❒ ஆரியம் எங்கே போனது? | H | ❒ ஜெயா டிவியில் பாலபாரதி

Thursday, 12 July 2007

❒ அரசியலில் ரஜினி!

சிவாஜி திரைப்பட வெளியீட்டுக்குப் பிறகு மீண்டும் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய கிசுகிசுக்களை பத்திரிகைகள் எழுப்பத் தொடங்கியுள்ளன. மூன்றாம் அணி அமைப்பாளர்களில் ஒருவரான சந்திரபாபு நாயுடு ரஜினியை அரசியலுக்கு கொண்டுவர தீவிரமாக முயற்சி மேற்கொண்டிருப்பதாக தெரிகிறது. சமீபத்தில் அரசியலுக்கு வந்து குறிப்பிடத்தக்க வெற்றிகளையும் வளர்ச்சியையும் சந்தித்துக் கொண்டிருக்கும் விஜயகாந்தைப் பார்த்து அரசியல் சபலம் ரஜனிக்கு மீண்டும் வரலாம்.

விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் தந்த நம்பிக்கையால் நடிக்ர் சங்கத்தலைவர் சரத்குமாரும் அரசியல் பிரவேசத்துக்கு நாள் குறித்துக் கொண்டிருக்கிறார். அவர் சாதிப் பின்னணி பலத்துடன் தனது அரசியல் கனவுக்கு வளம் சேர்க்கத் துடிக்கிறார்.

இவர்களின் அரசியல் பிரவேசங்கள் எந்த அளவுக்கு வெற்றி பெறும்? காமராசர் ஆட்சி என்ற கோசங்களுடன் கனவு காணும் சரத்குமாரும், தேசியம், நதிநீர் இணைப்பு என மேம்போக்கான அரசியல் கனவைக் கொண்டுள்ள ரஜனியும் எந்த அளவுக்கு அரசியலில் வெற்றி பெறுவார்கள்?

விஜயகாந்தின் அரசியல் வெற்றிக்குப் பின்னால் இருப்பது என்ன என்று சிந்தித்தால் அவர் சாதாரண மனிதனின் உணர்ச்சியை தட்டி எழுப்பி தனக்கு சாதகமாக சிந்திக்க வைத்தார். "இன்றைய அரசியல்வாதிகள் எல்லோரும் ஊழல்பேர்வழிகள், அவர்கள் ஓட்டுப் போடத் தரும் காசு உங்கள் காசு. அதை வாங்கத் தயங்காதீர்கள். உங்கள் காசை நீங்கள் வாங்கிக் கொண்டு எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்" என்றார். இதன் பின்னுள்ள நியாய அநியாயங்களைவிட இதிலுள்ள தர்க்கம் பாமரனைச் செருக்கு கொள்ளச் செய்தது. பொதுநிலை வாக்காளன் இந்த தர்க்கநிலையில் மயங்கியதில் ஆச்சரியமே இல்லை.

இதுவே தமிழகம் முழுவதும் ஓட்டு வங்கிகளையும் கட்சித் தொண்டர்களையும் கொண்டுள்ள கட்சிகளை பல மீறிக்கொண்டு விஜயகாந்தால் பெருமளவு வாக்குகளைப்பெற முடிந்த ரகசியம். ஆட்சியைப் பிடிக்குமளவு இல்லாவிட்டாலும் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாக விஜயகாந்த் வளர்ந்து வருவதை மற்ற கட்சிகள் அசூயையோடு பார்த்து வரும் நிலையில் செல்வாக்குள்ள சக நடிகர்களுக்கும் ஆசை கிளர்வதில் ஆச்சரியமில்லை.

எனவே இதுவரை வருவேன்-வரமாட்டேன் என்ற சொற்களால் சிலம்பாட்டம் நடத்திக் கொண்டிருந்த ரஜினியை அரசியலுக்கு கொண்டு வர அவரது ஆரசியல்வாதி நண்பர்களும் மீண்டும் தீவிரமாக முயற்சி மேற்கொண்டுள்ளனர். பூனைக்குட்டி வெளியில் வருமா?

அப்படி வந்தாலும் விஜயகாந்தின் தந்திரமோ அரசியல் நெளிவு சுழிவுகளோ ரஜனிக்கு இருக்கிறதா என்பது சந்தேகமே. தேசியம், நதிநீர் போன்ற எதிர்காலக் கனவுகள் காண்பதற்கு நமது அன்றாடங்காய்ச்சி வாக்காளனுக்கு நேரம் இருக்கிறதா?

திரைப்படங்கள் ஓடுவது பற்றி கூறும்போது A சென்டரில் ஓடியது B சென்டரில் ஓடியது C சென்டரில் ஓடியது என்பார்கள். B,C யில் நன்றாகப் போனால் தான் படம் வெற்றி பெற முடியும். A யில் நன்றாக ஓடினால் நல்ல படம் என்ற பெயர் தான் கிடைக்கும்.

சினிமாவில் C சென்டர் ரசிகனால் சூப்பர் ஸ்டாராக்கப் பட்டவர் ரஜினி. அரசியலில் ரஜினி, சரத் தரும் முன்னோட்டங்கள் A சென்டருக்கு ருசிக்கலாம். விஜயகாந்த் போல C யைக் கவரும் அம்சங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை.

விஜயகாந்தைப் பொறுத்தவரை தீர்மானமான இலட்சியங்கள் எதுவும் அவரிடமும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் சினிமா போலவே அரசியலிலும் நடிப்பும், திட்டமிட்ட இமேஜ் கட்டமைப்பும் மேற்கொண்டு தன்னை நிலைநிறுத்த முடிந்திருக்கிறது.

ரஜினிக்கு அது சாத்தியமா?


Technorati tags: , , , ,

வாழ்த்து - THUMBS UP  -._/|\_.-  வசவு - THUMBS DOWN

09:40 Posted in அரசியல் | Permalink | Comments (0) | Email this | Tags: ரஜினி, rajini |  del.icio.us | | Digg! Digg

  நாட்டிலிருந்து இந்தப் பதிவை வாசிக்கும் இனிய தோழரே!... தோழியே!
உங்கள் வருகைக்கு நன்றி.!
மறவாமல் ஓரிரு வரிகள் உங்கள் கருத்தையும் இங்கே பதிந்து ஊக்கப் படுத்துங்கள்!

தமிழின் வேகமான திரட்டி
முழுமையான பதிவுகள் திரட்டி
தமிழ் திரட்டிகளின் திரட்டு

செய்திகள், மின்னிதழ்கள்,
பிறமொழிப் பதிவுகள்
சினிமா, சமையல், வேலைவாய்ப்பு

http://tamil.kanimai.com

மறுமொழி இடுக!


இணையத்தமிழ் எழுதுகருவிகள்:

1. யூனிகோடு எழுதுகருவி +திரைவிசைப்பலகை 4 மொழிகள் (ஐஇ)
2. தமிழ் யூனிகோடு எழுதுகருவி 2 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ்)
3. யூனிகோடு எழுதுகருவி 4 வகை விசைப்பலகை (பயர்பாக்ஸ், ஐஇ)
4. தமிழ் யூனிகோடு எழுத்துரு மாற்றி (18 வகை எழுத்துரு)