☜ ❒ பதிவர்களுக்கு கொண்டாட்டம்! | H | ❒ ஜெயா டிவியில் மா.சிவகுமார் ☞
Wednesday, 18 July 2007
❒ இந்தியப் பிரதமரின் காதலி
நேருவைக் காதலித்தார் எனது அம்மா - மெளன்ட்பேட்டன் மகள்
டெல்லி தனிமையில் வாடி வந்த ஜவஹர்லால் நேருவுக்கும், எனது தாயார் எட்வினாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஆனால் உடல்களுக்கு இடையிலான உறவாக இல்லாமல், மனதோடு மட்டுமே அந்தக் காதல் இருந்தது என்று இந்தியாவின் கடைசி வைஸ்ராயான மெளன்ட்பேட்டன் - எட்வினா தம்பதியின் மகளான பமீலா மெளன்ட்பேட்டன் கூறியுள்ளார்.
இந்தியாவின் கடைசி வைஸ்ராயாக இருந்தவர் மெளன்ட்பேட்டன். இவரது மனைவி எட்வினா. இவருக்கும், இந்தியாவின் முதல் பிரதமர் நேருவுக்கும் இடையிலான ஆழமான நட்பு அந்தக் காலகட்டத்தில் வெகு பிரசித்தம். இருவரும் காதலித்ததாகவும் கூட ஒரு செய்தி இருந்தது.
இப்போது அதை உறுதிப்படுத்தியுள்ளார் எட்வினாவின் மகளான பமீலா மெளன்ட்பேட்டன்.
சமீபத்தில் "India Remembered: A Personal Account of the Mountbattens During the Transfer of Power" என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளார் பமீலா. அதில் நேருவுக்கும், தனது தாயார் பமீலாவுக்கும் இடையில் நிலவிய காதல், பமீலாவின் பிற காதல்கள் குறித்து விளக்கியுள்ளார் பமீலா.
தனது நூலில் 'ஒரு விசேஷ உறவு' என்ற தலைப்பில் நேரு - எட்வினாவின் காதல் குறித்து குறிப்பிட்டுள்ளார் பமீலா. அதில், எனது தாயாருக்கு நிறைய காதலர்கள் இருந்தனர். அது எனது தந்தைக்கு முதல் முறை தெரிய வந்தபோது அவர் மிகவும் உடைந்து போனார்.
ஆனால் நேருவுக்கும், எட்வினாவுக்கும் இடையே ஏற்பட்ட காதல் சற்று வித்தியாசமானது.
எனது தாயாருக்கும், நேருவுக்கும் இடையிலான காதல் உறவு குறித்து தனது மூத்த சகோதரிக்கு 1948ம் ஆண்டு ஜூன் மாதம் கடிதம் மூலம் குறிப்பிட்டிருந்தார் மெளன்ட்பேட்டன்.
அதில் மெளன்ட்பேட்டன் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார் - ''எட்வினாவையும், நேருவையும் இணைத்துப் பார்ப்பது இனிமையானதாக இருக்கிறது. இருவரும் மிகவும் அன்புடன் பழகுகின்றனர். அவர்கள் பழகும் விதம் இனிதாக உள்ளது'' என்று கூறியுள்ளார் மெளன்ட்பேட்டன் என எழுதியுள்ளார் பமீலா.
இதேபோல 1957ம் ஆண்டு எட்வினாவுக்கு நேரு எழுதிய கடிதம் ஒன்றையும் குறிப்பிட்டுள்ளார் பமீலா. அதில் எட்வினா மீது கொண்டிருந்த அன்பை நேரு வெளிப்படுத்தியிருந்த விதம் தெரிகிறது.
நேரு இப்படி எழுதுகிறார்- ''நமக்குள் நெருக்கமான நட்பு ஏற்பட்டிருப்பதை நான் திடீரென உணர்ந்தேன். அதை என்னால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
உங்கள் மீதான ஈர்ப்பை என்னால் மறைக்க முடியவில்லை. அதே உணர்வு உங்களுக்கும் இருக்கிறது என நினைக்கிறேன். நாம் இருவரும் மிகவும் அந்நியோன்யமாக பேசினோம், பழகினோம். இருப்பினும் எந்தவித தயக்கமும், பயமும் இல்லாமல் நேருக்கு நேர் பார்க்கும் அளவுக்கு நமது நட்பு இருக்கிறது என்று நினைக்கிறேன்'' என்று கூறியுள்ளார் நேரு
நன்றி: தட்ஸ்தமிழ்
Technorati tags: tamilblogs, tamilnews, tamilcinema, சினிமா, தமிழ்ப்பதிவுகள்
15:00 Posted in அரசியல் | Permalink | Comments (2) | Email this
| Tags: nehru, நேரு |
del.icio.us
|
|
Digg
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!
![]() |
தமிழின் வேகமான திரட்டி
செய்திகள், மின்னிதழ்கள், |
மறுமொழிகள்:
-
என்ன சார் சொல்ல! பெரிய இடத்து காதல்! புனிதம் என்று வேறு சொல்லிவிட்டார்கள். நம்ம தெருவில இருக்கிற பொண்ணு சுத்தம். காதல் பாவம் என்னு நினைக்குது. சுத்த் வேஸ்ட்டு.
புள்ளிராஜாகூறுவது: pulliraja | Wednesday, 18 July 2007
-
nice article and super romatic photo of our Nehuru uncle and
Maunbatan Wife.
thanks
yours
siva
pondicherry
19.07.2007at 8.59pmகூறுவது: siva pondicherry | Thursday, 19 July 2007
மறுமொழி இடுக!
இணையத்தமிழ் எழுதுகருவிகள்:
1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)



