Tuesday, 12 August 2008

❒ ஒலிம்பிக் சிதறல்கள்

* இந்தியாவின் முதல் தனிநபர் தங்கப் பதக்கம் துப்பாக்கி சுடும் போட்டியில் அபினவ் பிந்ரா

* கடந்த ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் ரத்தோர் தோல்வி

* சானியா மிர்சா காயமடைந்து போட்டியிலிருந்து விலகி இந்திய டென்னிஸ் ஒலிம்பிக் பதக்க கனவை தகர்த்தார்.

* ஆடவர் ஒற்றையர் பேட்மின்டன் 2வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் அனூப் ஸ்ரீதர் தோல்வியுற்றார்.

* பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியின் முதல் தங்கப் பதக்கத்தை வென்றவர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் செக் நாட்டின் வீராங்கனை காத்தரீனா எம்மான்ஸ்.

* பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. அமெரிக்கா,தென்கொரியா அடுத்த இடங்களில்...

* 17-08-08

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில், 8 தங்கப் பதக்கங்களை வென்று புதிய வரலாறு படைத்துள்ளார் மைக்கேல் பெல்ப்ஸ்.

அமெரிக்க நீச்சல் வீரர் மார்க் ஸ்பிட்ஸ் 1972ம் ஆண்டு மூனிச் ஒலிம்பிக் போட்டியில் 7 தங்கப் பதக்கங்களை வென்றதுதான் ஒரு வீரர் ஒரு போட்டியில் அதிக தங்கம் வென்ற சாதனை.

பெல்ப்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் அதிக பதக்கம் வென்ற வீரர் என்ற புதிய உலக சாதனையை சமீபத்தில்தான் படைத்தார். இந்த நிலையில் இன்று 2வது சாதனையைப் படைத்தார். இன்று தனது 8வது பதக்கத்தையும் வென்று புதிய சாதனை படைத்தார். இதன்மூலம் ஒலிம்பிக் போட்டிகளில் மொத்தம் 14 தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.