❒ நான்கு வருடம் தூங்கிய ராம்கி | H | ❒ வலைப்பதிவு என்றால் என்ன?

Thursday, 16 August 2007

❒ பட்டறையும் பதிவர் சந்திப்புகளும்

தமிழ்ப் பதிவுலகை உலுக்கிப் போட்ட பதிவர் பட்டறை சென்னையில் நடந்து முடிந்திருக்கிறது. பட்டறையில் நடைபெற்ற ஆக்கப் பூர்வமான செயல்களால் உலுக்கிப் போடாமல் பயனற்ற விவாதங்களால் உலுக்கி குலுங்கி உருண்டு புரண்டு ஒரு ரவுண்டு முடிந்து விட்டது. இப்போதைக்கு முடிந்ததாக கொள்ளலாம் என்றாலும் யார் எப்போது மறுபடி ஆரம்பிப்பார் என்று சொல்ல முடியாத ரகத்தைச் சேர்ந்த விவாதங்கள் அவை.

அது கிடக்கட்டும்.

2002 ல் ஆரம்பமான தமிழ் வலைப்பதிவுலகின் இணையப் பயணம் மிக நீண்ண்ண்டது அல்ல. ஐந்து வருடம் கடந்திருக்கிறது அவ்வளவு தான்.

பதிவுகள் சில நூறு கடந்த நிலையிலேயே பதிவர் சந்திப்புகளும் ஆரம்பமாகி விட்டன. யார் முதலில் ஆரம்பித்தார்கள் என்று சரியாக சொல்ல முடியாவிட்டாலும் காசி, பெயரிலி. கார்த்திக், நவன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்ட அமெரிக்க வாழ் தமிழ்ப்பதிவர்களின் சந்திப்பு, பின்னர் மதி, டிசே போன்றவர்கள் கலந்து கொண்ட கனடாவாழ் பதிவர்களின் சந்திப்பு போன்றவை பற்றி பதிவுகளில் படித்தது என் நினைவில் இருக்கிறது.

இப்படிப் பெரும்பாலும் வெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களாலேயே ஆரம்பிக்கப் பட்ட பதிவர் சந்திப்புகள் விடுமுறையில் நாடு திருப்பும் பதிவர்களோடு சந்திப்பாக சென்னையிலும் நடைபெற ஆரம்பமானதாக நினைவு.

தமிழ்நாட்டிலும் உலகின் தமிழ்வலைப் பதிவர்கள் வாழும் பிற நாடுகளிலும் பதிவர் சந்திப்புகள் ஆங்காங்கே நிகழ்ந்தன.

பின்னர் சென்னை வாழ் பதிவர்கள் அவ்வப்போது சந்திப்புகளை நடத்த ஆரம்பித்தனர். பூங்கா சந்திப்புகள், போண்டா சந்திப்புகள் என்று இருந்ததை பாலபாரதி உள்ளரங்க சந்திப்பாகவும் பொருளடக்கத்துடன் கூடியதாகவும் மாற்றினார்.

அடுத்த சந்திப்பு பூங்காவில் நடைபெற்றாலும் சாகரன நினைவு மலருடன் தெளிவான நிகழ்ச்சி நிரலுடன் மீடியா கவரேஜும் தந்த சிறப்பான சந்திப்பாக ஏற்பாடு செய்யப் பட்டது.

இதைத்தொடர்ந்து கோவையில் ஓசைசெல்லா முதலாவது பதிவர் பட்டறைக்கு ஏற்பாடு செய்தார். எதிர்பாராமல் அவரால் நேரில் கலந்து கொள்ள முடியாத சூழலில் அந்த பட்டறையையும் பாலபாரதியே நடத்தி முடித்தார். எனினும் பயிலரங்கை விட இலக்கியம் கலைகள் குறித்த சுவையரங்காகவே அந்த நிகழ்வு அமைந்து விட்டது.

பதிவுலகை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தியே தீருவேன் என்று முயற்சி மேற்கொண்டிருந்த பாலபாரதி, ஆங்கிலப் பதிவுகளின் பட்டறைப் பொறுப்புகளில் பெற்ற அனுபவத்தால் தமிழிலும் நடத்த ஆர்வம் கொண்டிருந்த விக்கி ஆகியோரின் ஆர்வத்துடன் தமிழ் இணையச் செயல்பாடுகள் பலவற்றில் ஏற்கனவே பங்காற்றி இருந்த மா.சிவகுமார், நிகழ்காலப் பதிவுலக சுறுசுறுப்புத் தேனீ பொன்ஸ் ஆகியோர் இணைந்து சென்னைப் பட்டறைக்கான முதல் வடிவம் கொடுத்தனர். பட்டறைக்கான தள அமைப்பில் தொடங்கி ரவிசங்கரும் பொருளாதார ஆலோசனைகளுடன் பிரகாஷும் பட்டறை ஆலோசனைக்குழுவில் இணைந்து பட்டறைக்கான செயல்வடிவம் உருப்பெறத் துவங்கியது. பட்டறைக்கான சின்னம் உருவாக்க விக்கியால் அழைக்கப் பட்டு நானும், விளம்பர வடிவமைப்புகளில் தொடங்கி லக்கியும் பின்னர் இணைந்து கொண்டோம். பொதுக்குழுமம் ஒன்று அமைக்கப் பட்டு எங்களைத்தவிர பங்கேற்பாளர்களின் ஆலோசனைகளும் பெறப்பட்டன.

பட்டறையில் திறவூற்று தமிழ் மென்பொருள்கள் அடங்கிய சிடி மற்றும் தட்டச்சுக்கான கையேடு ஆகியவை பங்கேற்பாளர்களுக்கு வழங்க வேண்டும் என்ற ஆலோசனையை முன்வைத்த பாலபாரதி, கையேட்டை பத்ரி அச்சாக்கம் செய்து தர ஏற்றதும் அதை எழுதும் பொறுப்பை எனக்களித்தார். கணிச்சுவடி என்று மா.சிவகுமார் பெயர் தந்தார்.

பட்டறை ஏற்பாடுகள் செயலாக்கம் பெற்று ஆகஸ்ட் 5ம் தேதி சென்னைப் பதிவர் பட்டறையாக நடைபெற்று மேலே கண்ட கலவையான உணர்வலைகளை தமிழ் வலைப்பதிவர்களிடையே எற்படுத்தி வைத்திருக்கிறது.

பதிவர் பட்டறை குறித்து இன்று இங்கே எழுதக் காரணம்....
பட்டறைக்காக கணிச்சுவடி என்ற கணித்தமிழ் வழிகாட்டியை எழுதி வந்த வேளை அதற்காக எழுத ஆரம்பித்த பல குறிப்புகள் சுவடியில் சேர்க்க தேவை இல்லாமல் இருந்தது. எனினும் புதியவர்களுக்கு பயன்படும் பல குறிப்புகள் அவை என்பதாலும் குறிப்பிட்ட தலைப்பில் இதுவரை முழுமையான வழிகாட்டி இல்லை என்று சொல்லப் பட்டதாலும் வலைப்பதிவுகள் என்றால் என்ன என்பது தொடங்கி ஒரு தொடராக எழுத இருக்கிறேன்....

உங்கள் ஒத்துழைப்பும் அவ்வப்போது ஆலோசனைகளும் எதிர்பார்க்கிறேன்...


Technorati tags: , , , ,

வாழ்த்து - THUMBS UP  -._/|\_.-  வசவு - THUMBS DOWN

10:45 Posted in internet, இணையம், வலைப்பதிவு | Permalink | Comments (12) | Email this | Tags: blog |  del.icio.us | | Digg! Digg

  நாட்டிலிருந்து இந்தப் பதிவை வாசிக்கும் இனிய தோழரே!... தோழியே!
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!

தமிழின் வேகமான திரட்டி
முழுமையான பதிவுகள் திரட்டி
தமிழ் திரட்டிகளின் திரட்டு

செய்திகள், மின்னிதழ்கள்,
பிறமொழிப் பதிவுகள்
சினிமா, சமையல், வேலைவாய்ப்பு

http://tamil.kanimai.com

மறுமொழிகள்:

  1. //வலைப்பதிவுகள் என்றால் என்ன என்பது தொடங்கி ஒரு தொடராக எழுத இருக்கிறேன்//
    superrrruu..

    கூறுவது: poorna | Thursday, 16 August 2007

  2. நல்ல முயற்சி; உடனடித்தேவை இது.
    'அ'விலிருந்து ஆரம்பிங்க.......

    கூறுவது: சிவஞானம்ஜி | Thursday, 16 August 2007

  3. //இப்போதைக்கு முடிந்ததாக கொள்ளலாம் என்றாலும் யார் எப்போது மறுபடி ஆரம்பிப்பார் என்று சொல்ல முடியாத ரகத்தைச் சேர்ந்த விவாதங்கள் அவை.//

    கரெக்ட்டு.. நான் ஒருத்தன் பாக்கியிருக்கேன். மறந்திராதீங்க.. நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதி வைச்சிருக்கேன். முடிக்கிறதுக்கு நேரமில்ல. முடிச்சவுடனே போடுறேன் ஸார்..

    கூறுவது: உண்மைத்தமிழன் | Thursday, 16 August 2007

  4. மிகவும் நல்ல பணியை தொடங்க போகிறீர்கள். வெற்றியடைய வாழ்த்துக்கள்.

    கூறுவது: மஞ்சூர் ராசா | Thursday, 16 August 2007

  5. நல்ல ஆரம்பம். வெற்றியடைய வாழ்த்துக்கள்

    கூறுவது: மஞ்சூர் ராசா | Thursday, 16 August 2007

  6. //நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதி வைச்சிருக்கேன். முடிக்கிறதுக்கு நேரமில்ல. முடிச்சவுடனே போடுறேன் ஸார்..//
    என்ன கொடுமை சரவணன் இது..!
    (ஆமாம், அதே சரவணன் தான் ;))

    கூறுவது: poorna | Thursday, 16 August 2007

  7. /பயனற்ற விவாதங்களால் உலுக்கி குலுங்கி உருண்டு புரண்டு/

    /பயனற்ற விவாதங்களால் உலுக்கி குலுங்கி உருண்டு புரண்டு /
    "பட்டறைக்குப் பயனற்ற விவாதங்களால் உலுக்கி குலுங்கி உருண்டு புரண்டு" என்று சொல்ல வந்தீர்களென்று நம்புகிறேன்.

    கூறுவது: -/பெயரிலி. | Thursday, 16 August 2007

  8. //வலைப்பதிவுகள் என்றால் என்ன என்பது தொடங்கி ஒரு தொடராக எழுத இருக்கிறேன்.....//

    மிகத் தேவையான ஒன்று. தொடர் முடிந்தபின் அனைத்தையும் PDF வடிவிலும் வெளியிடுங்கள், பதிவிறக்க, பதிப்பிக்க வசதியாய் இருக்கும்.

    கூறுவது: கோபி | Thursday, 16 August 2007

  9. எழுதுங்கள் என்னை போன்றவர்களுக்கு புரியும்படி

    கூறுவது: thiyagu | Thursday, 16 August 2007

  10. இரு வருடங்களுக்கு முன் நானும் குழைக்காட்டானும் யாழ்பாணத்தில் சந்தித்தோம் அதுதான் முதலும் கடசி சந்திப்பும்

    கூறுவது: தமிழ்பித்தன் | Thursday, 16 August 2007

  11. சிந்தா!
    மிகநல்ல முயற்சி. தொடங்குங்கள், தொடருங்கள்.

    கூறுவது: மலைநாடான் | Friday, 17 August 2007

  12. சிந்தா!
    மிகநல்ல முயற்சி. தொடங்குங்கள், தொடருங்கள்.

    கூறுவது: மலைநாடான் | Friday, 17 August 2007

மறுமொழி இடுக!


இணையத்தமிழ் எழுதுகருவிகள்:

1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)