☜ ❒ தமிழ் புத்தகச் சந்தை | H | ❒ நிர்வாண உலகம் ☞
Wednesday, 30 January 2008
❒ தமிழச்சிக்கு செய்யப்பட்ட துரோகம்
தமிழச்சி பேரச் சொல்லி பதிவுகளெல்லாம் அதகளப்படுது... அதுக்குள்ள மூக்கை நுழைக்க இப்போதைக்கு நமக்கு எண்ணமில்லாவிட்டாலும் இது கூட பெண்ணியம் சார்ந்த விசயம் என்பதால்...
சமீபத்தில் திருநெல்வேலியில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி மாநாட்டில் ஏதோ ஒரு புதுமுகத்தை அரசியல் அரங்கில் அறிமுகப் படுத்த இருப்பதாக வதந்தி இருந்து வந்தது. அது போலவே தமிழச்சி தங்கபாண்டியன் என்று ஒருபுதுமுகத்தை அரசியல் அரங்கில் அறிமுகம் செய்தார்கள்... இப்போது கனிமொழி கலந்து கொள்ளும் கூட்டங்கள் பலவற்றில் தமிழச்சியும் கலந்துகொள்கிறார்...
பல விழா மேடைகளில் கலர்புல்லாக காட்சியளிக்கும் இவரை யார் இவர் என்று எல்லோரும் வியப்போடு பார்ப்பது உண்மைதான்.
இவர் திமுகவின் துவக்ககால தலைவர்களில் ஒருவரான தங்கபாண்டியனின் மகள். இவரது கணவர் ஒரு காவல்துறை அதிகாரி. இவருக்கு கல்லூரியில் படிக்கும் ஒரு மகள் உட்பட இரண்டு மகள்கள் இருக்கிறார்களாம்.
இந்த அரசியல் அறிமுகத்துக்கு முன்பே ஒரு கவிஞராக அறியப் பட்டவர்தான் இந்த தமிழச்சி.
எஞ்சோட்டுப்பெண் என்னும் இவரது முதல் கவிதைநூல் கவிஞர் தமிழச்சியாக இவரை அரங்கேற்றியது.
'எனக்கான வார்த்தைகளை
நீ முடிவு செய்கையில்
நான் தேர்கிற மௌனம்
மிக வலிமையானது
ஒரு வயோதிகப் பிச்சைக்காரனைப்
புறந்தள்ளிய அலட்சியத்துடன்
நீ நடக்கும்பொழுது
அவனுக்கு நிழல் தரும் மரத்தின்
திடத்துடன் உன்னைச் சந்திக்கும்
உரத்த குரலெழுப்பும்
மல்யுத்த வீரனின் சவாலுடன்
நீ திமிர்த்திருக்கையில்
நடுங்கும் கைகளுடன் உணவிடும்
தாயின் கனிவுடன் உன்னை நேரிடும்
தன் இரவிற்கான போர்வையினை
ஒரு நாடோடியிடமிருந்து
இரவலாய்ப் பெற்றுக்கொண்டு
உன்னை உறுதியாய் எதிர்கொள்ளும்
தனித்து வரும்
ஒற்றை யானையின் கோபத்துடனும்
பிடிபடா வண்ணத்துப் பூச்சியின் சாதுரியத்துடனும்.
வனப்பேச்சி என்னும் இரண்டாவது நூல் அரசியல் அறிமுகத்துக்குப் பின் வந்திருக்கிறது.
வனப்பேச்சியிலிருந்து....
"சுடு சோறு கொதி கஞ்சி
வேப்பம் பழம்
பொசுக்கியதே இல்லை
ஊர் வெயில்.
குளிரூட்டப்பட்ட
நகரத்து அறைகளில் வசிக்கும்
என் மகள் கேட்கிறாள்"
.............
சுருண்டிருக்கும் சர்ப்பமென
அவசரம் புதைந்திருக்கும்
இந்நகரத்தின் எந்த வீட்டில்
குழந்தைக்கான ஒரு தூளிச்சேலையும்
வயது முதிர்ந்தவளுக்கான சுருக்குப்பையும் இருக்கிறதோ
அங்குதான் விருந்தினளாக வருவேன்
என்ற அடம் வனப்பேச்சிக்கு...
ஆஸ்திரேலியா வாழ் இலங்கைத் தமிழர்களின் ஆங்கிலப் படைப்புகள் என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு செய்கிறார். இவரது முதல் தொகுப்பான எஞ்சோட்டுப்பெண் பாரதியார் விருது, சிற்பி இலக்கிய விருது போன்றவற்றைப் பெற்றுள்ளது. கவிஞர் மட்டுமல்லாமல் நடன, நாடகக் கலைஞராக மிளிர்ந்து இயல், இசை, நாடகத் தமிழ்க் கலைஞராக இருக்கும் இவர் சென்னை ராணி மேரிக்கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராக பணியாற்றுகிறார்.
சுமதி என்ற இயற்பெயரை தனக்கான தனி அடையாளத்துக்காக தமிழச்சி என மாற்றிக் கொண்ட தனித்திறம் பெற்ற ஒரு பெண்மணியின் பெயரை தந்தையின் பெயரொட்டு இணைத்து தமிழச்சி தங்கபாண்டியனாக மாற்றியதன் மூலம் கலைஞர் ஒரு பெண்ணின் தனித்துவத்தை இல்லாமலாக்கி இருக்கிறார் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
அவரது அரசியல் பின்னணியை பெயர் சூட்டித்தானா வெளிப்படுத்த வேண்டும்? இது தமிழச்சியின் தனித்துவ அடையாளத்துக்கு இழைக்கப் பட்ட துரோகமன்றி வேறென்ன?
Technorati tags: tamilblogs, tamilnews, tamilcinema, சினிமா, தமிழ்ப்பதிவுகள்
14:55 Posted in அரசியல், இலக்கியம், விமர்சனம் | Permalink | Comments (9) | Email this
| Tags: தமிழச்சி, கலைஞர், திமுக, கவிஞர் |
del.icio.us
|
|
Digg
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!
![]() |
தமிழின் வேகமான திரட்டி
செய்திகள், மின்னிதழ்கள், |
மறுமொழிகள்:
-
அந்தத் தமிழச்சியாவது சண்டக்கோழியாக இல்லாமல், நல்ல வார்த்தைகளைப் பயன்படுத்தி தன் கருத்துக்களை வெளிப்படுத்த வாழ்த்துகின்றோம். சுய விளம்பரத்திற்காக மலிவான உத்திகளைப்
பயன்படுத்தாமல் இருந்தால் தமிழச்சிக்கு வாழ்த்துக்கள் தொடரும்.
தமிழ் பெண்கூறுவது: thamil pen | Wednesday, 30 January 2008
-
நல்ல வார்த்தை, கெட்ட வார்த்தை என்பதெல்லாம் அவரவர் பார்வையைப் பொறுத்தது. ஒப்பீடுகள் என்பது இங்கே தேவையற்றது.
கூறுவது: ☆ சிந்தாநதி | Wednesday, 30 January 2008
-
நான் தமிழ் நாட்டின் அரசியலை கவனிக்கிறதே இல்லைனு இப்பத்தான் தெரியுது. முதல் கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
Thank you!கூறுவது: ஹாரி | Wednesday, 30 January 2008
-
நெல்லை இளைஞர்கள் மாநாட்டின் போது முதன் முறையாக தொலைக்காட்சிகளில் தோன்றினார். NDTVயில் பேசினார்.
அரசியலில் எத்தனை தூரம் ஜெயிப்பார் என்பது போகப் போகத் தான் தெரியும். இளைய தலைமுறையின் மிடுக்கோடு ஜொலிப்பாரா - அல்லது, வெறும் துதி பாடியாக மாறிவிடுவாரா என்று.
இப்போதைக்கு அவரை வாழ்த்தி வரவேற்கலாம்....கூறுவது: நண்பன் | Wednesday, 30 January 2008
-
சிந்தாநதி, அவரது முதல் கவிதைத் தொகுப்பு, "எஞ்சோட்டுப்பெண்".
கூறுவது: Jayashree Govindarajan | Wednesday, 30 January 2008
-
நன்றி ஜெயஸ்ரீ
தட்டச்சில் பிழையை கவனிக்கவில்லை. அது "எஞ்சோட்டுப்பெண்" தான் :)கூறுவது: ☆ சிந்தாநதி | Wednesday, 30 January 2008
-
தேவையில்லாத விவாதம் கவிதை அரசியலுக்கு வருவதே கடினம் வந்தால் வரவேற்போம்
கூறுவது: Dilipan | Wednesday, 30 January 2008
-
//தமிழச்சி தங்கபாண்டியனாக மாற்றியதன் மூலம் கலைஞர் ஒரு பெண்ணின் தனித்துவத்தை இல்லாமலாக்கி இருக்கிறார் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது//
என்ன கொடுமை இது சிந்தாநதி!!
கலைஞரை குறை சொல்லுவதற்கு மட்டும் இப்படி எப்படித்தான் டிசைன் டிசைனா காரணங்கள் கிடைக்குதோ! ஐயகோ!!கூறுவது: ஜோ | Thursday, 31 January 2008
-
இது கலைஞரைக் குறை சொல்லுவதற்கல்ல ஜோ
பெரும்பாலான ஆண்கள் சிந்திக்காத ஒரு கோணம் இது.
தன் சொந்தப் பெயரை விடுத்து தனக்கான ஒரு அடையாளத்தை அவரே ஏற்படுத்திக் கொண்டிருக்கும் போது அதை மாற்றுவது நியாயமா என்று கலைஞர் சிந்தித்திருக்க வேண்டும்... ஆனால் தனது அரசியல் ஆசானுக்கு வேறு விதத்தில் நன்றிக்கடன் பட்டிருக்கும் தமிழ்ச்சியால் அதை மறுத்திருக்கவும் முடியாது...கூறுவது: ☆ சிந்தாநதி | Thursday, 31 January 2008
மறுமொழி இடுக!
இணையத்தமிழ் எழுதுகருவிகள்:
1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)



