☜ ❒ சுயமரியாதைக் கலயாணம் செய்யணுமா? | H | ❒ செய்தி என்றால் என்ன? ☞
Thursday, 20 September 2007
❒ வேர்ட்பிரஸ்.காம் பதிவு டிப்ஸ்
பதிவு இடும்போது வேர்ட்பிரஸ் காம்மில் வரும் ஒரு பிரச்சினையை கவனித்திருப்பீர்கள். தமிழில் தலைப்பு இடும்போது பதிவு இடுகைகளின் தனிச்சுட்டிகள் ஓரே குழப்பமாக மிக நீண்ண்ண்ட சுட்டியாக மாறிவிடும்.
சொந்த தளத்தில் வேர்ட்பிரஸ் பதிவு வைத்திருப்பவர்களுக்கு இதற்கு மாற்றாக தனிச்சுட்டியில் தமிழ் சுட்டியை எண் வரிசை சுட்டியாக மாற்றிக் கொள்ள ஆப்ஷன் இருக்கிறது. (default ஆகவே எண் வரிசைச்சுட்டி தான் வரும்) ஆனால் வேர்ட்பிரஸ்.காம் வழியாக பதிவு இடுகிறவர்கள் இந்த நீண்ட சுட்டியை சகித்துக் கொள்ள வேண்டும். மேலும் இது பல இடங்களில் முறிந்து சிக்கலாகவும் ஆகிவிடும்.
உதாரணமாக
http://kanimai.wordpress.com/2007/05/17/%e0%ae%b5%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d/
இந்த இடுகையின் தலைப்பு வணக்கம்.
இந்த ஒரே சொல் எத்தனை நீளமாக ஆகி விட்டது பாருங்கள். தலைப்பில் நாலைந்து சொற்கள் இருந்தால் சுட்டி பத்துப் பதினைந்து வரிகளுக்கு வரும்...
இதைத் தவிர்க்க என்ன செய்யலாம்?
எளிய வழி இருக்கிறது.
இடுகையின் தமிழ் தலைப்பை தனியாக நோட்பேடில் இட்டு வைத்துக் கொள்ளுங்கள். இடுகையை இட்டு publish செய்யும்போது தலைப்பை ஆங்கிலத்தில் இடுங்கள்.
அடுத்து manage post - edit post - வழியாக அந்த இடுகையைத் தேர்வு செய்து ஆங்கிலத் தலைப்பை தமிழ் தலைப்பாக மாற்றுங்கள்.
[ஆகவே எளிய குறுக்கு வழியாக நண்பர்கள் கூறியுள்ளபடி ..]
தமிழில் தலைப்பிட்டு பதிவை எழுதி விட்டு வலப்புறம் கீழே post slug என்ற பகுதியில் வரும் சிறு பெட்டியில், உங்கள் இடுகைக்கான தனிச்சுட்டியில் வர வேண்டிய ஆங்கிலச் சொல்லையோ, தலைப்பையோ அல்லது எண்ணையோ இட்டு publish செய்து விடலாம்.
இப்போது தலைப்பு தமிழிலும் சுட்டி ஆங்கிலத்திலும் இருக்கும். நீளமான குழம்பிய சுட்டி வராது. Its gone... போயே போச்...
உதாரணம்
http://kanimai.wordpress.com/2007/09/20/how-to-start-a-blog/
தலைப்பு :
வலைப்பதிவு அறிமுகம் பெறுவது எப்படி?
Technorati tags: tamilblogs, tamilnews, tamilcinema, சினிமா, தமிழ்ப்பதிவுகள்
11:50 Posted in இணையம் | Permalink | Comments (8) | Email this
| Tags: wordpress. இணையம், link |
del.icio.us
|
|
Digg
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!
![]() |
தமிழின் வேகமான திரட்டி
செய்திகள், மின்னிதழ்கள், |
மறுமொழிகள்:
-
இதை விட எளிமையான தீர்வு: பதிவு editorஇல் 'post slug' என்னும் பெட்டியில் வேண்டிய ஆங்கிலப் பெயரை வழங்கினால், wordpress தமிழ்த் தலைப்புக்கு பதிலாக அந்த ஆங்கிலப் பெயரையே நிரந்தரச் சுட்டியில் பயன்படுத்திக் கொள்ளும். (காண்க: http://codex.wordpress.org/Writing_Posts#Advanced_Post_Editing_Screen)
கூறுவது: Voice on Wings | Thursday, 20 September 2007
-
Voice on Wings தகவலுக்கு நன்றி.
கூறுவது: ☆ சிந்தாநதி | Thursday, 20 September 2007
-
http://tamilblogging.blogspot.com/2007/06/wordpresscom-url.html
ஆனால், என் பரிந்துரை இந்த கொச கொச முகவரியை மாற்றாமல் அப்படியே வைத்துக் கொள்வது நல்லது..நிச்சயம் தேடு பொறிகளில் கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கும். தேடுபொறிகளில் தளத்தைக் காண்பவர்களுக்கும் முகவரி வாயிலாகவே இடுகையின் உள்ளடக்கத்தை அறிய உதவும்.கூறுவது: ravishankar | Thursday, 20 September 2007
-
ravishankar நன்றி.
ஆனால் மாற்ற விரும்புகிறவர்களுக்கு குறுக்கு வழி :) தேவைதானே?
ஓ...நீங்கள் ஏற்கனவே இதை (post slug) விளக்கி பதிவு போட்டிருக்கீங்களா? கவனிக்கவில்லை :(கூறுவது: ☆ சிந்தாநதி | Thursday, 20 September 2007
-
I remember seeing something similar from ravishankar. am not sure.
But i dont understand why we have to do all these unnecessary steps. I use 'post-slug' in all my blogs.
Just checked in wordpress.com. Post-slug feature is available in wordpress.com too. Just check on the right-hand side when writing new posts.
-Mathyகூறுவது: Mathy Kandasamy | Thursday, 20 September 2007
-
Mathy வாங்க...
yes... post slug is the correct way.நன்றி.கூறுவது: ☆ சிந்தாநதி | Thursday, 20 September 2007
-
post slug குறிப்பையே திருத்தமாக இணைத்தாயிற்று.....
கூறுவது: ☆ சிந்தாநதி | Thursday, 20 September 2007
-
மாற்றினால் தேடல் பொறிகளில் விடுபடும் அபாயம் உள்ளதல்லவா??? தமிழ் விக்கீப்பீடியாவில் கூட அப்படித்தான் வரும்! :(
கூறுவது: மயூரேசன் | Wednesday, 26 December 2007
மறுமொழி இடுக!
இணையத்தமிழ் எழுதுகருவிகள்:
1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)



