Tuesday, 15 January 2008
❒ சிவாஜி விழாவும் தமிழ்ப்பண்பாடும்
இப்போதைய சூடான செய்திகளில் ஒன்று சிவாஜி படவிழாவில் நடிகை ஸ்ரேயா அரைகுறை உடையணிந்து வந்தது பற்றி வழக்குப் போடப் பட்டிருப்பது குறித்தது.
சமீபத்தில் ஒரு இணைய தளத்தைக் காண நேரிட்டது. அதில் பல நடிகைகள் மேடை நிகழ்ச்சிகளில் குட்டைப் பாவாடையுடன் அமர்ந்திருக்கும்போது சில வக்கிரங்களால் மோசமான கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காட்சியளித்தன. இதில் படம் எடுத்தவர்களைக் குறை சொல்வதா? அல்லது பொது இடங்களில் அப்படிப் பட்ட உடைகளில் வரும் நடிகைகளைக் குறை சொல்வதா?
முதலில் நடிகைகள் ஏன் அப்படி வருகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
திரைப்படங்களில் நடிகைகள் எந்த அளவுக்கு அங்கங்கள் காட்ட வைக்க முடியுமோ அந்த அளவுக்கு ஆடைக்குறைப்பு செய்யப் படுகிறது. முதலில் கதைக்கு இது அவசியம் என்று வற்புறுத்தப் படுகிறார்கள். பின்னர் படத்தின் வெற்றிக்கு இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று நடிகைகள் அறிவுறுத்தப் படுகிறார்கள். படம் எடுப்பவர்கள், கதாசிரியர்கள், இயக்குநர்கள் அனைவரும் ஆண்களே!
படப்பிடிப்புகள் ஏராளமானவர்கள் முன்னிலையில் எடுக்கப் படுகின்றன. எனவே சம்பந்தப் பட்ட நடிகையின் உடல் தரிசனம் அங்கிருக்கும் அனைவருக்கும் கிட்டுகிறது. இப்படிக் கவர்ச்சியாக நடிக்கும் காட்சிகளின் புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியிடப் படுகின்றன. போஸ்டர்களாகவும் பேனர்களாகவும் காட்சிப் படுத்தப் படுகின்றன. அடுத்து இந்தக் காட்சிகள் திரைவழியே மக்களைச் சென்றடைகின்றன. அன்றாடம் தொலைக்காட்சி வழியாக இதே காட்சிகள் வீடுகளுக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடுகின்றன.
இப்படி எல்லா விததிலும் திறந்த புத்தகமாக இருக்க வேண்டிய நிலையில் நடிகையாகிய பெண் தனது கூச்சங்கள் அனைத்தையும் உதறிப் போடுகிறாள். ஒரு நடிகையாக, தனது உடலழகைக் காட்ட வேண்டியது அவசியம் என்ற மனநிலை அவளுக்கு ஏற்படுகிறது. முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு என்று பொது இடங்களிலும் ரசிகர்களை மகிழ்விக்க அவள் உடலழகைக் காட்டும் உடைகளில் தோன்றுகிறாள்.
இதில் நடிகைகளைக் குற்றம் சொல்ல என்ன இருக்கிறது? கலாச்சாரக் காவலர்கள் செய்ய வேண்டியது, திரைப்படங்களில் பெண்ணைச் சித்தரிக்க வேண்டிய முறை பற்றிய பொறுப்புணர்வை முதலில் இயக்குநர்களுக்குக் கற்பியுங்கள். அதை விடுத்து சுயவிளம்பரத்துக்காக நடிகைகள் மீது பாய்வதில் அர்த்தமில்லை.
இந்த விழாவுக்கு காரணமான சிவாஜி என்ற திரைப்படத்தில் இதே ஸ்ரேயா நடித்துள்ள கைக்குட்டை துணியணிந்த காட்சிகளை விட அதிக கவர்ச்சியை மேடையில் காட்டி விடவில்லை. எல்லா நடிகைகளின் நிலையும் இதுதான்.
பொதுவாக இம்மாதிரி வழக்குப் போடுவது யாரென்று கவனித்தால் மதவாத உணர்வுள்ள ஆண்கள் தான் இதைச் செய்கிறார்கள். பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்தும் ஆணாதிக்க மனோபாவத்தின் நேரடி வெளிப்பாடு இது. உண்மையான அக்கறை இருந்தால் நடிகைகளை அப்படி நடிக்க வைக்கும் இயக்குநர்கள் மீது வழக்குப் போட்டு அவர்களைத் திருத்துங்கள்.
*
நடிகை குஷ்பு படப்பிடிப்புக்காக வைக்கப்பட்டிருந்த சிலைகள் முன் கால்மேல் கால்போட்டது, சானியா மிர்சா தேசியக் கொடிக்கு முன் காலை நீட்டியது என்பவையும் இதே போன்று வழக்குகளுக்கு ஆளாகி இருக்கின்றன. இந்த வழக்குகளைத் தொடர்ந்திருப்பவர்கள் யார் என்பதிலிருந்து நோக்கம் தேசபக்தியோ கடவுள் பக்தியோ அல்லாமல் மதவெறி சார்ந்த ஆணாதிக்கம் என்பதையும் வெளிப்படையாக புரிந்து கொள்ள முடிகிறது.
ஒரு அறிவுறுத்தல் என்பதற்கு மேல் எந்த அவசியமும் அற்ற நிகழ்வுகளை சுயஅரிப்புகளுக்கு இவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
*
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
பொங்கல் வெளியீடு இங்கே...
11:35 Posted in சினிமா , விமர்சனம் , விவாதம் | Permalink | Comments (13) | Email this | Tags: shivaji, shreya, sania mirza, kushbu, சிவாஜி, ஸ்ரேயா, குஷ்பு
Monday, 11 June 2007
❒ சும்மா அதிருதில்லே?!
06:25 Posted in சினிமா | Permalink | Comments (9) | Email this | Tags: rajini, shivaji, ரஜினி, சிவாஜி
Monday, 02 April 2007
❒ ஒண்ணும் ஒண்ணும் நாலு
சிவாஜி படத்தோட சிடி வெளியாவதற்கு முன்னமே இணையத்தில் வெளியாகி இயக்குநருக்கு தலையிடியும் ரசிகர்களுக்கு கொண்டாட்டமும் தீவிர ரஜினி ரசிகர்களுக்கு வருத்தத்தையும் தந்திருக்கு. என்றாலும் பாடலை அவர்களும் பதிவிறக்கி ரசித்திருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நமக்குத்தான் பதிவிறக்குவதில் பயங்கர பிரச்சினை. இணையத்தில் கேட்கமுடிகிற பாட்டை எப்படியோ ஓட்டி ஓட்டி கேட்டாச்சு. முதல்ல வெளியான பாட்டுங்க மட்டும் தான் ஓரளவு தேறும். முதல் பார்வையில் எனக்கு பெரிய அளவு சிறப்பானதாக தோன்றவில்லை. ஆனாலும் ரஹ்மான் பாட்டுகள் கேட்க கேட்கத்தான் ருசிக்கும் என்ற அளவில் 'கொஞ்சநாள் பொறு தலைவா...'
-oOo-
கிரிக்கெட்டு மேல பயித்தியமா இருந்தவங்க பல பேர். கிரிக்கெட் என்றாலே ஆவலாக இருந்தவங்க இப்போ அதை சீண்டறதில்ல போல... இருக்கட்டும் விடைதேடும் வினாவுல ஒரு கிரிக்கெட் வசன போட்டி இருக்குங்க... நீங்க திட்டறதுக்கான போட்டி தான். அதனால் தவறாமல் கலந்து கொள்ளுங்க...
அதிரடிப்போட்டி: கிரிக்கெட் சந்திப்பு.
-oOo-
அப்புறம் வலைமொழி இணையச்சிற்றேடு வாசித்து விட்டீர்களா?
தல பாலபாரதி கலக்கல் பேட்டி,
தமிழ்நதி, சுப்பையா சிறுகதைகள்
நவீன்பிரகாஷ், விஷி, செந்தில் கவிதைகள்
பொன்ஸ், வெற்றிவளவன் கட்டுரைகள்.
http://valaimozhi.in
-oOo-
இரவல் சிந்தனை ஒன்று
உன்னிடம் ஒரு ஆப்பிள் என்னிடம் ஒரு ஆப்பிள் இருக்கிறது. என்னிடமுள்ள ஆப்பிளை நான் உனக்கும் உன்னிடமுள்ள ஆப்பிளை நீ எனக்கும் தந்தால் மறுபடியும் உன்னிடம் ஒன்று என்னிடம் ஒன்று தான் இருக்கும்.
உன்னிடம் ஒரு கருத்து, என்னிடம் ஒரு கருத்து இருக்கிறது. என்னிடமுள்ள கருத்தை நான் உனக்கும் உன்னிடமுள்ள கருத்தை நீ எனக்கும் தந்தால் உன்னிடம் இரண்டு கருத்தும் என்னிடம் இரண்டு கருத்தும் இருக்கும்.
ஒரு புதிர்:
கிட்டத்தட்ட இதே கருத்துள்ள திருக்குறள் ஒன்றும் உண்டு. அது எது சொல்லுங்க பார்க்கலாம்.
04:45 Posted in சிதறல்கள் | Permalink | Comments (9) | Email this | Tags: rajini, sivaji, shivaji, சிவாஜி, ரஜினி
Sunday, 01 April 2007
❒ சிவாஜியின் 7 பாடல்களும் ரிலீஸ்
`சிவாஜி'யின் 7 பாடல்களும் இண்டர்நெட்டில் `ரிலீஸ்'
சேலம், ஏப். 1-
நடிகர் ரஜினிகாந்தின் மெகா பட்ஜெட் படமான "சிவாஜி'' மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
`சிவாஜி' பட பாடல்கள் அதிகாரப்பூர்வமாக நாளை (2-ந் தேதி) உலகமெங்கும் வெளியிடப்படுகிறது. இந்த மாத இறுதி அல்லது மே மாத தொடக்கத்தில் படம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவாஜி படத்தின் 3 பாடல்களை மர்ம நபர்கள் திருட்டுத்தனமாக இண்டர்நெட்டில் வெளியிட்டு விட்டனர்.
இது ரஜினிகாந்துக்கும், இயக்குனர் சங்கருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இண்டர்நெட்டில் வெளியிட்ட நபர் யார்? என்று விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் சிவாஜி படத்தின் அனைத்து பாடல்களும் சி.டி.கவர் படத்துடன் இண்டர்நெட்டில் வெளியாகி உள்ளது.
இந்த பாடல்கள் அனைத்தும் www hood.music net works.com என்ற வெப்சைட்டில் நேற்று மாலை வெளியாகி உள்ளது.
* சூரியனோ, சந்திரனோ யார் இவனோ,
* காவிரி ஆறும் கைகுத்து அரிசியும் மறந்து போகுமோ,
* பூபோ வாய் ஆம்பல் ஆம்பல்,
* சகானா சாரல் தூவுதோ,
* தீதீ ஜெகஜோதி,
* ஸ்டைல் ஸ்டைல்,
* சகாராவில் பூக்கள் பூத்ததோ
ஆகிய 7 பாடல்கள் வெளியாகி உள்ளன.
இதில் `வாஜி, வாஜி, சிவாஜி' என்ற பாடல் டைட்டில் பாடலாக ஒலிக்கிறது. `ஆம்பல், ஆம்பல்' என்ற பாடல் கருத்து செறிவுடன் இளைஞர்களை உற்சாகப்படுத்துகிறது. `சகாராவின் பூக்கள் பூத்ததோ' என்ற பாடலும், `ஸ்டைல், ஸ்டைல்' என்ற பாடலும் ரசிகர்களை ஜனரஞ்சகப் படுத்துகிறது.
பாடல் கேசட் வெளியீட்டு விழா நடப்பதற்கு முன் பாகவே சிவாஜியின் அனைத்து பாடல்களும் இண்டர் நெட்டில் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
=மாலைமலர்
08:20 Posted in சினிமா | Permalink | Comments (4) | Email this | Tags: rajini, shivaji, ரஜினி, சிவாஜி
Thursday, 29 March 2007
❒ 50 ரூபாய்க்கு சிவாஜி டிவிடி
50 கோடி முதலீட்டில் அரும்பாடு பட்டு தயாரிக்கப்பட்ட சிவாஜி படத்தின் திருட்டு டிவிடி 50 ரூபாய்க்கு சென்னை நகர பிளாட்பாரங்களில் கூவிக் கூவி விற்கப்படுகிறது.
[தொடர்ச்சி...]
13:20 Posted in சினிமா | Permalink | Comments (3) | Email this | Tags: rajini, shivaji, ரஜினி, சிவாஜி
Tuesday, 12 December 2006
'சிவாஜி'யின் கதை!
அப்பப்போ பத்திரிகைகளில் சிவாஜியின் கதை இதுதான் அப்படின்னு ஏதாவதொரு கதையைப் போடுகிறார்கள். அடுத்து இன்னொரு கதையைப் போட்டு இதுதான் சிவாஜியின் கதைன்னு போட்டுடறாங்க. அப்படியே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதையா வெளியாகிட்டு வருது. அதனால் எனக்குத் தெரிஞ்ச சிவாஜியின் கதைகளை எல்லாம் இங்க பதிவு செய்திருக்கிறேன். இந்த மூணு கதைகளில் சிவாஜியின் கதை எதுன்னு நீங்கதான் சொல்லணும்!
கதை-1 | கதை-2 | கதை-3
07:50 Posted in பொழுதுபோக்கு | Permalink | Comments (16) | Email this | Tags: sivaji, rajini, சிவாஜி, ரஜினி
Sunday, 19 November 2006
'சிவாஜி' க்ளைமாக்ஸ்!
'சிவாஜி' என்றால் "பரபர' என்று டிக்ஷனரியில் குறிப்பிட்டு விடலாம் போலிருக்கிறது.
சிவாஜியில் இடம்பெறும் அப்படியொரு பரபர க்ளைமாக்ஸ் காட்சி பற்றிதான் தமிழ் சினிமா வட்டாரத்தில் இப்போது சூடான பேச்சு.சில வருடங்களுக்கு முன்பு கவர்னர் மாளிகைக்குச் சென்ற ரஜினி, ""தேசிய நதிகள் இணைக்கப்பட வேண்டும். இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதுக்குத் தேவையான பொருளாதார செலவுக்காக மக்களிடம் நிதி திரட்டலாம். அப்படி செய்தால், நான் என் பணத்திலிருந்து ஒரு கோடி தருகிறேன்'' என்று கூறியது நினைவிலிருக்கலாம். அதற்குப் பிறகு அரசியல் சூழ்நிலைகளால் தேசிய நதிகள் இணைப்பு பற்றி பேசாமலிருந்த ரஜினி, அதற்கான பதிலைதான் சிவாஜியின் க்ளைமாக்ஸில் வைத்திருக்கிறார்.
வழக்கமாக தனது படங்களில் ஏதாவது ஒரு சமூகக் கருத்தை தனது ஸ்டைலில் பிரம்மாண்டமாகச் சொல்லும் ஷங்கர். இந்த தேசிய நதிகள் இணைப்பையும், திரைக்கதையில் கொண்டு வந்திருக்கிறார். மக்களிடம் செல்வாக்குப் பெற்றவராக ரஜினி உயரும்போது நதிகள் இணைப்புக்கான முயற்சிகளை மேற்கொள்கிறார்.இந்தியாவில் ஓடும் எல்லா நதிகளும் பெருக்கெடுத்து ஓடிவந்து இணைந்து இந்தியாவே செழிப்பாக மாறும், இந்தக் காட்சியை, ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் மூலமாக எடுக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.இந்தக் காட்சிக்காக சில நுணுக்கமான விஷயங்களைத் தேடிப் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். பார்த்து.... தியேட்டர்கள்ல அணை கட்டி வைங்கப்பா. வெள்ளம் பூந்துடப் போவுது (மக்கள் வெள்ளம்தான்!)
-------------
தினமலர்
02:04 Posted in சினிமா | Permalink | Comments (0) | Email this | Tags: தமிழ்ப்பதிவுகள், சினிமா, சிவாஜி, ரஜினி



