☜ ❒ இன்று முதல் உலகெங்கும்... | H | ❒ தமிழ்நாயக ஆராதனையும் ஜெயமோகனும் ☞
Wednesday, 19 March 2008
❒ ஏழாவது மனிதனின் மரணம்
ஏழாவது மனிதன் என்ற படத்தில் நாயகனாக தமிழ்த் திரையுலகில் அறிமுகமான ரகுவரன் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார்.
இவர் தனது நடிப்புத் திறமையால் தென்னிந்தியத் திரையுலகில் தனி இடம் பெற்றிருந்தார். நாயகனாக அறிமுகமானாலும் பின்னர் அவர் வில்லன் வேடங்களில் சக்கைப் போடு போட்டார். வில்லன் நடிப்புக்குத் தனி இலக்கணம் வகுத்து தனிப் பாதையில் நடந்து சென்ற ரகுவரன் பின்னர் குணச்சித்திர நடிப்பிலும் வெளுத்துக் கட்டி பன்முக நடிகர் என்ற பெயரைப் பெற்றார்.
முழுக்க முழுக்க பாரதி பாடல்களுடன் வெளியான ஏழாவது மனிதன் படத்தில் நாயகனாக அறிமுகமாகி ஒரு சில படங்களுக்குப் பின் பின்னர் வில்லனாக நடிக்க ஆரம்பித்தார். புரியாத புதிர், ரட்சகன், முதல்வன், அமர்க்களம், பாட்சா என பல படங்களில் வில்லனாக முத்திரை பதித்தார். என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, அஞ்சலி போன்ற படங்களில் குணச்சித்திர நடிப்பில் கலக்கியவர் விஜய், மாதவன், விக்ரம் உள்ளிட்ட இப்போதைய நாயகர்களின் படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். எந்த வேடத்தில் நடித்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடும் ரகுவரனை தென்னிந்தியாவின் அல்பசினோ என்றழைத்தனர் அவரது ரசிகர்கள்.
இடையில் குடி, போதைப் பொருட்களுக்கு அடிமையாகி சீரழிந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டு கடுமையான சிகிச்சைக்குப் பிறகு அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட்டார்.
அதன் பிறகு மலையாள நடிகை ஜெயபாரதியுடன் அவர் குடும்பம் நடத்தி வந்ததாகவும் செய்திகள் வெளியாகின.
ரகுவரன் மீது அப்போது பிரபல நடிகையாக இருந்த ரோகிணி காதல் கொண்டார். நடிகை ரேவதியின் முயற்சியால் இவர்களது காதல் மேலும் வளர்ந்து, கல்யாணத்தில் முடிந்தது.
கல்யாணத்திற்குப் பின் ரகுவரன் முற்றிலும் மாறினார். அனைத்து கெட்ட பழக்கங்களையும் விட்டொழித்து விட்டு புதுமனிதனாக மாறி, தமிழ்த் திரையுலகில் மீண்டும் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கினார்.
ஆறு ஆண்டுகளாக சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்த இந்தக் காதல் தம்பதியின் வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியது. ரகுவரன் மீண்டும் போதைப் பொருட்களை நாடத் தொடங்கியதால் அதிர்ச்சி அடைந்த ரோகிணி, தன் 5 வயது மகன் சாய்பிரசாத்துடன் தனியாகக் குடிபோய் விட்டார்.
மிதமிஞ்சிய போதை ரகுவரனின் உடலை அரிக்கத் தொடங்கியது. தீவிர சிகிட்சை மற்றும் நண்பர்களின் உதவியால் ஓரளவு மீண்டு படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
தொடக்கம் என்ற படத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வேடத்தில் நடித்து வந்தார். இந்தப் படத்தில் ஒரு பாடலை தன் சொந்தக் குரலில் பாடியிருக்கிறார். 'எதுதான் முடியாது? உன்னால் எதுதான் முடியாது?..' என்று இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் பாடலை பாடிய ரகுவரனால் மட்டும் போதையை விடுத்து அதை சாதிக்க முடியாமல் போய்விட்டது.
Technorati tags: tamilblogs, tamilnews, tamilcinema, சினிமா, தமிழ்ப்பதிவுகள்
07:35 Posted in சினிமா | Permalink | Comments (6) | Email this
| Tags: raguvaran, ரகுவரன் |
del.icio.us
|
|
Digg
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!
![]() |
தமிழின் வேகமான திரட்டி
செய்திகள், மின்னிதழ்கள், |
மறுமொழிகள்:
-
//ரகுவரனை தென்னிந்தியாவின் அல்பசினோ என்றழைத்தனர் அவரது ரசிகர்கள்.//
இந்த செய்தி எனக்குப் புதிது, ஆனால் ஏற்றுக் கொள்ளும்படியாக உள்ளது. இருவருமே எனக்கு அபிமான நடிகர்கள்தான். ஒரு படத்தில் கரண் மற்றும் குஷ்புவின் தந்தையாக வந்து கலக்கியிருப்பார். புரியாத புதிர் படத்தின் 'I know' வசனமும் மறக்க முடியாதது.
ஒரு சிறந்த கலைஞனை இழந்து விட்ட உணர்வு். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.கூறுவது: Voice on Wings | Wednesday, 19 March 2008
-
:(
'மக்கள் என் பக்கம்' என்று எல்லா வேடங்களிலும் கவர்ந்தவர். 'அஞ்சலி'கூறுவது: Balaji | Wednesday, 19 March 2008
-
He was a great actor..unforgetable person..
கூறுவது: christina | Wednesday, 19 March 2008
-
Good actor. Rest in peace.
கூறுவது: Sampath | Sunday, 23 March 2008
-
HI ,
Increase your revenue 100% of your blog bye converting into free website.
Convert your blog "yourname.blogspot.com" to www.yourname.com completely free.
Become proud owner of the (.com) own site .
we provide you free website+ free web hosting + list of your choice of
scripts like(blog scripts,CMS scripts, forums scripts and may scripts)
all the above services are absolutely free.
You can also start earning money from your blog by referring your friends.
Please visit www.hyperwebenable.com for more info.
regards
www.hyperwebenable.comகூறுவது: navya | Wednesday, 07 May 2008
-
putiyavai varuvatatke palayavai aligiratu
கூறுவது: komalah | Thursday, 12 June 2008
மறுமொழி இடுக!
இணையத்தமிழ் எழுதுகருவிகள்:
1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)



