☜ ❒ நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவுகள் | H | ❒ ஒலிம்பிக் 08-08-08 ☞
Wednesday, 23 July 2008
❒ பாவனா கவுஜ/வஜனப் போட்டி
இந்தப் படத்தை பற்றி சின்னதா கவுஜ அல்லது வஜனம் அதாங்க டைலாக்கு எதுனாச்சும் எடுத்து உடுங்க...பெஸ்ட் வஜனத்துக்கு ஒரு பரிசு உண்டு.

இது எந்தப் படத்தில் இடம் பெறும் காட்சி?
என்ன பாடல்?
இது உப கேள்வி ;)
Technorati tags: tamilblogs, tamilnews, tamilcinema, சினிமா, தமிழ்ப்பதிவுகள்
09:00 Posted in விளையாட்டு | Permalink | Comments (9) | Email this
| Tags: சினிமா, பாவனா, கவிதை, bhavana, cinema |
del.icio.us
|
|
Digg
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!
![]() |
தமிழின் வேகமான திரட்டி
செய்திகள், மின்னிதழ்கள், |
மறுமொழிகள்:
-
பாக உண்ணாரா
பாவனா?!
வட்டவட்ட அலைகளைத்தான்
கெளப்புரேன்னு சொல்லிட்டு
எம்மனசை
சகதிக் குட்டையென
குழப்பிக்கினு நிப்பவளே...
காலைக்கடன் கழிச்சு
கால்கழுவ வாரையில
இப்படி
குளிச்சுப் பூச்சிரிச்சு
பதுமையென நின்னன்னா...
வந்த
காரியத்தப் பார்ப்பேனா?
இல்ல
உன்
கால்பட்ட தண்ணியத்தான்
தீர்த்தமென தெளிச்சுகுவனா?
நானாது பரவால்ல..
வெறும்
ரோசனையா நின்னுக்கறேன்...
நேத்து
மொச்சக் கொழம்பத்தான்
மூனுவேளை புடிச்சதுல
இப்ப
கம்பங் கொல்லையில
புழுதிப்புயல் கெளப்பி
டெர்ரராகி 'இருக்காரு'
அபிதாபி அருமைத்தம்பி...
கொஞ்சம்
லேட்டாக வருவாக
தப்பிச்சு ஓடிக்க...கூறுவது: இளவஞ்சி | Wednesday, 23 July 2008
-
பிளேன்ல போயிட்டே இருந்தேனா, பெட்ரோல் இல்லையின்னு சொல்லிட்டு, நீச்சலடிச்சி போய் சேருன்னு சொல்லி, இங்கே தள்ளி விட்டுட்டாங்க..
கூறுவது: TBCD | Wednesday, 23 July 2008
-
படமே போதுங்க வேறெதுவும் வேணாம்...;)
கூறுவது: King... | Wednesday, 23 July 2008
-
"பாவனா"
கூறுவது: Cinema Virumbi | Thursday, 24 July 2008
-
நண்பர்களே, சற்றே முயற்சி செய்தேன். பிடித்திருந்தால் சொல்லவும்.
பிழையைக் கழித்துக் கொண்டு பரிசு தரவும்!
தாரகையே பாவனா,
உன் பற்றி கவிதை எழுதுமா என் பேனா?!
திரையுலகில் உண்டு ஏற்கனவே ஒரு மீனா,
அவருக்கு சரியான போட்டி இனி நீதானா?!
உன்னை ஒரு நாள் நேரிலே சந்திப்பேனா?
"மேடம், சூப்பர் உங்க படம்" என்று புகழ்வேனா?
இல்லை வெறும் வெள்ளித்திரையில் மட்டும் பார்ப்பேனா?
தினம் தினம் காண்பேனா ஒரு பகல் கனா?
உன்னை நேரில் காணும் ஆசையெல்லாம் போகுமா வீணா?!
நன்றி!
சினிமா விரும்பிகூறுவது: சினிமா விரும்பி | Thursday, 24 July 2008
-
நீரின்றி அமையாது உலகு
நீயின்றி இனியேது உவகை
நீரிலேறி வருகின்றாய் தாரகை
உனைக்கண்டு தண்ணீரில் அலையடிக்குது
உனைக்கணாமல் என மனசு அலையடிக்குதுகூறுவது: priyaraj | Tuesday, 29 July 2008
-
Friends,
I will be thankful if you could flip thro' my new blog and record your comments.
http://cinemavirumbi.tamilblogs.com
Regards,
Cinema Virumbiகூறுவது: Cinema Virumbi | Friday, 01 August 2008
-
"ஹாய் பாவ்.."
"ஹாய்டா..!"
"அதிகாலையில் இருந்து தண்ணீரில் நீ நிற்கலாமா? தண்ணிக்கே ஜல்பு பிடிச்சுற போகுது..!"
"ரொம்ப Ice வைக்காத..!"
"என்கிட்ட இருக்கறதே ரெண்டு Eyes தான்! அதை தான் உன் மேல ஆல்ரெடி வெச்சிட்டேனே..!"
"சரி..! நான் அதிகாலையில் இருந்து நிற்கிறேன்னு உனக்கு எப்படி தெரிந்தது..?"
"விடிகாலையில் வானம் நீல நிறமா இருந்தது. அது அப்படியே மெல்ல மெல்ல குளத்தில் படர்ந்தது. நீ வந்து நின்ற உடன் உன் ஆடையில் ஏறி.. இப்போது குளம் நீல நிறத்தை இழந்து விட்டது.. உன் உடைகள் மட்டுமே நீல நிறமாய்..!"
"ஸ்...!"
"அது மட்டுமா? உன் நீல வளையல்களைப் பார்த்து தான் கொஞ்சமாய் குழம்பி, கிறங்கி ஐன்ஸ்டீனும் வானம் வளைவானது என்று சொன்னார் போலும்!"
"அவரை ஏண்டா இங்க கொண்டு வர்ற? ப்ளூ கலர் ட்ரெஸ்ல ஏறுவதற்கு முன்னாடி என் ட்ரெஸ் என்ன வொய்ட் கலர்லயா இருந்தது?
"சந்தேகம் என்ன? தேவதைகள் எல்லாம் வெள்ளை நிற ஆடைகள் தானே அணிந்திருப்பர். சரி! அது என்ன கையில் ஐந்து தலை பாம்பு?"
"ம்..! உன்னைப் போன்ற ஜொள்ளர்கள் வந்தால் தீண்ட விட..!"
"ஓ..! அப்படி எனில் ஒரு கவிதை சொல்லி விட்டு ஓடி விடுகிறேன்.."
"சொல்லு! பார்க்கலாம்..!"
"சூரியனைச் சுற்றி வட்டமாய் புயல்கள் இருந்தால், அங்கே கரோனா!
நிலாவைச் சுற்றி கூட்டமாய் பயல்கள் இருந்தால், அங்கே பாவனா...!"
"வசந்த் இவிட வரணும்! ஞான் இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தரான்...!"கூறுவது: இரா.வசந்த குமார் | Wednesday, 06 August 2008
-
first time iam seeing the website it is nice
கூறுவது: kumar | Saturday, 13 December 2008
மறுமொழி இடுக!
இணையத்தமிழ் எழுதுகருவிகள்:
1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)



