☜ ★ வழக்கறிஞர்கள் கேள்விக்கு அப்பாற்பட்டவர்களா? | H | ★ தமிழ்ப் பதிவுகள் எப்படி இருக்கின்றன? ☞
Sunday, 02 December 2007
★ கணினி பயன்பாட்டில் சில குறிப்புகள்
1. படங்களைச் சுருக்குதல்:
நாம் பல தேவைகளுக்காக படங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்புகிறோம். வலைப்பதிவுகளில் படங்களை இணைக்க பதிவேற்றுகிறோம்... ஸ்கிரீன் ஷாட் எடுத்து அந்தப் படங்களையும் இம்மாதிரி செய்யும்போது படங்களின் அளவு பல நேரங்களில் படங்களின் அளவு கூட 1எம்பிக்கு மேல் இருக்கிறது. இதனால் பதிவேற்ற நேரம் அதிகம் பிடிக்கிறது... வலைப்பக்கத்தில் இந்தப் படம் இணைக்கப் பட்டால் அந்த வலைப்பக்கம் திறக்க அதிக நேரம் ஆகிறது.
இதற்கான தீர்வுகள்:
BMP கோப்பாக இணைப்பதை தவிர்க்க வேண்டும். ஜேபெக் அல்லது .ஜிப் ஆக அனுப்பலாம்.
படங்களின் தெளிவுக்கு இழப்பு ஏற்படாமல் படங்களை 50 சதவீதம் வரை .ஜேபெக் கம்பிரசன் செய்ய முடியும். அவ்வாறு செய்தால் படங்களின் அளவை மிகவும் குறைக்க முடியும். இதற்கு IrfanView போன்ற கிராபிக் எடிட்டர்கள் உதவும்.
http://www.irfanview.net/ தளத்திலிருந்து இம்மென்பொருளைப் பெற்றுக் கொள்ளலாம். இது ஒரு ஆடியோ, வீடியோ மற்றும் கிராபிக் எடிட்டர்.
இது போன்ற எடிட்டரில் எடிட் செய்ய வேண்டிய படத்தை திறந்து கொள்ளவும்.
படத்தின் நீள அகலங்கள், வெட்ட, கூட்ட, குறைக்க செய்து தேவைப்பட்டால் வண்ணம் மற்றும் எபக்டுகள் தந்தபின்
File --- save as
திறக்கும் பக்கத்தில் Show options dialog டிக் செய்திருந்தால் JPEG/GIF save options என்னும் சாளரம் இருக்கும். (இல்லை எனில் Show options dialog பெட்டியில் டிக் செய்யவும்)
அந்தச் சாளரத்தில் Save Quality ஸ்லைடரில் 50 சதவீதம் கொடுத்து படத்தை GIF அல்லது JPEG ஆக save செய்யவும்...தெளிவு குறைவாக இருந்தால் 60 சதவீதம் கொடுக்கலாம். இம்முறையில் படத்தின் கொள்ள்ளவை தேவையானபடி குறைத்துக் கொள்ள முடியும்.
நேரடியாக விண்டோசில் இருந்து ஒரு படத்தை மின்னஞ்சலில் அனுப்ப படம் இருக்கும் போல்டரைத் திறந்து அனுப்ப வேண்டிய படம் அல்லது படங்களைத் தேர்வு செய்தால் இடப்புறம்
File and Folder Tasks பகுதியில்
Email this file / Email the selected items கிளிக் செய்தால்
send picture via email என்ற சிறு பெட்டி தோன்றும்.அதில்
show more options பகுதியில் தேவையான அளவை தேர்வு செய்து
make all my pictures smaller தேர்வு செய்து ok செய்தால் உங்கள் மின்னஞ்சல் கிளையண்டில் ( அவுட்லுக்?) படம் அனுப்பத் தயாராக இருக்கும். இம்முறையில் படத்தின் நீள அகலங்கள் தேவையான குறிப்பிட்ட அளவுகளில் மாற்ற முடியும்.
2. வேர்ட் கோப்பை திருத்தங்களிலிருந்து பாதுகாத்தல்
நீங்கள் ஒரு வேர்ட் கோப்பில் பல தகவல்களைச் சேகரித்து வைத்திருக்கிறீர்கள்...உங்கள் கணினியைப் பயன்படுத்தும் வேறொருவர் அதில் மாற்றம் செய்து விடுகிறார்...அப்படி ஏதாவது திருத்தம் செய்யப் பட்டிருக்கிறதா, என்னென்ன மாற்றங்கள் என்பதை எப்படிக் கண்டறிவது?
வேர்ட் கோப்பினைத் திறந்து கொள்ளவும்.
Click *Tools*
Click *Protect Document*
திறக்கும் பெட்டியில் password இட்டு ஓகே செய்யவும்...
இனி கோப்பில் செய்யப் படும் மாற்றங்களை பார்க்க முடியும்.
Click *Tools*
*UnProtect Document*
password மூலம் நீங்கள் பழையபடி வழக்கமான கோப்பில் பணி செய்யலாம்...
Technorati tags: tamilblogs, tamilnews, tamilcinema, சினிமா, தமிழ்ப்பதிவுகள்
12:50 Posted in star, இணையம், கணித்தமிழ் | Permalink | Comments (5) | Email this
| Tags: word, image |
del.icio.us
|
|
Digg
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!
![]() |
தமிழின் வேகமான திரட்டி
செய்திகள், மின்னிதழ்கள், |
மறுமொழிகள்:
-
வணக்கம்.
நான் சமீபத்தில் தான் பிளாக் குறித்து அறிந்தேன்.
எனது பிளாக்கை அழகாக்குவது எப்படி போன்றவற்றிற்கு உதவி தேவை.
செய்வீர்களா?கூறுவது: புதுகைத் தென்றல் | Thursday, 06 December 2007
-
Hai,
Greetings!!!
Excellent attempt.கூறுவது: ck | Friday, 07 December 2007
-
இது நன்றாக வளரக்கூடிய பதிவாக என் உள்மனம் எண்ணுவது
தெரிகிற்து.வாழ்க வள்முடன்கூறுவது: இராசகோபாலன் | Monday, 28 January 2008
-
நல்லதொரு பதிவு - பயன்படும் பதிவு. நன்றிகள்
கூறுவது: Cheena ( சீனா) | Monday, 28 January 2008
-
wish all the best
கூறுவது: Pramila Dharshini | Thursday, 20 August 2009
மறுமொழி இடுக!
இணையத்தமிழ் எழுதுகருவிகள்:
1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)



