❒ கலக்கியது பதிவர் பட்டறை! | H | ❒ பட்டறையும் பதிவர் சந்திப்புகளும்

Thursday, 09 August 2007

❒ நான்கு வருடம் தூங்கிய ராம்கி

1. வலைப்பதிவுலக வாத்தியார்கள் மவுனம் சாதிப்பது எதற்கோ? என்றொரு கேள்வி கேட்டிருக்கிறார் ராம்கி.

ஒரு வாத்தியார் (தேவையின்றி) வாய் திறந்ததன் தண்டனையை நாங்களல்லவா அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

2. ஏற்கனவே பதியும் இரண்டாயிரம் பேரை தக்க வைத்துக் கொள்ள மந்திரம் உண்டா?

அந்த மந்திரத்தைத்தான் நீங்கள் குத்தகைக்கு எடுத்திருக்கிறீர்களே? நீங்களே ஓதுங்கள்.

3. தண்ணியடிப்பது, தம்மடிப்பது பற்றி செய்தியாகக்கூட வலைப்பதிவர்கள் யாரும் எழுதியதில்லை.

செய்யலாம்; எழுதக்கூடாது?

4. எலிக்குட்டி சோதனை பற்றியெல்லாம் லக்கிலுக்கிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

எலிக்குட்டியெல்லாம் பிடித்து முழுங்கி விட்டுத்தான் லக்கி உட்பட எல்லோருமே அடுத்த வழிக்கு போகிறோம்.

5. 'சற்றுமுன்' விஷயங்களையெல்லாம் பாஸ்டன் பாலாஜி எப்போதே செய்துவிட்டார்.

பாபாவைப் பாராட்டியது தப்பில்லை. அதற்காக சற்றுமுன்னை வம்புக்கிழுத்திருக்க வேண்டாம்.

6. பதிவுகளின் சாதனையாக பிரமிட் சாயிராவின் 'மார்க்கெட்டிங்' வலைப்பதிவு!

சாதனை என்று சொன்னார்களா? மாறுபட்ட முயற்சிகள் என்றார்களா? இரண்டுக்கும் வேறுபாடு இல்லையா?

7. எப்படியோ நான்கு வருஷங்களாக கூடிப்பேசியும் நிறைவேறாத விஷயம் இன்று கண்முன் நடந்தேறியிருக்கிறது.

இது ரொம்ப முக்கியமான விஷயம். எங்கே கூடிப்பேசினீர்கள் என்பதைக் கொஞ்சம் ஆதாரத்தோடு சொல்ல முடியுமா?

பதிவர் பட்டறை - நான்கு வருஷ கனவு - ரஜினிராம்கி


Technorati tags: , , , ,

வாழ்த்து - THUMBS UP  -._/|\_.-  வசவு - THUMBS DOWN

08:30 Posted in வலைப்பதிவு | Permalink | Comments (5) | Email this | Tags: பதிவர் பட்டறை |  del.icio.us | | Digg! Digg

  நாட்டிலிருந்து இந்தப் பதிவை வாசிக்கும் இனிய தோழரே!... தோழியே!
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!

தமிழின் வேகமான திரட்டி
முழுமையான பதிவுகள் திரட்டி
தமிழ் திரட்டிகளின் திரட்டு

செய்திகள், மின்னிதழ்கள்,
பிறமொழிப் பதிவுகள்
சினிமா, சமையல், வேலைவாய்ப்பு

http://tamil.kanimai.com

மறுமொழிகள்:

  1. இது நிச்சயமாக தனிமனித தாக்குதல் தான்!

    ஆயினும் ரசிக்கும்படியான இதுமாதிரி தனிநபர் தாக்குதல்களை வரவேற்கிறேன். பத்து வருடங்களுக்கு முன்பான குமுதத்தில் இதுமாதிரி நக்கல்களை படித்திருக்கிறேன். அதற்கு பின்பாக நக்கல் இலக்கியம் வறண்டு கிடந்தது. இன்று உங்கள் பதிவில் மலர்ச்சி பெற்றிருக்கிறது. நல்ல ரசிகரான ரஜினி ராம்கியும் உங்கள் நக்கலை ரசிப்பார் என்று நம்புகிறேன்.

    சிந்தாநதியண்ணே! கலக்கிப்புட்டீங்க!!!

    கூறுவது: லக்கிலுக் | Thursday, 09 August 2007

  2. லக்கி

    இதில் தாக்குதலும் இல்லை நக்கலும் இல்லை;)

    கூறுவது: ☆ சிந்தாநதி | Thursday, 09 August 2007

  3. //எலிக்குட்டி சோதனை பற்றியெல்லாம் லக்கிலுக்கிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.//

    இதுபற்றி மட்டும் விளக்கம் சொல்லிக்கறேன்.

    எலிக்குட்டி சோதனை என்பது இன்னமும் வலைப்பதிவில் பழம் தின்று கொட்டை போட்டவர்களுக்கே சரியாக பழகவில்லை. இச்சோதனையை பிரபலப்படுத்திய டோண்டு சாரே கூட சில நேரத்தில் போலி பின்னூட்டங்களை அனுமதித்து விடுகிறார். இந்நிலையில் புதியதாக வருபவர்களுக்கு "எலிக்குட்டியை" அறிமுகப்படுத்தி வெருண்டோடிச் செய்துவிட வேண்டுமா? என்று நண்பர்கள் சிலர் சொன்ன யோசனையின் காரணமாகவே அதை என் பேச்சில் Include செய்யவில்லை.

    அதே நேரம் மறக்காமல் "ஆபத்தான அதர் ஆப்ஷன்" பற்றி சொல்லியிருந்தேன் :-)

    கூறுவது: லக்கிலுக் | Thursday, 09 August 2007

  4. பாயிண்ட் 3 உபயம் செல்லா ;)

    கூறுவது: ☆ சிந்தாநதி | Thursday, 09 August 2007

  5. //இச்சோதனையை பிரபலப்படுத்திய டோண்டு சாரே கூட சில நேரத்தில் போலி பின்னூட்டங்களை அனுமதித்து விடுகிறார். //

    எலிக்குட்டி சோதனை எல்லா நேரத்திலும் பலன் தராது. உதாரணம்: பிளாக்கர் இல்லாத இப்பதிவில்.

    பின்னூட்டத்தை இடும் பதிவில் சம்பந்தப்பட்ட பதிவர் போட்டோ எனேபில் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அதர் ஆப்ஷன் இருக்கக் கூடாது. பின்னூட்டமிடுபவரும் தனது ப்ரொபைலில் ஏதாவது படம் வைத்திருக்க வேண்டும்.

    உண்மைத் தமிழனுக்கு எனது பதிவில் போலி பின்னூட்டம் வந்தபோது அதைத்தான் அவரிடம் கூறினேன். அப்போது அவர் போட்டோ வைத்திருக்கவில்லை. ஆகவே அதர் ஆப்ஷனில் வந்ததை கண்டுபிடிக்க இயலவில்லை. நான் கூறிய பிறகு வைத்தார். டிஸ்ப்ளே பெயரில் அடைப்புக் குறிக்குள் சம்பந்தப்பட்ட பதிவர் எண்ணை போடுவதும் நல்லதே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    கூறுவது: டோண்டு ராகவன் | Friday, 10 August 2007

மறுமொழி இடுக!


இணையத்தமிழ் எழுதுகருவிகள்:

1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)