☜ ❒ பாலபாரதியும் பகவத்கீதையும் | H | ❒ நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவுகள் ☞
Thursday, 10 July 2008
❒ தமிழ்மணத்திலிருந்து ஜ்யோவ்ராம் சுந்தர் நீக்கப்பட்டாரா?
கூகுள் பிளாக் தேடுதல் மூலம் தமிழ்ப்பதிவுகளைத் தேடும்போது அங்கே safesearch என்ற தேர்வை செய்தால் சில குறிப்பிட்ட சொற்களின் அடிப்படையில் பதிவுகளை வடிகட்டித் தருகிறது. அவை எந்தெந்தச் சொற்கள் என்று அறிவிக்கப் படாவிட்டாலும் ஆபாச வலைப்பதிவுகளில் பொதுவாகப் பயன்படுத்தப் படும் சொற்களின் அடிப்படையில் அந்த வடிகட்டல் செயல்படுத்தப் படுகிறது.
*
ஒருவர் ஏதாவது ஒரு சர்ச்சைக்குரிய அல்லது பரபரப்பான தலைப்பில் பதிவு எழுதி அது சூடான பதிவாக மாறி விட்டால் அதே போன்ற தலைப்பில் தொடர்ச்சியாக குறைந்தது ஒரு வாரகாலமாவது பதிவுகள் வந்து கொண்டிருக்கும். இது நம்ம வலைப்பதிவுலகில் வழக்கமானதுதான்.
இம்முறை ஜ்யோவ்ராம் சுந்தரின் காமக்கதைகளும் லக்கிலுக்கின் ஜட்டிக் கதைகளும் அந்த ட்ரெண்டுக்கு அடிகோலின. யாரோ மஞ்சள் பட்டனை அழுத்தியதன் பலனாக கூகுளைப் போலன்றி, இங்கே பதிவுகளில் தமிழ்மண நிர்வாகம் அந்த குறிப்பிட்ட சொற்களை நட்சத்திரக் குறியிட்டு மறைக்க, தமிழ்மணமே அடுத்த அலறலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது.
இதற்கிடையில் சுந்தரின் பதிவுகள் நீக்கப் பட்டதாக சில பதிவுகள்...
இப்போது இந்திய நேரம் இரவு 9 மணிக்கு எடுத்த தமிழ்மண காட்சி இது. இதில் சுந்தரின் பதிவு பின்னூட்டம் காணப்படுகிறது. சூடான பதிவுகளில் குறிப்பிட்ட பதிவுகள் இப்போது காணப்படவில்லை.

என்ன நடந்தது? சுந்தர் நீக்கப் பட்டு மீண்டும் சேர்க்கப் பட்டாரா? தொழில் நுட்ப சோதனையில் கோளாறா? ஒன்றும் புரியவில்லை. அதற்குள்ளாக இதைச் சொல்லி பரபரப்பாக பதிவுகள் வந்ததில் இருந்து தமிழ்மணப் பதிவர்களிடையே ஜனநாயகப் புரட்சி மட்டும் மிகவும் உயிர்ப்புடன் இருக்கிறது என்று புரிகிறது ;)
*
சுந்தரின் அல்லது லக்கியின் பதிவுகளைப் பொறுத்தவரை அவை நீக்கப் பட வேண்டியவை என்று கருத முடியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பிருந்த மனநிலையில் நானும் சற்று மாறுபட்ட கருத்தைக் கொண்டிருப்பேன் என்று தோன்றுகிறது. புரிதல் குறித்த தெளிவு, மனமுதிர்ச்சி காரணமாக இருக்கலாம். சிலருக்கு சில அதிர்வுகள் இருக்கவும் செய்யலாம். ஆனால் வெறும் சொற்களுக்காகவோ, தலைப்புகளுக்காகவோ நீக்கப் பட வேண்டுமானால் பதிவுகளில் 50 சதவீதம் நீக்கப் பட வேண்டியவையாகத்தான் இருக்கும். இத்தகைய தலைப்புகள் சூடான பதிவுகள் ஆக வேண்டும் என்பதற்காக மட்டுமே வைக்கப் படுமானால் அவை குறித்து ஒரு மறுபரிசீலனை அவசியப் படலாம். சுந்தர் நிச்சயமாக அந்த நோக்கத்தில் அந்த தொடர் பதிவுகளை ஆரம்பித்திருப்பதாக எனக்கு தோன்றவில்லை. லக்கி நையாண்டி நோக்கில் எழுதினாலும் அவற்றிலும் எந்த தீங்கையும் காண முடியவில்லை.
*
இப்போதெல்லாம் பதிவுகள் அதிகமாக படிக்க முடிவதில்லை. இடைவெளியிட்டு திடீரென்று வந்து பதிவுகளைப் படிக்க முயலும் போது ஏதாவது ஒரு பரபரப்பை உணர முடிகிறது. இன்று கணினியை உயிர்ப்பித்து இணையத்தில் இணைந்து மெயில் பார்க்கும் போதே சகபதிவரிடமிருந்து புதிய பரபரப்புக் குறித்து ஜிசாட்டில் செய்தி வந்தது. ஒவ்வொன்றாக தேடிப் படித்தபோது மீண்டும் குழப்பமே மிஞ்சுகிறது. எப்போதுமே பதிவுகள் சூடாகலாம். இப்போது சூடானபதிவுகள் பகுதியே சூடாகி விட்டதோ?
Technorati tags: tamilblogs, tamilnews, tamilcinema, சினிமா, தமிழ்ப்பதிவுகள்
21:10 Posted in இணையம் | Permalink | Comments (12) | Email this
|
del.icio.us
|
|
Digg
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!
![]() |
தமிழின் வேகமான திரட்டி
செய்திகள், மின்னிதழ்கள், |
மறுமொழிகள்:
-
//பரந்து பட்ட அளவிலே பதிவர்களிடையே தமிழ்மணத்துக்குத் தவறான அடையாளத்தைத் தரும் சொற்களைத் தலைப்பிற் கொள்ளும் இடுகைகளை மட்டுறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம். தமிழ்மணம் திரட்டும் பதிவுகளின் தலைப்புகளில் உள்ள அப்படியான வார்த்தைகளை மட்டுறுத்தும் நுட்பத்தை தமிழ்மணம் தற்பொழுது கொண்டு வந்துள்ளது. அப்படியான சொற்களை மட்டுமே தமிழ்மணம் மட்டுறுத்தி உள்ளது. அவற்றினைக் கொண்ட இடுகைகளை தமிழ்மணம் நீக்கவில்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.
தமிழ்மணத்துக்குத் தவறான அடையாளத்தைத் தரும் வார்த்தைகளை கொண்ட இடுகைகள் மட்டுறுத்தப்பட்டு அண்மையில் எழுதப்பட்ட இடுகைகள் பகுதியில் வெளியாகும். ஆனால் சூடான இடுகைகள், வாசகர் பரிந்துரை, மறுமொழிகள் பகுதி போன்ற சிறப்பு பகுதியில் இந்த இடுகைகள் இடம்பெறாது. பெரும்பாலான இடுகைகளின் தலைப்புகள் இத்தகைய சிறப்பு பகுதியில் இடம் பிடிக்கவும், வாசகர்களை தொடர்ந்து இழுக்கவுமே வைக்கப்படுவதாக தமிழ்மணம் நம்புவதால் இந்த ஏற்பாட்டினை செய்துள்ளோம்.
தமிழ்மணம் தனது வாசகர் தளத்தை விரிவு படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கூகுள் மூலமாக தமிழ்மணம் தளத்தை விளம்பரம் செய்கிறோம். இது தமிழ்மணம், பதிவர்கள் இருவருக்குமே அதிக வாசகர்களை கொண்டு வரும். நிறைய புதிய பதிவர்களும், வாசகர்களும் தமிழ்மணம் தளத்தை பயன்படுத்த தொடங்கியுள்ளதை சமீபகாலங்களில் பார்த்து வருகிறோம்.
தமிழ் வலைப்பதிவு சூழல் குறித்து ஒன்றுமே தெரியாத நிலையில் புதியதாக தமிழ்மணத்திற்கு வரும் ஒரு வாசகர் வரிசையாக “காமக் கதைகள்” என்ற தலைப்புகளை பார்த்தால் தமிழ்மணம் குறித்து என்ன நினைப்பார் என்று எண்ணிப் பாருங்கள். அதனை எண்ணியே இப்படியான நடவடிக்கையினை மேற்கொண்டோம்.
எந்த தனிப்பட்ட பதிவருக்கும் எதிராக இந்த மட்டுறுத்தும் நுட்பம் செய்யப்படவில்லை. தமிழ்மணம் சமூகத்தின் சுமூகமான வளர்ச்சிக்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த நுட்பமும் தமிழ்மணம் முகப்பில் மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது. தமிழ்மணத்தின் பிற பக்கங்களில் எந்த மட்டுறுத்தலும் செய்யப்படவில்லை
புரிந்துணர்வுடன் தொடரும் ஒத்துழைப்பிற்கு நன்றி
நிர்வாகம்,
தமிழ்மணம்
//
இது புதுசு :))கூறுவது: சென்ஷி | Friday, 11 July 2008
-
//தமிழ் வலைப்பதிவு சூழல் குறித்து ஒன்றுமே தெரியாத நிலையில் புதியதாக தமிழ்மணத்திற்கு வரும் ஒரு வாசகர் வரிசையாக “காமக் கதைகள்” என்ற தலைப்புகளை பார்த்தால் தமிழ்மணம் குறித்து என்ன நினைப்பார் என்று எண்ணிப் பாருங்கள். அதனை எண்ணியே இப்படியான நடவடிக்கையினை மேற்கொண்டோம். //
தமிழ்மணத்தின் இந்த விளக்கம் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே இருக்கிறது. மேலும் எந்தப்பதிவும் இடுகையும் தமிழ்மணத்திலிருந்து நீக்கப் படவில்லை என்பதையும் சூடான இடுகைகள், மற்றும் மறுமொழிகள் உள்ளிட்ட முகப்பு சிறப்பு பகுதிகளில் மட்டும் இடம்பெறாது என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.கூறுவது: ☆ சிந்தாநதி | Friday, 11 July 2008
-
//சுந்தரின் அல்லது லக்கியின் பதிவுகளைப் பொறுத்தவரை அவை நீக்கப் பட வேண்டியவை என்று கருத முடியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பிருந்த மனநிலையில் நானும் சற்று மாறுபட்ட கருத்தைக் கொண்டிருப்பேன் என்று தோன்றுகிறது. புரிதல் குறித்த தெளிவு, மனமுதிர்ச்சி காரணமாக இருக்கலாம். சிலருக்கு சில அதிர்வுகள் இருக்கவும் செய்யலாம். ஆனால் வெறும் சொற்களுக்காகவோ, தலைப்புகளுக்காகவோ நீக்கப் பட வேண்டுமானால் பதிவுகளில் 50 சதவீதம் நீக்கப் பட வேண்டியவையாகத்தான் இருக்கும். இத்தகைய தலைப்புகள் சூடான பதிவுகள் ஆக வேண்டும் என்பதற்காக மட்டுமே வைக்கப் படுமானால் அவை குறித்து ஒரு மறுபரிசீலனை அவசியப் படலாம். சுந்தர் நிச்சயமாக அந்த நோக்கத்தில் அந்த தொடர் பதிவுகளை ஆரம்பித்திருப்பதாக எனக்கு தோன்றவில்லை. லக்கி நையாண்டி நோக்கில் எழுதினாலும் அவற்றிலும் எந்த தீங்கையும் காண முடியவில்லை//
சிந்தநதி,
மேற்கண்ட உங்கள் கருத்துக்களில்.. 1000% நான் ஒத்துப் போகிறேன். அதே சமயம் ஒரு திரட்டி சார்ந்து இயங்கும் பதிவருக்கு.. எவ்வித தகவலும் தராமல்.. முடிவு எடுத்து.. பலமணி நேரம் கழித்து தமிழ்மணம் அறிவிப்பு வெளியிட்டிருப்பது வருந்தக்கூடிய விசயமே! முன்பு பட்டையைக் கிளப்பிய யோனி பதிவுகள் சமயத்திலே கூட பலர் கூப்பாடு போட்டு பதிவு எழுதியபின்னும் ஒருவாரம் கழித்துத்தான் அவர்கள் நடவடிக்கை எடுத்ததாக நினைவு. ஆனால்.. இப்போது வெளிப்படையான.. முறையில் இல்லாமல்.. மஞ்சள் முக்கோணத்தை அனானிமஸாக அமுக்கி, தங்களில் காரியத்தை சாதித்திருக்கிறார்கள் என்றே படுகிறது.
ஜ்வோராம்சுந்தர் போன்றவர்களை திரட்டி நீக்குமானால்.. நிச்சயம் இழப்பு சுந்தருக்கு அல்ல.கூறுவது: யெஸ்.பாலபாரதி | Friday, 11 July 2008
-
//அதனால், பரந்து பட்ட அளவிலே பதிவர்களிடையே தமிழ்மணத்துக்குத் தவறான அடையாளத்தைத் தரும் சொற்களைத் தலைப்பிற் கொள்ளும் இடுகைகளை மட்டுறுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றோம். தமிழ்மணம் திரட்டும் பதிவுகளின் தலைப்புகளில் உள்ள அப்படியான வார்த்தைகளை மட்டுறுத்தும் நுட்பத்தை தமிழ்மணம் தற்பொழுது கொண்டு வந்துள்ளது. அப்படியான சொற்களை மட்டுமே தமிழ்மணம் மட்டுறுத்தி உள்ளது. அவற்றினைக் கொண்ட இடுகைகளை தமிழ்மணம் நீக்கவில்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.
தமிழ்மணத்துக்குத் தவறான அடையாளத்தைத் தரும் வார்த்தைகளை கொண்ட இடுகைகள் மட்டுறுத்தப்பட்டு அண்மையில் எழுதப்பட்ட இடுகைகள் பகுதியில் வெளியாகும். ஆனால் சூடான இடுகைகள், வாசகர் பரிந்துரை, மறுமொழிகள் பகுதி போன்ற சிறப்பு பகுதியில் இந்த இடுகைகள் இடம்பெறாது. பெரும்பாலான இடுகைகளின் தலைப்புகள் இத்தகைய சிறப்பு பகுதியில் இடம் பிடிக்கவும், வாசகர்களை தொடர்ந்து இழுக்கவுமே வைக்கப்படுவதாக தமிழ்மணம் நம்புவதால் இந்த ஏற்பாட்டினை செய்துள்ளோம்.//
தவறான பொய்யான தகவலை பயனாளிகளுக்கு தமிழ்மண நிர்வாகம் தரவேண்டாமே?
தமிழ்மணம் நிர்வாகத்துக்கு இன்னொரு அவசரக் கடிதம்!
இந்த தலைப்பில் நீங்கள் குறிப்பிடும் தமிழ்மணம் குறித்த தவறான பார்வையை குறிப்பிடும் சொல் ஏதாவது இருக்கிறதா என்ன?
இந்த பதிவும் மறுமொழியிடப்பட்ட இடுகைகள், சூடான இடுகைகள் எதிலும் வரவில்லை.
//அண்மையிலே தமிழ்மணம் நிர்வாகிகளின் தமிழகப் பயணத்தின் பொழுது புதுவை உள்ளிட்ட பகுதியில் உள்ள பதிவர்கள் சூடான சில இடுகை வார்த்தைகள் தமிழ்மணம் குறித்த தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து இருந்தார்கள்//
மற்றபடி, புதுவை பதிவர்களுக்கு தமிழ் இணையம் குறித்தும், தமிழ்மணம் குறித்தும் இருக்கும் அக்கறை குறித்து மெய்சிலிர்க்கிறேன் :)
ச்சீ....க்கதைகள் அறுபத்தொன்பது
இந்த தலைப்பிலான பதிவு தமிழ்மணத்தின் சூடான இடுகைகளில் தற்சமயம் இடம்பெற்றிருக்கிறது. இத்தலைப்பில் தமிழ்மணத்துக்கு தவறான பார்வையை தரும் சொற்கள் எதுவும் இல்லை என்று மனதார நம்புகிறேன். :)கூறுவது: லக்கிலுக் | Friday, 11 July 2008
-
பாலா
ஜ்வோராம்சுந்தர் உட்பட எவரது பதிவும் தமிழ்மணத்திலிருந்து நீக்கப் படவில்லை என்றே தெரிவித்துள்ளார்கள். சில இடுகைகள் சூடான இடுகைப் பகுதியிலிருந்து விலக்கப் பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.எனினும் இது குறித்து ஒரு முன்ன்றிவிப்பு தரப்பட்டிருக்க வேண்டும்.
லக்கி
//தமிழ்மணம் நிர்வாகத்துக்கு இன்னொரு அவசரக் கடிதம்!
இந்த தலைப்பில் நீங்கள் குறிப்பிடும் தமிழ்மணம் குறித்த தவறான பார்வையை குறிப்பிடும் சொல் ஏதாவது இருக்கிறதா என்ன?
இந்த பதிவும் மறுமொழியிடப்பட்ட இடுகைகள், சூடான இடுகைகள் எதிலும் வரவில்லை.//
இதற்கான பதிலை நானும் எதிர்நோக்குகிறேன்.கூறுவது: ☆ சிந்தாநதி | Friday, 11 July 2008
-
சில யோசனைகள்:
1.
தமிழ்மணம் தனது கொள்கை முடிவுகளை தெளிவாக பதிவு ஒன்றின் மூலம் பதிவர்களுக்கு தெரியப் படுத்தி சிறிய கலந்துரையாடல் விவாதத்தின் பின்னர் அவற்றை நெறிப்படுத்தி பின்னர் நிரந்தரமாக அதை செயல்படுத்த முயற்சிக்கலாம்.
2.
ஆபாசப் பதிவுகள் அல்லாவிடினும் அவ்வாறு மயங்க வைக்கும் தலைப்புகளை பதிவர்களும் தவிர்க்கலாம்.
3.
சில விசேசக் காரணங்களுக்காக எழுதப்படும் பதிவுகள் சற்றே வயது வந்தவர்கள் அல்லது தேவைப்படும் வாசகர்கள் மட்டும் படிக்கலாம் என்று கருதும் பட்சத்தில் பதிவர்கள் அதை தனித்து வகைப்படுத்த வசதி செய்து அவற்றை தமிழ்மணத்தில் தனிப்பக்கத்தில் காட்டலாம்.
4.
முகப்பில் சூடான இடுகைகள் தொடர்ந்தும் பிரச்சினைகளை சந்திப்பதால் அவற்றை வேறு பக்கத்துக்கு மாற்றலாம்.கூறுவது: ☆ சிந்தாநதி | Friday, 11 July 2008
-
/2.
ஆபாசப் பதிவுகள் அல்லாவிடினும் அவ்வாறு மயங்க வைக்கும் தலைப்புகளை பதிவர்களும் தவிர்க்கலாம்./
காதல் கதைகள் எனத் தலைப்பை மாற்றலாம்தான். ஆனால் அது misleading ஆக இருக்குமே... காமத்தைப் பற்றி எழுதும்போது தலைப்பில் காமம் வரத்தானே செய்யும். தலைப்பில் காமம் என்ற வார்த்தை வந்தாலே ஆபாசமென்றால் என்ன செய்ய ???
நன்றி.கூறுவது: ஜ்யோவ்ராம் சுந்தர் | Friday, 11 July 2008
-
பேண்ட் கதைகள் எனத் தலைப்பை மாற்றலாம்தான். ஆனால் அது misleading ஆக இருக்குமே... ஜட்டியைப் பற்றி எழுதும்போது தலைப்பில் ஜட்டி வரத்தானே செய்யும். தலைப்பில் ஜட்டி என்ற வார்த்தை வந்தாலே ஆபாசமென்றால் என்ன செய்ய ???
- இந்த பின்னூட்டம் சும்மா காமெடிக்கு. யாரும் டென்ஷன் ஆயிடாதீங்க. ஆல் இன் தி கேம்!!!
ஏற்கனவே தமிழச்சியை காவு வாங்கியபோதும் சும்மா சைட் டிஷ்ஷாக என்னையும் சேர்த்து கும்மினார்கள். இப்பொதும் அதே நிலைமை. என்ன கொடுமை சார் இதெல்லாம்? :)கூறுவது: லக்கிலுக் | Friday, 11 July 2008
-
/ஏற்கனவே தமிழச்சியை காவு வாங்கியபோதும் சும்மா சைட் டிஷ்ஷாக என்னையும் சேர்த்து கும்மினார்கள். இப்பொதும் அதே நிலைமை. என்ன கொடுமை சார் இதெல்லாம்?/
லக்கி, இதெல்லாம் பிரபலமாயிருப்பதால் வரும் விளைவு :)கூறுவது: ஜ்யோவ்ராம் சுந்தர் | Friday, 11 July 2008
-
ஜ்யோவ்ராம் சுந்தர்
உங்கள் பதிவை எந்த வகையிலும் ஆட்சேபத்துக்குரியதாக கருதவில்லை. பொருத்தமான வேறொரு தலைப்பும் கூட சொல்ல இயலாதுதான்.
தமிழ்மணத்தை பார்க்கும் புதிய வாசகர்கள் இது குறித்து தவறான புரிதலுக்கு உள்ளாக நேரிடும் என்பதும் நீங்கள் பொருத்தம் கருதி இட்டதலைப்பை பரபரப்பு, அல்லது சூடான இடுகைக்காகவே பலர் பின்பற்றக் கூடும் என்பதும் தான் தமிழ்மணம் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள காரணமாக இருந்திருக்க வேண்டும்.
ஆனால் எப்போதும் போலவே முன்னறிவிப்பற்ற செயல்பாட்டால் ஏற்பட்ட தடுமாற்றம் தமிழ்மணத்திற்கு....
லக்கி
;)கூறுவது: ☆ சிந்தாநதி | Friday, 11 July 2008
-
@ சிந்தாநதி...
///ஜ்யோவ்ராம் சுந்தர்
உங்கள் பதிவை எந்த வகையிலும் ஆட்சேபத்துக்குரியதாக கருதவில்லை. பொருத்தமான வேறொரு தலைப்பும் கூட சொல்ல இயலாதுதான்.
தமிழ்மணத்தை பார்க்கும் புதிய வாசகர்கள் இது குறித்து தவறான புரிதலுக்கு உள்ளாக நேரிடும் என்பதும் நீங்கள் பொருத்தம் கருதி இட்டதலைப்பை பரபரப்பு, அல்லது சூடான இடுகைக்காகவே பலர் பின்பற்றக் கூடும் என்பதும் தான் தமிழ்மணம் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள காரணமாக இருந்திருக்க வேண்டும்.///
வழிமொழிகிறேன்...கூறுவது: King.. | Friday, 11 July 2008
-
///ஆனால் எப்போதும் போலவே முன்னறிவிப்பற்ற செயல்பாட்டால் ஏற்பட்ட தடுமாற்றம் தமிழ்மணத்திற்கு...///
இதுதான் பிரச்சனையே...
வழிமொழிகிறேன்...கூறுவது: King... | Friday, 11 July 2008
மறுமொழி இடுக!
இணையத்தமிழ் எழுதுகருவிகள்:
1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)



