☜ ❒ சிங்களர்கள் யார்? | H | ❒ சிந்தாநதியின் இறுதி பதிவுகள் ☞
Tuesday, 07 July 2009
அஞ்சலி அறிவிப்பு
சிந்தாநதி , கணிமை.காம் , தமிழ் புத்தக சந்தை இவற்றின் சிற்பி
ஜூலை திங்கள் 2 ஆம் நாள் மாரடைப்பால் காலமானார் என்பதை வருத்தத்துடன் அறிவிக்கிறோம்.
நண்பர்களுக்கும் நலம் நாடுவோருக்கும் உரிய நேரத்தில் அறிவிக்க இயலவில்லை.
குடும்பத்தினரால் நடத்தப்பெறும் அஞ்சலி நிகழ்வுகள் 9 ஆம் நாள் (ஜூலை திங்கள் 10 ஆம் நாள் ) குடும்ப கல்லறை தோட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Technorati tags: tamilblogs, tamilnews, tamilcinema, சினிமா, தமிழ்ப்பதிவுகள்
19:56 Posted in *பொதுவியல் | Permalink | Comments (62) | Email this
| Tags: சிந்தாநதி, கணிமை |
del.icio.us
|
|
Digg
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!
![]() |
தமிழின் வேகமான திரட்டி
செய்திகள், மின்னிதழ்கள், |
மறுமொழிகள்:
-
வருந்துகிறேன்.. :(
கூறுவது: சஞ்சய் | Wednesday, 08 July 2009
-
:-(
வருந்துகிறேன்கூறுவது: -/பெயரிலி. | Wednesday, 08 July 2009
-
:( வருந்துகிறேன்! ஆழ்ந்த இரங்கல்கள்!
கூறுவது: sandanamullai | Wednesday, 08 July 2009
-
வருந்துகிறேன் நண்பர்களே..!
நிச்சயம் இது வலையுலகத்திற்கு பெரும் இழப்பு..!கூறுவது: உண்மைத்தமிழன் | Wednesday, 08 July 2009
-
நம்பவே முடியலை.
ஆழ்ந்த இரங்கல்களை குடும்பத்தினருக்குத் தெரிவித்துக்கொள்கின்றோம்.கூறுவது: துளசி கோபால் | Wednesday, 08 July 2009
-
ஆழ்ந்த இரங்கல்கள்.
முகுகூறுவது: முகு | Wednesday, 08 July 2009
-
ஆழ்ந்த இரங்கல்களை குடும்பத்தினருக்குத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
கூறுவது: தென்றல் | Wednesday, 08 July 2009
-
நம்பவே முடியலை.
ஆழ்ந்த இரங்கல்களை குடும்பத்தினருக்குத் தெரிவித்துக்கொள்கின்றோம்.கூறுவது: venkatesh | Wednesday, 08 July 2009
-
:-(
ஆழ்ந்த இரங்கல்களை குடும்பத்தினருக்குத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
-sensheகூறுவது: சென்ஷி | Wednesday, 08 July 2009
-
சிந்தாநதி அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு!
மிக வருத்தமான செய்தி.
அவர்தம் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கல்கள்.கூறுவது: Sivabalan | Wednesday, 08 July 2009
-
-(
வருந்துகிறேன்கூறுவது: திகழ் | Wednesday, 08 July 2009
-
வருந்தமான செய்தி!
குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.கூறுவது: ☼ வெயிலான் | Wednesday, 08 July 2009
-
சிந்தாநதி ஒரு நல்ல துடிப்பான நண்பர், அவருக்கு இப்படி ஒரு திடீர் முடிவு ஏற்படும் என்று எண்ணிக்கூட பார்க்கவில்லை! அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கள்களை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் :(
கூறுவது: நா ஜெயசங்கர் | Wednesday, 08 July 2009
-
:-(
ஆழ்ந்த வருத்தங்கள். அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.கூறுவது: Haranprasanna | Wednesday, 08 July 2009
-
வருந்துகிறேன், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்
கூறுவது: ரஜினி ராம்கி | Wednesday, 08 July 2009
-
ஆழ்ந்த வருத்தங்கள் :(
கூறுவது: Vicky | Wednesday, 08 July 2009
-
நம்பமுடியவில்லை...
சிந்தாநதி.... என்னுடன் ஏன் மெயிலில் தொடர்பில் இருந்தீர்கள்..?!! எனக்கு இது் மிகவும் அதிர்ச்சியான தகவலாக இருக்கிறது.. :(((((((((கூறுவது: கவிதா | Wednesday, 08 July 2009
-
அவருடைய குடும்பத்தாருக்கு எனது ஆறுதல்களும் ஆழ்ந்த அனுதாபங்களும்
கூறுவது: S.A.நவாஸுதீன் | Wednesday, 08 July 2009
-
:( வருந்துகிறேன்! ஆழ்ந்த இரங்கல்கள்! What is his age ?? I always thought he was a young blogger :(
கூறுவது: anbudan BALA | Wednesday, 08 July 2009
-
:( வருந்துகிறேன்! ஆழ்ந்த இரங்கல்கள்! What is his age ?? I always thought he was a young blogger :(
கூறுவது: anbudan BALA | Wednesday, 08 July 2009
-
நண்பர் சிந்தாநதி உடம்பூனத்தைச் சற்றே பொருட்படுத்தாது கணினியில் உழைத்தார். நல்ல முறையில் மறைந்த அதிரை உமர் (தேனீ எழுத்துரு) நடத்திய ஒருங்குறி என்னும் கூகுல்குழுவில் பலமுறை உரையாடினோம். எனக்கு சில நல்ல ஒருங்குறி ஃபாண்டுகளை வேண்டும்போதெல்லாம் செய்து தந்தவர். அவர் ஆன்மா சாந்தியடைவதாகுக.
சிந்தாநதி - வாரியார் நண்பருக்கு சிறுவயதில் வழங்கிய பெயர்.
உலகம் முழுவதிலும் நண்பர்களைப் பெற்ற சிந்தாநதி உழைப்பை,
வாழ்க்கையை விரிவாக எழுதுங்கள்.
நா. கணேசன்கூறுவது: நா. கணேசன் | Wednesday, 08 July 2009
-
emathu aazntha irangalkal
கூறுவது: osai Chella | Wednesday, 08 July 2009
-
அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கும் செய்தி! வலைப்பதிவுலகிற்கு அவரது பங்களிப்பு உயரியது. அவருக்கு என் வணக்கங்கள். குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆறுதல் கிடைக்கட்டும்.
கூறுவது: சுந்தரவடிவேல் | Wednesday, 08 July 2009
-
அவரது குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கூறுவது: முரளிகண்ணன் | Wednesday, 08 July 2009
-
வருந்துகிறேன்! :(
கூறுவது: barath | Wednesday, 08 July 2009
-
ஆழ்ந்த இரங்கல்களை குடும்பத்தினருக்குத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
கூறுவது: aruna | Wednesday, 08 July 2009
-
எனது ஆழ்ந்த இரங்கல்கள் :(
கூறுவது: பிரசன்னா | Wednesday, 08 July 2009
-
எனது ஆழ்ந்த இரங்கல்கள் :(
கூறுவது: பிரசன்னா | Wednesday, 08 July 2009
-
சிந்தாநதி அவர்களுக்கு என் அஞ்சலிகள். குடும்பத்தினருக்கு இறைஅருள் மனதைரியம் அளிக்கட்டும்..
கூறுவது: muthuletchumi | Wednesday, 08 July 2009
-
:( வருந்துகிறேன்! ஆழ்ந்த இரங்கல்கள்!
கூறுவது: RAMYA | Wednesday, 08 July 2009
-
அவரது குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
கூறுவது: RAMYA | Wednesday, 08 July 2009
-
உலகம் முழுவதிலும் நண்பர்களைப் பெற்ற சிந்தாநதி உழைப்பை,
வாழ்க்கையை விரிவாக எழுதுங்கள்.
நா. கணேசன்
அவரது பணி இன்றியமையாதது...
சிந்தாநதி அவர்களுக்கு என் அஞ்சலிகள். குடும்பத்தினருக்கு இறைஅருள் மனதைரியம் அளிக்கட்டும்..கூறுவது: பேரரசன் | Wednesday, 08 July 2009
-
வலைச்சரத்தின் நிர்வாகிகளில் ஒருவரான சிந்தாநதியின் மறைவிற்கு, அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக !
கூறுவது: சீனா ( Cheena ) | Wednesday, 08 July 2009
-
ஆழ்ந்த இரங்கல்!
கூறுவது: ஜோ | Wednesday, 08 July 2009
-
தமிழ் பதிவுகளுக்கான சிந்தாநதியின் பங்காற்றல் அளவிடவியலாதது.
ஆழ்ந்த இரங்கல்கள் ! அவர் தம் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.கூறுவது: மணியன் | Wednesday, 08 July 2009
-
சிந்தாநதியுடனான என் தொடர்பு சுமார் ஐந்தாண்டுகளாகத் தொடர்வது.
எழுத்தார்வம், கணிமை நுட்பம், ஊடகங்கள் பற்றிய தெளிவு, அனைத்துக்கும் மேலாகத் தமிழ்மேல் ஆழ்ந்த பற்று இவை ஒருங்கே அமையப் பெற்றவர் சிந்தாநதி. அனுராக் என்ற பெயரில், வலைஞன் என்ற வலைப்பதிவை நடத்தியபோது அறிமுகமானார். பின் ஒரு புதுமையான உருவமாக வெளிப்பட விரும்பி, சிந்தாநதி என்ற பெயரிலேயே கடந்த 3 - 4 ஆண்டுகளாக அறியப்படுபவர். பலமுறை மின்னஞ்சலூடாகவும், மின் அரட்டையூடாகவும் எண்ணங்களைப் பரிமாறிக்கொன்டிருந்தோம். பலமுறை போனில் பேசியிருக்கிறோம். நேரில் சந்திக்காவிட்டாலும் பழகுவதற்கு இனிய நண்பராகவும், கண்ணியமும் மதிப்பும் பொறுமையும் சக மனித உணர்வுக்கு மதிப்புக் கொடுக்கும் தன்மையும் அவரிடத்தில் நான் கண்டு வியந்தவை.
கடந்த இரு ஆண்டுகளாக தமிழ் வலை உலகில் நடப்பவற்றில் அதிகம் ஈடுபடமுடியாததால் இப்போது அதிகம் பேசவோ ஊடாடவோ இயலுவதில்லை. ஒருமுறை மின்னஞ்சலிலும் போனிலும் பிடிக்கமுடியாமல் 'சிந்தாநதி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்' என்று என் வலைப்பதிவில் கூவியும் இருக்கிறேன். ஓரிரு மாதங்களுக்கு முன் மீன்டும் ஒருமுறை போனில் அழைத்தார். நீண்ட நேரம் பேச வாய்க்கவில்லை. எதோ ஒரு நுட்ப சிக்கலுக்கு விடை கேட்டார். தமிழ் தட்டுவதற்கே பொங்குதமிழ் தேடும் நிலையில் நானிருக்கையில் அவருக்கு என்ன சொல்லமுடியும்? என்னவோ சொன்னேன். அது பலித்ததா என்றுகூட நினைவில்லை.
உமர்தம்பியையும், சாகரனையும் கலந்து செய்த வார்ப்பாம் சிந்தாநதி, அவர்களைப் போலவே தமிழ் கணிமைக்காக, தமிழ் வலைக்காக தன் உழைப்பைச் செலவிட்டார். இது பெரும் இழப்பு. அவரை இழந்து வாடும் குழும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.கூறுவது: காசி | Wednesday, 08 July 2009
-
அதிர்ச்சியாக இருக்கிறது. என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிந்தாநதிகூறுவது: ரவிசங்கர் | Wednesday, 08 July 2009
-
:( வருந்துகிறேன்! ஆழ்ந்த இரங்கல்கள்!
கூறுவது: சீனு | Wednesday, 08 July 2009
-
இரங்கல்களும் துயர் பகிர்வும்...
கூறுவது: தமிழன்-கறுப்பி... | Wednesday, 08 July 2009
-
இவரது இழப்பு ஒரு பேரிழப்பாகும், மிகவும் துயரமான ஒன்று. ஆழ்ந்த வருத்ததுடன்
இரா.சுகுமாரன்கூறுவது: இரா.சுகுமாரன் | Wednesday, 08 July 2009
-
அவரது பங்களிப்புகள்...
ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்...கூறுவது: King | Wednesday, 08 July 2009
-
என் சொந்த சகோதரனின் மரணம் போன்றது சிந்தாநதியின் இழப்பு.
99.9% -ம் எங்கள் எண்ணங்கள் ஒத்துப்போகும். என்னை ஊருக்கும். நான் அவரை சென்னைக்கும் அழைத்துக்கொண்டே இருந்தோம். இருவரும் சந்திக்க முடியாமலேயே போய் விட்டது.
நிச்சயமாய் அவரின் பிரிவு அவரது குடும்பத்தாருக்கு மட்டுமல்ல.. தமிழுக்கும் சேர்த்தே இழப்பு தான்.
:(கூறுவது: யெஸ்.பாலபாரதி | Wednesday, 08 July 2009
-
சென்னை வலைப்பதிவர் பட்டறை 2007ம் ஆண்டு நடந்த போது பழக்கமானார் சிந்தாநதி. பட்டறையை ஒட்டி வெளியிடுவதற்கு கணிச்சுவடி என்ற கையேட்டை எழுதி முடித்தார். தமிழ் கணிமைக்காக பல தளங்களில் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருந்தார்.
அவரது பேர் சொல்லி நினைவுகளை போற்றிப் பாதுகாக்கும் தமிழ் உலகில் அவரது பணிகள் என்றென்றும் நிலைத்திருக்கும்.
மா சிவகுமார்கூறுவது: மா சிவகுமார் | Thursday, 09 July 2009
-
ஆழ்ந்த இரங்கல்கள்
கூறுவது: ஜே கே | Thursday, 09 July 2009
-
ஆழ்ந்த இரங்கல்களை குடும்பத்தினருக்குத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
கூறுவது: Jamal A M | Thursday, 09 July 2009
-
சிந்தாநதிக்கு அஞ்சலி.
கூறுவது: அருள் செல்வன். க | Thursday, 09 July 2009
-
ஆழ்ந்த இரங்கல்களை குடும்பத்தினருக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
- து.குமரேசன்கூறுவது: விருபா | Thursday, 09 July 2009
-
சென்னை தமிழ் வலைப்பதிவர் பட்டறை 2007 க்கான சின்னம் மற்றும் கையேடுகளை வடிவமைத்தவர் சிந்தாநதி என்று நினைவு.
சிந்தாநதியை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.கூறுவது: தகடூர் கோபி | Thursday, 09 July 2009
-
என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். சென்னையில் நடந்த தமிழ் வலைப்பதிவர் பட்டறையில் தொடங்கியது. இன்னும் மறவாது இருக்கிறேன்.
அன்புடன்,
இராம.கி.கூறுவது: இராம.கி. | Thursday, 09 July 2009
-
ஆழ்ந்த இரங்கல்கள் :-(
கூறுவது: பாலாஜி-பாரி | Thursday, 09 July 2009
-
:( என்ன எழுதுவதென்று தெரியவில்லை.. வலைச்சரம், பதிவர் பட்டறை, தமிழ்க்கணிமை, சற்றுமுன் என்று சுறுசுறுப்பாக வலம் வந்தவர்.. எப்போதும் ஏதாவது கணினியில் குடைந்து கொண்டே ஏதாவது நுட்பம் தொடர்பான கேள்வியைக் கேட்டுக் கொண்டே இருப்பார்.. இறந்துவிட்டார் என்பதை நம்ப முடியவில்லை..
வருத்தங்கள்..கூறுவது: பொன்ஸ் | Friday, 10 July 2009
-
ஆழ்ந்த இரங்கல்களை குடும்பத்தினருக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்
கூறுவது: Dubukku | Friday, 10 July 2009
-
மாபெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. ஆழ்ந்த இரங்கல்களை அவருடைய அன்பிலும், நட்பிலும் பங்குபெற்ற அனைவருக்கும் வலியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். :(
கூறுவது: சேவியர் | Saturday, 11 July 2009
-
வலைப்பதிவர் சிந்தாநதி அவர்களின் மறைவுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!
கூறுவது: Thanga Mukunthan | Saturday, 11 July 2009
-
சிந்தாநதி மரணச் செய்தி மிகவும் காலதாமதமாக வந்தடைந்தது. வீடு மாறியதால் இணைய இணைப்பு கிடைக்க ஏற்பட்ட காலதாமதம், ஒரு நல்ல பதிவரின் மரணத்திற்காக கூட அழ முடியாமல் செய்துவிட்டது.
சிந்தாநதி படைப்புகளை ஓரளவுக்கு படித்தவன் என்ற அடிப்படையில் சொல்கிறேன், அவர் பரந்துப் பட்டு எல்லாவற்றையும் பற்றி எழுத வேண்டும் என்ற ஆவலுடையவர். அதை நோக்கியே எழுதினார்.
அவரது இழப்பு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், சக வலைப்பதிவர்கள் என அனைவருக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கோ.சுகுமாரன், புதுச்சேரி.கூறுவது: கோ.சுகுமாரன் | Monday, 13 July 2009
-
வலைப்பதிவர் சிந்தாநதி அவர்களின் மறைவுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்!
கூறுவது: Suresh kumar | Monday, 13 July 2009
-
தாமதமாகவே அறிகிறேன் இந்த துக்க செய்தியை.
என்ன கொடுமை இது :-((((
நம்பமுடியவில்லை. ஆழ்ந்த வருத்தங்கள்
//உமர்தம்பியையும், சாகரனையும் கலந்து செய்த வார்ப்பாம் சிந்தாநதி, அவர்களைப் போலவே தமிழ் கணிமைக்காக, தமிழ் வலைக்காக தன் உழைப்பைச் செலவிட்டார். இது பெரும் இழப்பு.// -- காசி
உண்மை. சத்தமில்லாமல் பங்களித்தவர்களில் முக்கியமானவர்.
அவரை இழந்து வாடும் குழும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்.கூறுவது: கல்வெட்டு | Wednesday, 15 July 2009
-
சிந்தாநதி மறைவு செய்திக்கு இரங்கல் தெரிவித்த அனைவருக்கும் என் சார்பிலும் குடும்பத்தார் சார்பிலும் நன்றி கலந்த வணக்கத்தை உரித்தாக்ககிறேன்.
தமயன் வாழ்ந்த காலம் 44 ஆண்டுகள். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் உதய தாரகை [அச்சு பதிப்பு] இல் தொடங்கிய எழுத்துப்பணி சிந்தாநதி வரை தொடர்ந்தது.
கால மாற்றத்திற்கு ஏற்ப தளம் மட்டும் மாறி இருக்கிறது.
இணையத்தில் பதித்த தடங்கள் ஓளிச்சிதறல், வலைமொழி , சிந்தாநதி , கணிமை.காம் , தமிழ் புத்தக சந்தை என பல.
இவை தவிர குழு முயற்ச்சியாக சற்றுமுன், வலைச்சரம் இன்னும் பல.கூறுவது: சிந்தாநதி II | Wednesday, 22 July 2009
-
இதோ ஓரு நிமிஷங்களுக்கு முன்னால்தான் சிந்தாநதியின் மறைவை பற்றிய செய்தி தெரிகிறது. சம்பிரதாய வார்த்தையாக அல்லாமல் உண்மையாகவே நான் அதிர்ச்சி அடைந்தேன். அவரது மறைவு வலைப்பதிவு உலகுக்கு பாரிய இழப்பு என்பதும் கூட மிக யதார்த்தமான வார்த்தை.அவரது மறைவால் துயர் கொண்டிருக்கும் அவரது நண்பர்களினதும் குடும்பத்தினரதும் துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன்.
அவரது வலைப்பதிவு பற்றி ஏலவே இலங்கை சஞ்சிகையான மல்லிகை யில் எழுதி இருக்கிறேன் என்பதை இங்கு நினைப்படுத்திக் கொள்ளும் வேளை, வலைப்பதிவு உலகில் கணிசமான காத்திரமான பங்ளிப்பு செய்த அதுவும், . வலைப்பதிவு உலகின் ஆரோக்கியமான வளர்ச்சி என்ற தளத்திலிருந்து செயல்பட்ட சிந்தாநதியின் ஓட்டுமொத்தமான வலைப்பதிவுகள் மதிப்பிடு செய்யப்படல் வேண்டும்.அவ்வாறு செய்யப்படுவது மூலம், வலைப்பதிவு ஆய்வு அல்லது மதிப்புரை என்பதையிட்ட சிந்தனை எழுகிறது.இத்தகைய சிந்தனை என்பதுகூட வலைப்பதிவுத்துறையின் அக்கறை கொண்டு உழைத்தசிந்தாநதி அவருக்கான அஞ்சலியாக அமையும்.கூறுவது: மேமன்கவி | Saturday, 22 August 2009
-
comment இதோ ஓரு நிமிஷங்களுக்கு முன்னால்தான் சிந்தாநதியின் மறைவை பற்றிய செய்தி தெரிகிறது. சம்பிரதாய வார்த்தையாக அல்லாமல் உண்மையாகவே நான் அதிர்ச்சி அடைந்தேன். அவரது மறைவு வலைப்பதிவு உலகுக்கு பாரிய இழப்பு என்பதும் கூட மிக யதார்த்தமான வார்த்தை.அவரது மறைவால் துயர் கொண்டிருக்கும் அவரது நண்பர்களினதும் குடும்பத்தினரதும் துயரத்தில் நானும் பங்கு கொள்கிறேன்.அவரது வலைப்பதிவு பற்றி ஏலவே இலங்கை சஞ்சிகையான மல்லிகை யில் எழுதி இருக்கிறேன் என்பதை இங்கு நினைப்படுத்திக் கொள்ளும் வேளை, வலைப்பதிவு உலகில் கணிசமான காத்திரமான பங்ளிப்பு செய்த அதுவும், . வலைப்பதிவு உலகின் ஆரோக்கியமான வளர்ச்சி என்ற தளத்திலிருந்து செயல்பட்ட சிந்தாநதியின் ஓட்டுமொத்தமான வலைப்பதிவுகள் மதிப்பிடு செய்யப்படல் வேண்டும்.அவ்வாறு செய்யப்படுவது மூலம், வலைப்பதிவு ஆய்வு அல்லது மதிப்புரை என்பதையிட்ட சிந்தனை எழுகிறது.இத்தகைய சிந்தனை என்பதுகூட வலைப்பதிவுத்துறையின் அக்கறை கொண்டு உழைத்தசிந்தாநதி அவருக்கான அஞ்சலியாக அமையும்.
கூறுவது: மேமன்கவி | Saturday, 22 August 2009
-
அனைத்து நண்பர்களுக்கும் நன்றி கூறுகின்ற அதே வேளையில் , சிறு அறிவிப்பையும் வெளியிட விரும்புகிறேன். சில பதிவுலக நண்பர்கள் ஏற்கனவே இரங்கல் பதிவுகளை பதித்திருக்கிறார்கள். சில சிற்றிதழ் உலக நண்பர்கள் எனது சகோதரனின் (சிந்தாதியின்) படைப்புகளை தொகுத்து ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்கள். விரைவில் அதற்கான தகவல் வெளிவரும. உங்கள் ஆதரவை கோருகிறேன்.
கூறுவது: ☆ சிந்தாநதி II | Saturday, 22 August 2009
-
வலைப்பதிவர் சிந்தாநதி அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள்.
கூறுவது: நம்பி.பா | Tuesday, 25 August 2009
மறுமொழி இடுக!
இணையத்தமிழ் எழுதுகருவிகள்:
1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)



