❒ வலைப்பதிவு அறிமுகம் பெறுவது எப்படி? | H | ❒ மோதுறாங்கோ மோதுறாங்கோ...

Tuesday, 11 September 2007

❒ ஜிமெயில் ஒரு ஆரம்பம்

வலைப்பதிவர்கள் அதிகம் பயன்படுத்திக் கொண்டிருப்பது blogger.com தரும் வலைப்பதிவு சேவையைத்தான். இதற்குக் காரணம் இதைவிட அதிக வசதிகள் பிற சேவைகளில் இருந்தாலும் இணையப்பக்கம் குறித்து அதிகம் அறியாதவர்களுக்கும், நிறைய அறிந்தவர்களுக்கும் தேவையான வசதிகள் இதில் தான் இருக்கின்றன.

உதாரணமாக இணையப்பக்க வடிவமைப்பு, HTML நிரல் குறித்து அறிந்திராதவர்கள் கூட பிளாக்கர் தரும் ரெடிமேட் அடைப்பலகை (template) களைப் பயன்படுத்திக் கொண்டு தங்கள் படைப்புக்களை வலைப்பதிவில் காட்சிப்படுத்தலாம். ஒரு வேர்ட்பாட் (word pad) போன்ற வசதி கொண்ட எழுதும் பக்கத்தில் சென்று எழுதி பதிந்து விட்டால் அது தானாக பதிவில் தேதி நேரத்துடன் பதிவாகி வந்து விடும்.

அதே சமயம் நிரல்களில் பரிச்சயம் உள்ளவர்கள் முழுநிரலையும் தலைகீழாக மாற்றிப் போட்டு சொந்தமாக அடைப்பலகைகளை எளிதாக வடிவமைக்கவும் தேவையான ஜாவாஸ்க்ரிப்ட் அலங்காரங்களையும் அதிலேயே செய்து கொள்ளவும் சுதந்திரம் கொடுத்தது பிளாக்கர்.

இதில் பதிவு தொடங்க நேரடியாக பிளாகர் வலைப்பக்கம் சென்று எளிதாக தொடங்கி விட முடியும்.

கூகுள் நிறுவனம் பிளாக்கரை வாங்கி நிறைய மேம்படுத்தல்கள் செய்து பீட்டா பிளாக்கரை அறிமுகம் செய்தது. இதன்பிறகு ஜிமெயில் கணக்கு இருந்தால் தான் பிளாக்கரில் பதிவு தொடங்க முடியும்.

ஜிமெயில் கணக்கில் இருந்து நேரடியாக பிளாக்கரில் நுழைய முடியும். பிளாக்கர் தளத்தில் ஜிமெயில் பயனர் பெயரில் தான் உள் நுழைய முடியும்.

ஆகவே முதலில் ஜிமெயில் கணக்கு தொடங்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?

அடிப்படையில் இருந்தே ஆரம்பிப்போம்.

கூகுள் தான் இன்று தேடுபொறிகளில் முன்னிலை வகிக்கிறது. அதன் ஜிமெயிலும் பிளாக்கரும் அது போலவே நமக்கு முதன்மையான சேவைகளாக இருக்கின்றன.

எனவே கூகுளில் இருந்து தொடங்குவோம்.

முதலில் google.com தளத்துக்கு செல்வோம்.

Image and video hosting by TinyPic

எல்லா இணையதளங்களின் முகவரியையும் நினைவில் வைத்திருப்பது எளிதல்ல. அதிலும் அவற்றின் விரிவான முழு முகவரி நினைவில் வைப்பது மற்றும் அவற்றை தட்டச்சு செய்வது சிரமம். எனவே ஒரு தளப்பெயரின் முக்கிய பாகம் ஒரு சொல் சரியாக நினைவிருந்தால் அந்தச் சொல்லை கூகுள் தேடுபொறியில் கொடுத்து விட்டால் தேடுதல் முடிவுகளில் அந்தச் சரியான தளத்துக்கான சுட்டி பெரும்பாலும் கிடைத்து விடும்.Image and video hosting by TinyPic

இப்போது நமக்கு gmail தேவை எனவே gmail என்று கூகுள் தேடுபொறியில் தட்டச்சு செய்து தேடுதல் கட்டளை கொடுத்தால் gmail பக்கத்துக்கான சரியான சுட்டி நமக்குக் கிடைத்து விடும்.

இது தான் gmail கணக்கு தொடங்க, செல்ல வேண்டிய தளம்.

mail.google.com/

இந்தப் பக்கத்தில் கீழ்வலது பக்கம் Sign up for Gmail என்று இருக்கும் சுட்டி வழியாக

http://mail.google.com/mail/signup

என்னும் பக்கத்துக்கு செல்ல வேண்டும்.

இங்கே இருக்கும் படிவத்தில் விவரங்களை நிரப்பி ஒரு Gmail கண்க்கை உருவாக்கிக் கொள்ளவும்.

(ஜிமெயில் உருவாக்க சமீப காலம் வரை இன்னொரு ஜிமெயில் பயனர் அழைப்பு அனுப்ப வேண்டி இருந்தது. இப்போது நேரடியாகவே ஜிமெயில் கணக்கு தொடங்க முடியும்.)
Image and video hosting by TinyPic
யாகூ போன்ற பல தளங்களில் மின்னஞ்சல் தொடங்க பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட பல சொந்த விவரங்கள் தர வேண்டி இருக்கும். ஆனால் ஜிமெயில் கணக்கு தொடங்க சொந்த விவரங்களாக பெயர் மற்றும் நாடு மட்டுமே பதிய வேண்டும். வேறு எந்த விவரமும் அதிக படிவ விவரங்களும் தேவை இல்லை.

கடவுச்சொல் (பாஸ்வேர்ட்) மறந்துவிடாமல் இருக்க...மறந்து விட்டால் மீண்டெடுக்க ஒரு ரகசிய கேள்வி பதில் அதில் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

நாம் விரும்பும் மின்னஞ்சல் பெயர் கிடைக்குமா? இருக்கிறதா? என்பதை check availability என்ற சுட்டியைப் பயன்படுத்தி பரிசோதித்துக் கொண்டு ஒரு முகவரியை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

அவ்வளவு தான் இப்போது நீங்கள் ஜிமெயில் கணக்கு உருவாக்கி விட்டீர்கள்.

ஜிமெயிலில் நுழைந்து சோதித்துக் கொள்ளுங்கள்.

(ஜிமெயிலைப் பயன்படுத்தி பிளாக்கர் கணக்கு, தமிழ் வலைப்பதிவு தொடங்குவது எப்படி - தொடரும்)

-oOo-

குறிப்பு: இந்த இடுகையை படித்து வரும் பலருக்கு சிறுபிள்ளைத் தனமாகக்கூட தோன்றலாம். கணினியில் புழங்குகிறவர்களுக்கோ, ஏற்கனவே வலைப்பதிவர்களாக இருப்பவர்களுக்கோ இவை பெரிதாக பயன்படப் போவதில்லை. மேலும் ஓரளவு இணையப் பரிச்சயம் உள்ளவர்களுக்கு இந்த நீட்டி முழக்கல் எரிச்சலாகக் கூட இருக்கலாம். ஆனால் ஒரளவு கணினிப் பயிற்சி இருந்தாலும் இணையப் பரிச்சயம் குறைவாக உள்ளவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.

உதாரணமாக எனக்குத் தெரிந்த இருவரைச் சொல்லலாம். ஒருவர் கணினியில் DTP பயிற்சி முடித்து ஆப்செட் அச்சகம் ஒன்றில் பணி செய்பவர். இன்னொருவர் MS ஆபீஸ் பயின்று ஒரு நிறுவனத்தில் கணக்காளராக இருப்பவர். இவர்கள் இருவருமே இணைய இணைப்பு இல்லாத சூழலில் கணினிப் பயிற்சி பெற்றவர்கள்.

இவர்களைப் போன்றவர்களுக்கும் மாணவர்களுக்கும் இத்தனை விரிவான விளக்கம் அவசியம் என்று கருதுகிறேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?


Technorati tags: , , , ,

வாழ்த்து - THUMBS UP  -._/|\_.-  வசவு - THUMBS DOWN

06:55 Posted in internet | Permalink | Comments (8) | Email this | Tags: internet, gmail, blogger, வலைப்பதிவு, ஜிமெயில் |  del.icio.us | | Digg! Digg

  நாட்டிலிருந்து இந்தப் பதிவை வாசிக்கும் இனிய தோழரே!... தோழியே!
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!

தமிழின் வேகமான திரட்டி
முழுமையான பதிவுகள் திரட்டி
தமிழ் திரட்டிகளின் திரட்டு

செய்திகள், மின்னிதழ்கள்,
பிறமொழிப் பதிவுகள்
சினிமா, சமையல், வேலைவாய்ப்பு

http://tamil.kanimai.com

மறுமொழிகள்:

  1. நிச்சயம் அவசியம்னுதான் நினைக்கிறேன்.

    ஸ்க்ரீன்ஷாட்ஸ் இருந்தா இன்னுமே பயனளிக்கும்

    கூறுவது: பினாத்தல் சுரேஷ் | Tuesday, 11 September 2007

  2. //நிச்சயம் அவசியம்னுதான் நினைக்கிறேன்.

    ஸ்க்ரீன்ஷாட்ஸ் இருந்தா இன்னுமே பயனளிக்கும்//
    ரிப்பீட்டே!!

    கூறுவது: முத்துகுமரன் | Tuesday, 11 September 2007

  3. சுரேஷ், முத்துக்குமரன் வாங்க

    ஸ்கிரீன்ஷாட்ஸ் எடுத்து வைத்திருந்தேன்.கட்டுரை மிகவும் பெரியதாக வந்து விடுமோ என்று போடாமல் விட்டேன்.

    போட்டு விடலாம்.

    கூறுவது: ☆ சிந்தாநதி | Tuesday, 11 September 2007

  4. ஏதோ ஜிமெயிலில் நடக்கக்கூடாதது நடந்துவிட்டதோ என்று வந்து பார்த்தேன்.... இப்படி ஏமாற்றிவிட்டீர்களே''!!!!!

    தொடக்கத்திலயே இது புத்தம் புதியவர்களுக்கு மட்டும் என்று ஒரு தலைப்பு இட்டிருக்கலாமே!!!! :)

    கூறுவது: மயூரேசன் | Tuesday, 11 September 2007

  5. புதிதாக வலைபதிவு, மின்னஞ்சம் தொடங்க விருப்பமுள்ளவர்க்கு பயனுள்ளதாக இருக்கும்.

    கூறுவது: J K | Tuesday, 11 September 2007

  6. எனக்கென்னவோ இது போன்ற கையைப் பிடித்துச் சொல்லித் தரும் கட்டுரைகளில் அதிக நம்பிக்கையில்லை. இணையம் முழுக்கத் தமிழில் இருந்தால் கூட அவரவர் ஆர்வம் கொண்டு நோண்டிப் பார்க்காமல் அதிகம் கற்றுக் கொள்ள முடியாது..

    கூறுவது: ravishankar | Wednesday, 12 September 2007

  7. kandipa ennai ponravarkaluku ithu mathiri pathio theyvai

    கூறுவது: sridhar | Wednesday, 12 September 2007

  8. புதியவர்களோ அறிமுகமானவர்களோ ‍ இப்பகுதி தேவையான ஒன்று ‍ தேவைப் படுபவர்கள் எடுத்துக் கொள்ளட்டும் ‍ மற்றவர்கள் தாவிச்செல்லட்டும்

    கூறுவது: cheena | Sunday, 16 September 2007

மறுமொழி இடுக!


இணையத்தமிழ் எழுதுகருவிகள்:

1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)