☜ ❒ அகரவரிசைக்கு ஒரு மென்பொருள் | H | ❒ தமிழ்மணத்திலிருந்து ஜ்யோவ்ராம் சுந்தர் நீக்கப்பட்டாரா? ☞
Wednesday, 02 July 2008
❒ பாலபாரதியும் பகவத்கீதையும்
எது நடந்ததோ,
அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ,
அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ,
அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய்?
எதற்காக நீ அழுகின்றாய்?
எதை நீ கொண்டு வந்தாய்,
அதை இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய்,
அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.
இதுவே உலக நியதியும்,
எனது படைப்பின் சாராம்சமுமாகும்.

*
கீதாசாரம் என்று எங்கும் காணப்படும் இந்த புகழ் பெற்ற வாசகம் பகவத்கீதையில் இல்லை என்று பாலபாரதி எழுதியதைப் படித்தவுடன் பகவத் கீதையை எடுத்து தே........டிப்பார்த்தேன். உண்மை தான். எங்குமே அப்படி ஒரு வாசகம் காணப் படவில்லை. எவரோ இது தான் கீதையின் சாரம் என்று இப்படி ஒரு வசனத்தை எழுதி வெளியிட்டிருக்க வேண்டும்.
யார் எழுதிய வாசகம் இது? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்..
நம்ம ஆன்மீகப் பதிவர்கள் இந்த விஷயம் குறித்து என்ன கருதுகிறார்கள்?
Technorati tags: tamilblogs, tamilnews, tamilcinema, சினிமா, தமிழ்ப்பதிவுகள்
18:00 Posted in விமர்சனம் | Permalink | Comments (6) | Email this
|
del.icio.us
|
|
Digg
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!
![]() |
தமிழின் வேகமான திரட்டி
செய்திகள், மின்னிதழ்கள், |
மறுமொழிகள்:
-
கண்ணதாசன்
கூறுவது: Annony | Wednesday, 02 July 2008
-
இந்த மாதிரியெல்லாம் எடக்கு மடக்கா கண்டுபுடிச்சி சொன்னீங்கன்னா, பாவம் அவங்கள்லாம் என்னதான் பண்ணுவாங்க? :)
கூறுவது: லக்கிலுக் | Friday, 04 July 2008
-
என் நினைவில், பதிவர் கீதா சாம்பசிவன் முன்பே இதைச் சொல்லியிருக்கிறார். பதிவே போட்டாரா என்பதெல்லாம் நினைவில்லை.
ஓவர் டூ கீதா :-)கூறுவது: Ramachandran usha | Friday, 04 July 2008
-
உஷாவுக்கு பதில் சொல்லிட்டு மீண்டும் இங்கே வந்து பார்த்தால், ஓவர் டு கீதானு சொல்லி இருக்காங்க, உஷா,:D இப்போத் தான் பார்த்தேன். ஆகவே பதில் சொல்லவேண்டிய தார்மீகப் பொறுப்பைக் கொடுத்துட்டாங்க.
இந்த வரிகளுக்கும் பகவத் கீதைக்கும் எந்தவிதமான சம்மந்தமும் இல்லை. பொதுவாக நல்ல கருத்துக்கள் அமைந்த ஒன்று. அவ்வளவே. பகவத்கீதையைப் படிக்காதவர்களோ, பிடிக்காதவர்களோ கூட அனுசரிக்க முடியும். இதை கீதாசாரம் என்ற பெயரில் யார் எப்போது பரப்ப ஆரம்பித்தார்கள் என்றும் தெரியவில்லை. ஆனால் நிச்சயமாய் கீதையில் இல்லை. பக்கத்தில் கீதையை வைத்துக் கொண்டு சரிபார்த்துக் கொண்டே எழுதி இருக்கின்றேன். நன்றி கருத்தளிக்க வாய்ப்பளித்தமைக்கு.கூறுவது: Geetha Sambasivam | Sunday, 06 July 2008
-
இந்த வாசகங்கள் காலெண்டரில் முதல் முதலாக அச்சடிக்கப்பட்டு பின்னர் துண்டுப் பிரசுரங்களாக இனாமாக பல ஆண்டுகளுக்கு முன்னரே வழங்கப்பட்டதும் எனக்குத் தெரியும். யாரோ முகமற்ற ஆன்மீக அன்பரின் திருப்பணி இது என்பது புரிகிறது. இதைப்பற்றி முன்னரே விரிவாக எழுதப்பட்டுள்ளது.
கூறுவது: எஸ். கிருஷ்ணமூர்த்தி | Monday, 17 November 2008
-
அதன் வரலாற்று ! உண்மை எனக்குத் தெரியும். இருந்தாலும் வெளியிட்டால் சங்கடம் ஏதும் வருமா தெரியவில்லையே.
ஆனால் ஒன்று. அதற்காக, கீதா சாரத்தை சரடாக
'அவர்' திரித்துக் கூறவில்லை. அவருக்கு அதை உருவாக்கும் போதே வயது 70+. கண் பார்வை மிக மங்கல். தமிழில்,ஆங்கிலத்தில்,ஷிந்தி,சம்ஸ்க்ருதத்தில்,
ஜெர்மனில் நல்ல பாண்டித்யம் உள்ள 'அவருக்காக' நான் தான் தேவைப்பட்ட ஸ்லோகங்களை படித்துக் காட்டினேன். பல தொகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட சாரம் என்பதை ஏன் மக்கள் தனிப்பட்ட ஸ்லோகமாக தேடுகிறீர்கள் எனத் தெரியவில்லை.
'அவர்' ரைத் தேடியும் இனி ப்ரயோஜனமில்லே. திருக் கைலாயம் அடைந்து ஆயிற்று 5 வருடங்கள்.
நன்றிகூறுவது: ராம க்ருஷ்ண ஷர்மா | Friday, 12 December 2008
மறுமொழி இடுக!
இணையத்தமிழ் எழுதுகருவிகள்:
1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)



