❒ சிந்தாநதி ஓய்ந்தது | H | ❒ யார் இந்த தமிழ்ச்செல்வன்?

Thursday, 01 November 2007

❒ உடனடி இணையத்தொடர்பு

இணைய இணைப்பு இல்லாத இடத்தில் பிஎஸ்என்எல் தொலைபேசி மூலம் உடனடி இணையத்தொடர்பு பெறலாம்.

இணையத் தொடர்பு பெறாத இடங்களில் உள்ள கணினி அல்லது உங்கள் மடிக்கணினி மூலம் இணையத் தொடர்பு பெற வழி இருக்கிறது. இந்தியாவில் எங்கிருந்தும் பிஎஸ்என்எல் தரைவழித் தொலைபேசி அல்லது செல்ஒன் போஸ்ட்பெயிட் இணைப்பு இருந்தால் அதன்மூலம் டயல்அப் இணையத்தொடர்பை உடனடியாக பெற இயலும். விண்ணப்பமோ, இணையத்தொடர்புக் கணக்கு அட்டையோ வாங்கத் தேவை இல்லை.

வழிமுறை:

தொலைபேசி இணைப்பில் கணினி மோடத்தை இணைத்துக் கொள்ளவும்.

கணினியில் டயல் அப் அக்சஸ் கோடு 172222 என்ற எண்ணுக்கு செட் செய்து கொள்ளவும்.

பயனர்பெயர் (யூசர்நேம்) : எஸ்டிடிகோடு + தொலைபேசி எண்
காப்புப் பெயர் (பாஸ்வேர்ட்) : உங்கள் விருப்ப ஆல்பா-நியூமெரிக் பெயர்.

அவ்வளவு தான் இணைப்பு தயார். பயனர் பெயராக தொலைபேசி எண் இருப்பதால் அந்த தொலைபேசி எண்ணுக்கு மட்டுமே அந்த காப்புப் பெயருடன் இணையத்தொடர்பு கிட்டும். அதே எண்ணில் இருந்து தொடர்ந்து அதே பாஸ்வேர்ட் மூலம் இணையத்தொடர்பை பயன்படுத்தலாம். வேறொரு எண்ணுக்கு எனில் மீண்டும் புதிதாக செட் செய்து கொள்ள வேண்டும்.

கட்டணவிவரம் -

இணைய இணைப்பு நேரத்தில் தொலைபேசிக் கட்டணம் நிமிடத்துக்கு 10 காசுகள் மற்றும்
இணையக் கட்டணம் காலை 7.30 மணி முதல் இரவு 10.30 வரை ஒரு புள்ளி 450 வினாடிகள். அதாவது ஏழரை நிமிடங்கள். இரவு 10.30 முதல் காலை 7.30 வரை ஒரு புள்ளி 900 வினாடிகள். அதாவது பதினைந்து நிமிடங்கள், ஒரு கால் ஆக கணக்கிடப்படும்.

இந்தக் கட்டணங்கள் தொலைபேசி பில்லில் இணைக்கப்பட்டு வந்துவிடும். முன்கூட்டியே செலுத்த தேவை இல்லை.

விவரங்களுக்கு:

http://netonechn.bsnl.co.in

or

TOLL FREE Call Centre Number 1500


Technorati tags: , , , ,

வாழ்த்து - THUMBS UP  -._/|\_.-  வசவு - THUMBS DOWN

22:00 Posted in இணையம் | Permalink | Comments (5) | Email this | Tags: internet, dialup |  del.icio.us | | Digg! Digg

  நாட்டிலிருந்து இந்தப் பதிவை வாசிக்கும் இனிய தோழரே!... தோழியே!
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!

தமிழின் வேகமான திரட்டி
முழுமையான பதிவுகள் திரட்டி
தமிழ் திரட்டிகளின் திரட்டு

செய்திகள், மின்னிதழ்கள்,
பிறமொழிப் பதிவுகள்
சினிமா, சமையல், வேலைவாய்ப்பு

http://tamil.kanimai.com

மறுமொழிகள்:

  1. மன்னிக்கவும் இந்த திட்டத்தில் ‍BSNLன் ஏமாற்று வேளைகளை இங்கு http://tamilbasic.blogspot.com/2007/05/bsnl.html வெளிப்படையாக எழுதியுள்ளேன்.


    தடம்: http://tamilbasic.blogspot.com/2007/05/bsnl.html

    கூறுவது: psv | Sunday, 04 November 2007

  2. நண்பரே!

    வெளியூரில் உறவினர் வீட்டில் இருந்த போது இத்திட்டம் எனக்கு அவசரத்துக்கு உதவியது....

    வேகம் குறைவு தான்...ஆனால் இருந்த இடத்திலேயே உடனடியாக இணையத்தொடர்பு பெற்று பயன்படுத்த முடிகிறது.....

    பிராட்பேண்ட் குறைபாடு இப்போது எனக்கும் ஏற் பட்டுதான் இருக்கிறது.......
    ஆனால் அழைத்தால் உடனே வந்து சரி செய்ய முயற்சிக்கிறார்கள். (சரி செய்து விடுகிறார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்றாலும் உடனே வந்து செயல்படுகிறார்கள்) அரசாங்க மெத்தனங்களால் அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் உடனுக்குடன் கிடைப்பதில்லை... அதனால் ஏற்படும் குறைபாடுகள் இருக்கின்றன.

    ஆனால் எனக்குத் தெரிந்து மற்ற அரசுத்துறை நிறுவனங்கள் அளவுக்கு பிஎஸ்என்எல் சேவையில் மெத்தனம் காட்டுவதாக இல்லை. தனியார் நிறுவனங்களோடு ஒப்பிடும்போது ஒரு சில குறைபாடுகள் தோன்றலாம். ஆனால் எனது நண்பர்கள் சிலர் தனியார் சேவைகளை முயற்சித்து விட்டு பிஎஸ்என்எல் சேவைக்கு வந்ததும் அறிவேன்.

    கூறுவது: ☆ சிந்தாநதி | Sunday, 04 November 2007

  3. ஹூம்! தொலைப்பேசி எண் மாறியதற்காக திரும்ப ரிசிஸ்டர் செய்யலாம் என்று தேவையான விபரங்கள் கொடுத்து "செய்" என்று சொல்லிய போது அப்படியே நின்றுவிட்டது.மறுபடி முயலவேண்டும்.

    கூறுவது: வடுவூர் குமார் | Sunday, 04 November 2007

  4. //ஆனால் எனது நண்பர்கள் சிலர் தனியார் சேவைகளை முயற்சித்து விட்டு பிஎஸ்என்எல் சேவைக்கு வந்ததும் அறிவேன்.//

    அவர்களில் ஒருவன்:-)

    கூறுவது: காசி | Sunday, 04 November 2007

  5. என்னுடைய அனுபவம் - இருக்கும் சேவைகளில் BSNL சேவை சிறந்ததாகத் தோன்றுகிறது. மற்றவர்களின் அனுபவம் ??? No comments. தற்போது wifi - Blue tooth - Wireless Internet என்று என்னென்னவோ சொல்கிறார்களே !! இணயத் தொடர்பு இன்றைய சூழ்நிலையில் சிரமங்கள் நிறைந்ததாகத் தோன்றவில்லை.

    தகவலுக்கு நன்றி சிந்தாநதி

    கூறுவது: சீனா | Sunday, 04 November 2007

மறுமொழி இடுக!


இணையத்தமிழ் எழுதுகருவிகள்:

1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)