❒ நான் ஏன் பிறந்தேன் -எம்.ஜி.ஆர் | H | ❒ ஸ்டெல்லா புரூஸ்

Wednesday, 27 February 2008

❒ சுஜாதா - சில குறிப்புகள்

கடந்த மாதம் முதல் உடல்நலக்குறைவு காரணமாக அப்பலோ மருத்துவமனையில் சிகிட்சை பெற்று வந்த எழுத்தாளர் சுஜாதா இன்று இரவு 9.30 மணியளவில் காலமானார்.

Image and video hosting by TinyPicசுஜாதா சில குறிப்புகள்

பிறப்பு: மே 3, 1935

இயற்பெயர்: ரங்கராஜன்
இவரது மனைவியின் பெயரான சுஜாதா என்ற பெயரில் படைப்புகளை எழுதி வந்தார்.

சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. அவர் கடைசியாக வசனம் எழுதிய திரைப்படம் சிவாஜி.

தொடர்கதையாக வெளிவந்த இவரது நாவல்கள் காயத்ரி, கரையெல்லாம் செண்பகப்பூ, ப்ரியா, விக்ரம், வானம் வசப்படும் போன்ற பின்னர் திரைப்படமாக்கப் பட்டன.

ரோஜா, இந்தியன், முதல்வன், பாய்ஸ், விசில், கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்தஎழுத்து, அந்நியன், சிவாஜி போன்ற படங்களில் இவரே கதை வசனம் எழுதி பணியாற்றி இருக்கிறார்.

கணையாழியின் கடைசிப் பக்கங்கள், விகடனில் கற்றதும் பெற்றதும் என தமிழில் பத்தி எழுத்துக்களில் ஒரு முன்மாதிரியை உருவாக்கியவர்.

சிறுகதை, நாவல், நாடகம், அறிவியல் கதைகள், அறிவியல் கட்டுரைகள். கவிதைகள், பொதுக் கட்டுரைகள், திரைப்பட கதை வசனம், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் முத்திரை பதித்தவர். சுஜாதாவின் படைப்புகளைப் படித்து அந்த ஆர்வத்தாலேயே எழுத்துலகிற்கு வந்தவர்கள் பலர். இந்த வகையில் மிகப்பெரிய எழுத்துலக சீடர்களைப் பெற்ற முன்னோடி எழுத்தாளர்.

தமிழ் எழுத்து நடையில் பல பரிசோதனை முயற்சிகளையும் செய்தவர். அந்தச் சோதனைகளில் உருவான வசீகரமான எழுத்துநடைதான் வாசகர்களை கட்டிப் போட்டிருந்தது. தீவிரமான இலக்கியப் படைப்பாளியாக இல்லாமலே ஜனரஞ்சகமான எழுத்துக்களாலேயே தமிழ் இலக்கியச் சூழலில் அசைக்க முடியாத ஆளுமையாக நிலைபெற்றிருந்தார்.

பெங்களூர் பாரத மின்னணு நிறுவனத்தில் பணியாற்றிய போது தற்போதைய மின்னணு வாக்குப் பதிவு இயந்திர உற்பத்தியில் இவரது ஆலோசனைகளும் இருந்ததாக கூறப்படுவதுண்டு. அறிவியல் தமிழை சாதாரண மக்களிடையே எடுத்துச் சென்றதில் இவரது பங்களிப்பு முக்கியமானது. 80 களுக்குப் பின் உருவான தமிழ் படைப்பாளிகள் இவரது பாதிப்பு இல்லாமல் இருக்க முடியாது என்ற அளவுக்கு தமிழ்ச்சூழலில் இவரது ஆதிக்கம் நிலைபெற்றிருந்தது.

பிப்ரவரி 27 இரவு 9.30 மணியளவில் ஒரு எழுத்துலக சகாப்தம் முடிவடைந்தது.

*
குறிப்பு: சுஜாதா அஞ்சலியாக வரும் பதிவுகள் தமிழ்.கணிமை திரட்டியில் பதிவுகள் முகப்பில் தனியாக திரட்டப் படுகின்றன.


Technorati tags: , , , ,

வாழ்த்து - THUMBS UP  -._/|\_.-  வசவு - THUMBS DOWN

21:25 Posted in இலக்கியம் | Permalink | Comments (13) | Email this | Tags: sujatha, சுஜாதா, ரங்கராஜன் |  del.icio.us | | Digg! Digg

  நாட்டிலிருந்து இந்தப் பதிவை வாசிக்கும் இனிய தோழரே!... தோழியே!
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!

தமிழின் வேகமான திரட்டி
முழுமையான பதிவுகள் திரட்டி
தமிழ் திரட்டிகளின் திரட்டு

செய்திகள், மின்னிதழ்கள்,
பிறமொழிப் பதிவுகள்
சினிமா, சமையல், வேலைவாய்ப்பு

http://tamil.kanimai.com

மறுமொழிகள்:

  1. செய்தி கேட்டு மனம் கலங்கிப்போயிருக்கு. ரொம்பக் கஷ்டப்படாமல் போனாரா? முதுமைன்றதை யாருமே தடுக்க முடியாது. எழுத்தாளனுக்கு 'மரணம்' ஏது? அவருடைய எழுத்துக்கள் நிலைச்சு நின்னு அவரைப்பற்றிச் சொல்லும்.
    அவருடைய ஆன்மா சாந்தி பெறணுமுன்னு பிராத்திக்கிறேன். குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவருடைய வாசகர்களுக்கும்
    மனமார்ந்த ஆழ்ந்த அனுதாபங்கள்

    கூறுவது: துளசி கோபால் | Wednesday, 27 February 2008

  2. ஆழ்ந்த இரங்கல்கள்.

    கூறுவது: சேதுக்கரசி | Wednesday, 27 February 2008

  3. எழுத்தாளா் சுஜாதாவின் மறைவு தமிழ் உலகிற்கு ேபாிழப்பு. அவரது சாதைனகள் ேபாற்றத்தக்கைவ. வாழ்க அவரது புகழ்

    கூறுவது: sankar | Wednesday, 27 February 2008

  4. அறிவியல் சார்ந்த புதினங்களைச் பாமரனுக்கும் புரியும் வகையில் எழுதியவர். வரம்பின்றி சாதனைகளை நிகழ்த்தியவர். வாழ்க அவரது தமிழ் பணி. தமிழ் உள்ளவரை அவரும் நிச்சயம் நினைக்கப்படுவார்.

    கூறுவது: ஜெயகார்த்தி | Thursday, 28 February 2008

  5. இட்டு நிரப்பப்படமுடியாத இடம் சுஜாதாவினது. வாழ்க அவர் புகழ்.

    கூறுவது: காசி | Thursday, 28 February 2008

  6. ஆழ்ந்த இரங்கல்கள்.வாழ்க அவரது புகழ்.

    கூறுவது: thiruvenkadam | Thursday, 28 February 2008

  7. Hi,

    Sujatha's contribution to electronic voting machine is major as per his words(he wrote an article in AV when jayalalitha told the m/c is malfunctiong).
    His contribution to tamil is merely seen by his science articles.
    I doubt,vasanth reflects his inner character.
    His short story like 'nagaram',his novel like 'privom santhipom' are remembered for ever.

    kannan
    http://www.kannanviswagandhi.com
    http://www.truemlmrockstar.com

    கூறுவது: kannan | Thursday, 28 February 2008

  8. ஆழ்ந்த அனுதாபங்கள் - ஆன்மா சாந்தியடைவதாக

    கூறுவது: Cheena ( சீனா) | Thursday, 28 February 2008

  9. நாங்கள் எல்லாம் படிக்கும் வழக்கத்தை ஆரம்பித்ததே சுஜாதாவினால் தான்
    தொடர்ந்ததும் அவரால் தான். அவருடைய மறைவு எங்களுக்கு மட்டுமல்ல
    தமிழர்கள் அனைவருக்கும் பேரிழப்பு தான்

    கூறுவது: இராமலிங்கம் | Thursday, 28 February 2008

  10. misssssssssssssss u sujatha sir

    கூறுவது: krishnan | Wednesday, 12 March 2008

  11. we are realy mmmmmmmmmmmisssssssss u sujatha sir

    கூறுவது: v.raman | Friday, 13 June 2008

  12. mr.sujatha wonderful man

    கூறுவது: muthu | Saturday, 14 June 2008

  13. I was waiting for Sujatha's "Katrathum Petrathum" Still I believe Sujatha will come again & write "Katrathum Petrathum" as I have not met him in person it is earier for me to believe that Sujatha is still alive. He is the second writer I read in Tamil at the age of 10 "Pirivom Sandippom." First writer is Kalki, Sivagamiyin Sabadham.

    கூறுவது: Sridhar | Wednesday, 24 June 2009

மறுமொழி இடுக!


இணையத்தமிழ் எழுதுகருவிகள்:

1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)