☜ ❒ சுஜாதா - சில குறிப்புகள் | H | ❒ ஆட்டு மந்தையில் சில கறுப்பாடுகள் ☞
Saturday, 01 March 2008
❒ ஸ்டெல்லா புரூஸ்
தமிழில் குமுதம் விகடன் உள்ளிட்ட பிரபல இதழ்களில் அது ஒரு மழைக்காலம், எல்லா சாலைகளும் குற்றங்களை நோக்கி, அது ஒரு நிலாக்காலம் போன்ற கதைகளின் மூலம் 90களில் பிரபலமாக இருந்த எழுத்தாளர் ஸ்டெல்லா புரூஸ்.
விருதுநகரில், செல்வமும் செல்வாக்கும் உள்ள குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்து டி.வி.எஸ் ஏஜென்சியை நடத்திக் கொண்டிருந்த இவர் எழுத்தார்வம் காரணமாக தொழிலை கவனிக்காமல் இழப்புகளைச் சந்தித்தவர்.
உரியவயதில் திருமணமும் செய்துகொள்ளாமல் நடுத்தர வயதில் காதல் வயப்பட்டு ஹேமா என்பவரை மணந்தார். குழந்தைகள் இல்லாத நிலையில் காதல் மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மேலும் வறுமையின் பிடியில் சிக்கினார்.
சிறுநீரகக்கோளாறு காரணமாக நீண்டநாள் சிகிட்சையும் பலனளிக்காமல் மனைவி இறந்துவிட தனிமை, வறுமை துரத்த கற்பனைகளில் வாழ்ந்த அந்த கதாசிரியன் தற்கொலை செய்து கொண்டு விட்டார்.
ஸ்டெல்லாபுரூஸ் என்ற பெயரில் எழுதிய அவரது இயற்பெயர் ராம்மோகன்.
Technorati tags: tamilblogs, tamilnews, tamilcinema, சினிமா, தமிழ்ப்பதிவுகள்
13:00 Posted in இலக்கியம் | Permalink | Comments (22) | Email this
| Tags: Stellia Bruce, ஸ்டெல்லா புரூஸ் |
del.icio.us
|
|
Digg
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!
![]() |
தமிழின் வேகமான திரட்டி
செய்திகள், மின்னிதழ்கள், |
மறுமொழிகள்:
-
மிகவும் வருத்தமளிக்கும் செய்தி.
கூறுவது: சுந்தரவடிவேல் | Saturday, 01 March 2008
-
அடப்பாவமே!!
ஆனந்தவிகடன் கூட ஏதோ நிதி திரட்டியதாக எண்ணம்.
அது ஒரு நிலாக்காலம் என்னை புரட்டிப்போட்ட மற்றொரு நாவல்.கூறுவது: வடுவூர் குமார் | Saturday, 01 March 2008
-
இவர் கதைகளில் ஒரு மெல்லிய நகைச்சுவையும், கூர்ந்த அவதானிப்பும் இருக்கும். எல்லாக்கதைகளுமே படித்திருப்பேன்! சிறந்த எழுத்தாளர்.
அன்னார் ஆத்மா சாந்தி அடைவதாக.கூறுவது: பினாத்தல் சுரேஷ் | Saturday, 01 March 2008
-
/////எழுத்தார்வம் காரணமாக தொழிலை கவனிக்காமல் இழப்புகளைச் சந்தித்தவர்.////
தமிழில் எழுதிச் சம்பாதித்தவர்கள் ஒரு சதவிகிதமாகத்தான் இருக்கும். அதுதான் தமிழில் எழுதுவோர்களின் அவல நிலை.
ஆனால் தமிழ் இதழ்கள் விளம்பரங்களால் கொழுத்த காசு பார்த்துக் கொண்டிருக்கின்றன. இந்த அவல நிலை மாற வேண்டும்கூறுவது: SP.VR.subbiah | Saturday, 01 March 2008
-
திருவல்லிக்கேணி, நல்லதம்பிதெரு, ராமானுஜசதனவாசியாக அவரை அறிந்திருக்கிறேன்;
ஸ்டெல்லா ப்ரூஸாக படித்து மகிழ்ந்திருக்கிறேன்...
செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்துப் பிள்ளை....
எழுத்தை மட்டுமே நம்பி எவரும் வாழ்வ்து இயலாது என்று நிரூபித்துவிட்டார்.
அவருக்கு என் அஞ்சலிகள்!கூறுவது: சிவஞானம் ஜி | Saturday, 01 March 2008
-
சேர்ந்தே இருப்பது வருமையும் புலமையும் என்பதற்கு இவர் இன்னொரு சாட்சி.
அன்னாருக்கு அஞ்சலி!கூறுவது: நந்தவனத்து ஆண்டி | Saturday, 01 March 2008
-
மிக வருத்தத்திற்குரிய செய்தி.
கூறுவது: எம்.ரிஷான் ஷெரீப் | Saturday, 01 March 2008
-
:-(
கூறுவது: Ag | Saturday, 01 March 2008
-
அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கிறேன்..
கூறுவது: முஹம்மது யூசுப் | Saturday, 01 March 2008
-
மிகவும் வருந்தத்தக்க நிகழ்வு
கூறுவது: தீலிபன் | Saturday, 01 March 2008
-
சேர்ந்தே இருப்பது வருமையும் புலமையும் என்பதற்கு இவர் இன்னொரு சாட்சி.
அன்னாருக்கு அஞ்சலி! அன்னார் ஆத்மா சாந்தி அடைவதாக.கூறுவது: uthayathevan | Saturday, 01 March 2008
-
அஞ்சலிகள்.
அன்னாரின் ஆத்ம சாந்திக்குப் பிரார்த்திக்கின்றோம்கூறுவது: துளசி கோபால் | Sunday, 02 March 2008
-
:(
கூறுவது: இலவசக்கொத்தனார் | Sunday, 02 March 2008
-
//ஆனந்தவிகடன் கூட ஏதோ நிதி திரட்டியதாக எண்ணம்.//
//ஆனால் தமிழ் இதழ்கள் விளம்பரங்களால் கொழுத்த காசு பார்த்துக் கொண்டிருக்கின்றன. இந்த அவல நிலை மாற வேண்டும்//
ஆ.வி பிச்சை எடுத்துத் தான் அதன் எழுத்தாளர்களுக்கு உதவனுமா?.
கலாநிதி மாறன் தினகரன் ஊழியர்கள் இறந்த வீட்டில் துக்கம் விசாரிக்க சென்ற அன்று வீட்டினரிடம் 'சன் டிவி' பார்த்தீங்களான்னு கேட்டது, நினைவில் வருகிறது.
//ஆனந்தவிகடன் கூட ஏதோ நிதி திரட்டியதாக எண்ணம்.//
ஆ.வி யும் தாங்கள் நல்ல காரியம் செய்கிறோம்னு பீத்திக்கிறதுக்குத்தான் போட்டிருப்பாகள்.கூறுவது: anony | Sunday, 02 March 2008
-
ஸ்டெல்லா ப்ரூஸ் என்ற பெயர் பார்த்தவுடன், உடனே படிக்கத் தூண்டும் அள்வுக்கு அவர் கதைஇகள் வெகு சுவாரசியமாக இருக்கும்.
இப்படி ஒரு நிலைக்கு எழுத்தாளர்கள், இன்னும் மக்கள் தள்ளப்படுவது துக்கத்துக்குரிய விஷயம்.கூறுவது: ரேவதி நரசிம்ஹன் | Sunday, 02 March 2008
-
ஒரு தொடர்கதையை ஆசிரியர் பெயரைக் குறிப்பிடாமல் வெளியிட்டு ஆசிரியரைக் கண்டுபிடிக்கச்சொல்லி போட்டி நடத்தினார்கள். (கதை பெயர் நினைவில்லை) அதை எழுதியவர் ஸ்டெல்லா புரூஸ் என்று நினைவு. அவரது முடிவைக் கேட்க வருத்தமாக இருக்கிறது.
கூறுவது: காசி | Sunday, 02 March 2008
-
அவர் வறுமையால் தற்கொலை செய்து கொள்ளவில்லை.
தன் மனைவியின் இறப்பு தந்த வெறுமையால் தனிமையை எதிர்கொள்ள இயலாமல் தன் மரணத்தின் வழியாக விரைவாக தன் மனைவியை அடைய வேண்டித் தற்கொலை செய்து கொள்வதாக எழுதிவைத்து தூக்கு மாட்டிக்கொண்டார்.
எந்தக் காரணத்திற்காகவும் ஒருவர் செய்து கொள்ளும் தற்கொலையை கண்டிக்கவே முடியும்.
நல்ல எழுத்தாளர். அருமையான படைப்புக்களை படைத்தவர்.
67 வயதில் பக்குவமற்று உணர்ச்சி மேலிட கழிவிரக்கத்தால் பரிதாபமான முடிவை எடுத்து பாராட்ட முடியாத ஒரு முடிவுரை எழுதிவிட்டார்.
ஹரிஹரன்கூறுவது: ஹரிஹரன் | Sunday, 02 March 2008
-
Nice blog, especially refreshing to see content that appeals to the Tamil audience. We would like to introduce you to a quick and easy method of typing Tamil on the Web.
You can try it live on our website, in Tamil!
http://www.lipikaar.com
Download Lipikaar FREE for using it with your site.
No learning required. Start typing complicated words a just a few seconds.
> No keyboard stickers, no pop-up windows.
> No clumsy key strokes, no struggling with English spellings.
Supports 14 other languages!கூறுவது: Badal | Monday, 03 March 2008
-
ரொம்ப ஸ்டைலான நடையில் எழுதுவார். இவர் கீதாபென்னட் போல அயல்நாட்டிலிருந்து எழுதிவருகிறார் என்று ரொம்ப நாட்களாக நினைத்துகொண்டிருந்தேன்.
அவருக்கு இப்படி ஒரு முடிவு வந்திருக்க வேண்டாம் :(
எனது ஆழ்ந்த அஞ்சலிகள்!கூறுவது: லக்கிலுக் | Monday, 03 March 2008
-
nejamkave nan nesikum oru nalla writer
evar yaluthiya oru novel peyar nenaivill ellai tamil theveravatham patri anantha vikadanil eluthi eruntha antha novel peyar nenaivil erunthal please enaku mail pannunga -thanks
pkrishnan143@yahoo.co.inகூறுவது: krishnan | Wednesday, 12 March 2008
-
ஸ்டெல்லா புருஷ் இறந்தது ஒரு கணமான பொழுதாக இருந்தாலும் படைப்பாளியாய் அவர் வாழ்வார் என்பதே இந்த தருணம் சொல்லும் உண்மை.
அவரின் ஆன்மா அமைதி பெற எனது பிரார்த்தனைகளை முன் வைக்கிறேன்.
அன்புடன்,
ஆர்.நாகப்பன்.கூறுவது: ஆர்.நாகப்பன். | Thursday, 03 April 2008
-
இனிய நன்பர்களே....
மறைந்த எழுத்தாளர் ஸ்டெல்லா புருஷ் அவர்களின் எல்லா நாவல்களூம்
படித்தவர்கள் யாரேனும் இருந்தால்
கொஞ்சம் தொடர்பு கொள்ளமுடியுமா தயவு செய்து...............
pkrishnan143@yahoo.co.inகூறுவது: கிருஷ்ணன் | Thursday, 04 December 2008
மறுமொழி இடுக!
இணையத்தமிழ் எழுதுகருவிகள்:
1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)



