❒ ஆடுபுலி ஆட்டம் - தமிழர் விளையாட்டு | H | ❒ ஜெயமோகன் தந்த மீட்டல்கள்

Saturday, 14 June 2008

❒ தசாவதாரம் விமர்சனம் + விமர்சனங்கள்

தசாவதாரம்

Image and video hosting by TinyPicசோழர் காலத்து ரெளத்திரம் மிகுந்த வைணவ இளைஞன் முதல் ஜார்ஜ் புஷ் வரை 10 அவதாரங்களில் கம்பீரமாக வலம் வருகிறார் கமலஹாசன்!

இரண்டரை ஆண்டு கால எதிர்பார்ப்புடன் செல்லும் கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து சினிமா ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு 'தசாவதாரம்' படத்தின் துவக்கமே, சீட்டின் நுனிக்குச் செல்ல வைக்கிறது.

பனிரெண்டாம் நூற்றாண்டில் துவங்குகிறது கதை..! "சிவம் மட்டுமே கடவுள்; கோவிந்த பெருமாள் சிலையை அகற்றுங்கள்" என்று உத்தரவிடுகிறார், குலோத்துங்க சோழன். இது நடப்பது சிதம்பரத்தில்.

அப்போது, வெகுண்டெழும் ரெளத்திரம் கொண்ட வைணவ இளைஞன் ரங்கராஜன் நம்பி (கமல் நெ.1), சோழப் படை வீரர்களை பந்தாடுகிறான். அவனிடம், " 'ஓம் நமசிவாய' என்று சொன்னால் உயிர் பிச்சை; இல்லையேல் சிலையுடன் கட்டிக் கடலில் வீசப்படுவாய்" என்று சோழ மன்னன் சொல்ல, நம்பியும் "ஓம்" என்று ஆரம்பிக்கிறான். ஆனால், "நமோ நாராயணாய" என்று முடித்து, வீரச்சாவுக்கு ஒப்புக்கொள்கிறான்...

இப்போது 2004... அமெரிக்காவில் ஆராய்ச்சித்துறையில் முக்கிய விஞ்ஞானிகளுள் ஒருவராக பணிபுரிகிறார் கோவிந்த் (வேறு யார், கமல்தான்). அவர் வகிக்கும் ஆராய்ச்சிக் குழு, உலகை அழிக்கும் வைரஸ் கிருமி ஒன்றைக் கண்டுபிடிக்கிறது. அந்தக் கிருமியை நாச வேலைக்குப் பயன்படுத்துவதற்கு அக்குழுவின் தலைவர் முற்படுகிறார்.

இதையறிந்த கோவிந்த், வைரஸ் குப்பியை எடுத்துக் கொண்டு ஓடுகிறார்... ஓடுகிறார்.... அவரை அதிபர் புஷ்சின் உத்தரவுடன் எஃப்பிஐ ஒருபுறமும், கூலிப்படைகள் மறுபுறமும் துரத்துகின்றன. அந்தக் குப்பி, சிதம்பரத்துக்கு வந்து சேருகிறது...

இதற்கு இடையே, நிகழ்பவைதான் சுவாரஸ்யாமான திரைக்கதையும் கமலஹாசன்களின் அணிவகுப்பும்!

சோழர் காலத்து ரெளத்திர வைணவ இளைஞன், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், மனநிலை பாதித்த பாட்டி, ஜப்பானிய கராத்தே மாஸ்டர், பஞ்சாபி பாடகர், நியாயம் கோரும் தலித் இளைஞன், அமெரிக்க கொலை வெறியன்,

அப்பாவியாய் வார்த்தைகளை உதிர்க்கும் முஸ்லிம் இளைஞன், அசராத விஞ்ஞானி, தெலுங்குகார உளவுத்துறை அதிகாரி...

யப்பா... இவர்களில் எங்கே கமல் இருக்கிறார் என தேட வேண்டியிருக்கிறது. 'தத்ரூபம்' என்பதற்கு கமல் என்று பொருள் போலும்! ஃபேன்ஸி ட்ரெஸ் காம்பட்டிஷன் போல் ஆகிவிடாத ஒப்பனை மற்றும் வேறுபடுத்திக் காட்டுவதற்கான சிரத்தைக்காகவே, பத்து அவதாரங்களை தரிசிக்கலாம்.

வெவ்வேறு கதாப்பாத்திரத்துக்கும் அவற்றுக்கு உரிய பாவனை, சைகை மொழி, பேச்சு என ஒவ்வொன்றிலும் தனித்துவத்தைக் காட்டியிருப்பது மகத்துவம்.

பத்து கமலில், வைணவ இளைஞனும், தலித் இளைஞனும், பல்ராம் நாயுடும் நூற்றுக்கு நூறு மார்க் வாங்கிவிடுகின்றனர். கமலஹாசனின் கலையுலக வாழ்க்கையில், 'தசாவதாரம்' ஒரு மைல்கல்!

கமலஹாசனின் திரைக்கதை, அவரது அனுபவத்தையும், சினிமா அறிவையும் வெகுவாக வெளிப்படுத்துகிறது.

அடுத்து சபாஷ் பெறுபவர், இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார். பத்து கதாப்பாத்திரங்களைக் குழப்பாமல், படத்தை நகர்த்தியதிலேயே அவரது முழு திறமையும் பளிச்சிடுகிறது.

கமலுக்கு உகந்த நாயகியாக, நடிப்பிலும் சளைக்காதவராக வரும் அசின், ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துவிடுகிறார்; வழக்கம்போல், ஊறுகாயாக காட்டப்பட்டுள்ளார், மல்லிகா ஷெராவத்.

நெப்போலியன், நாகேஷ், பி.வாசு, ரகுராம், சந்தான பாரதி, எம்.எஸ்.பாஸ்கர் என பலரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக பதிவு செய்துள்ளனர்.

பத்து அவதாரங்களுக்கு தனித்துவம் ஏற்படுத்தித் தந்த ஒப்பனையை பாராட்டியே ஆகவேண்டும். ரவி வர்மனின் ஒளிப்பதிவில் உலகத் தரம் மிளிருகிறது. படத்தின் கலை இயக்கம், படத்தொகுப்பு, நடனம், பாடல்கள், சவுண்ட் என அனைத்துப் பிரிவுகளிலும் முத்திரைப் பதிக்கப்பட்டுள்ளது.

கிராஃபிக்ஸை உருப்படியாக பயன்படுத்திய தமிழ்த் திரைப்படங்களில், தசாவதாரம் முன்னிலை வகிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. இதற்கு 'சுனாமி' காட்சிகள் சான்று. ஹிமேஷ் ரேஷமையாவின் இசையில் 'முகுந்தா', 'கல்லை மட்டும் கண்டால்' ஆகியவை நச். தேவிஸ்ரீ பிரசாத்தின் ரீரெக்கார்டிங், ஸ்ட்ராங்க்!

கதைப்படி, பத்து கதாப்பாத்திரத்துக்கும் ஒரு நடிகர் மட்டுமே நடித்திருக்க வேண்டிய அவசியமில்லைதான். ஆனால், பத்து கதாப்பாத்திரத்திலும் ஒருவர் தான் நடித்தார் என்பது தெரியாத அளவுக்கு படமாக்கப்பட்டிருப்பதால், அந்தக் குறையைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை.

தொழில்நுட்பத்துக்கு இணையாக, கதைக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தால், படம் முழுமையாக சோபித்திருக்குமோ என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியாது.

ஒட்டுமொத்தமாக பார்ப்போமோனால், எதிர்பார்த்தோருக்கு ஏமாற்றாமல் அளிக்கப்பட்ட தரிசனமே 'தசாவதாரம்'!

- எஸ்.சரவணன்
(மூலம் - வெப்துனியா)
யாகூ-தமிழ்

***

சமீபத்தில் தசாவதாரத்தை பார்த்து விமர்சிக்க வாய்ப்பு இல்லை ;)
அதனால் பிட் அடிச்சாச்சு.

தசாவதார விமர்சனங்களே சூடாக இருப்பதால் நிறைய பதிவுகள் வந்து கொண்டே இருக்கின்றன. அவை அனைத்தையும் உடனுக்குடன் படிக்க இங்கே

*


Technorati tags: , , , ,

வாழ்த்து - THUMBS UP  -._/|\_.-  வசவு - THUMBS DOWN

13:20 Posted in சினிமா | Permalink | Comments (4) | Email this | Tags: கமல், தசாவதாரம் |  del.icio.us | | Digg! Digg

  நாட்டிலிருந்து இந்தப் பதிவை வாசிக்கும் இனிய தோழரே!... தோழியே!
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!

தமிழின் வேகமான திரட்டி
முழுமையான பதிவுகள் திரட்டி
தமிழ் திரட்டிகளின் திரட்டு

செய்திகள், மின்னிதழ்கள்,
பிறமொழிப் பதிவுகள்
சினிமா, சமையல், வேலைவாய்ப்பு

http://tamil.kanimai.com

மறுமொழிகள்:

  1. தசாவதாரம் ஒரு மாற்றுப் பார்வை...

    http://naayakan.blogspot.com/2008/06/blog-post.html

    கூறுவது: ☆ சிந்தாநதி | Saturday, 14 June 2008

  2. தயவு செய்து காப்பியடிச்சு கடுப்பேத்தாதீங்க சிந்தாநதி. தசாவதாரம் பற்றி வலைப்பதிவர்களின் சொந்தக் கருத்திற்காகத்தான் இந்தக் கட்டுரையைப் படித்தேன். வெப்துனியா ஒரு வியாபார நிறுவனம். ஒரு நிறுவனம் இன்னொரு நிறுவனத்தை சார்ந்து இயங்கும். பகைத்துக் கொள்ளாது என்பதை அறியவும். ஒழுங்காய் படத்தைப் பார்த்துவிட்டு விமர்சிக்கவும்.
    மரக்காணம் பாலா.

    கூறுவது: மரக்காணம் பாலா. | Saturday, 14 June 2008

  3. அவ்வ்வ்வ்வ்வ்வ். இது சுட்ட விமர்சனமா!!!!

    கூறுவது: chinnappaiyan | Saturday, 14 June 2008

  4. மரக்காணம் பாலா

    கருத்துக்கு நன்றி. வலைப்பதிவுகளில் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் மற்றொரு இணைய ஊடக விமர்சனத்தை பதிவது என்ற எண்ணத்தில் யாகூவில் இருந்து இந்த விமர்சனத்தை தேர்வு செய்தேன். வலைப்பதிவர் கருத்து என்ற எண்ணத்தில் நீங்கள் வாசித்ததால் ஏற்பட்ட ஏமாற்றத்திற்கு வருந்துகிறேன்.

    இதில் காப்பியடித்து? என்ற கருத்து சரியா என்று தெரியவில்லை. மூலத்தின் முகவரி தெளிவாகவே குறிப்பிடப் பட்டுள்ளது.

    நிறுவன விமர்சனம் என்பதால் ஆதரவு கருத்து தான் இருக்கும் என்பது ஓரளவு சரியாக இருக்கலாம். பெரும்பாலான ஊடக விமர்சனங்களும் அப்படித் தான் இருக்கும். எனினும் தசாவதாரம் படத்தைப் பொறுத்தவரை பதிவர்களில் பலரும் சாதகமான விமர்சனங்களே செய்துள்ளனர்

    chinnappaiyan உங்களுக்கும்... சுட்ட விமர்சனம் இல்லை. சுட்டிய விமர்சனம் ;)

    கூறுவது: ☆ சிந்தாநதி | Saturday, 14 June 2008

மறுமொழி இடுக!


இணையத்தமிழ் எழுதுகருவிகள்:

1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)