☜ ❒ பயர்பாக்ஸ் பிரச்சினை தீர்ந்தது | H | ❒ தமிழ் புத்தகச் சந்தை ☞
Tuesday, 15 January 2008
❒ சிவாஜி விழாவும் தமிழ்ப்பண்பாடும்
இப்போதைய சூடான செய்திகளில் ஒன்று சிவாஜி படவிழாவில் நடிகை ஸ்ரேயா அரைகுறை உடையணிந்து வந்தது பற்றி வழக்குப் போடப் பட்டிருப்பது குறித்தது.
சமீபத்தில் ஒரு இணைய தளத்தைக் காண நேரிட்டது. அதில் பல நடிகைகள் மேடை நிகழ்ச்சிகளில் குட்டைப் பாவாடையுடன் அமர்ந்திருக்கும்போது சில வக்கிரங்களால் மோசமான கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காட்சியளித்தன. இதில் படம் எடுத்தவர்களைக் குறை சொல்வதா? அல்லது பொது இடங்களில் அப்படிப் பட்ட உடைகளில் வரும் நடிகைகளைக் குறை சொல்வதா?
முதலில் நடிகைகள் ஏன் அப்படி வருகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
திரைப்படங்களில் நடிகைகள் எந்த அளவுக்கு அங்கங்கள் காட்ட வைக்க முடியுமோ அந்த அளவுக்கு ஆடைக்குறைப்பு செய்யப் படுகிறது. முதலில் கதைக்கு இது அவசியம் என்று வற்புறுத்தப் படுகிறார்கள். பின்னர் படத்தின் வெற்றிக்கு இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று நடிகைகள் அறிவுறுத்தப் படுகிறார்கள். படம் எடுப்பவர்கள், கதாசிரியர்கள், இயக்குநர்கள் அனைவரும் ஆண்களே!
படப்பிடிப்புகள் ஏராளமானவர்கள் முன்னிலையில் எடுக்கப் படுகின்றன. எனவே சம்பந்தப் பட்ட நடிகையின் உடல் தரிசனம் அங்கிருக்கும் அனைவருக்கும் கிட்டுகிறது. இப்படிக் கவர்ச்சியாக நடிக்கும் காட்சிகளின் புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியிடப் படுகின்றன. போஸ்டர்களாகவும் பேனர்களாகவும் காட்சிப் படுத்தப் படுகின்றன. அடுத்து இந்தக் காட்சிகள் திரைவழியே மக்களைச் சென்றடைகின்றன. அன்றாடம் தொலைக்காட்சி வழியாக இதே காட்சிகள் வீடுகளுக்கு நேரடியாக வந்து சேர்ந்து விடுகின்றன.
இப்படி எல்லா விததிலும் திறந்த புத்தகமாக இருக்க வேண்டிய நிலையில் நடிகையாகிய பெண் தனது கூச்சங்கள் அனைத்தையும் உதறிப் போடுகிறாள். ஒரு நடிகையாக, தனது உடலழகைக் காட்ட வேண்டியது அவசியம் என்ற மனநிலை அவளுக்கு ஏற்படுகிறது. முழுக்க நனைந்த பின் முக்காடு எதற்கு என்று பொது இடங்களிலும் ரசிகர்களை மகிழ்விக்க அவள் உடலழகைக் காட்டும் உடைகளில் தோன்றுகிறாள்.
இதில் நடிகைகளைக் குற்றம் சொல்ல என்ன இருக்கிறது? கலாச்சாரக் காவலர்கள் செய்ய வேண்டியது, திரைப்படங்களில் பெண்ணைச் சித்தரிக்க வேண்டிய முறை பற்றிய பொறுப்புணர்வை முதலில் இயக்குநர்களுக்குக் கற்பியுங்கள். அதை விடுத்து சுயவிளம்பரத்துக்காக நடிகைகள் மீது பாய்வதில் அர்த்தமில்லை.
இந்த விழாவுக்கு காரணமான சிவாஜி என்ற திரைப்படத்தில் இதே ஸ்ரேயா நடித்துள்ள கைக்குட்டை துணியணிந்த காட்சிகளை விட அதிக கவர்ச்சியை மேடையில் காட்டி விடவில்லை. எல்லா நடிகைகளின் நிலையும் இதுதான்.
பொதுவாக இம்மாதிரி வழக்குப் போடுவது யாரென்று கவனித்தால் மதவாத உணர்வுள்ள ஆண்கள் தான் இதைச் செய்கிறார்கள். பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்தும் ஆணாதிக்க மனோபாவத்தின் நேரடி வெளிப்பாடு இது. உண்மையான அக்கறை இருந்தால் நடிகைகளை அப்படி நடிக்க வைக்கும் இயக்குநர்கள் மீது வழக்குப் போட்டு அவர்களைத் திருத்துங்கள்.
*
நடிகை குஷ்பு படப்பிடிப்புக்காக வைக்கப்பட்டிருந்த சிலைகள் முன் கால்மேல் கால்போட்டது, சானியா மிர்சா தேசியக் கொடிக்கு முன் காலை நீட்டியது என்பவையும் இதே போன்று வழக்குகளுக்கு ஆளாகி இருக்கின்றன. இந்த வழக்குகளைத் தொடர்ந்திருப்பவர்கள் யார் என்பதிலிருந்து நோக்கம் தேசபக்தியோ கடவுள் பக்தியோ அல்லாமல் மதவெறி சார்ந்த ஆணாதிக்கம் என்பதையும் வெளிப்படையாக புரிந்து கொள்ள முடிகிறது.
ஒரு அறிவுறுத்தல் என்பதற்கு மேல் எந்த அவசியமும் அற்ற நிகழ்வுகளை சுயஅரிப்புகளுக்கு இவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
*
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
பொங்கல் வெளியீடு இங்கே...
Technorati tags: tamilblogs, tamilnews, tamilcinema, சினிமா, தமிழ்ப்பதிவுகள்
13:35 Posted in சினிமா, விமர்சனம், விவாதம் | Permalink | Comments (13) | Email this
| Tags: shivaji, shreya, sania mirza, kushbu, சிவாஜி, ஸ்ரேயா, குஷ்பு |
del.icio.us
|
|
Digg
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!
![]() |
தமிழின் வேகமான திரட்டி
செய்திகள், மின்னிதழ்கள், |
மறுமொழிகள்:
-
சிந்தாநதி,
பொங்கல் வெளியீடு அருமை. ஒவர்டோஸ் மாதிரிகூடத் தெரியுது:-)
(பயர்பாக்ஸ் 2 வெச்சிருக்கிறவங்களையெல்லாம் துரத்தர மாதிரி இருக்கு உடைஞ்ச எழுத்துக்கள் பெரும்பாலு)கூறுவது: காசி | Tuesday, 15 January 2008
-
பல நேரங்களில் சில மனிதர்கள் ...
கூறுவது: dharumi | Tuesday, 15 January 2008
-
//(பயர்பாக்ஸ் 2 வெச்சிருக்கிறவங்களையெல்லாம் துரத்தர மாதிரி இருக்கு உடைஞ்ச எழுத்துக்கள் பெரும்பாலு)//
பயர்பாக்ஸ் 3 சோதனைக்காக அப்படி வைத்திருந்தேன்...இப்போது மாற்றி விட்டேன்... IE க்கு ஐஸ்டிபையும் பயர்பாக்சுக்கு left align என்று போட்டால் IE-6 ல் மட்டுமே ஜஸ்டிபை ஆகிறது. IE-7 ல் left align தான் வருகிறது :(
ஓவர்டோஸ் :)
வெறும் திரட்டுகளின் தொகுப்பு நிலையில் இருந்து செய்தியோடை வலைவாசலாக அதிகரிக்கப் பட்டுள்ளது... அதனால் கொஞ்சம் ஓவர்டோஸாக வந்திருக்கோ?கூறுவது: ☆ சிந்தாநதி | Tuesday, 15 January 2008
-
'சில வக்கிரங்களால் மோசமான கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காட்சியளித்தன.'?????????????????????????????????????????????????????????/
கூறுவது: pullirajah | Tuesday, 15 January 2008
-
இப்படி வழக்கு தொடுத்து விளம்பரம் தேடும் லூசுகள் தான் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் !!! பதிவுக்கு நன்றி.
கூறுவது: enRenRum anbudan BALA | Tuesday, 15 January 2008
-
Good the view
கூறுவது: Parthasarathi J | Wednesday, 16 January 2008
-
ஸ்ரேயா வேண்டுமென்றே இது போன்ற சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கிறார் என்றே நான் நினைக்கிறேன்.
கூறுவது: நவன் | Wednesday, 16 January 2008
-
//இதே ஸ்ரேயா நடித்துள்ள கைக்குட்டை துணியணிந்த காட்சிகளை விட அதிக கவர்ச்சியை மேடையில் காட்டி விடவில்லை//
நீங்க சொன்னீங்கன்னு நானும் ஒரு 5, 6 தடவை பார்த்துட்டேன். ம்ம்ம்....கைக்குட்டையாவது கால்குட்டையாவது....எல்லா படங்களிலும் இருக்கிற மாதிரி தான் இருக்கு. :-((((கூறுவது: ஏகபத்தினி விரதன் | Wednesday, 16 January 2008
-
//கைக்குட்டையாவது கால்குட்டையாவது....எல்லா படங்களிலும் இருக்கிற மாதிரி தான் இருக்கு.//
எல்லா படங்களும் அப்படித்தான் இருக்கு என்கிறீர்களா? ;)
சிவாஜி பாடல் காட்சிகளின் ஸ்ரேயாவின் உடைகள் (அப்படி ஒன்று இருந்தால்) எவ்வளவு?கூறுவது: ☆ சிந்தாநதி | Wednesday, 16 January 2008
-
பதிவின் கருத்துக்கள் உண்மை. ஆதங்கம் புரிகிறது. நீதி மன்றங்கள் வழக்குத் தொடுப்பவர்களின் மீது கருணை காட்டாமல் கண்டிப்புடன் நடந்து தள்ளுபடி செய்ய வேண்டும்.
கூறுவது: Cheena ( சீனா) | Wednesday, 16 January 2008
-
வணக்கம் சிந்தாநதி...
நீங்கள் சொல்வது மிக சரி.....இதுபோன்று தமிழ் பண்பாட்டுக்கு எதிரானவர்களை மிக கடுமையாக எதிர்க்கவேண்டும்...
அந்த வெப்சைட் லிங்க் தர இயலுமா :)))))கூறுவது: செந்தழல் ரவி | Wednesday, 16 January 2008
-
u r right.
கூறுவது: venkattan | Saturday, 02 February 2008
-
சென்ற வார தினமணிக் கதிரில் இந்த கட்டுரை வெளியாகி இருந்தது. பார்த்திருந்தீர்களா?
கூறுவது: பாலாஜி (பாஸ்டன்) | Sunday, 03 February 2008
மறுமொழி இடுக!
இணையத்தமிழ் எழுதுகருவிகள்:
1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)



