☜ ❒ கூகுள் யாகூ லோகோ | H | ❒ ஒலிம்பிக் சிதறல்கள் ☞
Monday, 11 August 2008
❒ இந்தியாவின் முதல் தங்கம்
ஒலிம்பிக் வரலாற்றில் தனிநபர் பிரிவு ஒன்றில் முதலாவது தங்கப் பதக்கத்தை இன்று இந்தியாவுக்காக அபினவ் பிந்த்ரா துப்பாக்கி சுடும் போட்டியில் வென்றுள்ளார். 1980ல் மாஸ்கோ ஒலிம்பிக்கில் ஹாக்கியில் தங்கம் வென்ற இந்தியா இன்று தகுதிச்சுற்றிலேயே வெளியேறி விட்ட நிலையில் இந்த தங்கம் எதிர்பாராத சாதனை.
*
பெய்ஜிங்: ஒலிம்பிக் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்குக் கிடைத்துள்ள ஒலிம்பிக் தங்கம் இது. மேலும் தனி நபர் ஒருவர் இந்தியாவுக்காக தங்கம் வென்றதும் இதுவே முதல் முறையாகும்.
ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிய நாள் முதலே இந்தியாவுக்கு ஏற்றமும், இறக்கமும் மாறி மாறி வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் இன்றைய காலை இந்தியாவுக்கு தங்கமான காலையாக புலர்ந்துள்ளது. ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கத்தை தட்டி புதிய வரலாறு படைத்தார்.
தகுதிச் சுற்றில் 500 புள்ளிகள் வென்று இறுதிச் சுற்றுக்குள் நுழைந்த பிந்த்ரா, அதில் 700.5 புள்ளிகள் வென்று முதலிடத்தைப் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
சீனாவின் கியூனான் சூ வெள்ளி பதக்கமும், பின்லாந்தின் ஹென்றி ஹாக்கினன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
28 ஆண்டுகளுக்குப் பிறகு ...
இந்தியாவுக்கு ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் கிடைத்திருப்பது கிட்டத்தட்ட 28 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக இந்தியா, 1980ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஹாக்கியில் தங்கம் வென்றிருந்தது. அதன் பின்னர் இந்தியாவுக்கும், தங்கப் பதக்கத்திற்கும் வெகு தூரமாகி விட்டது.
லியாண்டர் பயஸ் - மகேஷ் பூபதி தங்கப் பதக்கத்தை வெல்லும் வாய்ப்பை கடந்த ஒலிம்பிக் போட்டிகளில் நழுவ விட்டிருந்தது.
கடந்த ஒலிம்பிக்கில் மயிரிழையில் ராஜ்யவர்த்தன் ரத்தோர் தவற விட்டு வெள்ளிப் பதக்கம் வென்றார். இவரும் துப்பாக்கி சுடுதல் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில், 28 ஆண்டு கால தங்கப் பதக்க வறட்சிக்கு இந்தியா தற்போது முற்றுப்புள்ளி வைத்து விட்டது.
முதல் வீரர்:
மேலும், ஒலிம்பிக் போட்டியில் தனி நபர் வீரர் யாரும் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்றதில்லை. அந்த வகையில் பிந்த்ரா புதிய வரலாற்றையும் படைத்துள்ளார்.
ஜனாதிபதி பிரதமர், சோனியா வாழ்த்து:
தங்கப் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ராவுக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தங்கப் பதக்கம் வென்றது குறித்து பிந்த்ரா கூறுகையில், இது எனக்குக் கிடைத்த வெற்றியல்ல, இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றி என்று அடக்கத்துடன் குறிப்பிட்டார்.
இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் சுரேஷ் கல்மாடி கூறுகையில், இந்திய வரலாற்றில் இது மிகவும் முக்கியமான நாள். பிந்த்ராவின் வெற்றியால் இந்தியாவுக்கே பெருமை கிடைத்து விட்டது என்றார்.
பிந்த்ரா சாதனை படைத்த அதே நேரத்தில் இந்தியாவின் இன்னொரு வீரரான ககன் நரங் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறவில்லை.
பிந்த்ரா பங்கேற்ற அதே பிரிவில்தான் நரங்கும் கலந்து கொண்டார். 600க்கு 595 என்ற புள்ளிகளையே அவர் பெற்றதால், இறுதிச் சுற்றுக்கு நரங் தகுதி பெற முடியாமல் போனது.
=தட்ஸ்தமிழ்
*
பீஜிங்: பீஜிங் ஒலிம்பிக்கில் இன்று நடந்த ஆண்களுக்கான 10மீ., துப்பாக்கி சுடுதல்(ஏர் ரைபிள்) பைனலில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார். தனி நபர் போட்டியில் இந்தியா தங்கம் பெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. அபினவ் பிந்த்ரா மூலம் இந்தியா வரலாறு படைத்துள்ளது. இதன்மூலம் பீஜிங் ஒலிம்பிக்கில் முதல் தங்கம் வென்ற இந்தியர் என்ற பெருமை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா பதக்கப்பட்டியலில் இடம் பிடித்தது. சீனாவின் கியூனான் சூ வெள்ளி பதக்கமும், பின்லாந்தின் ஹென்றி ஹாக்கினன் வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
அபினவ் பிந்த்ரா ஒரு முன் உதாரணம் : கோச் தாமஸ் பேட்டி
அபினவ் பிந்த்ரா, 10 மீட்டர்ஸ்., ஏர் ரைபில்ஸ் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். அவரது வெற்றி குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவரது கோச், சன்னி தாமஸ் , பிந்த்ராவின் வெற்றி குறித்து பெருமை கொள்வதாக தெரிவித்தார். மேலும் பிந்த்ராவின் வெற்றியால், அவர் மற்ற வளர்ந்து வரும் வீரர்களுக்ககு ஒரு சிறப்பான முன் உதாரணம் ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஒலிம்பிக் கழக தலைவர் சுரேஷ் கல்மாடி பெருமிதம் தெரிவித்தார். பிந்த்ரா 700.5 புள்ளிகளை எடுத்து சாதனை நிகழ்த்தியுள்ளார். கேல்ரத்னா விருது பெற்ற பிந்த்ரா 2002ம் ஆண்டு காமென்டெவல்த் போட்டியில் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனிநபர் பதக்க விபரம் :
1952, ஹெல்சின்கியில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மல்யுத்தம், ஆண்கள்பாரிசில் ஜாதவ் வெண்கலம் வென்றார்.அதன் பிறகு 1990ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய வீரர் நார்மன் பிரிட்சர்ட், 200 மீ., ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கம் வென்றார். தொடர்ந்து 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் வெள்ளி வென்றார். 1996ல், அட்லாண்டா ஒலிம்பிக்சில், பயஸ் வெண்கலம் வென்றார். சிட்னியில் 2000ம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்சில் 69 கி.கி., பளுதூக்குதல் போட்டியில் மல்லீஸ்வரி வெண்கலம் வென்றார்.(2004)ஏதென்ஸ் ஆண்கள் துப்பாக்கி சுடுதல்(டபுள் டிராப்) போட்டியில் ரத்தோர் வெள்ளி வென்றார். அத்தனைக்கும் முத்தாய்ப்பாய், இந்த ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்சில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்று, தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற சாதனையாளர் ஆகியுள்ளார்.
பிந்த்ராவுக்கு ஜனாதிபதி வாழ்த்து:
துப்பாக்கி சுடுதல் போட்டியில் அபினவ்பிந்த்ரா தங்கம் வென்றதற்கு, ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றதன் மூலம் அவர் இந்தியாவுக்கு பெருமை அடைய செய்திருப்பதாகவும், அத்தனை இந்தியர்களையும் பெருமிதம் கொள்ள செய்துள்ளதாகவும் தெரிவித்தார். 28 ஆண்டுகளுக்கு பிறகு தங்கம் வென்று பிந்த்ரா வரலாறு படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
=தினமலர்
*
இது பற்றிய தமிழ்நெஞ்சம் வீடியோ பதிவு
Technorati tags: tamilblogs, tamilnews, tamilcinema, சினிமா, தமிழ்ப்பதிவுகள்
10:15 Posted in விளையாட்டு | Permalink | Comments (1) | Email this
| Tags: ஒலிம்பிக், தங்கம், இந்தியா, அபினவ், india, gold, abhinav |
del.icio.us
|
|
Digg
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!
![]() |
தமிழின் வேகமான திரட்டி
செய்திகள், மின்னிதழ்கள், |
மறுமொழிகள்:
-
Hi. Thanks dear dude for putting my blog link here. (இது பற்றிய தமிழ்நெஞ்சம் வீடியோ பதிவு).
Thanks.
by
TamilNenjamகூறுவது: tamilnenjam | Monday, 11 August 2008
மறுமொழி இடுக!
இணையத்தமிழ் எழுதுகருவிகள்:
1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)



