது ஒரு கோப்பு மாற்று (File Share) இணைய தளத்தில் ஏற்றிவிட்டு அதைத் தரவிறக்கத் தேவையான (link) சுட்டியை மட்டும் anbudan.pootti@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் போதுமானது.
10. நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.
பரிசு:
மொத்த பரிசு மதிப்பு : ரூ. 10,000/-
ஒவ்வொரு பிரிவிற்கும்:
முதல் பரிசு: ரூ. 1000/-
இரண்டாம் பரிசு: ரூ. 500/-
ஆறுதல் பரிசு: இருவருக்குத் தலா ரூ. 250/-
எனப் பகிர்ந்தளிக்கப்படும்.பரிசுகள் பணமாக வழங்கப்பட மாட்டாது. அத்தொகைக்கு ஈடான புத்தகங்களாக வழங்கப்படும். பரிசுப் புத்தகங்கள்,பரிசு பெறும் படைப்பாளின் தேர்வு. பரிசு பெறும் படைப்பாளி வெளிநாட்டில் வசிப்பவராக இருந்தால், பரிசுப் புத்தகங்களைப் பெற்றுக்கொள்ள அவர் தமிழக முகவரி ஒன்றைத் தரவேண்டியிருக்கலாம்.
முடிவுகள்:
சித்திரைத் திங்கள் இறுதியில் அறிவிக்கப்படும்.
வாருங்கள் இணையத் தமிழ் மக்களே! இனி இது உங்கள் களம். பங்கேற்று மகிழுங்கள். பரிசுகளை வென்றிடுங்கள். கவிதைச் சாரலால் நனைத்திடுங்கள்.
நன்றி.
**படக்கவிதைக்கான படங்களுக்கு இணைப்பை காண்க.
மேலும் தகவலுக்கு : அன்புடன் ஆண்டு விழா 2 - கவிதைப்போட்டி
படம் : 01

படம் : 02

படம் : 03

படம் : 04

படம் : 05

படம் : 06

படம் : 07

படம் : 08

படம் : 09

படம் : 10

02:05 Posted in இணையம் | Permalink | Comments (6) | Email this | Tags: அன்புடன், தமிழ்ப்பதிவுகள்
Thursday, 15 March 2007
❒ பத்து பைசா பாக்கிகள்!
"ஐயா காசு கொடுங்க..."
"ஏன்யா பிச்சக்காரங்கல்லாம் பஸ்ல ஏறி உயிர வாங்கறிங்க..."
"நான் பிச்சை கேக்கலை மீதி சில்லரை தானே கேட்டேன்."
"சில்லரையோட வர்றதுமில்ல. சும்மா தொணதொணங்கிறானுவ..."
கடைசி வரை அந்த பயணிக்கு கண்டக்டர் மீதி சில்லரை தரவுமில்லை.
ஒரு மாதம் கழித்து அந்த கண்டக்டரும் பேருந்து நிலைய மேலாளரும் நுகர்வோர் நீதிமன்றத்தில் அந்த கிராமவாசிக்கு வழங்க வேண்டிய மீதி சில்லரையை அபராதத்துடன் வழங்கினார்கள்.
கிராமவாசி தன் வீட்டருகே வசித்த பள்ளிக்கூட வாத்தியாரின் உதவியுடன் ஒரு மனுவை மட்டுமே நுகர்வோர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
முக்கியமாக சாதாரண வழக்குகள் போல ஈட்டுத் தொகைக்கேற்ற நீதிமன்றக் கட்டணம் கட்ட வேண்டியதில்லை. வாதாட வழக்கறிஞர் தேவையில்லை.
(மீதி சில்லரைக்கு அந்த கண்டக்டர் டிக்கெட்டின் பின்புறம் எழுதியிருந்த குறிப்பு மட்டுமே ஆதாரம்,சாட்சி எல்லாம்.)
நுகர்வோர் உரிமைகள்
அமெரிக்க அதிபர் ஜான் எப். கென்னடி 15 மார்ச், 1962 அன்று அமெரிக்கப் பாராளுமன்றத்தில் நுகர்வோர் உரிமைக்காக குரல் கொடுத்தார்.
அந்த நாளின் நினைவாக 15 மார்ச் 1983 அன்று முதல் 'சர்வதேச நுகர்வோர் உரிமை தினம்' கடைப்பிடிக்கப்பட்டது. இரண்டு வருடங்கள் கழித்து ஐக்கிய நாடுகள் சபை ஏப்ரல்- 4, 1985 அன்று நுகர்வோர் பாதுகாப்பிற்கு சர்வதேச வழிமுறைகளை அமல்படுத்தியது.
*நுகர்வோருக்குப் பாதுகாப்பு உரிமை
* தகவல் அறிவதற்கான உரிமை
* தேர்ந்தெடுப்பதற்கான உரிமை
* தங்கள் கருத்தை வெளியிடுவதற்கான உரிமை
* அடிப்படைத் தேவைகளின் திருப்தி பற்றிய உரிமை
* இழப்பை ஈடுசெய்ய கோரும் உரிமை
* கல்வி கற்பதற்கான உரிமை
* சுகாதாரமான சுற்றுசூழலுக்கான உரிமை
என்னும் அடிப்படை விதிமுறைகளின் அடிப்படையில் நுகர்வோர் சட்டங்கள் பல்வேறு நாடுகளில் இயற்றப் பட்டு அமல் படுத்தப் படுகிறது.
காலாவதியான பொருட்களை விற்பது, அதிக விலைக்கு விற்பது, எடை, அளவு குறைவாக விற்பது, போலியான பொருளை விற்பது ஆகியவை நுகர்வோருக்கு எதிரான குற்றங்களாகும்.
பற்றுச்சீட்டு வாங்காமல் பொருட்களை வாங்குவதில்லை என்ற உறுதி மொழியை அனைவரும் மேற்கொள்ள வேண்டும் என்பதே நுகர்வோர் விழிப்புணர்வின் அடிப்படை.
-oOo-
பாக்கி பத்துப் பைசாவானாலும் கேட்டு வாங்கணும்.
13:25 Posted in வாழ்வியல் | Permalink | Comments (4) | Email this | Tags: consumer, நுகர்வோர், தமிழ்ப்பதிவுகள்
Tuesday, 13 March 2007
❒ ஐஸ்கிரீம் சாப்பிட்டா குழந்தை பிறக்கும்!
ஐஸ்கிரீம் சாப்பிடுங்க * "குவா குவா' நிச்சயம்
பாரீஸ்: நீங்கள் டீன் ஏஜ் பெண்ணா? ஐஸ்கிரீம் சாப்பிடும் பழக்கம் உள்ளவரா? அப்படியானால், உங்களுக்கு குழந்தை பிறப்பதில் எந்த கஷ்டமும் இருக்காது. மேலும், கொழு கொழு என்று பிறக்கும்.
"கொழுப்பு நீக்கப்பட்ட பால் சாப்பிடும் பெண்களை விட, கொழுப்பு நீக்கப்படாத பால், ஐஸ்கிரீம் சாப்பிட்ட பெண்களுக்கு குழந்தை பிறப்பதில் எந்த பிரச்னையும் ஏற்பட்டதில்லை' என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஹார்வர்டு பல்கலைக் கழக பொது சுகாதார ஆராய்ச்சிப் பிரிவின் தலைவர் ஜோர்ஜ் சவார்னோ இது தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொண்டார். அந்த ஆய்வில் பெண்கள் பால் சாப்பிடுவது பற்றி குறிப்பாக ஆராயப்பட்டது. அதில் சில முக்கிய தகவல்கள் தெரியவந்தன.
அவர் ஆய்வு அறிக்கை, பிரான்ஸ் நாட்டில் சுகாதார இதழ் ஒன்றில் வெளியாகி உள்ளது. அதில், கூறப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு:
கடந்த 1991ம் ஆண்டில் இருந்து 1999ம் ஆண்டு வரை, 24 முதல் 42 வயது வரை உள்ள பெண்கள் 18 ஆயிரத்து 555 பேரிடம் ஆன்லைன் மூலம் சர்வே எடுத்தோம். அதில், இளம் வயதில் இருந்து கொழுப்பு நீக்கிய பால் சாப்பிட்டு வந்தவர்களுக்கு குழந்தை பிறப்பதில் சற்று பாதிப்பு இருந்தது தெரியவந்தது. ஆனால், கொழுப்புடன் பால், ஐஸ்கிரீம் சாப்பிட்டு வந்தவர்களுக்கு குழந்தை பிறப்பதில் எந்த பிரச்னையும் ஏற்படவில்லை. அவர்களுக்கு குழந்தையும் நல்ல கொழு கொழு என்று பிறந்திருந்தது தெரியவந்தது.
நாங்கள் இந்த சர்வே மூலம் தெரிந்து கொண்டது, கர்ப்பிணி பெண்கள், கர்ப்பக்காலத்தில் முழு அளவிலான கொழுப்பு உணவு சாப்பிடுவதால், குழந்தை பிறப்புக்கு உதவும். கர்ப்பம் தரிக்க இருக்கும் பெண்களும் இப்படி கொழுப்பு உணவு சாப்பிடுவது நல்லது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
செய்தி: தினமலர்
-oOo-
யப்பா மெய்யாலுமா?
03:55 Posted in அறிவியல் | Permalink | Comments (3) | Email this | Tags: icecream, தமிழ்ப்பதிவுகள்
Monday, 12 March 2007
❒ இலவசமாக விண்டோஸ் விஸ்டா!
விண்டோஸ் விஸ்டா மைக்ரோசாப்டின் புதிய இயங்குதளம். நிறைய கவர்ச்சிகரமான அம்சங்களோடு விண்டோஸ் எக்ஸ்பிக்கு பிறகு வந்திருக்கும் விஸ்டா விலையும் அதிகம். அதை நிறுவ கணினியும் கிட்டத்தட்ட புதுசா வாங்கியாகணுமாம்.
இதுக்கு பதிலா விஸ்டா தருகிற வடிவத்தையும் வசதியையும் எப்படி விண்டோஸ் எக்ஸ்பியிலேயே இலவசமாக கொண்டு வருவது என்று (தமிழிலேயே) சொல்லித் தருகிறது இந்த தளம்.
இது தவிரவும் கணினி தொடர்பான பல கட்டுரைகள், மேலும் அறிவியல், சினிமா, பொழுதுபோக்கு அம்சங்களோட குட்டீஸ் பகுதியும் இருக்கு. இந்த தளத்தில்.
இதுதான் தூறல் தளம்.
-oOo-
சின்னதாக 100x40 பிக்சல் அளவுல உங்க தளத்தையோ வலைப்பதிவையோ வேறு எந்த விஷயத்தையோ படச்சுட்டி கொடுத்து இலவசமாக விளம்பரப் படுத்தணுமா? கொஞ்சூண்டு காசு கொடுத்தால்...பெரிசா கூட விளம்பரப் படுத்தலாம்.
ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளில் வெளிநாடுகளில் பிரபலமாக உள்ள இந்த விளம்பர முறை இப்போ தமிழுக்கும் வந்தாச்சு. (சீக்கிரமா போய் துண்டு போட்டுடுங்க...)
தமிழ் விளம்பரங்கள்
-oOo-
தமிழா முகுந்த் துணையோடு பயர்பாக்ஸ் 2 தமிழில் மொழி பெயர்க்கப் பட்டிருக்கு. இதுக்குன்னு ஒரு இணையதளமும் உருவாக்கப் பட்டிருக்கு.
தமிழ் பயர்பாக்ஸ் 2
-oOo-
நமிதா வால்பேப்பர்ல இருந்து வாலன்டைன் டே ஸ்பெஷல் வரைக்கும் கிடைக்கிற ஒரு தளம் வேணுமா?
இதோ இருக்கு கூலா ஒரு தளம்.
-oOo-
தனித்தனியா சொல்ல வேண்டிய விஷயங்களை ஒண்ணா சொல்லியிருகேனேன்னு குழப்பமாக இருக்கா? காரணம் இருக்கு. ஆச்சரியமும் இருக்கு.
மேலே நான் சொன்ன எல்லா விஷயங்களையும் உருவாக்கியவர் யார் தெரியுமா? தமிழ்நாட்டில் நாமக்கல்லைச் சேர்ந்த 19 வயது இளைஞர். பெயர் லோகேஷ்.
ஆச்சரியம் இதோட நிற்காது... இன்னும் ஏராளமான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கார் நம்ம லோகேஷ். ஆர்வமிக்க இந்த இளைஞரை வாழ்த்துவோம்.
03:50 Posted in இணையம் | Permalink | Comments (10) | Email this | Tags: vista, தமிழ்ப்பதிவுகள்

