❒ தமிழ்மணத்திலிருந்து ஜ்யோவ்ராம் சுந்தர் நீக்கப்பட்டாரா? | H | ❒ பாவனா கவுஜ/வஜனப் போட்டி

Tuesday, 22 July 2008

❒ நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவுகள்

நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவுகள்

அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்டுகள் ஆதரவை விலக்கியதால் மத்திய அரசு கவிழும் சூழ்நிலை ஏற்பட்டது. எனினும் மூன்றாவது அணியில் இடம்பெற்றிருந்த சமாஜ்வாடி கட்சி மத்திய அரசை ஆதரிக்க முன்வந்ததால் அரசு கவிழாது என காங்கிரஸ் அரசு கருதியது. எனினும் எதிர்க்கட்சிகள் கோரியதால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான விவாதத்திற்கு பின் பிரதமரின் பதிலுரையும் அதன்பிறகு வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது. அமைச்சர் சிதம்பரத்தின் உரையின் போது கடுமையான அமளி ஏற்பட்டது.

மேலும் ஆட்சிக்கு ஆதரவளிக்க தங்களுக்குப் பணம் தரப்பட்டதாக குற்றம் சாட்டிய பகுஜன் சமாஜ் உறுப்பினர்கள் பணக்கட்டுகளை சபையில் கொண்டு வந்து காட்டியதால் மேலும் குழப்பம் ஏற்பட்டது. எதிர்க்கட்சியினரின் தீவிர வற்புறுத்தலுக்குப் பின் சபாநாயகர் இது குறித்து விசாரணை நடத்த உள்துறை அமைச்சருக்கு உத்தரவிட்டார்.

பிரதமர் தன் பதிலுரையை எழுத்து வடிவில் வழங்கியதால் உடனடியாக வாக்கெடுப்பு நடவடிக்கைகள் தொடங்கின. முதலில் குரல் வாக்கெடுப்பு நடைபெற்றது. அதன்பிறகு அணிவாரியான (டிவிஷன்) வாக்கெடுப்பு நடைபெற்றது.

முதல் கட்ட அணிவாரி வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவு வாக்குகள் 253, எதிர்ப்பு 232, மொத்தம் 487

இறுதியாக உறுப்பினர்களின் நேரடி மின்னணு வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த இறுதி வாக்கெடுப்பு முடிவுகள் மத்திய அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும்.


முடிவுகள்

ஆதரவு: 275
எதிர்ப்பு: 256
கலந்துகொள்ளாதவர்கள்: 10


இதன்மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் அரசு வெற்றி பெற்றது. பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பிப் பிழைத்த நரசிம்மராவ் அரசுக்குப் பின் மன்மோகன் அரசும் தன் பதவிக்காலத்தை நிறைவு செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Prime Minister Manmohan Singh's government won a vote of confidence in parliament more comfortably than expected, by 275 votes to 256 with 10 abstentions. The confidence vote was sparked by the withdrawal of the government's communist allies to protest the nuclear deal with the United States.


Technorati tags: , , , ,

வாழ்த்து - THUMBS UP  -._/|\_.-  வசவு - THUMBS DOWN

17:25 Posted in அரசியல் | Permalink | Comments (2) | Email this | Tags: நம்பிக்கை வாக்கெடுப்பு, நாடாளுமன்றம், அணுசக்தி, vote of confidence, parliament, nuclear deal |  del.icio.us | | Digg! Digg

  நாட்டிலிருந்து இந்தப் பதிவை வாசிக்கும் இனிய தோழரே!... தோழியே!
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!

தமிழின் வேகமான திரட்டி
முழுமையான பதிவுகள் திரட்டி
தமிழ் திரட்டிகளின் திரட்டு

செய்திகள், மின்னிதழ்கள்,
பிறமொழிப் பதிவுகள்
சினிமா, சமையல், வேலைவாய்ப்பு

http://tamil.kanimai.com

மறுமொழிகள்:

  1. வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது....

    கூறுவது: ☆ சிந்தாநதி | Tuesday, 22 July 2008

  2. நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு தப்பித்தது

    கூறுவது: ☆ சிந்தாநதி | Tuesday, 22 July 2008

மறுமொழி இடுக!


இணையத்தமிழ் எழுதுகருவிகள்:

1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)