❒ புரூஸ்லீ ரசிகர்களுக்கு... | H | ❒ அகரவரிசைக்கு ஒரு மென்பொருள்

Monday, 30 June 2008

❒ சுகுணா திவாகருக்கு...

ஒரு பதிவும் சில சிந்தனைகளும்...

சினிமா நிருபருக்கு ஒரு கவனக் குறிப்பு என்ற தலைப்பிலான சுகுணா திவாகரின் பதிவு சினிமா நிருபர் வெளியிட்ட படம் குறித்த கேள்வியினூடே நம் சமூகத்தில் பெண்ணை நுகர்பொருளாக கருதும் கலாச்சாரத்தை கேள்விக் குள்ளாக்குகிறது.

அந்தக் கேள்விகளும் தர்க்கமும் நியாயமானவை தான். ஆனால் இதில் சினிமா நிருபர் வெளியிட்டதாக கூறப்படும் படம் கதையின் நாயகி கதைக்கான அவசியம் கருதி ஜாக்கெட் போடாமல் நடித்தாகவும் அதை கவர்ச்சி விருந்தாக கருதக் கூடாது என்பதும் சுகுணாவின் கருத்து. ஆனால் அதில் எனக்கு சற்று மாறுபாடான கருத்து உண்டு. படத்தில் சுஜிபாலா நடித்தது வேண்டுமானால் அவசியம் கருதி...எனலாம். ஆனால் குறிப்பாக அந்தப் புகைப்படங்களை பத்திரிகைகளுக்கு தந்து வெளியிட வைத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அதை கவர்ச்சி விருந்தாக கருதாமல் தான் வெளியிட்டார்கள் என்று நீங்கள் உண்மையாகவே நம்புகிறீர்களா?

பத்திரிகைகளும் இணையதளங்களும் வெளியிட்ட படங்கள் எவையும் அவர்கள் தாங்களாக எடுத்து வெளியிட்டவை அல்ல. அவை அனைத்துமே படத்தின் விளம்பரத்திற்காக படக்குழுவால் வெளியிடப் பட்டவைதான். கவர்ச்சி விருந்து படைக்க விரும்பவில்லை என்றால் சுஜிபாலா ஜாக்கெட் போடாத படத்தை அவர்கள் வெளியிட்டிருக்க தேவையில்லை. கதாநாயகியின் கவர்ச்சி படத்தின் விளம்பரத்துக்கு அவசியம் என்பதாலேயே அவர்களும் அதை வெளியிட்டுள்ளனர்.

மேலும் நீங்கள் புரட்சிக் கருத்து கூறும் படம் என்று கருதும் படம் உண்மையாகவே அதற்குத்தான் பயன்படப் போகிறதா அல்லது இன்னொரு வகையில் பக்திப் பரவசமூட்டும் படமாக கருதப்படுகிறதா என்பதையும் சற்றே சிந்திக்கலாம்.

வைகுண்டசாமி என்ற புரட்சியாளரின் புரட்சிக் கருத்துகள் மறக்கப் பட்டு இன்று அவர் தெய்வீக அவதாரமாக கருதப்பட்டு பூசிக்கப் படுகிறார். அவரது பக்தகோடிகள் மூடநம்பிக்கைகளின் உச்சமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அந்தப் புனிதத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் விதமாகவே உங்கள் பதிவின் தொனி இருக்கிறது.கற்புக்கு எதிராகப் பேசிய குஷ்பு பெரியாரின் மனைவியாக நடிக்கலாமா என்ற கேள்விக்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை.

சினிமா ஒரு போதும் உண்மையான வரலாறாக இருப்பதில்லை என்பதை உங்கள் பதிவிலேயே சொல்லி இருக்கிறீர்கள். திரையரங்கினுள் திரைப்படம் ஓடும்போது அந்தப் படம் சொல்லும் செய்தி சரியாக இருக்கிறதா என்று பார்க்கலாம். திரைக்கு வெளியே புனிதங்களை ஏற்றிப் பார்ப்பது அவசியமற்றது.


Technorati tags: , , , ,

வாழ்த்து - THUMBS UP -._/|\_.- வசவு - THUMBS DOWN

04:55 Posted in விமர்சனம் | Permalink | Comments (6) | Email this | Tags: அய்யாவழி, சினிமா

 நாட்டிலிருந்து இந்தப் பதிவை வாசிக்கும் இனிய தோழரே!... தோழியே!
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!

தமிழின் வேகமான திரட்டி
முழுமையான பதிவுகள் திரட்டி
தமிழ் திரட்டிகளின் திரட்டு

செய்திகள், மின்னிதழ்கள்,
பிறமொழிப் பதிவுகள்
சினிமா, சமையல், வேலைவாய்ப்பு

http://tamil.kanimai.com

மறுமொழிகள்:

  1. nice

    கூறுவது: muthukumar | Monday, 30 June 2008

  2. சிந்தாநதி கவனத்துக்கு... வலைபதிவர் சுகுணா திவாகர் சினிமா நிருபர் வலைப்பூவில் சுஜிபாலா படம் வந்ததாக குறிப்பிட்டுள்ளார். அப்படி எதுவும் எமது வலைப்பூவில் வெளிவரவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதனையும் தங்களது செய்தியில் சேர்த்தால் நலமாக இருக்கும்.

    கூறுவது: சினிமா நிருபர் | Monday, 30 June 2008

  3. சுகுணா திவாகரின் பதிவைப் படித்ததுமே சினிமா நிருபர் வலைப்பூவில் எந்த படத்தை குறிப்பிடுகிறார் என்று தேடினேன். தமிழ்மணத்தில் சில தினங்களுக்கு முன் ஜாக்கெட் போடாத சுஜிபாலா என்ற தலைப்பை கண்டிருந்ததால் அப்படி ஒரு படம் சினிமா நிருபர் வலைப்பூவில் காணப் படாததால் சுகுணாவின் பதிவுக்குப் பின் நீக்கப் பட்டு விட்டதோ என்ற எண்ணம் எழுந்தது. இப்போது நிருபரின் விளக்கத்துக்குப் பின் தேடியதில் தமிழ்சினிமா வலைப்பூவில் தான் அந்த படம் வெளியானது என்பதும் சினிமா நிருபரின் வலைப்பூவில் அல்ல...என்பதும் தெளிவாகிறது. எனவே சுகுணா பிளீஸ் நோட் திஸ் பாயிண்ட் ;)

    கூறுவது: ☆ சிந்தாநதி | Monday, 30 June 2008

  4. நெல்லை தமிழ் இணையத்தில் இருந்து...

    =================

    அய்யா வழியில் ஜாக்கெட் போடாத சுஜிபாலா

    பக்திப்படம் எடுக்க சொன்னால் நம்ம சினிமாகாரர்கள் செய்யும் சேட்டைகள் பயங்கரமாக இருக்கும். பக்திப்படத்தில் வில்லன் குடித்து விட்டு கூத்தியாளுடன் குத்தாட்டம் போடுவார். அய்யா வழி இதற்கு விதிவிலக்காக அமையும் என்று பார்த்தால்... சுஜிபாலாவிற்கு ஜாக்கெட் போடாமல் கவர் செய்திருக்கிறார்கள்.

    கதை நடந்த காலகட்டத்தில் ஜாக்கெட் அணிவது கிடையாது என்ற கதையம்சம்(!) ஒருபுறம் இருந்தாலும் சுஜிபாலாவின் அங்கங்கள் திரையில் தெரிகின்றன்.

    ஏற்கனவே மானாட மயிலாட நிகழ்ச்சியில் ரசிகர்களை கிறங்கடிக்கும் இடுப்பு டான்ஸ் நடிகையான சுஜிபாலா இப்படத்தின் மூலம் கிளாமர் ரோல்களுக்கு அடிப்போடுகிறாரோ என்னவோ தெரியவில்லை. ஒரு பாட்டில் அத்தனை விரசம்.

    போகிற போக்கில் தமிழ்சினிமாவில் நமீதாவை தொடர்ந்து சுஜிபாலாவிற்கும் ரசிகர் கூட்டம் பெருகிவிடும் போல.

    ================

    கூறுவது: ☆ சிந்தாநதி | Monday, 30 June 2008

  5. சுகுணா திவாகரின் மறுபதிவு

    http://suguna2896.blogspot.com/2008/06/blog-post_30.html

    கூறுவது: ☆ சிந்தாநதி | Tuesday, 01 July 2008

  6. "வைகுண்டசாமி என்ற புரட்சியாளரின் புரட்சிக் கருத்துகள் மறக்கப் பட்டு இன்று அவர் தெய்வீக அவதாரமாக கருதப்பட்டு பூசிக்கப் படுகிறார்."

    வைகுண்டர் புரட்சியாளர் என்று யார் கூறியது உங்களிடம்?

    19 - ஆம் நூற்றாண்டின் மத்தியில் தோன்றிய வைகுண்டர் வரலாற்றில் எங்காவது குறிப்பிடப்பட்டுள்ளாரா? சாத்தான் என்றும் பேயன் என்றும் வசை பாடும் சில LMS அறிக்கைகளை தவிர்த்து அவர் வரலாற்றில் வாழ்ந்தார் என்பதற்க்கு எந்த ஆதாரமும் இல்லை.

    இதற்கு மாற்றாக அவர் பற்றிய செய்திகளை குறிப்பது அய்யாவழியின் புனித நூலான ஆகிலத்திரட்டு மட்டுமே. அதை நீங்கள் கண்ணால் கூட பார்த்திருக்க வாய்ப்பில்லை. இல்லையேல் இவ்வாறான ஒரு குறுகிய கண்ணோட்டத்தில் வார்த்தை படையெடுப்பு நடத்தியிருக்க மாட்டீர்கள். நான் யூகிக்கிறேன் - நீங்கள் வைகுண்டர் பற்றி அறிந்திருப்பதெல்லாம் ஏதோ பல்கலைக்கழக ஆய்வு புத்தகங்கள் வாயிலாக மட்டும் தான் இருக்க முடியும்; சந்தேகமே இல்லை. அதன் விளைவு தான் இந்த அகில மஹா குழப்பம் அல்லது அறிவீனம்.

    நண்பரே! 'ஆகிலத்திரட்டு ஆம்மானை' (அனேகமாக இது தமிழின் மிகப்பெரிய அம்மானை நூலாக இருக்கலாம்) என்று ஒன்று உண்டு; தேடிப்பாருங்கள், கிடைத்தால் அதை சற்றே பார்த்துவிட்டு பின் வாருங்கள், வைகுண்டரை பற்றி பேசலாம்.

    அதற்கு முன்பு கீழ்க்காணும் URL வைகுண்டர் அல்லது அய்யாவழி பற்றி நீங்கள் ஏதாவது தெரிந்து கொள்ள உதவலாம்.


    http://en.wikipedia.org/wiki/Ayyavazhi

    ம்ம்ம் "மூடநம்பிக்கைகளின் உச்சமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். " நண்பரே, வார்த்தைகள் விளம்புவதற்கு முன்னால் சற்றே சிந்தித்தல் நன்று;

    கூறுவது: வைகுண்ட ராஜா | Sunday, 03 August 2008

மறுமொழி இடுக!


இணையத்தமிழ் எழுதுகருவிகள்:

1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)