❒ ஐபிஎல் கிரிக்கெட் | H | ❒ தசாவதாரம் விமர்சனம் + விமர்சனங்கள்

Saturday, 03 May 2008

❒ ஆடுபுலி ஆட்டம் - தமிழர் விளையாட்டு

நமது மலரும் நினைவுகளாக சிறுவயது விளையாட்டுகள் பல நினைவுக்கு வருவதுண்டு. அவற்றில் உடல்சார்ந்த விளையாட்டுகள் தவிர ஒரே இடத்தில் அமர்ந்து ஆடும் விளையாட்டுகள் பலவும் உண்டு. தாயம், பாம்பு ஏணி, பல்லாங்குழி போன்றவை பெண்கள் அதிகமாக விளையாடும் விளையாட்டுகள். கிராமப்புறத்தில் ஆண்களும் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று ஆடுபுலி ஆட்டம். இது சற்று அறிவு சார் விளையாட்டும் கூட...Image and video hosting by TinyPic

ஆர்க்குட்/பேஸ்புக் போன்ற தளங்களில் பல நாட்டு மக்களின் பாரம்பரிய விளையாட்டுகளை பார்க்க முடிகிறது. எனவே நமது பாரம்பரிய விளையாட்டுகளையும் அறிமுகம் செய்யலாமே என்று நண்பர் முகுந்த் இந்த மலரும் நினைவுகளை மீட்டியதால் என் நினைவில் இருந்து இந்த துளிகள்.

ஆடுபுலி ஆட்டம்

தமிழக கிராமப்புற விளையாட்டுகளில் ஒன்று ஆடுபுலி ஆட்டம்.

இது இருவர் விளையாடும் விளையாட்டு.

பொதுவாக சாக்பீஸ் அல்லது கரிக்கட்டையால் தரையில் ஆடுபுலிக் களம் வரைந்து அதில் மூன்று புலிகளாக சற்று பெரிய கூழாங்கற்களோ விதைகளோ, ஆடுகளாக 15 சிறிய விதை/ கூழாங்கல் பயன்படுத்தி விளையாடுவார்கள்.

மூன்று புலிகள் 15 ஆடுகள் கொண்டது இந்த விளையாட்டு.

புலிகள் ஆடுகளிடம் சிறைப் படுதல். அல்லது ஆடுகளை புலிகள் விழுங்குதல் என்பது இந்த விளையாட்டின் நோக்கம். ஆடுகளை ஒவ்வொன்றாக விழுங்கும் புலிகள், புலிகளை முற்றுகையிட்டு அசையவிடாமல் அடைக்கும் ஆடுகள் என விளையாட்டு உத்தி வகுக்கப் பட்டுள்ளது.

1. முதலில் புலி அடுத்து ஆடு என்று சட்டகத்தின் இணைப்புகளில் வைக்க வேண்டும். மற்ற விளையாட்டுகளைப்போல் இது கட்டத்துக்குள் வைக்கப் படுவதில்லை. புலிகளை அடைப்பது போல ஆடுகளை அடுக்க வேண்டும். அதை தடுப்பது போல புலிகளை நகர்த்த வேண்டும்.

2. புலிக்கு அருகில் ஆடு இருந்து அதற்கு அடுத்த கட்டம் வெற்றிடமாக இருந்தால் புலி அங்கே தாவுவதன் மூலம் ஆட்டை விழுங்கும். எனவே புலிக்கு அருகில் தொடர்ச்சியாக இரு ஆடுகள் வரிசையில் இருந்தாக வேண்டும்.

3. புலிகள் சிறைப்படும் போது எத்தனை ஆடுகள் விழுங்கப் பட்டுள்ளன என்பதைப் பொறுத்து ஆடுகள் தரப்பில் விளையாடுபவர் புள்ளிகளைப் பெறுவார். அது போல புலிகளை சிறைப்படுத்த முடியாத அளவுக்கு ஆடுகளை இழந்தால் புலிகள் தரப்பில் விளையாடுபவர் வெல்வார்.

இவை இந்த விளையாட்டின் பொது விதிகள். இது தவிர பிற விதிமுறைகள் நுட்பங்கள் குறித்து நினைவில் இருப்பவர்கள் பின்னூட்டம் தரலாம்.

இன்னும் சற்று மாறுபட்ட களத்தில் 21 ஆடுகள் கொண்ட விளையாட்டும் சில இடங்களில் விளையாடப் படுகின்றன.

பிற விளையாட்டுகள் மற்றும் அவற்றின் விதிமுறைகள் பற்றியும் நினைவுகளை மலரவிடுங்கள்.


Technorati tags: , , , ,

வாழ்த்து - THUMBS UP -._/|\_.- வசவு - THUMBS DOWN

09:35 Posted in விளையாட்டு | Permalink | Comments (7) | Email this | Tags: ஆடுபுலி ஆட்டம்

 நாட்டிலிருந்து இந்தப் பதிவை வாசிக்கும் இனிய தோழரே!... தோழியே!
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!

தமிழின் வேகமான திரட்டி
முழுமையான பதிவுகள் திரட்டி
தமிழ் திரட்டிகளின் திரட்டு

செய்திகள், மின்னிதழ்கள்,
பிறமொழிப் பதிவுகள்
சினிமா, சமையல், வேலைவாய்ப்பு

http://tamil.kanimai.com

மறுமொழிகள்:

  1. அருமையான விளக்கங்கள்:)

    மூளைக்கு வேலைக் கொடுக்கும் இந்த மாதிரியான பாரம்பரிய விளையாட்டுக்களை மறந்து சோம்பேறிகளாக்கும் கிரிக்கெட் பார்க்கும் பழக்கத்தை தொலைக்காட்சிப் பொட்டிகள் வளர்த்துவிட்டு விட்டன.
    நல்லாயிருகுங்க..

    கூறுவது: ரசிகன் | Saturday, 03 May 2008

  2. நல்ல பதிவு.

    சிறுவயது முதலே மக்கு என்பதால்... விளையாட்டிலோ, பாடத்திலோ கவனம் செலுத்த முடியாமல் இருந்திருக்கிறேன். அதனால்.. விளையாடி அனுபவமில்லை.

    பதிவைப் பார்த்ததும் விளையாடியவர்கள் எல்லாம் நினைவுக்கு வந்து போனார்கள் என்பது நிதர்சனம்.

    கூறுவது: யெஸ்.பாலபாரதி | Saturday, 03 May 2008

  3. 10-வது படிக்கும் போது படிக்க சொல்லி விடுவாங்க. மரத்தடியில உட்கார்ந்து கொண்டு அதிகம் விளையாடியது இந்த விளையாட்டு தான்.

    இவ்ளோதானு நினைக்கிறேன், இதுக்கெ மேலேயும் விதி முறைகள் இருக்கானு தெரியல...

    கூறுவது: ஜே கே | J K | Saturday, 03 May 2008

  4. கோபியின் பல்லாங்குழி

    http://www.higopi.com/games/pallangkuli.html

    கூறுவது: ☆ சிந்தாநதி | Sunday, 04 May 2008

  5. ஆன்லைன் பாம்பு ஏணி

    http://www.vam.ac.uk/vastatic/microsites/1414_jain/snakesandladders/

    http://www.bbc.co.uk/schools/numbertime/games/snakes.shtml

    கூறுவது: ☆ சிந்தாநதி | Sunday, 04 May 2008

  6. 4 புலிகள், 20 ஆடுகள் கொண்ட மாறுபட்ட ஆடுபுலிகளம் - விளையாட்டு வட இந்தியா, நேபாளத்தில் ஆடப்படுவது.

    http://goatsandtigers.com/

    http://www.baghchal.com.np/EnglishBaghChal.html

    கூறுவது: ☆ சிந்தாநதி | Sunday, 04 May 2008

  7. மேலும் சில விதிகள் உள்ளன.
    01. புலி வைத்திருப்பவர்கள் தான் முதலில் காய் வைக்கவேண்டும்.
    02. மூன்று வெட்டு தொடர்ந்து (அதாவது ஒரே தடவையில்) வெட்டிவிட்டால் ஆடு ஆட்டம் இழந்து விடும்.
    இதைத்தவிர சில விளையாட்டு இரகசியங்களும் உண்டு.
    01. புலி காய் வைப்பவர்கள் முதலில் அந்த மேல் உச்சியில் தான் வைக்கவேண்டும் ஏனெனில் அப்போதுதான் எங்க்ய் வேண்டுமானாலும் தாவ முடியும். மேலும் கூடியவரை ஆட்டத்தில் நடு வேளை வரை அந்த உச்சிக்காயை நகர்த்தக்கூடாது. அப்படி நகர்த்தினால் ஆடுகள் நன்றாக அலையத்துவங்கிவிடும்.

    02. ஆடு வைத்திருப்பவர்கள் அடிப்பாலத்தில் இருந்து காயை வைக்கவேண்டும் கொஞ்சம் முனைந்தால் கையிருப்புக்காய்களை வைத்து முடிக்கும் போதே புலி அடைப்பட்டிருக்கும்.

    மிகவும் சுவரசியமான விளையாட்டுத்தான்... நாளாச்சு விளையாடி

    கூறுவது: கிருத்திகா | Thursday, 22 May 2008

மறுமொழி இடுக!


இணையத்தமிழ் எழுதுகருவிகள்:

1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)